என் மலர்
வழிபாடு
- திருவாவினன்குடி கோவில் மற்றும் பெரியநாயகி அம்மன் கோவில்களிலும் கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- விழாவிற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
பழனி:
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வருடம் முழுவதும் திருவிழா கோலம் பூண்டிருக்கும் பழனியில் பல முக்கிய திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அதில் ஒன்று திருக்கார்த்திகை திருவிழா ஆகும். 7 நாட்கள் நடைபெறும் இந்த விழா வருகிற 20-ந் தேதி மலைக்கோவிலில் காப்பு கட்டுதலுடன் தொடங்க உள்ளது. அன்று மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜைக்கு பின்னர் காப்பு கட்டப்படும். மாலை 6 மணிக்கு சண்முகார்ச்சனை, 6.30 மணிக்கு சண்முகர் தீபாராதனை, மாலை 7 மணிக்கு தீபாராதனை மற்றும் தங்கரத புறப்பாடு ஆகியவை நடைபெறுகிறது.
அதனைத் தொடர்ந்து 6 நாட்களும் இந்த பூஜை நடைபெறுகிறது. 25-ந்தேதி முக்கிய நிகழ்ச்சியான பரணி தீபம் ஏற்றுதல், மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையின் போது நடைபெறுகிறது. 26-ந்தேதி திருக்கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெறும். 4.30 மணிக்கு விளாபூஜை அதனைத் தொடர்ந்து சின்னக்குமாரர் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.
தொடர்ந்து யாகசாலை தீபாராதனையும், மலைக்கோவிலில் 4 மூலைகளிலும் தீபம் வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். மாலை 6.15 மணிக்கு திருக்கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றுதல் நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து திருவாவினன்குடி கோவில் மற்றும் பெரியநாயகி அம்மன் கோவில்களிலும் கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
- பக்தர்களைக் காப்பதற்காக கந்தசஷ்டி கவசம் உள்ளது.
- கந்த சஷ்டி கவசம் தேவராய சுவாமியால் பாடப்பட்டது.
ஒரு வீரனுக்கு, அவனது மார்பில் உள்ள கவசம் எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பு தருகிறது. அதுபோல், பக்தர்களைக் காப்பதற்காக கந்தசஷ்டி கவசம் உள்ளது. கந்த சஷ்டி கவசம் தேவராய சுவாமியால் பாடப்பட்டது. சஷ்டி விரதம் இருப்பவர்கள் அதற்காக ஆறுநாளும் இதனைப் படித்து வருவர்.
இதனைப் படித்தால் கிடைக்கும் நன்மையைப் பற்றி தேவராய சுவாமிகளே சொல்லியுள்ளார். கவசத்தின் முதல் பாடலில் துதிப்போருக்கு வல்வினை போம், துன்பம் போம், நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும், நிஷ்டையும் கைகூடும் என்கிறார்.
அதாவது கந்த சஷ்டி கவசம் படிப்பவர்களுக்கு தீவினையும், துன்பமும் நீங்குவதோடு செல்வ வளம் பெருகும். காலை, மாலையில் பக்தியுடன் படித்து, திருநீற்றினை நெற்றியில் அணிவோருக்கு நவக்கிரகங்களால் நன்மை உண்மை உண்டாகும். மன்மதன் போல பேரழகும், வாழ்வில் பெற வேண்டிய பதினாறு பேறுகளும் கிடைக்கும்.
சஷ்டி விரத காலம் மட்டுமின்றி, தினமும் இதைப் படிப்போருக்கு சிறந்த பாதுகாப்பு கிடைக்கும். குறிப்பாக, பெண்களுக்கு பாதுகாப்பாற்ற நிலை நிலவும் இந்தக் காலத்தில், சஷ்டி கவசம் சிறந்த பாதுகாப்பைத் தரும்.
- எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திரு முருகப் பெருமான்.
- ஆறு கார்த்திகைப் பெண்ணால் வளர்க்கப்பட்டவர்.
சஷ்டி கவசத்தை தினம் காலையிலும் மாலையிலும் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான். ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று இருக்கிறது. சஷ்டி என்பது அமாவாசை அல்லது பூர்ணிமாவுக்கும் அடுத்து ஆறாம் நாள். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு, போன்றவைகளைக் குறிக்கும். செவ்வாய் ரோகக் காரகன். இந்த எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திரு முருகப் பெருமான்.
அவருக்கு உகந்த நாள் சஷ்டி, சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், சரவணபவ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்ணால் வளர்க்கப்பட்டவர். நாம் அந்தத் திருவடியை விடாது பிடித்தால் மேலே சொன்ன ஒரு கெடுதலும் அண்டாது. வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்ற நிலை ஏற்படும். இப்போது சஷ்டி கவசத்தைப் பார்ப்போம்.
கந்தன் வரும் அழகே அழகு, பாதம் இரண்டில் பண்மணிச் சலங்கை கீதம் பாட கிண்கிணியாட, மயில் மேல் அமர்ந்து ஆடி ஆடி வரும் அழகை என்னவென்பது? இந்திரன் மற்ற எட்டு திசைகளில் இருந்தும் பலர் முருகனை போற்றுகிறார்கள். முருகன் வந்து விட்டான், இப்போது என்னைக் காக்க வேண்டும், பன்னி ரண்டு விழிகளும் பன்னி ரெண்டு ஆயுதத்துடன் வந்து என்னைக் காக்க வேண்டும்.
அவர் அழகை வர்ணிக்கும் போது பரமேஸ்வரி பெற்ற மகனே முருகா, உன் நெற்றியில் இருக்கும் திரு நீர் அழகும், நீண்ட புருவமும், பவளச் செவ்வாயும், காதில் அசைந் தாடும் குண்டலமும், அழகிய மார்பில் தங்க நகைகளும், பதக்கங்களும், நவரத்ன மாலை அசைய உன் வயிறும், அதில் பட்டு வஸ்திரமும் சுடர் ஒளி விட்டு வீச, மயில் மேலேறி வந்து கேட்டவர்களுக்கு எல்லாம் வரம் தரும் முருகா, என்றெல்லாம் அவரை ஸ்ரீ தேவராயர் வர்ணிக்கிறார்.
அவர் கூப்பிடும் வேல்கள் தான் எத்தனை? உடம்பில் தான் எத்தனை பாகங்கள்? காக்க என்று வேலை அழைக்கிறார், வதனத்திற்கு அழகு வேல், நெற்றிக்குப் புனிதவேல், கண்ணிற்குக் கதிர்வேல் நாசிகளுக்கு நல்வேல், செவிகளுக்கு வேலவர் வேல், பற்களுக்கு முனைவேல், செப்பிய நாவிற்கு செவ்வேல், கன்னத்திற்கு கதிர்வேல், கழுத்திற்கு இனியவேல், மார்பிற்கு ரத்தின வடிவேல், இளமுலை மார்புக்கு திருவேல், தோள்களுக்கு வடிவேல், பிடறிகளுக்கு பெருவேல், அழகு முதுகிற்கு அருள்வேல், வயிறுக்கு வெற்றிவேல் சின்ன இடைக்கு செவ்வேல், நாண்கயிற்றை நால்வேல், பிட்டம் இரண்டும் பெருவேல், கணைக் காலுக்கு கதிர் வேல், ஐவிரல்களுக்கு அருள்வேல், கைகளுக்கு கருணை வேல், நாபிக்கமலம் நல்வேல் முப்பால் நாடியை முனை வேல், எப்போதும் என்னை எதிர் வேல், பகலில் வஜ்ர வேல், இரவில் அனைய வேல், காக்க காக்க கனக வேல் காக்க.
அப்பப்பா எத்தனை விதமான வேல் நம்மைக் காக்கின்றன. அடுத்தது எந்தெந்த வகை பயங்களில் இருந்து காக்க வேண்டும் என்று விளக்கப்பட்டுள்ளது.
பில்லி, சூனியம், பெரும் பகை, வல்லபூதம், பேய்கள், அடங்காமுனி, கொள்ளிவாய்ப் பிசாசு, குறளைப் பேய்கள், பிரும்ம ராட்சசன், ரிசி காட்டேரி, இவைகள் அத்தனையும் முருகன் பெயர் சொன்னாலே ஓடி ஒளிந்து விடும் என்கிறார்.
அடுத்தது மந்திரவாதிகள் கெடுதல் செய்ய உபயோகிக்கும் பொருட்கள் பாவை, பொம்மை, முடி, மண்டைஓடு, எலும்பு, நகம், சின்ன மண்பானை, மாயாஜால் மந்திரம், இவைகள் எல்லாம் சஷ்டி கவசம் படித்தால் செயலிழந்து விடும் என்கிறார்.
பின் மிருகங் களைப் பார்ப்போம், புலியும் நரியும், எலியும் கரடியும், தேளும் பாம்பும் செய்யான், பூரான், இவைகளால் எற்படும் விஷம் சஷ்டி கவச ஓசையிலேயே இறங்கி விடும் என்கிறார். நோய்களை எடுத்துக் கொண்டால் வலிப்பு, சுரம், சுளுக்கு, ஒத்த தலைவலி, வாதம், பைத்தியம், பித்தம், சூலை, குடைச்சல், சிலந்தி, குடல் புண், பக்கப் பிளவை போன்ற வியாதிகள் இதனைப் படித்தால் உடனே சரியாகி விடும் என்கிறார்.
இதைப் படித்தால் வறுமை ஓடிவிடும் நவகிரகங்களும் நமக்குத் துணை இருப்பார்கள். சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள். முகத்தில் தெய்வீக ஒளி வீசும் என்று கூறப்பட்டுள்ளது.
- கவசம் என்றால் பாதுகாப்பது அல்லது காப்பாற்றுவது என்று பொருள்படும்.
- நோய் நொடிகளில் இருந்தும் காப்பதால் அதை கவசம் என்கிறோம்.
கவசம் என்றால் பாதுகாப்பது அல்லது காப்பாற்றுவது என்று பொருள்படும். போரின்போது வீரர்கள் எதிரிகளிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள கவசம் அணிந்து கொள் வார்கள். அவ்வாறு கந்த சஷ்டி கவசம் நம்மை தீமைகளில் இருந்தும், கஷ்டத்தில் இருந்தும், நோய் நொடிகளில் இருந்தும் காப்பதால் அதை கவசம் என்று அழைக்கின்றோம்.
கந்த சஷ்டி கவசத்தை அருளியவர் ஸ்ரீ தேவராய சுவாமிகள். இவர் எதற்காக இந்தக் கவசத்தை பாடினார் தெரியுமா? தேவராய சுவாமிகள் ஒரு சமயம் கடும் வயிற்றுவலியால் மிகவும்அவதிப்பட்டு வந்தார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவருடைய வயிற்றுவலி தீர்ந்தபாடில்லை.
வாழ்க்கையே வெறுத்துப்போய் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூர் சென்றார். அவர் சென்ற நாளில் திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது. தீவிர முருக பக்தரான தேவராய சுவாமிகள், சஷ்டி நாட்களில் விரதமிருந்து முருகனை மனம் குளிர வழிபட்டு சூரசம்ஹாரம் கண்ட பின்பு உயிர் விடலாம் என்று முடிவெடுத்தார்.
நல்ல அருட்கவி யும், மந்திரநூல் வல்லுனருமான தேவராய சுவாமிகள், சஷ்டி விரத நாட்களான ஆறு தினங்களில், தினத்துக்கு ஒன்றாக, ஆறுபடை வீடுகளுக்கும் தனித்தனியாக ஆறு கவசங்களை பாடி முடிப்பது என்று முடிவு செய்தார். அவ்வண்ணமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படை வீட்டிற்குரிய கவசங்களை பாட ஆரம்பித்தார். அவர் பாட ஆரம்பித்ததும் வயிற்றுவலி படிப்படியாக குறைய ஆரம்பித்தது.
சஷ்டியின் ஆறாவது நாளன்று வயிற்றுவலி அறவே நீங்கிவிட்டது. இப்படி பிறந்தவை தான் கந்த சஷ்டி கவசங்கள் ஆறும். தேவராய சுவாமிகள் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசமாக ஆறு கவசங்களை இயற்றியுள்ளார். இவை அனைத்துமே 'கந்த சஷ்டி கவசம்' என்ற ஒரே பெயரைத்தான் கொண்டு அழைக்கப்படுகின்றன.
அவர் முதன் முதலில் இயற்றிய 'திருச்செந்தூர் கவசம்' தான் பொதுவாக எல்லோரும் அறிந்த, `சஷ்டியை நோக்க சரவண பவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்' என்று தொடங்கும் கவசம்.
இதுபோல் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசம் உள்ளது. இருப்பினும் திருச்செந்தூர் கந்த சஷ்டி கவச நூலே பிரபலமாகி எல்லோராலும் அறியப்பட்டு பாடப்பட்டு வருகிறது. என்றாலும் ஆறு கவசத்தையும் ஒருங்கே பாடுவதே சிறப்புத்தரும். இந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டவன் முருகப்பெருமான் மட்டுமே. கந்தன் என்று சொன்னாலே, வந்த வினையும், வருகின்ற வல்வினையும் நீங்குமே. இந்த கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்தால் கிடைக்கும் பயனை சொல்லவும் வேண்டுமா?
இத்தனை சிறப்பு வாய்ந்தது இந்த கந்த சஷ்டி கவசம். இதனை பாராயணம் செய்வோர்களின் தேவையை உணர்ந்து, அறிவு, செல்வம், சந்தானம், வெற்றி ஆகியவற்றை அவர்கள் விரும்பிக் கேட்டாலும், கேட்காவிட்டாலும் தானே அருளும் சக்தி வாய்ந்த கவசமாகும்.
பாம்பன் சுவாமிகள் அடிக்கடி மனம் உருகி இந்த கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து கொண்டிருப்பார். அப்படி ஒருமுறை பாராயணம் செய்தபோது தானும் இதேபோல் ஒரு கவச நூலை முருகன்மீது பாடவேண்டும் என்று நினைத்தார். அப்படி அவர் பாடியதுதான் 'சண்முக கவசம்'. இந்த சண்முக கவசமும் ஆறு கவசங்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
தினம், தினம் கந்த சஷ்டி கவசம் படியுங்கள். வேலனைப் போற்றுங்கள் உங்கள் வேதனைகள் எல்லாம் விலகி ஓடிவிடும். சஷ்டியின் முக்கிய நிகழ்வு முருகப்பெருமான் நடத்திய போர். அதுபற்றி நாளை காணலாம்.

216 தடவை படித்தால் குழந்தை பாக்கியம் உறுதி
சஷ்டி அன்றும் செவ்வாய்க் கிழமையிலும் இக்கவசம் படிக்க பலன் அதிகமாகும். வம்ச விருத்தி, காரிய வெற்றிக்கு, சஷ்டியன்று காலையிலும், நோய் நிவர்த்தி, கிரகதோஷ நிவர்த்திக்கு செவ்வாய்க்கிழமை மாலை யிலும் படிக்க விரைவில் பலன் கிடைக்கும்.
சஷ்டிக் கவசத்தை கந்த சஷ்டி விரத நாட்களில் ஒரு நாளைக்கு 36 தடவை வீதம் ஆறு நாட்களில் 216 தடவை கூறினால் குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்பதும், நினைத்த காரியம் நடக்கும் என்பதும் ஐதீகம்.
- அருணாலேஸ்வரர் கோவில் மாடவீதியின் ஒரு பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக கான்கிரீட் சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
- சிமண்டு சாலையில் தேர் வருவதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதிகளில் திருமலை திருப்பதியில் உள்ளதைப்போல் கான்கிரீட் சிமெண்டு சாலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
நெடுஞ்சாலைத்துறை சார்பில் அருணாலேஸ்வரர் கோவில் மாடவீதியின் ஒரு பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக கான்கிரீட் சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. பணி நிறைவு பெற்ற நிலையில் புதிய சாலையில் இன்று காலை 5.30 மணிக்கு முருகர் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். சிமண்டு சாலையில் தேர் வருவதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
- 6-வது நாளான நேற்று கிருஷ்ணர் அலங்காரத்தில் வீதி உலா.
- சர்வபூபால வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி.
திருமலை:
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான நேற்று கிருஷ்ணர் அலங்காரத்தில், சர்வபூபால வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. மாலையில் தங்க தேரோட்டமும் நடந்தது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை சர்வ பூபால வாகன வீதிஉலா, மாலையில் தங்க தேரோட்டம், இரவு கருட வாகன வீதிஉலா நடந்தது.
காலையில் கிருஷ்ணர் அலங்காரத்தில் சர்வபூபால வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மதியம் 12 மணி முதல் 2 மணி வரை கிருஷ்ண சுவாமி முக மண்டபத்தில் தாயாருக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலை 4.20 மணி முதல் 5.20 மணி வரை தாயார் தங்க ரதத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் தந்தார். இரவு 7 மணி முதல் 9 மணி வரை கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
- கார்த்திகை தீபத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
- பஞ்ச பூத தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நேற்று பிடாரி அம்மன் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவ்விழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். மேலும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருவார்கள்.
இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இவ்விழாவை முன்னிட்டு கொடியேற்றத்திற்கு முன்னர் 3 நாட்கள் காவல் தெய்வ வழிபாடு நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. அப்போது அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காமதேனு வாகனத்தில் மாட வீதியில் உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து நேற்று கோவிலில் 3-ம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. அப்போது அம்மனுக்கு படையலிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தொடர்ந்து சிறப்பு அங்காரத்தில் பிடாரி அம்மன் எழுந்தருளி கோவிலின் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் முன்பு தயார் நிலையில் இருந்த சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து அம்மன் மாட வீதி உலா நடந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.
இன்று (வியாழக்கிழமை) விநாயகர் உற்சவ நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அப்போது விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி மாட வீதி உலா நடைபெற உள்ளது.
தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை 4.45 மணியில் இருந்து 6.12 மணிக்குள் சாமி சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்று காலையில் மற்றும் இரவில் விநாயகர், வள்ளி- தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், துர்க்கை அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து 2-ம் நாள் விழாவில் இருந்து 9-ம் நாள் விழா வரை காலையில் விநாயகர் மற்றும் சந்திரசேகர் மாட வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் மாட வீதி விழாவும் நடைபெற உள்ளது.
இதற்கிடையில் 23-ந் தேதி (7-ம் நாள் விழா) பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நடைபெற உள்ளது. கார்த்திதை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 26-ந் தேதி (10-ம் நாள் விழா) விடியற்காலை 4 மணிக்கு கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசனம் மண்டபம் எழுந்தருள அர்த்தநாரீஸ்வரர் காட்சியும், கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. அன்று இரவு பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் மாட வீதி உலாவும் நடைபெற உள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுக்கு அபிஷேகம்.
- சுவாமி-அம்பாள்களுக்கு அலங்காரமாகி தீபாராதனை.
திருச்செந்தூர்:
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 13-ந்தேதி யாகசாலை பூஜையுன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 3-ம் திருநாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.
காலையில் உச்சிகால அபிஷேகம், தீபாராதனையை தொடர்ந்து யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி- தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமி-அம்பாள்களுக்கு மஞ்சள், பால், இளநீர், தேன், தயிர், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி-அம்பாள்களுக்கு அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரிப்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கந்தசஷ்டி திருவிழாவையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள தற்காலிக கொட்டகைகளில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கியிருந்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மேற்பார்வையில், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6-ம் திருநாளான நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலையில் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் மாவட்ட நிர்வாகம், கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
- மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 7,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் பல லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை நாளை(17-ந்தேதி) தொடங்குகிறது.
இதற்காக ஐயப்பன் கோவில் நடை இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். பின்பு 18-ம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்படுகிறது.
தொடர்ந்து சன்னிதானத்தில் புதிய மேல் சாந்திகள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தி பி.என்.மகேஷ், மாளிகைபுரம் கோவிலின் புதிய மேல்சாந்தி பி.ஜி.முரளி ஆகியோர் இருமுடி கட்டிமேளதாளம் முழங்க 18-ம் படிகளுக்கு கீழ் அழைத்து வரப்படுகிறார்கள்.
பின்பு இரு மேல்சாந்திகளையும், படியிறங்கும் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி 18-ம் படிவழியாக சன்னிதானத்துக்கு அழைத்து வருகிறார். அதன்பிறகு மாலை 6.30 மணிக்கு புதிய மேல்சாந்திகள் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மூல மந்திரம் கூறி பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள்.
அவர்கள் இருவரையும் தந்திரி கலசாபிஷேகம் நடத்தி அபிஷேகம் செய்கிறார். அன்றைய தினம் மற்ற பூஜைகள் எதுவும் நடைபெறாது. இரவு 10 மணிக்கு கோவிலின் நடை அடைக்கப்பட்டு, கோவில் சாவி புதிய மேல்சாந்தி பி.என்.மகேஷிடம் ஒப்படைக்கப்படும்.
நாளை(17-ந்தேதி) அதிகாலை 4 மணிக்கு புதிய மேல்சாந்தி பி.என்.மகேஷ் கோவில் நடையை திறந்து வைத்து பூஜை மற்றும் வழிபாடுகளை தலைமையேற்று நடத்துவார். அன்றைய தினம் முதல் தினமும் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள், மதியம் 12 மணி வரை நெய் அபிஷேகம், உச்ச பூஜைக்கு பிறகு பகல் ஒரு மணிக்கு நடை அடைக்கப்படும்.
அதன்பிறகு மாலை 4 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படும். மாலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், அத்தாழபூஜை நடைபெறும். பின்னர் இரவு 10 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு கோவில் நடை அடைக்கப்படும்.
சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுவதை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சன்னிதானம் மற்றும் பம்பை பகுதிகளில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது.
பக்தர்கள் வரும் வாகனங்களை நிலக்கல்லில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து பம்பைக்கு பக்தர்கள் வருவதற்கு கேரளா அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஏராளமான சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சபரிமலையில் மண்டல பூஜை டிசம்பர் 27-ந் தேதி நடக்கிறது. மண்டல பூஜைக்காக நாளை(17-ந்தேதி) முதல் டிசம்பர் 27-ந் தேதி வரை தினமும் நெய் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். நாளை முதல் டிசம்பர் 27-ந்தேதி வரையிலான 41 நாட்களும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி தற்போது மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு காலத்திலும் ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும், ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
பக்தர்கள் வசதிக்காக நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி ஆன்லைன் முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மண்டல பூஜை முடிந்ததும் டிசம்பர் 27-ந்தேதி இரவு கோவில் நடை சாத்தப்படும். பின்பு மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந்தேதி சபரிமலை கோவில் நடை மீண்டும் திறக்கப்படும்.
டிசம்பர் 31-ந்தேதி முதல் ஜனவரி 15-ந்தேதி வரை மகர விளக்கு பூஜைகள் நடைபெறும். ஜனவரி 15-ந்தேதி மாலை 6.30 மணிக்கு மகரஜோதி தரிசனம் நடைபெறும். தொடர்ந்து 19-ந்தேதி வரை பூஜைகள் நடைபெறும். மறுநாள் 20-ந்தேதி பந்தள ராஜ குடும்ப பிரதிநிதி சாமி தரிசனம் செய்த பிறகு கோவில் நடை சாத்தப்படும். அன்றுடன் மகர விளக்கு பூஜை நிறைவுபெறும்.
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 7,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும் சபரிமலை வரக்கூடிய பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் தேவசம்போர்டு சார்பில் செய்யப்பட்டுள்ளன. பம்பை முதல் சன்னிதானம் வரை உள்ள மலைப்பாதையில் ஏராளமான இடங்களில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- சென்னைமலை முருகன் இரண்டு திருமுகங்கள், எட்டு திருக்கரங்களுடன் கந்தன்.
- கையில் வில், அம்படன் இருக்கும் தனுசு சுப்பிரமணியராக முருகன்.
* சனி பகவானுக்குரிய பரிகாரத்தலமாக விளங்கும் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் முருகப்பெருமான் கையில் மாம்பழத்துடன் காட்சி தருகிறார்.
* இரண்டு திருமுகங்கள், எட்டு திருக்கரங்களுடன் கந்தன் காட்சி தரும் தலம் ஈரோடு - சென்னிமலை. இந்த கோவிலுக்கு மேல் காகங்கள் பறப்பதில்லை என்பது அதிசயமான ஒன்றாகும்.
* வழக்கமாக அம்மனுக்கு தான் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் குடைபிடித்திருக்கும். ஆனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்தில் முருகன் தலைக்குமேல் ஐந்து தலை நாகர் குடைபிடித்திருக்கும் காட்சியை தரிசிக்கலாம்.
* கும்பகோணம் வியாழ சோமேஸ்வரர் ஆலயத்தில் முருகப்பெருமான் காலில் பாதரட்சை அணிந்தபடி காட்சி தருகிறார்.
* திருவையாறு ஐயாரப்பர் சன்னிதி பிரகாரத்தில் கையில் வில், அம்படன் இருக்கும் தனுசு சுப்பிரமணியராக முருகன் அருள் செய்கிறார்.
* திருப்போரூரில் முத்துக்குமார சுவாமியாய் காட்சி தரும் முருகப் பெருமான். இடது காலை தரையில் ஊன்றி, வலது காலை மயில் மீது வைத்து, இடது கையில் வில்லும், வலது கையில் அம்பும் எந்தியபடி போருக்கு தயாராகும் கோலத்தில் காட்சி தருகிறார்.
* நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி என்னுமிடத்தில் முருகன் வேடன் வடிவில் காட்சி தருவது தனிச் சிறப்பாகும். இந்த முருகனின் சிலையில் வியர்வை துளிர்ப்பது அதிசய நிகழ்வாகும்.
* மகாபலிபுரம் அருகே வளவன்தாங்கல் தலத்தில் முருகன், கையில் தண்டம் ஏந்திய கோலத்தில் தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார். அவர் கண்களில் நீர் வரும் காட்சி வியப்பான ஒன்றாகும்.
* மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் உள்ள நெய்குப்பை என்ற ஊரில் அம்மன் கையில் கைக்குழந்தையாக அமர்ந்தபடி பாலமுருகனாக முருகப்பெருமான் காட்சி தருகிறார்.
* திருநனிப்பள்ளி, திருக்குறுங்குடி ஆகிய தலங்களில் முருகப்பெருமான் மூன்று கண்களுடனும், எட்டு திருக்கரங்களுடனும் காட்சி தருகிறார்.
* புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள ஒற்றைக் கண்ணனூர் திருத்தலத்தில் பழமையான கோவிலில் முருகன். ஒரு கையில் ஜபமாலையுடனும், மறுகையில் சின் முத்திரையுடனும் காட்சி தருகிறார்.
* முருகன் பாம்பு வடிவில் காட்சி தரும் ஒரே திருத்தலம் 'காட்டி சுப்பிரமணியா' கோவிலாகும். கர்நாடக மாநிலம் குக்கே சுப்பிரமண்யா கோவிலில் இந்த முருகனை தரிசிக்கலாம். இந்த பகுதியில் பாம்புகள் யாரையும் தீண்டுவதுமில்லை. பாம்பை யாரும் துன்புறுத்துவதும் இல்லை.
* கனககிரி தலத்தில் முருகப்பெருமான் கையில் கிளியை ஏந்தி காட்சி தருகிறார்.
* செம்பனார்கோவில் திருத்தலத்தில் முருகப்பெருமான் ஜடாமகுடம் தாங்கி, இரண்டு கைகளிலும் அக்கமாலை ஏந்தி, தவக்கோலத்தில் காட்சி தருவது தனிச்சிறப்பாகும்.
* மாமன் திருமாலைப்போல் முருகப்பெருமானும் கையில் சங்கு, சக்கரம் ஏந்தி காட்சி தரும் கோவில் கும்பகோணம் அருகில் அழகாபுத்தூர் என்ற ஊரில் அமைந்துள்ளது.
* பூம்புகார் அருகே உள்ள மேலையூரில் திருச்சாய்க்காடு சாயாவனேஸ்வரர் கோவிலில் முருகப்பெருமான் வில், அம்புடன் பஞ்சலோக சிலை வடிவில் காட்சி தருகிறார்.
* ஜோலார்பேட்டை ஏலகிரி மலையில் ஜலகாம்பாறை என்னும் இடத்தில் உள்ள முருகன் கோவிலில் விக்ரஹம் கிடையாது. ஏழு அடி உயர வேல் மட்டுமே காட்சி தருகிறது. வேல் வடிவில் வேலவன் காட்சி தரும் வித்தியாசமான ஆலயம் இது.
* பெரம்பலூர் அருகில் உள்ள செட்டிகுளம் தண்டாயுதபாணி கோவிலில் முருகன் கரும்போடு காட்சி தருகிறார்.
* நாகப்பட்டினம் மாவட்டம் விளத்தொட்டி என்ற தலத்தில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் பாலமுருகனாக தொட்டிலில் தவழ்ந்து உறங்கும் கோலத்தில் காட்சி தருகிறார்.
* திருவண்ணாமலை - வேலூர் சாலையில் உள்ள வில்வாரணி என்னும் ஊரில் அமைந்துள்ள நட்சத்திர கிரி மலையில் சுயம்பு வடிவ லிங்க திருமேனியாக, நாகாபரணத்துடன் முருகன் காட்சி தருகிறார். முருகனும், சிவனும் ஒரே வடிவமாக அமைந்திருக்கும் கோலத்தை இங்கு மட்டுமே தரிசிக்க முடியும்.
* சிவகங்கை மாவட்டம் திருமலையில் அமைந்துள்ள மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தில் முருகப்பெருமான் சற்று சாய்ந்த நிலையில் காட்சி தருகிறார். இவருக்கு இடப்புறம் ஆடும், வலப்புறம் மயிலும் எதிரெதிரே இருக்கும் வகையில் காட்சி தருகிறார்.
* ஈரோடு மாவட்டம் காங்கேயம்பாளையம் தலத்தில் உள்ள நட்டாற்றிஸ்வரர் ஆலயத்தில் பக்தர்களை நோக்கி அடியெடுத்து வைக்கும் கோலத்தில் முரு கன் காட்சி தருகிறார்.
*நாகப்பட்டினம் மாவட்டம் திருவிடைச்சுழி என்னும் ஊரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகப் பெருமான் தவக்கோலத்தில் காட்சி தருகிறார். முருகனுக்கும். தெய்வானைக்கும் நிச்சயதார்த்தம் நடந்த தலமாக இது கருதப்படுகிறது.
* நாகப்பட்டினம் மாவட்டம் பொரவாச்சேரி கந்தசாமி கோவிலில் உள்ள மூலவர் கந்தசாமி சிலை ஒரே கல்லால் செதுக்கப்பட்டதாகும். மயில் மீது அமர்ந்த நிலையில் இருக்கும் முருகனின் திருமேனி. மயில், திருவாசி உட்பட மொத்த எடையையும் மயிலின் கால்கள் தாங்கிநிற்பது அதிசயமான காட்சியாகும்.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
- ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருநட்சத்திர வைபவம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஐப்பசி 30 (வியாழக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: திருதியை நண்பகல் 1.34 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம்: மூலம் பின்னிரவு 3.49 மணி வரை பிறகு பூராடம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சுப முகூர்த்த தினம். சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் ரதோற்சவம். குமாரவயலூர் முருகப்பெருமான் கஜமுகாசூரனுக்கு பெருவாழ்வு தந்தருளல். ஐயடிகள் காடவர்கோன் நாயனார் குருபூஜை. மாயவரம் கவுரிமாயூரநாதர் கடைமுக உற்சவ தீர்த்தவாரி. வள்ளியூர் முருகப்பெருமான் காலை ஏக சிம்மாசனத்தில் பவனி. ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருநட்சத்திர வைபவம். ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனத்தில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-அமைதி
ரிஷபம்-நலம்
மிதுனம்-நன்மை
கடகம்-தனம்
சிம்மம்-வெற்றி
கன்னி-மகிழ்ச்சி
துலாம்- இன்பம்
விருச்சிகம்-வெற்றி
தனுசு- போட்டி
மகரம்-புகழ்
கும்பம்-செலவு
மீனம்-நிறைவு
- திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என்று 2 மூலவர்கள் உள்ளனர்.
- திருச்செந்தூரில் வீரபாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார்.
திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி சண்முகர் என்று 2 மூலவர்கள் உள்ளனர். சுப்பிரமணிய சுவாமி. கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள். திருச்செந்தூரில் வீரபாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார். இதனால் இத்தலத்துக்கு `வீரபாகு பட்டினம்' என்ற பெயரும் உண்டு.
திருச்செந்தூர் தலத்தில் தினமும் வீரபாகு தேவருக்கு பூஜை நடத்தப்பட்ட பிறகே மூலவருக்கு பூஜை நடத்தப்படுகிறது. மூலவர் சுப்பிரமணியருக்கு தினமும் தூய வெள்ளை நிற ஆடையே அணிவிக்கப்படுகிறது. சண்முகருக்கு சிறப்பு பச்சை நிற ஆடைகள் அணிவிக்கப்படும்.
மூலவருக்கு பின்புறம் சுரங்க அறை உள்ளது. உள்ளே சென்றால் முருகன் பூசித்த பஞ்சலிங்கங்களைக் காணலாம். இந்த அறைக்கு பாம்பறை என்றும் ஒரு பெயர் உண்டு.
திருச்செந்தூர் கோவில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும்.
திருச்செந்தூர் தலத்தில் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமான் என நான்கு உற்சவர்கள் உள்ளனர். இவர்களில் குமரவிடங்கரை 'மாப்பிள்ளை 'சுவாமி' என்று அழைக்கிறார்கள்.
திருச்செந்தூர் கோவில் கோபுரம் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 9 அடுக்குகளை கொண்ட இந்த கோபுரம் 157 அடி உயரம் கொண்டது.
திருச்செந்தூர் முருகனே போற்றி என்ற தலைப்பில் அருணகிரி நாதர் 83 திருப்புகழ் பாடல் பாடி உள்ளார். இந்த பாடல்களை பக்தி சிரத்தையுடன் பாடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
திருச்செந்தூர் கோவில் வடிவம் பிரணவ மந்திரம் ஓம் எனும் வடிவில் அமைந்துள்ளது. மூலவருக்கு பக்தர்கள் தங்க அங்கி அணிவித்து வழிபடலாம். இந்த வழிபாட்டின் போது முருகருக்கும், பரிகார தெய்வங்களுக்கும் தங்க அங்கி, வைரவேல் அணிவிக்கப்படும்.
திருச்செந்தூர் கோவிலில் உள்ள சண்முக விலாசம் எனும் மண்டபம் 120 அடி உயரமும், 60 அடி அகலமும் கொண்டது. 124 தூண்கள் இதை தாங்குகின்றன.
திருச்செந்தூர் கோவில் மூலவர் முன் உள்ள இடம் மணியடி எனப்படுகிறது. இங்கு நின்று சுப்பிரமணியரை தரிசிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
நாழிக்கிணறு 24 அடி ஆழத்தில் உள்ளது. இங்கு நீராடிய பிறகே கடலில் நீராட வேண்டும் என்பது ஐதீகம்.
திருச்செந்தூர் கோவில் திருப்பணிக்காக மவுனசாமி, காசிநாத சுவாமி, ஆறுமுகசாமி மூவரும் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தனர். அவர்களது சமாதி நாழிக்கிணறு அருகே உள்ளது.
இத்திருத்தலம் மன்னார் வளைகுடா கடலின் கரையோரத்தில், அலைகள் தழுவ அமைந்திருப்பதால், அலைவாய் என்று அழைக்கப்பட்டது. பின்னர், திரு என்றும் அடைமொழி சேர்க்கப்பட்டு, 'திருச்சீரலைவாய்' என்று அழைக்கப்படுகின்றது.
இக்கோவிலுக்குச் செல்லும் வழ யில், தூண்டுகை விநாயகர் கோவில் உள்ளது. இவ்விநாயகரை வணங்கிய பின்னர்தான் முருகப்பெருமானை வணங்கச் செல்ல வேண்டும்.
முருகப்பெருமானின் வெற்றி வேல், மாமரமாக மாறி நின்ற சூரபத்மனை பிளவுபடுத்திய இடம் திருச்செந்தூரில் இருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் கடற்கரை ஓரமாக உள்ள 'மாப்பாடு' என்ற இடம் ஆகும். தற்போது, `மணப்பாடு' என்று அழைக்கப்படுவதாக சொல்கிறார்கள்.
முருகனின் அறுபடை வீடுகளில் இது, 2-வது படை வீடு ஆகும். முருகனின் அவதார நோக்கமே அசுரர்களை சம்ஹாரம் செய்வதுதான்.
திருச்செந்தூரில் தான் அந்த அவதார நோக்கம் பூர்த்தியானது. எனவே முருகனின் தலங்களில் திருச்செந்தூர் தலமே தெய்வீக சிறப்பும், தனித்துவமும் கொண்டதாகும். அது மட்டுமின்றி இத்தல இறைவன், ஞானத்தை அருளி தீயவைகளிடம் இருந்து நம்மை காப்பாற்றுகிறார்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மிகப்பெரிய கோவில் கொண்ட தலம் என்ற சிறப்பும் திருச்செந்தூர் கோவிலுக்கு உண்டு.
முருகன் சிவந்த நிறம் உடையவன். அவன் உறைந்துள்ள தலம் என்பதால்தான் இத்தலத்துக்கு 'செந்தில்' என்ற பெயர் ஏற்பட்டது.
திருச்செந்தூர் கோவில் ராஜ கோபுரம் வாசல் ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்டே இருக்கும். சூரசம்ஹாரம் முடிந்ததும் தெய்வானை திருமணநாளில் மட்டுமே அந்த வாசல் திறக்கப்படும்.
திருச்செந்தூர் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் விஸ்வரூப தரிசனம் எனும் நிர்மால்ய பூஜையே மிக மிக முக்கியமான பூஜையாகும்.
மூலவர் தவக்கோலத்தில் இருப்பதால் காரம், புளி ஆகியன பிரசாதத்தில் சேர்க்கப்படுவதில்லை. ஆனால் சண்முகருக்குரிய பிரசாதங்களில் காரம், புளி உண்டு.
முருகனுக்கு படைக்கப்படும் நிவேதனப் பொருள்களில் சிறுபருப்புக் கஞ்சி, பால்கோவா, வடை, சர்க்கரை பொங்கல், கல்கண்டு, பேரீச்சம் பழம், பொரி, தோசை, சுகியன், தேன் குழல், அதிரசம், அப்பம், பிட்டமுது, தினைமாவு ஆகியன இடம் பெறுகின்றன.
உச்சிக்கால பூஜைக்கு முன் இலை போட்டுச் சோறு, மோர்க் குழம்பு, பருப்புப் பொடி, நெய், தயிர் போட்டுத் தீர்த்தம் தெளித்த பின்னரே மூலவருக்கு போற்றிகள் பூஜையை தொடங்குவார்கள். இரவு பூஜையில் பால், சுக்கு வெந்நீர், ஆகியன நிவேதனம் செய்வர்.






