என் மலர்
நீங்கள் தேடியது "சேலம்"
- அனுபவம் இல்லாதவர்களால் ஆட்சி செய்ய முடியுமா? என அழுகிறார்கள்.
- அதிகாரத்தை வைத்து பணம் சம்பாதித்து கொம்பு முளைத்தவர்களை தவிர வேறு யார் இங்கு இருக்கிறார்கள்?
சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி பைபாசில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜயை கண்டதும் தொண்டர்கள உற்சாகமாக முழக்கம் எழுப்பினர்.
கூட்டத்தில் விஜய் பேசியதாவது:-
மற்ற கட்சியினர் தரும் பணத்தை வாங்கிக்கொண்ட அவர்களின் செவிகளில் விசிலை ஊதி அனுப்புங்கள். பணத்தை கொடுத்து ஓட்டு வாங்கும் கலாச்சாரம் மாற வேண்டும், பணத்தை கொடுத்தால் ஏமாறுவீர்களா?
வண்டி வண்டியாக கொண்டுவந்து பணத்தை கொட்டுவார்கள், பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள் எல்லாம் உங்கள் பணம் தான்.
எங்கள் ஓட்டு எங்கள் உரிமை எங்களை யாரும் விலைக்கு வாங்க உரிமையில்லை, எங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்கு தான்.
எந்த கட்சியையும் அழிக்க, ஒழிக்க நான் அரசியலுக்கு வரவில்லை. வெறுப்பு அரசியல் செய்ய நான் வரவில்லை. மக்களுக்கு என் நன்றி கடனை செலுத்தவே அரசியலுக்கு வந்தேன்.
அனுபவம் இல்லாதவர்களால் ஆட்சி செய்ய முடியுமா? என அழுகிறார்கள். மக்களே உங்களையே கேட்கிறேன் அனுபவம் என்று கூறுகிறார்களா, அதிகாரத்தை வைத்து பணம் சம்பாதித்தை தாண்டி என்ன செய்தார்கள்?
அதிகாரத்தை வைத்து பணம் சம்பாதித்து கொம்பு முளைத்தவர்களை தவிர வேறு யார் இங்கு இருக்கிறார்கள்?
அடுத்தவர்கள் ஆரம்பித்த அரசியல் கட்சியில் அடுத்தவர்கள் முகவரியில் அரசியல் வாதிகளாக இருக்கும் அனைவருக்கும் ஒரு சவால்.
என்னைப்போல் சொந்தமாக ஒரு கட்சியை ஆரம்பித்து ஒரு சதவீதம் ஓட்டு வாங்க உங்களுக்கு தில், திராணி இருக்கிறதா?
75 வருடம், 50 வருடம் என அரசியல் கட்சி நடத்தி வருபவர்களை மீறி களத்தில் தனியாக நின்று தவெக மக்கள் சக்தியாக மாறியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சேலத்தில் வருகிற (13-ந்தேதி) விஜய் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
- தவெக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் பேசிய வீடியோ இணையத்தில் வைரல்
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஒவ்வொரு மாவட்டமாக சென்று பிரசாரம் செய்து வருகிறார். வேலூருக்கு இந்த மாதம் 2-வது வாரத்தில் நடிகர் விஜய் வருகை தர உள்ளதாக கூறி அங்கு கட்சி நிர்வாகிகள் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே சேலத்தில் வருகிற (13-ந்தேதி) விஜய் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அக்கட்சி நிர்வாகிகள் திட்டமிட்டு உள்ளனர்.
இதையடுத்து சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் தலைமையில் நிர்வாகிகள் மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் விஜய் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரி இன்ஸ்பெக்டர் வேலுதேவனிடம் மனு கொடுத்தனர்.
இந்நிலையில், சேலத்தில் விஜய் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகளிடம் தவெக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில், "5 மணி நேரம், 6 மணி நேரம் தளபதிக்காக நிப்போமா?..தண்ணி குடிக்க முடியாது, சாப்பாடு சாப்பிட முடியாது, ஆர்வக்கோளாறுல மலையில கூட ஏறுவா, நீங்கதான் அவன பாத்துக்கணும். நமக்கு முக்கியம்" என்று பேசியுள்ளார்.
- சிலையில் முருகனின் முக அமைப்பு, உடல் அமைப்பு சரியில்லை என்று விமர்சனம் எழுந்தது
- முருகன் சிலை சுமார் 40 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே ராஜ முருகன் கோவிலில் 56 அடி உயரத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் முருகன் சிலை அமைக்கப்பட்டது. இந்த முருகன் சிலையின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
முருகன் சிலையில் முருகனின் முக அமைப்பு, உடல் அமைப்பு சரியில்லை என்று சமூக வலைத்தளங்களில் பலர் விமர்சனம் செய்தனர்.
இது குறித்து சிலை வடிவமைத்தவரிடம் கேட்டதற்கு "இதுவரை முருகன் சிலை எங்கும் வடிவமைத்தது கிடையாது. எனக்குத் தெரிந்தது எல்லாம் முனீஸ்வரன் சிலை மட்டுமே. அதைத்தான் இதுவரை வடிவமைத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.
இதையடுத்து, சுமார் ரூ.40 லட்ச மதிப்பில் கட்டப்பட்ட இந்த முருகன் சிலையை பக்தர்களின் கோரிக்கைக்கிணங்க கோவில் நிர்வாகம் புனரமைத்தது.
இந்நிலையில், சிலை மாற்றியமைக்கப்பட்ட நிலையில், இன்று முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- சிலையில் முருகனின் முக அமைப்பு, உடல் அமைப்பு சரியில்லை என்று விமர்சனம் எழுந்தது
- முருகன் சிலை சுமார் 40 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே ராஜ முருகன் கோவிலில் 56 அடி உயரத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் முருகன் சிலை அமைக்கப்பட்டது. இந்த முருகன் சிலையின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
முருகன் சிலையில் முருகனின் முக அமைப்பு, உடல் அமைப்பு சரியில்லை என்று சமூக வலைத்தளங்களில் பலர் விமர்சனம் செய்தனர்.
இது குறித்து சிலை வடிவமைத்தவரிடம் கேட்டதற்கு "இதுவரை முருகன் சிலை எங்கும் வடிவமைத்தது கிடையாது. எனக்குத் தெரிந்தது எல்லாம் முனீஸ்வரன் சிலை மட்டுமே. அதைத்தான் இதுவரை வடிவமைத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.
இதையடுத்து, சுமார் ரூ.40 லட்ச மதிப்பில் கட்டப்பட்ட இந்த முருகன் சிலையை பக்தர்களின் கோரிக்கைக்கிணங்க புனரமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.
இந்நிலையில், இந்த முருகன் சிலை புனரமைக்கப்ட்டுள்ளது. சிலை மாற்றியமைக்கப்பட்ட நிலையில், இன்று முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது
- 2 பேரின் உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர்.
- குட்டையில் காணாமல் போன மூதாட்டிகள் பாவாயி, பெரியம்மாள் ஆகியோர் பிணமாக கிடப்பதாக மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சேலம்:
சேலம் இளம்பிள்ளை அருகேயுள்ள இடங்கணசாலை நகராட்சிக்குட்பட்ட தூதனூர் பகுதியைச் சேர்ந்தவர் பாவாயி (70) விவசாய கூலி தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் பெரியம்மாள் (75) ஆடுகளை வளர்த்து வாழ்ந்து வந்தார். இவர்கள் 2 பேரும் நேற்று காலை 9 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றனர். பின்னர் அவர்கள் இரவு வரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து 2 பேரின் உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர்கள் காணவில்லை. இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
இந்த நிலையில் தூதனூர் பகுதியில் அம்மாசி என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் உள்ள தண்ணீர் குட்டையில் காணாமல் போன மூதாட்டிகள் பாவாயி, பெரியம்மாள் ஆகியோர் பிணமாக கிடப்பதாக மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மகுடஞ்சாவடி போலீசார் தீயணைப்பு துறை வீரர்கள் உதவியோடு 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மூதாட்டிகள் அணிந்திருந்த நகைகள் காணாமல் போனதால் நகைக்காக 2 மூதாட்டிகளையும் மர்ம நபர்கள் கொலை செய்து கல்குவாரி தண்ணீரில் வீசி சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஸ்ரீ சென்றாய பெருமாள் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
- எடப்பாடி பழனிசாமிக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை வழங்கப்பட்டது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், அதிமுக சார்பில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்கிற பிரசார பயணத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார்.
இந்நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நங்கவள்ளி ஒன்றியத்தில் உள்ள ஸ்ரீ சென்றாய பெருமாள் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், இபிஎஸ் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
தொடர்ந்து, சூரப்பள்ளி அருகே, நொரச்சிவளவு பகுதியில் உள்ள ஸ்ரீ காளியம்மன் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, எடப்பாடி பழனிசாமிக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.
- தமிழகத்தின் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 1-ந் தேதி தொடங்கி கடந்த 30-ந் தேதியுடன் நிறைவு பெற்றது.
- சேலம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் இயல்பான அளவு 406.4 மி.மீ. ஆகும்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளதால் 70 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பியே உள்ளனர். இங்கு மேட்டூர் அணை இருந்தாலும் நேரடி பாசனம் குறைந்த அளவிலேயே உள்ளது. தற்போது சரபங்கா நீரேற்று திட்டம் மூலம் சேலம் மேற்கு மாவட்ட பகுதிகளில் ஒரு பகுதி பாசன வசதி பெற்றுள்ளது. ஆனாலும் ஓமலூர், காடையாம்பட்டி மற்றும் சேலம் மாவட்டத்தின் கிழக்கு பகுதிகளுக்கு மேட்டூர் அணை தண்ணீர் செல்லாததால் இந்த பகுதிகள் வானம் பார்த்த பூமியாகவே உள்ளது.
இந்தநிலையில் தமிழகத்தின் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 1-ந் தேதி தொடங்கி கடந்த 30-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் அதனை எதிர்பார்த்து விவசாயிகள் உள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் இயல்பான அளவு 406.4 மி.மீ. ஆகும். ஆனால் நடப்பாண்டில் 339.2 மி.மீ. மழையே பதிவாகி உள்ளது. இது வழக்கத்தை விட 67.2 மி.மீ. குறைவாகும். இதனால் நடப்பாண்டில் வழக்கத்தை விட 17 சதவீதம் தென்மேற்கு பருவமழை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் நீர் நிலைகளில் வழக்கத்தை விட குறைந்த அளவே தண்ணீர் இருப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். ஆனாலும் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்பதால் அந்த மழை கூடுதலாக பெய்து தங்களுக்கு கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.
- துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் பங்கேற்று அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
- 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
சேலம்:
தமிழகம் முழுவதும் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அடையாள அட்டை மற்றும் வங்கி கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி வருகிற 16-ந் தேதி காலை 10 மணிக்கு சேலம் கருப்பூரில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரி மைதானத்தில் நடக்கிறது.
இதில் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் பங்கேற்று அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அதே போல மற்ற இடங்களுக்கும் காணொலி வாயிலாக இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
பிற்பகல் 3 மணியளவில் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மறு சீராய்வு கூட்டத்தில் பங்கேற்கும் அவர் மாவட்டத்தில் ஏற்கனவே செய்துள்ள வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார். தொடர்ந்து இனி வரும் நாட்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த நிகழ்வுகளில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி, எம்.பி.க்கள் டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர். சிவலிங்கம் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நாளை மறுநாள் 15-ந் தேதி மாலை துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் சேலம் வருகிறார். அப்போது அமைச்சர் ராஜேந்திரன், எம்.பி.க்கள் டி.எம். செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் தலைமையில் கட்சியினர் பல ஆயிரம் பேர் திரண்டு உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். தொடர்ந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
மேலும் அவர் வந்து செல்லும் பகுதிகளில் மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி, போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல் ஆகியோர் தலைமையில் 1000-த்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
- ஏத்தாப்பூர், வீரகனூர், கரியகோவில் உள்பட பல பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை.
- மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.
குறிப்பாக சேலம் கிழக்கு மாவட்ட பகுதிகளான வாழப்பாடி, ஏத்தாப்பூர், வீரகனூர், கரியகோவில் உள்பட பல பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.
ஏற்காட்டில் நேற்று பெய்த சாரல் மழையால் அங்கு குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் அங்கு ரம்மியமான சூழல் நிலவியதால் அங்கு வசிக்கும் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர்.
சேலம் மாநகரில் நேற்றிரவு 7 மணியளவில் தொடங்கிய மழை சாரல் மழையாக அரை மணி நேரம் பெய்தது . மழையை தொடர்ந்து சேலம் மாநகரிலும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. மாவட்டத்தில் அதிக பட்சமாக வாழப்பாடியில் 28 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகர் 8.4, ஏற்காடு 12.8, வாழப்பாடி 28, ஆனைமடுவு 17, ஆத்தூர்11.6, கெங்கவல்லி 10, தம்மம்பட்டி 15, ஏத்தாப்பூர் 27, கரியகோவில் 22, வீரகனூர் 20, நத்தக்கரை 15, ஓமலூர் 1.5, டேனீ ஷ்பேட்டை 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 189.80 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
- தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது.
- ஏற்காட்டில் நேற்று மாலை 1 மணிநேரத்திற்கும் மேல் கன மழை பெய்தது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது . அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது.
குறிப்பாக சங்ககிரி, தம்மம்பட்டி, மேட்டூர், ஆத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னல், சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. சிற்றோடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் ஏரி, குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஏற்காட்டில் நேற்று மாலை 1 மணிநேரத்திற்கும் மேல் கனமழை பெய்தது. சேலம் மாநகரில் நேற்று மாலை 5 மணியளவில் அரை மணி நேரம் மழை பெய்தது. மழையயை தொடர்ந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சங்ககிரியில் 25.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
சேலம் மாநகர் 10.4, ஏற்காடு 9.8, வாழப்பாடி 2.6, ஆனைமடுவு 12, ஆத்தூர் 15, கெங்கவல்லி 11, தம்மம்பட்டி 18, கரியகோவில் 1, வீரகனூர் 12, எடப்பாடி 4, மேட்டூர் 14.6, ஓமலூர் 1.5 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 137.1 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
இதேபோல் நாமக்கல் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. அதேபோல் நேற்றும் மங்களபுரம், ராசிபுரம், கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. நாமக்கல் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
எருமப்பட்டி-3, குமாரபாளையம்-9.20, மங்களபுரம்-23.60, நாமக்கல்-8, புதுச்சத்திரம்-17.30, ராசிபுரம்-10, சேந்தமங்கலம்-4, திருச்செங்கோடு-4, கொல்லிலை செம்மேடு-15, கலெக்டர் அலுவலகம்-2.50 என மாவட்டம் முழுவதும் 96.60 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.
- நீர்மட்டம் 113.69 அடியாகவும், நீர் இருப்பு 83.76 டி.எம்.சி,யாகவும் உள்ளது.
- அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 16,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சேலம்:
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பருவமழையின் காரணமாக கர்நாடக அணைகளான கபினி,கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக அந்த அணைகளின் பாதுகாப்பு கருதி தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரானது கடந்த 2 நாட்களாக மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 16,361 கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை 18,220 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 113.69 அடியாகவும், நீர் இருப்பு 83.76 டி.எம்.சி,யாகவும் உள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 16,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
- அன்று இரவு அங்கேயே தங்குகிறார்.
- டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (புதன்கிழமை) சேலம் மாவட்டம் செல்கிறார்.
மாலை மேட்டூர் செல்லும் அவர் 11 கிலோ மீட்டர் தூரம் நடைபெறும் 'ரோடு ஷோ'வில் பங்கேற்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிகிறார்.
தொடர்ந்து மேட்டூரில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஆய்வு மாளிகையில் கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார். அன்று இரவு அங்கேயே தங்குகிறார்.
நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு சேலம் வருகிறார்.
காலை 11 மணிக்கு இரும்பாலை பகுதியில் உள்ள மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.






