என் மலர்
வழிபாடு
- ஜெபம் என்றால் `இறைவனிடத்தில் வேண்டுதல்' என்று பொருள்.
- நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாய் இருக்கிறது.
அன்பானவர்களே, `ஜெபம்' என்றால் `இறைவனிடத்தில் வேண்டுதல்' என்று பொருள். இயேசு தன்னுடைய சீடர்களிடத்திலும், தன்னைப் பின்பற்றியவர்களிடத்திலும் "நீங்கள் விசுவாசம் உள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளை எல்லாம் பெறுவீர்கள்' என்றார்.
வியாதியால் துன்பப்படும் காலங்களில், மனதின் விருப்பங்கள் நிறைவேற, இயேசுவை நோக்கி நாம் வேண்டினால் அவர் பதில் தருகிறார். நாம் வேண்டுதல் செய்யும் போது மற்றவர்களுக்காக ஜெபம் பண்ண வேண்டும். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாய் இருக்கிறது.
வேதாகமத்தில் எசேக்கியா என்னும் நேர்மையான ராஜா இருந்தார். அவர் வாழ்ந்த நாட்களில் ஒருமுறை கொடுமையான வியாதிப்பட்டு, மரணப்படுக்கையில் இருந்தார். அப்போது ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி "நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குபடுத்தும். நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர்" என்றார்.
அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, கர்த்தரை நோக்கி `கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும், மன உத்தமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும்' என்று விண்ணப்பித்து மிகவும் அழுதார். அவருடைய வேண்டுதலைக் கேட்டு கர்த்தர் உடனே பதில் கொடுத்தார். தீர்க்கதரிசி ஏசாயா பாதி முற்றத்தை கடந்து போவதற்குள் கர்த்தருடைய வார்த்தை ஏசாயாவை நோக்கி இறங்கியது.
"நீ திரும்பிப்போய், என் ஜனத்தின் அதிபதியாகிய எசேக்கியாவிடம் உன் தகப்பனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன், இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன், மூன்றாம் நாளிலே நீ கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவாய். உன் நாட்களோடே பதினைந்து வருஷங்களைக் கூட்டுவேன்", என்று எசேக்கியா ராஜாவிடம் தெரிவிக்கும்படி கூறுகிறார்.
அன்பானவர்களே, இன்றைக்கு நாமும் ஏதோ ஒரு வியாதியால் மரணத் தருவாயில் இருக்கிறோமா? மருத்துவர்கள் கைவிட்டு விட்டார்களா? நம்பிக்கையோடு இயேசுவை நோக்கி பிரார்த்தித்து நலம் பெறுவோம்.
வேதாகமத்தில் அன்னாள் என்று ஒரு பெண் குறித்த தகவல் உள்ளது. இவள் குழந்தைப்பேறு இல்லாமல், சமூகத்தால் பலவிதமான வேதனைகளை அனுபவித்து கொண்டிருக்கிறாள். இவள் கர்த்தரிடம், "சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல், நினைத்தருளி ஒரு ஆண் குழந்தையை கொடுக்க வேண்டும்" என்று கண்ணீரோடு வேண்டுகிறாள்.
அவளுடைய விண்ணப்பத்தின் படியே கர்த்தர் அடுத்த ஆண்டிலேயே ஓர் ஆண் குழந்தையைக் கொடுத்து அவள் கண்ணீரை, களிப்பாக மாற்றுகிறார். இன்றைக்கு ஒருவேளை இதை வாசிக்கும் நீங்கள் குழந்தைப்பேறு இல்லாமல் வேதனையோடு, கண்ணீரோடு இருந்தால், இயேசுவிடம் முறையிடுங்கள், அவரால் முடியாத காரியம் ஒன்றுமில்லை, அவர் நாமம் அதிசயம்.
வேதாகமத்தில் இயேசுவை மிகவும் நேசித்த மரியாள், மார்த்தாள் என்று இரண்டு சகோதரிகள் இருந்தார்கள்.அவர்களுடைய சகோதரன் லாசர் வியாதிப்பட்டு இறந்து விட்டான். இயேசு நான்கு நாட்கள் கழித்து அவ்விடத்திற்கு வருகிறார். லாசருடைய சகோதரிகள் இருவரும் இயேசுவினிடத்தில் வந்து "ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்" என்று கூறி அழுதார்கள். அவர்களோடு கூட இருந்தவர்களும் அழுதார்கள், அவர்கள் எல்லோரும் அழுகிறதைப் பார்த்து இயேசு கண்ணீர் விட்டார்.
இயேசு அவர்களை நோக்கி: "உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான். நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்" என்றார்.
பின்னர் இயேசு லாசருவை அடக்கம் செய்த இடத்திற்கு வந்தார். அது ஒரு குகையாய் இருந்தது, அதின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது. இயேசு 'கல்லை எடுத்துப்போடுங்கள்' என்றார்.
மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரைநோக்கி: 'ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலு நாளாயிற்றே' என்றாள்.
இயேசு அவளை நோக்கி 'நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா' என்றார். அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப் போட்டார்கள்.
இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து "பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன். ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழ்ந்து நிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள் நிமித்தம் இதைச் சொன்னேன்" என்றார்.
இவைகளைச் சொன்னபின்பு "லாசருவே, வெளியே வா" என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார். மரித்த லாசர் உயிரோடு வெளியே வந்தான். மரித்து நான்கு நாட்களான லாசருவை உயிரோடு எழுப்பிய இயேசு, நேற்றும் இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்.
இன்றைக்கு நாமும் ஏதோ ஒரு வேதனையான சூழ் நிலையில், மனக் கஷ்டத்தோடு பாரத்தோடு தனிமை உணர்வில் இருக்கின்றோமா, மரணப்படுக்கையில் நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கின்றோமா, மனதின் விருப்பங்கள் நிறைவேறாமல் தவிப்போடு இருக்கின்றோமா, எதிர்காலத்தைக் குறித்து கலக்கப்படுகிறோமா... இயேசுவை நோக்கி ஜெபிப்போம், ஊக்கமுடன், இடை விடாமல் ஜெபிப்போம், ஏற்ற நேரத்தில் அவரிடம் இருந்து ஆறுதல் பெறுவோம்.
உண்மையாக தம்மை நோக்கி கூப்பிடுகிற யாவருக்கும் இயேசு சமீபமாயிருந்து, உதவி செய்கிற தேவனாயிருக்கிறார். அவரால் செய்ய கூடாத அதிசயம் ஒன்றுமில்லை. ஆமேன்.
- சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை நடக்கிறது.
- ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறு படை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் திரு விழாக்களில் மிகவும் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கி மதியம் 12 மணியளவில் யாகசாலையில் தீபாராதனையும் தொடர்ந்து சுவாமி ஜெயந்தி நாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி சண்முக விலாசம் மண்டபம் வந்து அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது.
மாலை 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதின சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகமாயி அலங்கார தீபாராதனைக்கு பிறகு தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று வருகிறது.
கந்த சஷ்டி 5-வது நாளான இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தான்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் நாளை (சனிக்கிழமை) மாலை கோவில் கடற்கரையில் நடக்கிறது. மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரனை வதம் செய்ய கடற்கரையில் எழுந்தருளுவார். அங்கு முதலில் யானை முகம் கொண்ட சூரனையும், இரண்டாவதாக சிங்கமுகனையும், மூன்றாவதாக தன் முகம் கொண்ட சூரனை சுவாமி வதம் செய்வார்.
சூரசம்ஹாரம் முடிந்த பின்பு சுவாமிக்கும், அம்பாளுக்கும் சந்தோஷ மண்டபத்தில் அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனைக்கு பிறகு கிரி பிரகாரத்தில் உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.
அன்று இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கு சாயா அபிஷேகம் நடைபெற்று அதன் பின் சஷ்டி பூஜை தகடு கட்டுதல் நடக்கிறது.
கந்த சஷ்டி திருவிழா 7-ம் நாளான நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலையில் தெய்வானை அம்பாள் தவசு காட்சிக்கு புறப்படுதல், மாலை 6.30 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுத்து தோல் மாலை மாற்றுதல், இரவு 11 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் மேல கோபுரம் அருகில் உள்ள மண்டபத்தில் திருக்கல்யாணம் நடக்கிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் திருச்செந்தூர் டி.எஸ்.பி. சந்தராஜ் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
- குருநாதரை வணங்கி அவர் திருக்கரங்களால் மாலை அணிந்து கொள்ள வேண்டும்.
- ஒழுங்குடன் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டியது பிரம்மச்சரிய விரதமாகும்.
1. ஐயப்ப பக்தர்கள் இயன்றவரை கார்த்திகை மாதம் முதல் நாள் மாலை அணிந்து கொள்வது சாலச்சிறந்தது. அன்று நாள், கிழமை பார்க்க வேண்டியதில்லை. அதற்குப் பின் மாலை அணிபவர்கள் கார்த்திகை 19-ந்தேதிக்குள் ஏதாவதொரு நல்ல நாளில் மாலை அணியலாம். எப்படியும் சன்னி தானத்திற்குச் செல்லும் தினத்திற்கு முன்னதாக குறைந்தது ஒரு மண்டலம் (48 நாட்கள்) விரதம் இருக்கும்படி பார்த்து அதற்குள் மாலை அணிந்து கொள்ள வேண்டும்.
2. துளசி மணி அல்லது உருத்திராட்ச மாலை 108 அல்லது 54 மணிகள் உள்ளதாகப் பார்த்து வாங்கி அத்துடன் ஐயப்பன் திருவுருவப்பதக்கம் ஒன்றையும் இணைத்து அணிய வேண்டும். அத்துடன் துணை மாலை ஒன்றும் அணிந்து கொள்வது நல்லது.
3. பலமுறை விரதமிருந்து சபரிமலை சென்று வந்து பக்குவமடைந்த மூத்த ஒருவரைக் குருவாக ஏற்று திருவிளக்கு முன்பாகவோ, திருக்கோவில் களிலோ குருநாதரை வணங்கி அவர் திருக்கரங்களால் மாலை அணிந்து கொள்ள வேண்டும். அல்லது தாய், தந்தையர் மூலமாகவோ, இறைவன் திருவடிகளில் வைத்து எடுக்கப்பெற்ற மாலையினையோ அணிந்து கொள்ளலாம். மாலை அணிந்து கொண்டவுடன், குருநாதருக்குத் தங்களால் இயன்ற தட்சிணையைக் கொடுத்து வணங்கி ஆசி பெற வேண்டும். ஐயப்பனாக மாலை தரித்த நிமிடத்தில் இருந்து குருசாமியை முழு மனதுடன் ஏற்று அவர்தம் மொழிகளை தேவ வாக்காக மதித்து மனக்கட்டுப்பாட்டுடன் பணிந்து நடந்துக்கொண்டு பயணத்தை இனிதாக்க ஒத்துழைக்க வேண்டியது அவசியம்.
4. நீலம், கருப்பு, காவி, பச்சை, மஞ்சள் இவற்றுள் ஏதாவது ஒரு நிறத்தில் உடைகள் அணிய வேண்டும். தங்கள் கடமைகளை ஆற்றுகின்ற சமயங்களில் இயலாவிட்டாலும் பஜனைகளில் கலந்து கொள்ளும்போதும், யாத்திரையின்போதும் முழுவதும் கண்டிப்பாக வர்ண உடை அணிய வேண்டியது அவசியம்.
5. மலைக்குச் செல்லக் கருதி, மாலை அணிய விரும்பும் பக்தரை, தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள் தடுத்தல் கூடாது. எவ்வித அச்சமும் இல்லாமல் தர்மசாஸ்தாவிடம் முழுப்பொறுப்பினையும் வைத்து, முக மலர்ச்சியுடன் அனுப்பி வைக்க வேண்டும்.
6. மேற்கொள்ள வேண்டிய விரதங்களை மிகவும் ஒழுங்குடன் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டியது பிரம்மச்சரிய விரதமாகும். மனம், வாக்கு, செயல் என்ற மூவகைகளிலும் காம இச்சையை அறவே நீக்கவேண்டும்.
7. காலை, மாலை இருவேளைகளிலும் குளிர்ந்த நீரில் தவறாமல் நீராடி ஐயப்பன் திருவுருவப் படத்தை வைத்து வணங்குதல் வேண்டும். தினமும் ஆலய வழிபாடும், பஜனைகளில் கலந்து கொண்டு வாய்விட்டுக்கூவி சரணம் விளித்து ஐயப்பன் புகழ் பாடி மகிழ்தலும் பேரின்பம் பயக்கும்.
8. படுக்கை, தலையணைகளை நீக்கி, தான் அணியும் சிறு துண்டை மட்டும் தரையில் விரித்து படுக்க வேண்டும். பகல் நேரத்தில் தூங்குவதை தவிர்க்கவேண்டும்.
9. களவு, சூதாடுதல், பொய், திரைப்படங்கள், விளையாட்டு, வேடிக்கைகள், உல்லாசப்பயணங்கள், போதையூட்டும் பொருட்கள், புகைப்பிடித்தல் முதலியவற்றை தவிர்க்க வேண்டும்.
10. எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, சவரம் செய்து கொள்வது, காலணிகள், குடை உபயோகிப்பது முதலியவற்றை தவிர்க்க வேண்டும்.
11. மற்றவர்களிடம் பேசும் போது, `சாமி சரணம்' எனத் தொடங்கி, பின் விடை பெறும் பொழுதும் `சாமி சரணம்' என சொல்ல வேண்டும்.
12. விரத காலத்தில் அசைவ உணவு அருந்துவது மாபெரும் தவறாகும். எனவே இயன்றவரை வீட்டிலேயே தூய்மையாக தயாரித்து சைவ உணவே உண்ண வேண்டும். மாலை அணிந்த ஐயப்பன்மார் வீட்டைத் தவிர மற்றவர்கள் வீட்டில் எக்காரணம் கொண்டும் உணவு அருந்தக்கூடாது.
13. பக்தர்கள் மாலை அணிந்த பிறகு சந்திக்கின்ற ஆண்களை `ஐயப்பா' என்றும், பெண்களை `மாளிகைப்புரம்' என்றும், சிறுவர்களை `மணிகண்டன்', சிறுமிகளை `கொச்சி' என்றும் குறிப்பிட்டு அழைக்க வேண்டும்.
14. சபரிமலை செல்லும் பக்தர்கள் புதிதாக பயணம் வர விரும்புகிறவர்களிடம் `நான் பத்திரமாக கூட்டிக் கொண்டு போய் வருகிறேன். என்னோடு தைரியமாக வரலாம்' என்று சொல்லக்கூடாது. பயணம் புறப்படும் பொழுது, `போய் வருகிறேன்' என்று யாரிடமும் சொல்லிக்கொள்ளக்கூடாது. எல்லாப் பொறுப்பினையும் ஐயப்பனிடம் ஒப்படைத்து அவன் திருவடிகளே சரணம் என்ற பக்தி உணர்வுடன் சரணம் விளித்துப் புறப்பட வேண்டும்.
15. மாலை அணிந்த ஐயப்பமார்கள் தங்களது கடமைக்கு இடையூறு இல்லாமல் சுறுசுறுப்புடன் தங்கள் பணிகளைச் செவ்வனே செய்ய வேண்டும்.
16. மாலை அணிந்தது முதல் பக்தர்கள் நாள்தோறும் 108 சரணங்கள் சொல்லி காலை, மாலை வழிபட்டு, துளசி, கற்கண்டு, நாட்டு சர்க்கரை, பால் இவற்றுள் ஏதாவது ஒன்றை சிறிதளவு வைத்து நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும்.
17. யாத்திரை புறப்படுவதற்கு சில நாட்கள் முன்னதாக கன்னி பூஜை நடத்த வேண்டும். எல்லா ஐயப்ப பக்தர்களும் தங்கள் வீட்டிலோ அல்லது குருசாமி மற்றும் ஐயப்ப பக்தர்கள் வீட்டிலோ, பொது இடங்களிலோ சற்று விரிவான முறையில் கூட்டு வழிபாடு (பஜனை) நடத்தி எல்லோருக்கும் பிரசாதம் வழங்கி அருள் பெறுவது சாலச் சிறந்தது. ஐயப்பமார் ஒருவருக்காவது அன்னமிடுதல் மிக்க அருள்பாலிக்கும்.
18. மரணம் போன்ற துக்க காரியங்கள் எதிலும் ஐயப்பமார்களும், அவர்கள் குடும்பத்தினரும் கலந்து கொள்ளக் கூடாது. தவிர்க்க முடியாத நெருங்கிய உறவில், மரணம் நேரிட்டு கலந்து கொள்ள வேண்டியதிருந்தால் தான் அணிந்த மாலையைக் கழற்றி ஐயப்பன் படத்தில் மாட்டிய பிறகு தான் கலந்து கொள்ள வேண்டும். மாலையைக் கழற்ற நேர்ந்தால் மீண்டும் உடனே அணிந்து கொண்டு யாத்திரை செல்ல முற்படக்கூடாது. ஐயப்பன் திருவருளை வேண்டி மறு வருடம் சென்று வரவேண்டும்.
19. எல்லா விரதங்களிலும், பிரம்மச்சாரிய விரதம் முக்கியமானதாகும். எனவே எந்தப்பெண்களைக் கண்டாலும் தாயென்றே கருத வேண்டும். பெண்கள் ருதுமங்கள சடங்கு விழாவிற்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ சென்று கலந்து கொள்ளக்கூடாது.
20. இருமுடிக்கட்டு பூஜையை தன் வீட்டில், இயன்ற தட்சிணை கொடுத்து, குருவின் கரங்களால் இருமுடியைத் தலையில் ஏற்று, வீதிக்கு வந்ததும் வாசற்படியில் விடலைத் தேங்காய் உடைத்து ஐயப்பன் சரண கோஷத்துடன் பின்னால் திரும்பிப் பார்க்காமல் ஒரே நோக்கத்துடன் பயணம் தொடர வேண்டும்.
21. கன்னி ஐயப்பமார்கள் யாத்திரை புறப்பட்ட நேரத்தில் இருந்து ஐயப்பன் சன்னிதானம் செல்லும் வரை அவர்களாக இருமுடியை தலையில் இருந்து இறக்கி வைக்கவோ, ஏற்றிக் கொள்ளவோ கூடாது. குருநாதர் அல்லது மற்ற மூத்த ஐயப்பன்மாரைக் கொண்டு ஏற்றவோ, இறக்கவோ வேண்டும்.
22. 12 வயதுக்கு கீழ்பட்ட சிறுமிகளும், ருதுகாலம் நின்ற வயதான பெண்களும் மட்டுமே சபரி யாத்திரையில் கலந்து கொள்ளலாம்.
23. யாத்திரை வழியில் அடர்ந்த வனங்களில் காட்டுயானை, புலி, கரடி முதலான விலங்குகள் இருக்கும். எனவே பக்தர்கள் கூட்டமாக சரணம் சொல்லிக்கொண்டே செல்ல வேண்டும். சரணம் கூறுதல், சங்கு ஒலித்தல், வெடி வைத்தல் பாதுகாப்புக்கு சிறந்த வழிகளாகும்.
24. பம்பை நதியில் நீராடும்பொழுது மறைந்த நம் முன்னோர்களுக்கு ஈமக்கடன்கள் செய்து முன்னோர்களின் ஆத்மா சாந்தி பெற வழிவகுக்க வேண்டும்.
25. பம்பையில் சக்தி பூஜையின்போது ஐயப்பமார்கள் சமைக்கும் அடுப்பிலிருந்து சிறிதளவு சாம்பல் சேகரித்து சன்னதி ஆழியில் இருந்து எடுக்கப்பெற்ற சாம்பலை அத்துடன் கலந்து தயாரிக்கப் பெறுவதுதான் சபரிமலை பஸ்பம். இது மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.
26. இருமுடியில் ஐயப்பனுக்காகக் கொண்டு செல்லும் நெய்த்தேங்காயை சன்னிதானத்தில் உடைத்து, அபிஷேகம் செய்து பெற்றுக்கொள்ள வேண்டும். யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும் இந்த நெய்யையும், விபூதி பிரசாதங்களையும் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்.
27. ஐயப்பனுக்கு காணிக்கையாக சுற்றத்தார்களும், மற்றவர்களும் கொடுத்தனுப்பும் காணிக்கையை சன்னிதானத்தில் செலுத்தி, அவர்களுக்கு ஐயப்பன் திருவருள் கிடைக்க வேண்டிக் கொள்ள வேண்டும்.
28. குருசாமிக்கு தட்சணை கொடுக்க வேண்டிய சமயங்களில் எல்லாம் ஐயப்பமார்கள் தாங்கள் விரும்பிய வசதிக்கேற்றவாறு கொடுத்து குருவின் அருளைப் பெறலாம். இதில் எந்தவித நிபந்தனையும் கிடையாது. ஐயப்பமார்கள் கொடுக்கும் காணிக்கை எவ்வளவாக இருந்தாலும் அதை மன மகிழ்வுடன் பெரும்பொருளாக ஏற்று குருவின் குருவான ஐயப்பனுக்கே செலுத்தி பேரருள் பெற்றுய்வது குருமார்களுக்குச் சாலச் சிறந்ததாகும்.
- சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது.
- மண்டல, மகர விளக்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்றவை ஆகும்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் பல லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை இன்று (17-ந்தேதி) தொடங்கியது.
இதற்காக ஐயப்பன் கோவில் நடை நேற்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார். பின்பு 18-ம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்பட்டது.
தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தி பி.என்.மகேஷ், மாளிகைபுரம் கோவிலின் புதிய மேல்சாந்தி பி.ஜி.முரளி ஆகியோர் இருமுடி கட்டி சன்னிதானம் நோக்கி வந்தனர். அவர்களுக்கு மேளதாளம் முழங்க 18-ம் படிகளுக்கு கீழ் அழைத்து வரப்பட்டனர்.
பின்பு மாலை 6.30 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் புதிய மேல்சாந்திகள் மூலமந்திரம் கூறி பொறுப் பேற்றுக் கொண்டனர். பின்பு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் பட்டனர். பின்பு இரவு 11 மணிக்கு கோவில் நடை அடைக்கபபட்டு, சாவி புதிய மேல்சாந்தி பி.என்.மகேஷிடம் ஒப்ப டைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இன்று (17-ந்தேதி) அதிகாலை 3 மணிக்கு புதிய மேல்சாந்தி பி.என்.மகேஷ் கோவில் நடையை திறந்து வைத்தார். பின்பு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடை பெற்றன. தொடர்ந்து நெய் அபிஷேகம் நடைபெற்றது.
இந்தநிலையில் கோவில் நடை நேற்று மாலை திறக்கப் பட்டதால் சபரிமலையில் நேற்றே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். மண்டல பூஜை தொடங்கிய தையடுத்து இன்றும் பக்தர்கள் குவிந்தனர். மழை பெய்த போதிலும் அதனை பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமரிமலையில் திரண்டனர்.
சன்னிதானம், நடைப்பந்தல், பம்பை உள்ளிட்ட இடங்களில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப் பட்டது. ஆன்லைனில் முன்பதிவுசெய்த பக்தர்களே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு முன்பதிவு செய்யும் வகையில் நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு மையங்கள் செயல்படுகின்றன.
பக்தர்கள் வரும் வாக னங்களை நிலக்கல்லில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. அங்கிருந்து பம்பைக்கு பக்தர்கள் வருவதற்கு கேரளா அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஏராளமான சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கின்றன.
சபரிமலையில் மண்டல பூஜை டிசம்பர் 27-ந் தேதி நடக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மண்டல பூஜை முடிந்ததும் டிசம்பர் 27-ந்தேதி இரவு கோவில் நடை சாத்தப்படுகிறது.
பின்பு மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந்தேதி சபரிமலை கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது. டிசம்பர் 31-ந்தேதி முதல் ஜனவரி 15-ந் தேதி வரை மகர விளக்கு பூஜைகள் நடைபெறும். ஜனவரி 15-ந்தேதி மாலை 6.30 மணிக்கு மகரஜோதி தரிசனம் நடை பெறும். தொடர்ந்து 19-ந்தேதி வரை பூஜைகள் நடைபெறும். மறுநாள் 20-ந்தேதி பந்தள ராஜ குடும்ப பிரதிநிதி சாமி தரிசனம் செய்த பிறகு கோவில் நடை சாத்தப்படும். அன்றுடன் மகர விளக்கு பூஜை நிறைவு பெறும்.
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதி களில் 7,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
சபரிமலையில் இன்று
அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு, 3.30 மணிக்கு கணபதி ஹோமம், 3.35 மணிக்கு முதல் 7 மணி வரை நெய் அபிஷேகம்
காலை 7.30 மணிக்கு உஷ பூஜை, 8.30 மணி முதல் 11 மணி வரை நெய் அபிஷேகம்
காலை 11 மணி முதல் 11.30 மணி வரை அஷ்டாபிஷேகம்
மதியம் 12.30 மணிக்கு உச்ச பூஜை, 1 மணிக்கு நடை அடைப்பு
மாலை 3 மணிக்கு நடை திறப்பு, 6.30 மணி தீபாராதனை
இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை புஷ்பாபிஷேகம்
இரவு 9.30 மணிக்கு அத்தாழ பூஜை, 11 மணி நடை அடைப்பு
- முன்னதாக அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.
- 10 நாட்கள் காலை இரவு என இருவேளையில் சாமி மாடவீதி உலா நடைபெறுகின்றன.
திருவண்ணாமலையில் வருகிற 26-ந்தேதி கார்த்திகை தீபத் திருவிழா மகா தீபம் ஏற்றப்படுகிறது.
இதனையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 14-ந்தேதி காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவம், தொடர்ந்து பிடாரி அம்மன் உற்சவம் விநாயகர் உற்சவம் நடந்தது.
இன்று காலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடி மரத்தில் காலை 5.40 மணி அளவில் துலா லக்கினத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷத்துடன் கொடியேற்றம் நடைபெற்றது.

முன்னதாக அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. கொடிமரத்தின் அருகே அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
இதனை தொடர்ந்து 10 நாட்கள் காலை இரவு என இருவேளையில் சாமி மாடவீதி உலா நடைபெறுகின்றன.
நவம்பர் 22-ந்தேதி இரவு வெள்ளித் தேரோட்டமும், 23-ந்தேதி மகா தேரோட்டமும் நடைபெறும். கார்த்திகை தீபத் திருவிழாவின் உச்ச நிகழ்வான மகா தீபம் நவம்பர் 26-ந்தேதி ஏற்றப்படுகிறது.
26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் தங்க கொடிமரம் முன்பு எழுந்தருள்வார். அப்போது 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

26-ந்தேதி முதல் 11 நாட்களுக்கு மலை உச்சியில் அண்ணாமலையார் ஜோதிப்பிழம்பாக காட்சி தருவார். கார்த்திகை தீபத் திருவிழாவில் சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் பக்தர்களின் வசதிக்காக செய்யப்பட்டுள்ளன.
இன்று காலை நடைபெற்ற கொடியேற்று விழாவில் வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் பக்தர்கள் போலீஸ் கட்டுப்பாடு இல்லாமல் சாமி தரிசனம் செய்தனர்.
- சூரியபிரபை, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா.
- 35 பேர் கொண்ட குழுவினர் சூரிய தில்லானா நடனம் ஆடினர்.
திருமலை:
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான நேற்று காலை சூரியபிரபை, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா நடந்தது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை நடந்த சூரிய பிரபை வாகனச் சேவையில் உற்சவர் பத்மாவதி தாயார் `வேத நாராயணசாமி' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மதியம் 12.30 மணியில் இருந்து 2.30 மணி வரை கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகிய நறுமண பொருட்களால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது.
இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை நடந்த சந்திர பிரபை வாகனச் சேவையில் உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
காலையில் நடந்த சூரிய பிரபை, இரவு நடந்த சந்திர பிரபை வாகனச் சேவைகளுக்கு முன்னால் கலாசாரக் குழுவினர் நடனம் மற்றும் சங்கீர்த்தனங்களை வழங்கி பக்தர்களை கவர்ந்தனர். அதில் சூரியகாந்தி பூக்கள் போல வேடமிட்டும், ஏழு குதிரைகள் பூட்டிய சூரிய பிரபை வாகனத்தில் துணைவியார்களுடன் சூரிய நாராயணமூர்த்தி எழுந்தருளி இருப்பதுபோல் வேடமிட்ட ராஜமுந்திரியைச் சேர்ந்த ௩௫ பேர் கொண்ட குழுவினர் சூரிய தில்லானா நடனம் ஆடினர்.
அதேபோல் திருப்பதியில் உள்ள மகதி கலையரங்கம், அன்னமாச்சாரியார் கலையரங்கம், ராமச்சந்திரா புஷ்கரிணி பகுதியில் நடந்த பக்தி இசை மற்றும் நாட்டிய கலை நிகழ்ச்சிகள் உள்ளூர் மக்கள், பக்தர்களை கவர்ந்தன.
கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை தேரோட்டம், இரவு குதிரை வாகன வீதிஉலா நடக்கிறது.
- கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு ஊஞ்சல் சேவை.
- திருவண்ணாமலை அருணாச்சல நாயகர் உற்சவம் ஆரம்பம்
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, கார்த்திகை 1 (வெள்ளிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சதுர்த்தி நண்பகல் 12.03 மணி வரை. பிறகு பஞ்சமி.
நட்சத்திரம்: பூராடம் பின்னிரவு 2.45 மணி வரை. பிறகு உத்திராடம்.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: காலை 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருவண்ணாமலை அருணாச்சல நாயகர் உற்சவம் ஆரம்பம், காலை வெள்ளி விமானத்தில் பவனி. பழனி ஆண்டவர் உற்சவம் ஆரம்பம். குமாரவயலூர் முருகப்பெருமான் சிங்கமுகாசூரனுக்குப் பெருவாழ்வு தந்தருளல். ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம் - சுகம்
ரிஷபம் - சுபம்
மிதுனம் - அமைதி
கடகம் - நன்மை
சிம்மம் - நட்பு
கன்னி - அன்பு
துலாம் - புகழ்
விருச்சிகம் - நிறைவு
தனுசு - ஜெயம்
மகரம் - பயணம்
கும்பம் - மகிழ்ச்சி
மீனம் - திறமை
- விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் நாளை மறுநாள்
- ஞாயிற்றுக்கிழமை இரவு திருக்கல்யாணம் நடக்கிறது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் ஒவ்வொரு நாளும் காலையில் சுவாமி ஜெயந்தி நாதர் யாகசாலையில் எழுந்தருளி அங்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்று மதியம் சண்முக விலாசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
தொடர்ந்து மாலையில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு பால், தயிர் இளநீர் பன்னீர், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அலங்கார அலங்காரமாகி தீபாராதனைக்கு பிறகு சுவாமி தங்க தேரில் எழுந்தருளி கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று வருகிறது.
4-ம் திருவிழாவான இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகத்தை தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலையில் கடற்கரையில் நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு திருக்கல்யாணம் நடக்கிறது. விழாவில் கலந்து கொள்ள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- ஸ்ரீஐயப்ப பூஜையையும் முறையாக செய்ய வேண்டும்.
- ஸ்ரீஐயப்பனை தரிசனம் செய்பவர்களுக்கு அனைத்து இன்பமும் கிடைக்கும்.
நாளை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவிக்கும் தினமாகும். நாளை காலை குரு மூலம் துளசி அல்லது ருத்ராட்ச மாலை அணிந்து முறையாக ஒரு மண்டலம் (48 நாட்கள்) விரதம் இருப்பார்கள். மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள் சில அடிப்படையான பழக்க வழக்கங்களை யும் கடைபிடிக்க வேண்டும். எந்த ஒரு ஜந்துவையும் உடலாலோ மனத்தாலோ துன்புறுத்தக்கூடாது. பேச்சு, எண்ணம், செயல் ஆகியவற்றில் உண்மையாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்குச் சேர வேண்டிய பொருளை தான் எடுத்துக் கொள்ளுதல் அல்லது அனுபவிக்கக் கூடாது.
தினசரி அதிகாலை நேரத்தில் குளித்து தூய ஆடை அணிந்து அவரவர்களுக்கு உண்டான நித்ய கர்மாக்களை செய்து ஸ்ரீஐய்யப்ப பூஜையையும் முறையாக செய்ய வேண்டும். கண்ட காட்சிகளை கண்களால் காணாதிருத்தல், கெட்ட சத்தங்களையே காதால் கேட்காது இருக்க வேண்டும். இவ்வாறு தவம் இருந்து ஸ்ரீஐயப்பனை தரிசனம் செய்பவர்களுக்கு அனைத்து இன்பமும் கிடைக்கும் என்பது அனுபவ உண்மை.
- 5-வது நாள் உற்சவமாக சக்திவேல் வழங்கும் உற்சவம் நடத்தப்படுகிறது.
- 19-ந்தேதி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
சென்னை சூளையில் அருள்மிகு சொக்கவேல் சுப்பிர மணியசுவாமி கோவில் உள்ளது. தற்போது இந்த ஆலயத்தில் கந்தசஷ்டி விழா நடந்து வருகிறது. இன்று மாலை 4-வது நாள் உற்சவம் நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5-வது நாள் உற்சவமாக சக்திவேல் வழங்கும் உற்சவம் நடத்தப்படுகிறது.
நாளை மறுநாள் ஆட்டுக்கிடா வாகனத்தில் சொக்கவேல் சுப்பிரமணியசுவாமி எழுந்தருளி சூரசம்ஹாரம் செய்வார். 19-ந்தேதி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
- கார்த்திகை மாதத்துக்கு தனி சிறப்பு உண்டு.
- கார்த்திகையில் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.
தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதத்துக்கு தனி சிறப்பு உண்டு. கார்த்திகையில் தீபம் ஏற்றி வழிபடுவது அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றும். இத்தகைய சிறப்புடைய கார்த்திகை மாதம் திருக்கணித பஞ்சாங்கப்படி இன்று நள்ளிரவு 1.16 மணிக்கு பிறக்கிறது. வாக்கிய பஞ்சாங்கப்படி நாளை காலை 9.16 மணிக்கு பிறக்கிறது. கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு திருக்கணித பஞ்சாங்கப்படி அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.
அதுபோல வாக்கிய பஞ்சாங்கப்படி பரணி, பூரம், பூராடம் நடத்திரத்தில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். பரிகாரம் என்றதும் நிறைய செலவாகும் என்று பயப்பட வேண்டாம். அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று இறைவனுக்கு தீபம் ஏற்றி வழிபட்டாலே போதும். வசதி வாய்ப்பு இருப்பவர்கள் நாளை தீபம் ஏற்றுவதற்கான அகல் விளக்கு, திரி, நெய் போன்றவற்றை தானம் செய்யலாம். கார்த்திகை மாதம் முழுவதும் இப்படி தானம் செய்வது மிக மிக சிறப்பானது.
- காவிரியில் நீராடலுக்கு முடவன் முழுக்கு என்று பெயர்.
- காவிரி நதி ஓடும் எந்த ஊரிலாவது நீராடினால் லன் கிடைக்கும்.
ஒரு சமயம் முடவன் ஒருவன் மயிலாடுதுறை காவிரியில் ஐப்பசி மாதம் புனித நீராட விரும்பினான். இதற்காக அவன் தொலைவில் இருந்து மெல்ல, மெல்ல மயிலாடுதுறைக்கு நடந்து வந்தான். அவன் வருவதற்குள் ஐப்பசி 30 நாளும் முடிந்து விட்டது. கடைசி நாளான கடை முழுக்கும் முடிந்து விட்டது. இதனால் அவன் மிகவும் வருந்தினான். மயிலாடுதுறையில் உள்ள ஸ்ரீமயூரநாதரிடம் மனமுருகி வேண்டினான். அவனது பிரார்த்தனைக்கு ஈசன் மனமிரங்கி வழிகாட்டினார்.
சிவபெருமான் கூறுகையில், " ஐப்பசி 30 நாட்களும் முடிந்தாலும் கவலை வேண்டாம். கார்த்திகை முதல் தேதி நீ காவிரியில் புனித நீராடு. அதனால் உனக்கு ஐப்பசி மாத புனித நீராடலுக்கு கிடைக்கும் பலன்கள் அனைத்தும் முழுமையான அளவில் கிடைக்கும்" என்று கூறினார். மேலும் கார்த்திகை 1-ந்தேதி காவிரியில் யார் புனித நீராடினாலும் அவர்களுக்கு ஐப்பசி மாதம் முழுவதும் நீராடிய பலன் உண்டு என்று கூறி மறைந்தார். ஆகவே நாளை (வெள்ளிக்கிழமை) காவிரியில் நீராடலுக்கு முடவன் முழுக்கு என்று பெயர். முடவன் முழுக்கு அன்று காவிரி நதி ஓடும் எந்த ஊரிலாவது நீராடினால் ஐப்பசி 30 நாளும் நீராடிய பலன் கிடைக்கும்.






