search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kundam festival"

    • கோவில் குண்டம் தேர்த்திருவிழா நேற்று 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர்பெருமா நல்லூரில் மிகவும் பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழா நேற்று 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் கோவில் செயல் அலுவலர் காளிமுத்து, மிராசுதாரர்கள், பூசாரிகள், கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடும் இவ்வி ழாவை முன்னிட்டு கோடை வெயிலின் தாகம் தணிக்க கோவில் உட்புறம் முழுவதும் பந்தல் அமைக்கப்ப ட்டுள்ளது. மேலும் கோவில் முன்புறம் பக்தர்களின் தாகம் தணிக்க நீர்மோர் பந்தல் உள்ளது. இதேபோல் பக்தர்கள், கோவிலுக்கு எந்தவித சிரமமும் இன்றி வந்து செல்ல சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் திருப்பூர் ரோடு, கோவை ரோடு, ஈரோடு ரோடு, குன்னத்தூர் ரோடு ஆகிய பகுதிகளில் பெருமாநல்லூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் முருகன் தலை மையில் வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    விழாவில் கோவில் செயல் அலுவலர் காளிமுத்து, மிராசுதாரர்கள், பூசாரிகள், கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழா வருகிற 29ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • 8-ந் தேதி மஞ்சள் நீராடுதலுடன் விழா நிறைவு பெறுகிறது.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர் பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழா வருகிற 29ந் தேதி கிராம சாந்தி மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.விழாவில் ஏப்ரல் 2-ந் தேதி பொங்கல் வைத்தல், 3ந் தேதி காலை 11 மணிக்கு குண்டம் திறந்து பூ போடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 4ந்தேதி அதிகாலை4 மணிக்கு குண்டம் பூ மிதித்தல், மாலை 3:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், 8-ந் தேதி மஞ்சள் நீராடுதலுடன் விழா நிறைவு பெறுகிறது.குண்டம் திருவிழாவில் திருப்பூர், அவிநாசி, குன்னத்தூர், நம்பியூர், கோபி உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

    பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்ல பஸ் வசதி மற்றும் கோவில் வளாகத்தில், குடிநீர், மொபைல் டாய்லெட், பக்தர்கள் வரிசையாக சென்று சாமி தரிசனம் செய்ய தடுப்பு அமைத்தல் போன்ற நடவடிக்கையில் கோவில் நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.குண்டம் மற்றும் தேர்த்தி ருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் காளிமுத்து, தக்கார் பெரிய மருது பாண்டியன் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

    • திருவிழாவை முன்னிட்டு கடந்த 8-ந் தேதி கொடியேற்றம் நடைபெற்றது.
    • 10-ந் தேதி மாவிளக்கு பூஜையும், முரசன் சுவாமிக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    குன்னத்தூர் :

    குன்னத்தூர் அருகே வெள்ளியம்பதி பத்திரகாளி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு கடந்த 8-ந் தேதி 9 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.

    10-ந் தேதி காலை 7 மணிக்கு மாவிளக்கு பூஜையும், முரசன் சுவாமிக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.10-ந் தேதி இரவு 7 மணிக்கு குண்டம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை 5 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் தொடர்ந்து பத்ரகாளியம்மன் மற்றும் கொண்டத்து காளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜையும் நடைபெற்றது. நாளை இரவு 7 மணிக்கு மறுபூஜை நடைபெறும்.  

    • திருப்பூரின் காவல் தெய்வமான செல்லாண்டியம்மன் கோவிலில் 16-ம் ஆண்டு ஆடி குண்டம் திருவிழா கடந்த 13-ந்தேதி தொடங்கியது.
    • விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    திருப்பூர் :

    திருப்பூரின் காவல் தெய்வமான செல்லாண்டியம்மன் கோவிலில் 16-ம் ஆண்டு ஆடி குண்டம் திருவிழா கடந்த 13-ந்தேதி தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது.

    முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை 6மணிக்கு நடைபெற்றது. பூசாரிகள் மற்றும் அருளாளர்கள் குண்டம் இறங்கினர். அதன்பிறகு விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். காலை 10 மணிக்கு அக்னி அபிஷேகம், பொங்கல் விழா நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடந்தது. மாலை 5மணிக்கு மாவிளக்கு வழிபாடு, 6மணிக்கு பூம்பல்லக்கில் அம்மன் வீதி உலா நடக்கிறது. நாளை 27-ந்தேதி சிறப்பு அபிஷேகம், கொடிஇறக்குதல், மஞ்சள் நீராட்டு விழா, சிறப்பு அலங்காரம் (மகாலட்சுமி) நடக்கிறது.

    28-ந்தேதி காலை 9மணிக்கு ஆடி அமாவாசை சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம்(பிரத்தியங்கிராதேவி ) நடக்கிறது. 29-ந்தேதி காலை 10மணிக்கு மறு பூஜை நடக்கிறது. 

    பனவடலிசத்திரம் அருகே அக்னி மாலையம்மன் கோவிலில் பூக்குழி திருவிழாவில் தொடர்ந்து 3 மணி நேரம் இரண்டு சிறுமிகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
    சங்கரன்கோவில் பனவடலிசத்திரம் அருகே உள்ள வடக்கு மாவிலியூத்து சென்பகவிநாயகர் அக்னி மாலையம்மன், நாகம்மன் கோவில் கொடை விழா ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் நடைபெறும்.

    இந்த ஆண்டிற்கான விழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் அம்மனுக்கு அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து நேற்று கோவில் கொடை விழா நடைபெற்றது.

    மாலை 5 மணிக்கு அக்னி மாலையம்மனுக்கு குற்றாலத் தீர்த்தம் எடுத்து வருதல், பால்குடம், புனித தீர்த்தக் குடம் எடுத்தல், அம்மன் அலங்காரம், அம்மனுக்கு பால் அபிஷேகம், மஞ்சள் நீராட்டு, இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி, குங்குமம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், எலுமிச்சை மாலை சாற்றுதல், சிறப்பு யாக பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது. இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி விழா நடைபெற்றது.

    இரவு கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னர் நெருப்பு குண்டம் அமைக்கப்பட்டு அக்னி வளர்க்கப்பட்டது. இதில் பக்தர்கள் பூக்குழியில் இறங்க தொடங்கினர். தொடர்ந்து 3 மணி நேரம் இரண்டு சிறுமிகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் இறங்கினர்.

    இதனை தொடர்ந்து பக்தர்கள் அருள்வாக்கு கேட்டல், பொங்கலிடுதல், மாவிளக்கு எடுத்தல், பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துதல், கிராமிய கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றது.
    வனபத்ரகாளியம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆடிக்குண்டம் திருவிழா நிகழ்ச்சிகள் தொடங்கியது. நிகழ்ச்சியையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.
    மேட்டுப்பாளையம் அடுத்துள்ள வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடிக்குண்டம் திருவிழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு 27-ம் ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழா நிகழ்ச்சிகள் தொடங்கியது.

    நிகழ்ச்சியையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு கோவில் தலைமைப்பூசாரி பரமேஸ் வரன் கோவில் அருகே உள்ள மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக ஆற்றின் கரையோரப்பகுதயில் உள்ள முத்தமிழ் விநாயகர் சன்னதிக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

    அங்கு சிறப்பு பூஜைக்குப் பின்னர் நாதஸ்வர இசை மேளதாளம் முழங்க தலைமைப்பூசாரி பரமேஸ் வரன்அம்மன் ஆபரண அணிக் கூடையுடன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டார்.

    அவருக்கு கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வசந்தா. உதவி ஆணை யரும் செயல் அலுவலருமான க.ராமு ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

    அதன் பின்னர் பூசாரி பரமேஸ்வரனுக்கு காப்புகட்டப்பட்டது.அதனைத்தொடர்ந்து நெல்லித்துறை கிராம மக்கள் சார்பாக பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் உள்ள பழமை வாய்ந்த வனபத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது.
    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் பழமை வாய்ந்த வன பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. மாவட்டத்தில் அம்மன் திருத்தலங்களில் பிரசித்தி பெற்று விளங்கி வரும் இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் குண்டம் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு குண்டம் திருவிழா வருகிற 17-ந் தேதி இரவு 7 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.

    20-ந் தேதி காலை 10 மணிக்கு லட்சார்ச்சனை, 21-ந் தேதி இரவு 10 மணிக்கு கிராமசாந்தி, 22-ந் தேதி காலை 10 மணிக்கு கொடியேற்றம், மாலை 6 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    23-ந் தேதி மாலை 5 மணிக்கு பொங்கல் வைத்து குண்டம் திறத்தல், 24-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு அம்மன் அழைப்பு, காலை 6 மணிக்கு குண்டம் இறங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    இதில் மேட்டுப்பாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து குண்டம் இறங்குகின்றனர். 25-ந் தேதி காலை 10 மணிக்கு மாவிளக்கு பூஜை, மாலை 6 மணிக்கு பூப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    26-ந் தேதி இரவு 7 மணிக்கு பரிவேட்டை, இரவு 8 மணிக்கு வாணவேடிக்கை, 27-ந்தேதி மதியம் 12 மணிக்கு மகாஅபிஷேகம், மாலை 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு, 30-ந் தேதி காலை 10 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை ஆகியவை நடக்கிறது. 31-ந் தேதி காலை 8 மணிக்கு மறு பூஜையுடன் நிகழ்ச்சிகள் நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வசந்தா, உதவி ஆணையரும், செயல் அலுவலருமான க.ராமு ஆகியோர் செய்து வருகின்றனர். 
    ×