search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்
    X

    வாகன பார்க்கிங் வசதிக்கான ஏற்பாடுகளை இன்ஸ்பெக்டர் முருகன் பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி. 

    பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்

    • கோவில் குண்டம் தேர்த்திருவிழா நேற்று 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர்பெருமா நல்லூரில் மிகவும் பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழா நேற்று 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் கோவில் செயல் அலுவலர் காளிமுத்து, மிராசுதாரர்கள், பூசாரிகள், கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடும் இவ்வி ழாவை முன்னிட்டு கோடை வெயிலின் தாகம் தணிக்க கோவில் உட்புறம் முழுவதும் பந்தல் அமைக்கப்ப ட்டுள்ளது. மேலும் கோவில் முன்புறம் பக்தர்களின் தாகம் தணிக்க நீர்மோர் பந்தல் உள்ளது. இதேபோல் பக்தர்கள், கோவிலுக்கு எந்தவித சிரமமும் இன்றி வந்து செல்ல சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் திருப்பூர் ரோடு, கோவை ரோடு, ஈரோடு ரோடு, குன்னத்தூர் ரோடு ஆகிய பகுதிகளில் பெருமாநல்லூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் முருகன் தலை மையில் வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    விழாவில் கோவில் செயல் அலுவலர் காளிமுத்து, மிராசுதாரர்கள், பூசாரிகள், கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×