என் மலர்tooltip icon

    வழிபாடு

    • சுபமுகூர்த்த தினம்.
    • திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு கார்த்திகை-15 (திங்கட்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : ஏகாதசி பிற்பகல் 2.36 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம் : ரேவதி இரவு 7.52 மணி வரை பிறகு அசுவினி

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் சிவன் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம்

    இன்று சர்வ ஏகாதசி. சுபமுகூர்த்த தினம். திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசல நாயகர் வெள்ளி விமானத்திலும் இரவு ஸ்ரீ சுவாமி குதிரை வாகனத்திலும் பவனி. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் கோவில்களில் 1008 சங்காபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம். நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலையில் அலங்கார திருமஞ்சனம்.

    திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட் நகர் ஸ்ரீ அராளகேசி அம்பாள் சமேத ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலையில் சிறப்பு சோமவார அபிஷேகம். கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலையில் பால் அபிஷேகம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பரிசு

    ரிஷபம்-தனம்

    மிதுனம்-மேன்மை

    கடகம்-நற்செயல்

    சிம்மம்-லாபம்

    கன்னி-உழைப்பு

    துலாம்- உயர்வு

    விருச்சிகம்-நலம்

    தனுசு- பெருமை

    மகரம்-நன்மை

    கும்பம்-வாழ்வு

    மீனம்-கடமை

    • கடகம் நன்மைகள் நடக்கும் வாரம்.
    • கன்னி நீண்ட கால லட்சியங்களும், குறிக்கோள்களும் நிறைவேறும் வாரம்.

    மேஷம்

    எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும் வாரம்.ராசிக்கு 4-ம் மிடமான சுகஸ்தானத்தில் நிற்கும் அதிசார குரு பகவான் வக்ரகதியில் வெற்றி ஸ்தானத்திற்கு செல்கிறார். இதனால் தனவரவில் தன்னிறைவு உண்டாகும். ஆயுள் ஆரோக்கியம் சார்ந்த பயம் அகலும்.அறுவை சிகிச்சை வரை சென்ற நோய் பாதிப்பு சற்று குறையும். எதிர்பாராத சில பண வரவுகள் இருக்கும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலைகள் நிலவும். எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். வாழ்க்கைத் துணை மற்றும் பிள்ளைகளால் ஏற்பட்ட மனச்சங்கடம் அகலும்.சுப மங்கள விசேஷங்கள் நடக்கும். புதிய தொழில் சிந்தனை அதிகரிக்கும்.இது ஏழரைச் சனியின் காலம் என்பதால் சுய ஜாதக பரிசீலனைக்கு பிறகு புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவது நல்லது. சிக்கனத்தை கடைபிடித்தால் வீண் விரயங்களை தவிர்க்க முடியும். மனக்கவலை மறந்து நிம்மதியாக தூங்குவீர்கள்.திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து சிவ வழிபாடு செய்யவும்.

    ரிஷபம்

    நல்லவிதமான மாற்றங்கள் உருவாகும் வாரம்.ராசிக்கு 6-ல் ஆட்சி பலம் பெற்று நின்ற ராசி அதிபதி சுக்கிரன் வார இறுதியில் 7-ம் மிடத்திற்கு சென்று ராசியை பார்ப்பார். இது ரிஷப ராசியி னருக்கு இழந்த இன்பங்களை மீட்டு தரக்கூடிய அமைப்பாகும். எதையும் தைரியத்தோடு செய்யக் கூடிய மன பலம் அதிகரிக்கும். திறமையான பேச்சால் மற்றவர்களை வசீகரம் செய்யக்கூடிய தன்மை உருவாகும். திறமைகள் அதிகரிக்கும். செயல் திறன் கூடும். கடந்த காலங்களில் ஏற்பட்ட கடன் சுமைகள் படிப்படியாக குறையும். திருமண தடை அகலும்.காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் கிடைக்கும்.வேலைப்பளு குறையும்.புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். புத்திர பிராப்தத்தில் நிலவிய குறைபாடுகள் சீராகும். பூர்வீகச் சொத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் சீராகும்.அழகு ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும்.திருக்கார்த்திகை நாளில் விரதம் இருந்து சிவனுக்கு பன்னீர் பூக்களால் அர்ச்சனை செய்யவும்.

    மிதுனம்

    மறைமுக எதிர்ப்புகள் குறையும். வாரம்.ராசிக்கு 5-ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராசி அதிபதி புதன் வார இறுதி நாளில் வக்கிர நிவர்த்தி அடைகிறார். பூர்வீ கத்திற்கு சென்று வரும் எண்ணம் அதிகமாகும். பூர்வீக சொத்தால் ஏற்பட்ட பிரச்சிினைகள் குறையத் துவங்கும்.பிள்ளைகளால் ஏற்பட்ட கவலைகள் அகலும். இழுபறி யாக கிடந்த பணிகளை அறிவாற்றலால் சரி செய்வீர்கள். குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள். முக்கிய பிரார்த்தனைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் கூடும். திருமணம் குழந்தைப் பேரு போன்றவற்றில் ஏற்பட்ட தடைகள் விலகும்.தொழில் வியாபாரத்தில் லாபகரமான சூழ்நிலை இருக்கும். மேலதிகாரியிடம் பாராட்டுக்கள் கிடைக்கும்.தடைபட்ட பதவி உயர்வு இப்பொழுது சாதகமாகும். சிலர் நடந்ததை நினைத்து கற்பனை கவலைகள் பய உணர்வை அதிகரிப்பார்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து வில்வ அர்ச்சனை செய்து சிவ வழிபாடு செய்யவும்.

    கடகம்

    நன்மைகள் நடக்கும் வாரம்.ராசியில் குரு பகவானும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரனும் பாக்கியஸ்தானத்தில் சனிபகவானும் சஞ்சரிப்பதால் திரிகோணங்கள் பலம் பெறுகிறது. இது கடக ராசிக்கு நன்மைகளை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். அஷ்டம ஸ்தானத்தில் ராகு நின்றாலும் ராகுக்கு வீடு கொடுத்த சனி பகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது.மனதில் நிலவிய கவலைகள் கஷ்டங்கள் விலகும். குறுக்கு வழியில் சம்பாதிக்கும் எண்ணம் தோன்றும்.அனைத்து செயல்களிலும் கண்ணும் கருத்துமாக செயல்படுவீர்கள்.உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.புதிய வீடு கட்டுதல் கட்டிய வீட்டை விரிவு செய்தல் போன்றது தொடர்பான சிந்தனைகள் இருக்கும்.கணவன்-மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். போட்டி பந்தயங்களில் அமோகமாக வெற்றி பெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.குலதெய்வ அருளுடன் சகல பாக்கியங்களும் கைகூடும். திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து புனித நீரால் அபிஷேகம் செய்து சிவபெருமானை வழிபடவும்.

    சிம்மம்

    சாதகமான வாரம்.ராசி அதிபதி சூரியன் 4-ம்மிடமான சுகஸ்தானத்தில் சுகஸ்தான அதிபதி செவ்வாயுடன் சேர்ந்து இருக்கிறார். எதிலும் முதன்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். தாராள தன வரவால் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.வீட்டிலும் வெளி இடத்திலும் உள்ள நிலைமைகளை சமாளித்து வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் தேடி வரும். புதிய சொத்துக்கள் சேரும். சொந்தத் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.பொறுப்புகள் அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.உங்களின் ஆராய்ச்சி திறன் உயரும்.உயர் கல்வி வாய்ப்புகள் தேடி வரும்.தந்தையின் ஆசியுடன் குலதெய்வ அருள் கடாட்சம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த சாதகமான பலன்கள் நடக்கும்.விவசாயிகளுக்கு அரசாங்க உதவிகள் கிடைக்கும். 1.12.2025 அன்று இரவு 11.18 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாத நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீண் விரயங்கள் ஏற்படலாம். திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து சிவனுக்கு பஞ்சகவ்ய அபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது.

    கன்னி

    நீண்ட கால லட்சியங்களும், குறிக்கோள்களும் நிறைவேறும் வாரம்.ராசி அதிபதி புதன் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரே பத்தாம் அதிபதியாக இருப்பதால் தொழில் மூலமாக தன வரவு அதிகமாகும். பேச்சை மூலதனமாக கொண்டவர்களின் வாழ்வாதாரம் உயரும்.இதுவரை உங்களுக்கு இருந்த பிரச்சிினைகள் எல்லாம் சூரியனை கண்ட பணி போல் விலகும்.சிந்தனைகள் தெளிவாகும். தடைபட்ட கனவுகள் லட்சியங்களை நிறைவேற்ற உகந்த காலமாகும். நிதானமாக செயல்படுவீர்கள். புதிய வீடு வாங்குதல் வாகனம் வாங்குதல் போன்ற செயல்களில் ஆர்வம் கூடும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். இடமாற்றம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். அரசு மற்றும் அரசாங்க பணிகளால் ஆதாயங்கள் கிடைக்கும். சிலர் புதிய ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுப்பார்கள்.1.12.2025 அன்று இரவு 11.18 முதல் 3.12.2025 அன்று இரவு 11.14 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற ஆசைகளை கட்டுப்படுத்துவதன் மூலம் விபரீத விளைவுகளை தவிர்க்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும். திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து சிவபுராணம் படித்து சிவபெருமானை வழிபடவும்.

    துலாம்

    சங்கடங்கள் விலகும் வாரம்.ராசி அதிபதி சுக்கிரன் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி செவ்வாய் மற்றும் லாப ஸ்தான அதிபதி சூரியனுடன் சேர்க்கை பெறுகிறார். கடந்த காலங்களில் பட்ட கஷ்டத்திற்கு தற்போது பலன் கிடைக்கும். குடும்பத்தினரின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வெளியே சொல்ல முடியாத பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். சிலர் கடன் பெற்று புதிய வாகனம் சொத்துக்கள், வாங்குவார்கள். அலுவலக பணிச் சுமையும் அலைச்சலும் உங்களுக்கு சிரமம் தரும். எனினும் உத்தியோகத்தின் மீது முழு கவனத்தையும் செலுத்துவீர்கள். பூர்வீகச் சொத்துக்களை பிரிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். 3.12.2025 அன்று இரவு 11.14 முதல் 5.12.2025 அன்று இரவு 10.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வார்த்தைகளில் வேகம் இருக்கும் ஆனால் விவேகம் இருக்காது.குடும்ப உறவினர்களை கடுமையான சொற்களால் பேசக்கூடாது. திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து சிவனுக்கு சந்தன அபிஷேகம் செய்து வழிபடவும்.

    விருச்சிகம்

    திறமைகளால் மதிப்பு உயரும் வாரம்.ராசியில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை உள்ளது. ஆன்ம பலம், ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். உடல் தேஜஸ் கூடும்.கவுரவப் பதவிகள் கிடைக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சுய திறமையால் நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். அலைச்சல் மிகுந்த பயணங்கள் அதிகரிக்கும். இடப்பெயர்ச்சியால் சில நன்மைகள் ஏற்படும். நோய் தொந்தரவுகள் அகலும்.சில பெண்களை அச்சுறுத்திய மாதவிடாய் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். கடன்தர நிதி நிறுவனங்கள், வங்கிகள் தேடி வரும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.உயர் கல்வியில் நிலவிய தடைகள் அகலும்.5.12.2025 அன்று இரவு 10.15 முதல் 7.12.2025 அன்று இரவு 10.38 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நட்புகளிடம் விவேகமான வார்த்தைகளை பேச வேண்டும். நண்பர்கள், தொழில் கூட்டாளிகளிடம் கவனமாக பழகவும்.திருக்கார்த்திகை நாளில் விரதம் இருந்து சிவனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபட இன்னல்கள் விலகும்.

    தனுசு

    எதிர்கால வாழ்க்கை பற்றிய புதிய நம்பிக்கை பிறக்கும் வாரம்.ராசி அதிபதி குரு பகவான் வார இறுதியில் வக்கிர கதியில் சம சப்தமஸ்தானம் செல்கிறார்.திடீர் வருமானம், பெயர், புகழ் என யோகமான நிலை உண்டாகும். அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் காணாமல் போவார்கள். ஏற்றுமதி, இறக்குமதி வணிகத்தினர் தொழிலில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிப்பார்கள். பணவரவு நன்றாக இருக்கும். பங்குச் சந்தை மற்றும் யூக வணிகம் உங்களுக்கு அதிர்ஷ்ட லட்சுமியை கண்ணில் காட்டும். உடல் ஆரோக்கி யத்தில் சிறிய பாதிப்பு தோன்றினாலும் சமாளித்து விடுவீர்கள். ஆன்லைன் வர்த்தகர்கள் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும். திருமணத் தடை அகலும். வரவு செலவு சீராக இருக்கும். தம்பதிகளிடையே இணக்கமான சூழல் நிலவும். பெண்களுக்கு அழகிய நவீன பொருட்கள் சேர்க்கையில் ஆர்வம் அதிகரிக்கும். திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து சிவனுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்து வழிபட அனைத்தும் சுப பலன்களும் வந்து சேரும்.

    மகரம்

    வெற்றி மேல் வெற்றி வந்து சேரும் வாரம்.ராசி அதிபதி சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.சிலர் தொழில், வேலைக்காக இடம் பெயரலாம். விரும்பிய அரசு, தனியார், வெளிநாட்டு வேலை கிடைக்கும். விவசாயிகளுக்கு வறண்ட நிலம் செழிப்பாகும். வீடு, வாகன பராமரிப்பு செலவு மிகுதியாகும். சொத்து விசயத்தில் இருந்த வழக்குகள் சாதகமாகும். கொள்கை பிடிப்போடு செயல்படுவீர்கள். அரசு ஊழியர்கள், அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். இதுவரை வராமல் இருந்த தொகை கைக்கு வந்து சேரும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் சீராகும்.கடன் சுமை குறைய புதிய வழி பிறக்கும்.பெண்களுக்கு கருவுருதலில் இருந்த பிரச்சினைகள் நீங்கி புத்திர பிராப்தம் உண்டாகும். வயோதிகர்களுக்கு தாத்தா, பாட்டி யோகம் உண்டு. ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பும், முன்னோர்களின் நல்லாசியும் கிடைக்கும். திருமணம் மற்றும் சுப காரியங்களுக்காக செய்யும் முயற்சிகளில் வெற்றியுண்டு. திருக்கார்த்திகை அன்று விரதம் இருந்து சிவனுக்கு புனுகு சாற்றி வழிபடவும்.

    கும்பம்

    பொருளாதார மேன்மை உண்டாகும் வாரம்.தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி சனிபகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.ராசியில் உள்ள ராகுக்கு குரு பார்வை கிடைக்கிறது. வாக்கு வன்மை பெருகும்.எதிர்பார்த்த அனைத்து வகையிலும் வருமானம் உண்டாகும்.வரா கடன்கள் வசூல் ஆகும்.பணவரவு தாராளமாக இருப்பதால் வீடு வாகனம் வாங்குவது போன்றவற்றில் ஆர்வம் கூடும். சொந்த வீட்டை விட்டு வாடகை வீட்டிற்குச் சென்றவர்கள் மீண்டும் சொந்த வீட்டிற்குச் சென்று குடிபுகுவீர்கள். அடமானச் சொத்து மற்றும் நகைகளை மீட்பீர்கள்.மருமகனால் ஏற்பட்ட நிம்மதியின்மை சீராகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமா வார்கள். தொழில் வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சியில் அவசரம் காட்டாமல் யோசித்து செயல்படவும். அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு தொழிலுக்கு சிக்கலை ஏற்படுத்தாமல் உண்மையாக உற்சாகமாக, உழைக்க வேண்டும்.ஆரோக்கியத்தை பேணுவது அவசியம். உடன் பிறந்தவர்களின் திருமணத்தை நடத்துவதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருக்கார்த்திகை நாளில் விரதம் இருந்து சிவனுக்கு கரும்புச்சாறு அபிஷேகம் செய்து வழிபடவும்.

    மீனம்

    தடை தாமதங்கள் அகலும் வாரம். ஜென்ம ராசியில் நின்ற சனிபகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் நீங்கும். விலகிச் சென்ற உறவுகள் வந்து இணைவார்கள். திடீர் அதிர்ஷ்டம் உங்களை வழிநடத்தப் போகிறது. எந்த தொழிலாக இருந்தாலும் ஏற்றமும் வருமானமும் அதிகரிக்கும். வியாபாரத்திலும் தொழிலிலும் புதிய சாதனை படைப்பீர்கள். கழுத்தை நெரித்த கடன்களை கவனமாக அடைப்பீர்கள். பொய்யான கெட்ட வதந்திகளால் ஏற்பட்ட அவமானம் அகலும். மனதை வருத்திய கோர்ட், கேஸ் பிரச்சினை சுமூகமாகும்.பார்த்துச் சென்ற வரனிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும்.சிலருக்கு அரசின் நலத்திட்டத்தில் வீடு, மனை கிடைக்கும். தாய்மாமன் உதவியால் தாய் வழிச் சொத்தில் நிலவிய குழப்பங்கள் சுமூகமாகும். தந்தையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.ஓய்வு, நிம்மதியான தூக்கம், சந்தோஷம் என இந்த வாரத்தை மகிழ்ச்சியாக கடப்பீர்கள். பெண்களுக்கு மாமியார், மாமனாரின் ஒத்துழைப்பால் மன நிம்மதி உண்டாகும். திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து சிவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்து வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    • தாழம்பூ, சிவபெருமான் முடியில் இருந்து வருவதாக கூறியதும், பிரம்மனுக்கு ஒரு யோசனை தோன்றியது.
    • சிவன், ‘பிரம்மனே! பூவுலகில் உள்ள அந்தணர்களுக்கு செய்கின்ற பூஜை, உன் பூஜையாக விளங்கும்’ என்றார்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் கார்த்திகை தீபத்திருவிழா வரலாறு வருமாறு:-

    இந்த உலகத்தில் அனைத்து உயிர்களையும் படைக்கும் பிரம்மனுக்கு ஒருமுறை அளவில்லாத கர்வம் ஏற்பட்டது. அவர் காக்கும் கடவுளான திருமாலிடம் சென்று, திருமாலே! இந்த ஈரேழு லோகங்களையும் படைத்தவன் நான். நான் இல்லை என்றால் இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. நான் உலகத்தை படைக்காவிட்டால் உன்னால் எப்படி காப்பாற்ற முடியும் என்று ஆணவத்துடன் பேசினார்.

    இதனால் திருமாலுக்கும், பிரம்மனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் உலகமே நடுநடுங்கியது.

    திருமாலும், பிரம்மனும் சண்டையிடுவதால் உலகத்தில் பல பிரச்சனைகள் உருவாகும் என்பதால் அதற்கு தீர்வு காண்பதற்காக தேவேந்திரனும், தேவர்களும் அல்லல் தீர்க்கும் அலகில் ஜோதியனை நாடிச் சென்று பிரம்மனுக்கும், விஷ்ணுவுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சனையை தீர்த்து உலகை காக்கும்படி கூறி முறையிட்டனர். அவர்களின் துன்பத்தை நீக்க, சிவபெருமான் முன்வந்தார்.

    தேவர்களின் துன்பத்தை தீர்க்கவும், திருமாலுக்கும் பிரம்மாவுக்கும் ஏற்பட்ட பகை நீங்கவும் இந்த உலக உயிர்களுக்கு அருள் புரிவதற்காகவும் மிகப்பெரிய ஒரு நெருப்பு உருவம் எடுத்து பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் முன்பு ஒளிப்பிழம்பாக உருமாறி நின்றார்.

    மிகப் பெரிய நெருப்பு உருவம் தோன்றியதை பார்த்த பிரம்மனும், விஷ்ணுவும் சண்டையை நிறுத்தி ஆச்சரியமாக அந்த ஒளிப்பிழப்பை பார்த்தனர். பின்னர் இவ்வளவு பெரிய உருவத்தின் அடிப்பாகத்தையோ அல்லது மேல்பாகத்தையோ யாரால் கண்டுபிடிக்க முடிகிறதோ அவரே பெரியவர் என்று விஷ்ணுவும், பிரம்மனும் முடிவுக்கு வந்தனர்.

    பின்னர் நெருப்பு உருவத்தின் அடியை நான் கண்டு பிடிப்பேன் என்று சொல்லிக்கொண்டு விஷ்ணு பன்றி வடிவம் எடுத்து பூமியை குடைந்து சென்றார். தான் முடியை கண்டு வருவதாக கூறி பிரம்மன் அன்னப்பறவையின் வடிவம் கொண்டு ஒரு நொடிக்கு லட்சக்கணக்கான மைல் வேகத்துடன் மேலே பறந்து சென்றார். பாதாளங்களுக்கு அப்பால் சென்றும் விஷ்ணுவால் அடியை கண்டு பிடிக்க முடியவில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவர் கீழ் நோக்கி பூமியை குடைந்து சென்று கொண்டிருந்தார். ஆனால் நெருப்பு ஒளியின் அடியை கண்டுபிடிக்க முடியவில்லை. இது சிவபெருமானின் செயலாகத்தான் இருக்கும் என்பதை அறிந்த விஷ்ணு தன்னால் அடியை கண்டுபிடிக்க முடியாமல் திரும்பி வந்தார்.

    மேலே பறந்து முடியை காண்பதற்காக அன்னப்பறவையாக மாறி சென்ற பிரம்மன் பல ஆயிரம் ஆண்டுகளாக பறந்து சென்ற காரணத்தால் அவரது இறகுகள் உதிர தொடங்கின. அவரும் உண்மையை உணர தொடங்கினார். தன் தவறை அவர் உணரும் நேரத்தில் தாழம்பூ ஒன்று பிரம்மனை நோக்கி கீழே வந்து கொண்டு இருந்தது. அந்த தாழம்பூவை கையில் பிடித்த பிரம்மன், 'நீ எங்கிருந்து வருகிறாய்' என்று கேட்டார். அதற்கு தாழம்பூ, 'தான் சிவபெருமானின் முடியில் இருந்ததாகவும், தவறி கீழே விழுந்து விட்டதாகவும், 40 ஆயிரம் ஆண்டுகளாக கீழே வந்து கொண்டிருப்பதாகவும்' கூறியது.

    தாழம்பூ, சிவபெருமான் முடியில் இருந்து வருவதாக கூறியதும், பிரம்மனுக்கு ஒரு யோசனை தோன்றியது. அவர், தாழம்பூவிடம் இந்த நெருப்பு உருவத்தில் முடியை கண்டுபிடிப்பதற்காக மேலே பறந்து வந்து கொண்டிருந்தேன். நான் சிவபெருமானின் முடியை கண்டு அதில் இருந்து உன்னை எடுத்து வந்ததாக ஒரே ஒரு பொய் சொல்ல வேண்டும் என்று கூறினார். இதற்கு முதலில் தாழம்பூ அஞ்சினாலும் பின்னர் ஒப்புக்கொண்டது.

    உடனே பிரம்மன் வேகமாக கீழே வந்தார். அவர் திருமாலை பார்த்து, 'நான் சிவபெருமானின் முடியை கண்டுவிட்டேன். மேலும் அதில் இருந்து தாழம்பூவை எடுத்து வந்தேன்' என்று கூறினார். தாழம்பூவும், 'ஆமாம்! பிரம்மன் சொல்வது உண்மைதான்' என்றது. அந்த நேரத்தில் நெருப்பு மலை வெடித்து பேரொலி கேட்டது. அந்த சத்தத்தால் மூவுலகமும் நடுங்கியது. வெடித்த நெருப்பு மலையில் இருந்து சிவபெருமான் புன்னகையுடன் தோன்றினார்.

    பிரம்மன் பொய் கூறியதால் அவரை பார்த்து, 'பிரம்மனே! உனக்கு இனிமேல் பூமியில் கோவிலும் இல்லை. பூஜையும் இல்லை' என்றார். தாழம்பூவை பார்த்து, 'பொய்சாட்சி கூறிய தாழம்பூவே, இன்று முதல் நான் உன்னை சூடிக் கொள்ள மாட்டேன்' என்று கூறினார் சிவபெருமான். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரம்மன், சிவபெருமானிடம் மன்னிப்பு வேண்டினார். பிரம்மனின் நிலை கண்டு மனம் இளகிய சிவன், 'பிரம்மனே! பூவுலகில் உள்ள அந்தணர்களுக்கு செய்கின்ற பூஜை, உன் பூஜையாக விளங்கும்' என்றார்.

    அதன்பிறகு சிவபெருமான் பிரம்மனையும், விஷ்ணுவையும் பார்த்து, 'இன்று முதல் இந்த இடம் புனித தலமாக விளங்கும். இந்த ஒளிவடிவான மலை, சிறிய மலையாகி இங்கே நிற்கும். இந்த தலத்தில் பாவங்கள் நடக்காது. இதை சந்தேகப்படுபவர்களுக்கு முக்தி கிடைக்காது' என்று அருளாசி கூறினார். பிரம்மனும், திருமாலும் இந்த மலை மற்ற மலைகளைப் போலவே இருக்க வேண்டும். மலையின் உச்சியின் மீது எப்போதும் ஓர் ஒளி விளங்க வேண்டும் என்று வேண்டினர்.

    அதற்கு சிவபெருமான், 'கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் மட்டும் மலையின் மீது ஒளி காட்டுவோம். இந்த ஒளியை காண்போர்க்கு துன்பங்கள் நீங்கும். இந்த ஒளியை கண்டு வணங்குபவரின் 21 தலைமுறைகளுக்கு முக்தி கிடைக்கும்' என்றார். அதன்படி தான் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் மகா தீப திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    மாற்றங்களைப் பற்றி சிந்திக்கும் நாள். உடல் நலனில் கவனம் தேவை. பழைய நண்பர்ளை சந்தித்து மகிழ்வீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி கைகூடும்.

    ரிஷபம்

    நினைத்தது நிறைவேறும் நாள். அலைபேசி மூலம் நல்ல தகவல் உண்டு. தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    மிதுனம்

    வரவு வாயிலைத் தேடி வரும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு உண்டு.

    கடகம்

    சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும் நாள். சிக்கல்கள் அகல செல்வந்தர்களின் ஒத்துழைப்பு கிட்டும். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும்.

    சிம்மம்

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். யோசித்து செயல்படுவது நல்லது. வி.ஐ.பி.க்கள் விரோதமாகலாம். பயணங்களை யோசித்து ஏற்றுக் கொள்ளவும்.

    கன்னி

    கல்யாண முயற்சி கைகூடும் நாள். நிர்வாகத்திறமை பளிச்சிடும். ஆசையாக வாங்க நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    துலாம்

    பாக்கிகள் வசூலாகும் நாள். குடும்ப பிரச்சனை குறையும். பயணங்களால் பலன் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். எண்ணிய காரியங்கள் நிறைவேறும்.

    விருச்சிகம்

    நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். வருங்கால நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் பொருளாதார நிலை உயரும்.

    தனுசு

    ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும் நாள். தாயின் உடல்நலம் சீராகும். தன்னம்பிக்கையோடு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.

    மகரம்

    நல்லவர்கள் தொடர்பால் நலம் காணும் நாள். தனவரவில் இருந்த தடைகள் அகலும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் சிந்தனை மேலோங்கும்.

    கும்பம்

    மலைபோல் வந்த துயர் பனிபோல் விலகும் நாள். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். கடன்சுமை குறையும். பஞ்சாயத்துகள் சாதகமாக அமையும்.

    மீனம்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே திரும்பி வரலாம். உத்தியோகத்தில் உங்கள் முயற்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

    • சுபமுகூர்த்த தினம்.
    • ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு கார்த்திகை-14 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : தசமி மாலை 4.28 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம் : உத்திரட்டாதி இரவு 9.08 மணி வரை பிறகு ரேவதி

    யோகம் : அமிர்தயோகம்

    ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    திருவண்ணாமலை அருணாசல நாயகர் மகா ரதோற்சவம், காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் காலையில் அபிஷேகம்

    இன்று சுபமுகூர்த்த தினம். ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கும் திருமஞ்சன சேவை. திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.

    காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், தஞ்சை புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகருக்கும், ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உதவி

    ரிஷபம்-சுகம்

    மிதுனம்-ஆக்கம்

    கடகம்-நற்செயல்

    சிம்மம்-ஆர்வம்

    கன்னி-நன்மை

    துலாம்- பாராட்டு

    விருச்சிகம்-சிந்தனை

    தனுசு- சிறப்பு

    மகரம்-அமைதி

    கும்பம்-பாசம்

    மீனம்-தேர்ச்சி

    • புற்றில் இருந்த வால்மீகிக்கு காட்சி கொடுத்ததால், இவர் ‘புற்றீஸ்வரர்’ எனப்பட்டார்.
    • கோவிலுக்கு வரும் பக்தர்கள் சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திருத்தளிநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தேவாரப் பாடல்பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் ஒன்றாகும். இத்தல இறைவன் திருத்தளிநாதர் என்றும், இறைவி சிவகாமி என்றும் அழைக்கப்படுகின்றனர். இக்கோவிலில் உள்ள பைரவர் நாய் வாகனம் இல்லாமல் வெண்ணிற பட்டாடை அணிந்து காட்சி தருவது கோவிலின் தனிச் சிறப்பாகும்.

    தல வரலாறு

    முன்னொரு காலத்தில் வால்மீகி, கொலை, கொள்ளை போன்ற பாவச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். பின்னர், இவர் மனந்திருந்தி கொன்றை மரங்கள் நிறைந்த ஒரு வனத்தில் சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்தார். நீண்டகாலம் தவம் இயற்றியதால், அவர் அமர்ந்திருந்த இடத்தை சுற்றிலும் கரையான்கள் புற்று கட்டின. அவரது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், அவருக்கு காட்சி கொடுத்தார்.

    புற்றில் இருந்த வால்மீகிக்கு காட்சி கொடுத்ததால், இவர் 'புற்றீஸ்வரர்' எனப்பட்டார். அவ்வாறு காட்சி கொடுத்ததின் அடிப்படையில் எழுப்பப்பட்ட தலமே இக்கோவில். புற்றின் முன் சிவன் காட்சி தந்ததால், இத்தலம் 'புத்தூர்' என்று அழைக்கப்பட்டது. பின்னர் 'திரு' என்ற அடைமொழி சேர்க்கப்பட்டு, 'திருப்புத்தூர்' என்றாகி, அதுவே மருவி 'திருப்பத்தூர்' என்று அழைக்கப்படுகிறது. பிற்காலத்தில், இவ்விடத்தில் மன்னர்கள் கோவில் கட்டினர்.

    சிவ பக்தனான இரண்யாட்சனுக்கு அந்தகாசுரன், சம்பாசுரன் என இரண்டு மகன்கள் பிறந்தனர். இவர்கள் சிறந்த சிவ பக்தர்களாக இருந்தாலும், தேவர்களுக்கு பெரும் துன்பம் கொடுத்தனர். இதனால் வருந்திய தேவர்கள் சிவபெருமானை நாடினர். சிவபெருமான் பைரவராக விஸ்வரூபம் எடுத்து, அந்தகாசுரன், சம்பகாசுரனை வதம் செய்தார்.

    அசுரர்கள் என்றாலும் அவர்கள் சிவ பக்தர்கள் என்பதால் பைரவருக்கு தோஷம் ஏற்பட்டது. தோஷம் நீங்க இங்கு சிவலிங்க பூஜை செய்தார். அவரே இத்தலத்தில் 'யோகபைரவராக' காட்சி தருகிறார். இவர் வலதுகரத்தில் சிவலிங்கத்தை வைத்து, கால்கட்டை விரலை தரையில் ஊன்றியபடி யோக நிலையில் காட்சி தருகிறார். இவருக்கு வெண்ணிற பட்டாடை அணிவித்து அலங்கரிப்பது சிறப்பானதாகும். யோக நிலையில் இருப்பதால் இவருக்கு நாய் வாகனம் கிடையாது.

    கிரக தோஷங்கள் நீங்க நவக்கிரக தலங்களுக்கு செல்ல முடியாதவர்கள், இங்குள்ள யோக பைரவரை வணங்கினால் போதும், எல்லாவித தோஷங்களையும் நீக்குவார் என்பது ஐதீகம். தேய்பிறை, வளர்பிறை அஷ்டமி தினங்களில் பைரவருக்கு வாசனைப் பொருட்கள் வைத்து வழிபடுகிறார்கள்.

    வால்மீகி தவம் செய்த இடத்தின் வடிவம், கருவறைக்கு பின்புறம் உள்ளது. இந்திரனின் மகன் ஜெயந்தனை பத்மாசுரன் கடத்தி வந்து சிறையில் அடைத்தான். தாயின் மானம் காக்க சிறைப்பட்ட ஜெயந்தனை சூரபத்மனிடம் போரிட்டு மீட்டார் முருகன். இவனுக்கு இக்கோவிலில் தனிச் சன்னிதி இருக்கிறது. சித்திரை மாதத்தில் ஜெயந்தனுக்கு இங்கு விழா எடுக்கப்படுகிறது.

    மகாவிஷ்ணு இத்தலத்தில் திருத்தளிநாதரை வழிபட்டுள்ளார். இவரும் யோகநிலையில், சுவாமிக்கு பின்புறம் தனிச் சன்னதியில் காட்சி தருகிறார். இவர், 'யோகநாராயணர்' என்று அழைக்கப்படுகிறார். ஸ்ரீதேவி, பூதேவி, ஆஞ்சநேயர் உடன் இருக்கின்றனர். ராகு, கேது தோஷம் நீக்கும் திருநாகேஸ்வரர் சன்னிதியும் இங்குள்ளது. ராகு காலத்தில் இவரை வணங்குகின்றனர். சுப்பிரமணியர் வடக்கு நோக்கியபடி வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். இவரை, அருணகிரியார் திருப்புகழில் பாடியுள்ளார். நடராஜர் கவுரிதாண்டவ கோலத்தில் உள்ளார். தட்சிணாமூர்த்தி, சீடர்கள் இல்லாமல் காட்சி அளிக்கிறார். நவக்கிரக மண்டபத்தில் கிரகங்கள் அமர்ந்த நிலையில் உள்ளன.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கோவில் காலை 5.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.

    அமைவிடம்

    சிவகங்கையில் இருந்து 35 கி.மீ. தொலைவிலும், மதுரையில் இருந்து 65 கி.மீ. தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது. திருப்பத்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் கோவில் உள்ளது.

    • திருப்பரங்குன்றம் ஸ்ரீ முருகப் பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி.
    • உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திரவார திருமஞ்சன சேவை

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு கார்த்திகை-13 (சனிக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : நவமி மாலை 6.03 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம் : பூரட்டாதி இரவு 10.07 மணி வரை

    பிறகு உத்திரட்டாதி

    யோகம் : மரண, சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வரதராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை

    திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ முருகப் பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி. சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் பஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி மயில் வாகன உலா. பழனி ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு. நயினார் கோவில் அன்னை சவுந்தரநாயகி திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் காலை அபிஷேகம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திரவார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரெங்கராஜர் புறப்பாடு. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருமஞ்சன சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பயணம்

    ரிஷபம்-நிம்மதி

    மிதுனம்-புகழ்

    கடகம்-வெற்றி

    சிம்மம்-லாபம்

    கன்னி-உழைப்பு

    துலாம்- உதவி

    விருச்சிகம்-நலம்

    தனுசு- கண்ணியம்

    மகரம்-சுகம்

    கும்பம்-இன்பம்

    மீனம்-சுபம்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    ஆதரவு பெருகும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.

    ரிஷபம்

    சர்ச்சைகளில் இருந்து விடுபடும் நாள். தடைகள் தானாக விலகும். தொலைபேசி வழித்தகவல் உத்தியோக முன்னேற்றதிற்கு உறுதுணை புரியும்.

    மிதுனம்

    தடைகள் உடைபடும் நாள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மனம் மாறுவர். பழைய பாக்கிகளை வசூலிக்க எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

    கடகம்

    எதிரிகளின் தொல்லை மேலோங்கும் நாள். லாபத்தைவிட விரயம் கூடும். மற்றவர்களுக்கு நன்மை செய்யப்போய் அது தீமையாய் முடியும்.

    சிம்மம்

    விரயங்கள் கூடும் நாள். விருப்பங்கள் நிறைவேற விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக எடுத்த முயற்சியில் தாமதம் ஏற்படும்.

    கன்னி

    மறதியால் விட்டுப்போன பணிகளை மீண்டும் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.

    துலாம்

    பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.

    விருச்சிகம்

    நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். நண்பர்கள் எதிர்பார்த்த உதவிகள் செய்வர். வருமானம் திருப்தி தரும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி தரும்.

    தனுசு

    நூதனப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். பயணங்களால் பலன் உண்டு. உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    மகரம்

    பற்றாக்குறை அகலும் நாள். எதிலும் விழிப்புணர்ச்சியுடன் இருப்பது நல்லது. முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வதன் மூலம் முன்னேற்றம் காண இயலும்.

    கும்பம்

    பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். பொருளாதார வளர்ச்சி உண்டு. கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட களைப்பின்றி உழைப்பீர்கள்.

    மீனம்

    பிள்ளைகளின் வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் இணக்கமாக நடந்து கொள்வர்.

    • முன்பதிவு செய்யும் பக்தர்கள் தேர்வு செய்யப்பட்டு செல்போன் மூலம் தகவல் அனுப்பப்படும்.
    • திருப்பதி கோவிலில் நேற்று 59,548 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி கோவிலில் டிசம்பர் மாதம் 30-ந்தேதி முதல் ஜனவரி 8 வரை 10 நாட்கள் வைகுண்ட துவார தரிசனம் நடைபெற உள்ளது.

    சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை அளித்து, தேவஸ்தானம் பெரும்பாலான சிறப்பு சலுகைகளை ரத்து செய்துள்ளது. வைகுண்ட ஏகாதசி முதல் 3 நாட்களுக்கு ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மீதமுள்ள 7 நாட்கள் நேரடி தரிசனம் வழங்கப்படுகிறது.

    நேற்று காலை 10 மணிக்குத் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. ஒரு மணி நேரத்திற்குள் 2.16 லட்சம் பக்தர்கள் பதிவு செய்தனர். மாலைக்குள் மொத்தம் 4.60 லட்சம் பேர் பதிவு செய்தனர். டிசம்பர் 1 ஆம் தேதி வரை வாய்ப்பு இருப்பதால் இந்த எண்ணிக்கை மிகப்பெரியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்பதிவு செய்யும் பக்தர்கள் தேர்வு செய்யப்பட்டு செல்போன் மூலம் தகவல் அனுப்பப்படும். அதன் அடிப்படையில் 3 நாட்கள் தரிசனம் செய்யலாம்.

    மேலும் சிறப்பு நுழைவு தரிசனங்கள் மற்றும் ரூ 300 ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கீடு டிசம்பர் 5-ந்தேதி ஆன்லைனில் வெளியிடப்படும். அன்றைய https://ttdevasthanams. ap. gov. in என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

    திருப்பதி கோவிலில் நேற்று 59,548 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 25,781 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.4.54கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் 15 மணி காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • பசுவாக சாபம் பெற்ற அம்பிகை, சாபவிமோசனம் வேண்டி பல இடங்களில் அலைந்து திரிந்து ஈசனை வழிபட்டார்.
    • கோவிலில் ஐந்து நிலைகளை கொண்ட ராஜகோபுரம் அழகுடன் காட்சி அளிக்கிறது.

    மயிலாடுதுறை மாவட்டம் திருமணஞ்சேரி எனும் ஊரில் அமைந்துள்ளது, உத்வாகநாதர் திருக்கோவில். இத்தல இறைவனின் திருநாமம் உத்வாகநாதர், இறைவியின் திருநாமம் கோகிலாம்பாள். சிவனும், பார்வதியும் கைகோர்த்தபடி திருமணக்கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும். இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 25-வது தலமாகும்.

     

    கோவில் தோற்றம்

    தல வரலாறு

    ஒரு சமயம் சிவபெருமானும், பார்வதிதேவியும் கயிலாயத்தில் இருந்தபோது, பார்வதிதேவி சிவபெருமானை வணங்கிவிட்டு, ``தங்களை பூலோக முறைப்படி திருமணம் செய்துகொள்ள என் மனம் விரும்புகிறது. என் விருப்பத்தை தாங்கள் நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று வேண்டினார். இதற்கு பதிலளித்த சிவபெருமான், ``உன் விருப்பம் நிச்சயம் நிறைவேறும். அதற்கு சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டும்" என்று கூறினார். நாட்கள் பல கடந்தன. தன் விருப்பம் எப்போது, எங்கு நிறைவேறும் என்று ஈசன் சொல்லாமல் இருந்ததால், தன் எண்ணம் நிறைவேற வெகுகாலம் ஆகும் என்ற எண்ணத்தில் பார்வதிதேவி ஈசனிடம் சற்று அலட்சியமாக நடக்க ஆரம்பித்தார். இதனால் கோபம் கொண்ட சிவபெருமான், பார்வதிதேவியை பூலோகத்தில் பசுவாக பிறக்கும்படி சாபமிட்டார்.

    பசுவாக சாபம் பெற்ற அம்பிகை, சாபவிமோசனம் வேண்டி பல இடங்களில் அலைந்து திரிந்து ஈசனை வழிபட்டார். அவ்வாறு பசுவின் உருவத்தில் உலவி வந்த அம்பிகை, ஒருநாள் ஒரு இடத்தில் இருந்த சிவலிங்க திருமேனியின் மீது பாலை சொரிந்து அபிஷேகம் செய்தார். இதனால் மனம் இரங்கிய சிவபெருமான் பசுவுக்கு முக்தி அளித்தார்.

    அம்பிகைக்கு பசு சாபம் கொடுக்கப்பட்டது, தேரழுந்தூர். திருமால் பசு மேய்ப்பவராக உருவெடுத்து பசுக்களை பராமரித்த இடம், கோமல். பசு உருவில் இருந்த அம்பிகையின் பாதக்குளம்புகள் பட்டு, ஈசனின் உடல் மீது தழும்புகள் உண்டான ஊர் திருக்குளம்பம். சிவபெருமான் பசுவுக்கு முக்தி அளித்தது, திருவாடுதுறை.

    திருந்துருத்தி என்னும் குத்தாலத்தில் பரத மகரிஷி பிரமாண்ட யாகவேள்வி நடத்தினார். அந்த யாகவேள்வியில் சிவபெருமானின் அருளால் அம்பிகை தோன்றினார். இதைக் கண்ட பரத மகரிஷி, ``வேள்வியில் தோன்றிய தெய்வீக பெண் யார்'' என்று அதிசயித்து நின்றார். அப்போது தோன்றிய சிவபெருமான், ''வேள்வியில் வந்தவர் உமாதேவியே. அவரை உமது பெண்ணாக ஏற்று, எமக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்'' எனக் கூறி மறைந்தார்.

    இதையடுத்து, திருமணத்திற்காக திருவேள்விக்குடியில் கங்கணதாரணமும், மங்கள ஸ்நானமும் செய்யப்பட்டது. குறுமுலைப்பாலையில் பாலிகை ஸ்தாபனம் செய்யப்பட்டது. பின்பு உமா தேவியை மணமகளாக அழைத்துக்கொண்டு சிவனை தேடி பரத மகரிஷி வர, இறைவன் மாப்பிள்ளை கோலத்தில் எதிர்கொண்டு காட்சி அளித்த இடமே, எதிர்கொள்பாடி. அதன்பின்னர், திருமணஞ்சேரியில் சிவபெருமான் உமாதேவியை பூலோக முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்தை காண தேவர்கள், முனிவர்கள், நவக்கிரகங்கள் என அனைவரும் வந்தனர். இவ்வாறு சிவபெருமானும், பார்வதிதேவியும் கைகோர்த்தப்படி திருமணக் கோலத்தில் காட்சி தருவது இக்கோவிலின் தனிச் சிறப்பாகும்.

     

    அம்பிகையுடன் கல்யாணசுந்தரர்

    கோவில் அமைப்பு

    கோவிலில் ஐந்து நிலைகளை கொண்ட ராஜகோபுரம் அழகுடன் காட்சி அளிக்கிறது. ராஜகோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் கொடிமரம், பலிபீடம், நந்தி காணப்படுகிறது. கோவிலின் வலதுபுறம் விநாயகர் சன்னிதி உள்ளது. இடதுபுறத்தில் நடராஜர் அருள்பாலிக்கிறார். கருவறையில் இத்தல இறைவன், உத்வாகநாதர் என்ற திருநாமத்துடன் சுயம்புலிங்கமாக அழகுற காட்சி தருகிறார். இவர் 'அருள்வள்ளநாதர்' என்றும் அழைக்கப்படுகிறார்.

    கருவறையின் முன்மண்டபத்தில் இறைவி கோகிலாம்பாள் தனிச் சன்னிதியில் கிழக்கு நோக்கி உள்ளார். இவர் மணக் கோலத்தில் மணப்பெண்ணுக்குரிய நாணத்துடன் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். கருவறையின் இடதுபுறம் நிருத்த மண்டபத்தில் உற்சவமூர்த்தியான கல்யாணசுந்தரர், அம்பிகையுடன் கல்யாண கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

    கோவிலில் சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, ராகு பகவான், துர்க்கை, விஷ்ணு ஆகியோர் சன்னிதிகளும் உள்ளன. இங்கு நவக்கிரகங்கள் கிடையாது. இத்தலத்துக்கு கருஊமத்தை தவிர வன்னி, கொன்றை ஆகிய தலமரங்களும் உள்ளன.

    பிரார்த்தனை

    இக்கோவில் நித்திய கல்யாண தலமாகும். இத்தல இறைவனை நாடி வருபவர்களுக்கு, தங்கள் விருப்பம் போல வாழ்க்கை அமையும், திருமணத் தடை உள்ளவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்கிறார்கள். கோவிலுக்கு திருமண வரம் வேண்டியும், குழந்தைப் பாக்கியம் வேண்டியும் வரும் பக்தர்கள் கோவில் உள்ளே உள்ள தேவஸ்தானத்தைச் சேர்ந்த பூஜைப் பொருட்களை வாங்கி பூஜை செய்கிறார்கள். இத்தலம் ராகு தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது.

    அமைவிடம்

    மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் உள்ள குத்தாலம் என்ற ஊரில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் திருமணஞ்சேரி திருத்தலம் அமைந்துள்ளது.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு.
    • திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு கார்த்திகை-12 (வெள்ளிக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : அஷ்டமி இரவு 7.16 மணி வரை. பிறகு நவமி.

    நட்சத்திரம் : சதயம் இரவு 10.45 மணி வரை பிறகு பூரட்டாதி.

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை

    திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசல நாயகர் காலையில் ரிஷப வாகனம், இரவு பெரிய ரிஷப வாகனத்தில் பவனி. சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு. வேலூர் கோட்டை துர்க்கையம்மன், கதிமங்கலம் ஸ்ரீவனதுர்க்கையம்மன், பட்டீஸ்வரம் ஸ்ரீதுர்க்கையம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம். ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

    திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீபெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம். பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள் வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம். திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை. இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன், சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் கோவில்களில் காலையில் பால் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உயர்வு

    ரிஷபம்-செலவு

    மிதுனம்-போட்டி

    கடகம்-வரவு

    சிம்மம்-வெற்றி

    கன்னி-களிப்பு

    துலாம்- கடமை

    விருச்சிகம்-அன்பு

    தனுசு- ஆதரவு

    மகரம்-நன்மை

    கும்பம்-பரிசு

    மீனம்-உதவி

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    தேவைகள் பூர்த்தியாகும் நாள். தொழிலில் ஏட்டிக்குப் போட்டியாக இருந்தவர்கள் இனி ஒத்துவருவர். கடன் சுமை குறையப் புதிய வழிபிறக்கும்.

    ரிஷபம்

    வளர்ச்சி கூடும் நாள். நிச்சயிக்கப்பட்ட காரியங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். பயணங்கள் பலன் தருவதாக அமையும்.

    மிதுனம்

    நினைத்தது நிறைவேறும் நாள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும்.

    கடகம்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். பிறருக்கு நன்மை செய்தாலும் அது தீமையாகத் தெரியும். எடுத்த முயற்சியில் தாமதம் ஏற்படும்.

    சிம்மம்

    நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நண்பர்களால் கையிருப்பு கரையக்கூடிய வாய்ப்பு உண்டு. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.

    கன்னி

    துன்பங்கள் தூளாகும் நாள். நல்ல செய்திகள் உங்கள் இல்லம் தேடி வரும். திடீர் பயணங்களால் திசை திருப்பம் ஏற்படலாம். வரன்கள் முடிவாகும்.

    துலாம்

    உதவிகள் கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும் நாள். பழுதான வீடுகளைப் பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு உண்டு.

    விருச்சிகம்

    புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. தொலை தூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும்.

    தனுசு

    யோகமான நாள். பழகிய நண்பர்களால் பணத்தேவைகள் பூர்த்தியாகும். உறவினர் பகை அகலும். முடங்கிக் கிடந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

    மகரம்

    வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். மாற்று இனத்தவர்களின் உதவியால் தொழில் முன்னேற்றம் ஏற்படும். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும்.

    கும்பம்

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணை புரிவர். உத்தியோகத்தில் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

    மீனம்

    நல்லவர்களின் சந்திப்பு கிடைத்து நலம் காணும் நாள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். திருமண முயற்சி வெற்றி தரும்.

    ×