என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சேலம் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கனமழை - ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    X

    சேலம் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கனமழை - ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    • தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது.
    • ஏற்காட்டில் நேற்று மாலை 1 மணிநேரத்திற்கும் மேல் கன மழை பெய்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது . அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது.

    குறிப்பாக சங்ககிரி, தம்மம்பட்டி, மேட்டூர், ஆத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னல், சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. சிற்றோடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் ஏரி, குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஏற்காட்டில் நேற்று மாலை 1 மணிநேரத்திற்கும் மேல் கனமழை பெய்தது. சேலம் மாநகரில் நேற்று மாலை 5 மணியளவில் அரை மணி நேரம் மழை பெய்தது. மழையயை தொடர்ந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சங்ககிரியில் 25.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    சேலம் மாநகர் 10.4, ஏற்காடு 9.8, வாழப்பாடி 2.6, ஆனைமடுவு 12, ஆத்தூர் 15, கெங்கவல்லி 11, தம்மம்பட்டி 18, கரியகோவில் 1, வீரகனூர் 12, எடப்பாடி 4, மேட்டூர் 14.6, ஓமலூர் 1.5 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 137.1 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    இதேபோல் நாமக்கல் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. அதேபோல் நேற்றும் மங்களபுரம், ராசிபுரம், கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. நாமக்கல் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    எருமப்பட்டி-3, குமாரபாளையம்-9.20, மங்களபுரம்-23.60, நாமக்கல்-8, புதுச்சத்திரம்-17.30, ராசிபுரம்-10, சேந்தமங்கலம்-4, திருச்செங்கோடு-4, கொல்லிலை செம்மேடு-15, கலெக்டர் அலுவலகம்-2.50 என மாவட்டம் முழுவதும் 96.60 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.

    Next Story
    ×