என் மலர்
நீங்கள் தேடியது "Anaimalai"
- இறைச்சிக் கழிவுகளால் ஆறு மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பேரூராட்சியில் 18 வார்டுகளில் உள்ள வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் குப்பையை' சேகரிக்கும் பணியில் 38 தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு ள்ளனர். நாள்தோறும் 6 டன் மக்கும் மற்றும் மக்காத குப்பை சேகரிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஆனைமலை ஆற்றங்கரையின் ஓரத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இரவு நேரத்தில் சிலர் கோழிக் கழிவு மற்றும் உணவு விடுதிகளின் கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் ஆற்றங்கரையில் கழிவுகள் குவிந்து ஆற்று நீர் மாசுபடும் அபாயம் உள்ளது.
ஆனைமலை ஆற்றில் செல்லும் தண்ணீர் அம்பராம்பாளையம் பகுதியில் குடிநீர் திட்டத்துக்கு பயன்பட்டு வருகிறது. இதனால் ஆனைமலை ஆற்றங்கரையில் கழிவு கள் கொட்டுவதை தடுக்கவும், நகரில் பல இடங்களில் குப்பையை கொட்டி சுகாதார கேடு ஏற்படுவதை தடுக்கவும் 8 இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள்பொருத்தும் பணியை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொ ண்டுள்ளது.
முதற்கட்டமாக 12-வது வார்டில் ஆற்றங்கரைக்கு செல்லும் மயானப் பாதையிலும், 7-வது வார்டில் ராமபுரம் விதியிலும் காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஆனைமலை பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:- ஆனைமலை ஆற்றங்கரையில் கழிவுகள் கொட்டுவதை தடுக்கும் வகையில் பேருராட்சி சார்பில் இரவு நேரத்தில் காவலாளி நியமிக்கப்பட்டார். இதனால் கழிவுகள் கொட்டுவது ஓரளவு தடுக்கப்பட்டது.
ஆனாலும் முழுமையாக தடுக்க முடியவில்லை. இதனால் கண்காணிப்பு காமிரா பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஆனைமலையில் 8 இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
முதற்கட்டமாக 2 இடங்களில் பொருத்த ப்பட்டுள்ளது.இதனை செல்போன் மூலம் கண்காணிக்க முடியும். இறைச்சிக் கழிவுகள், ஓட்டல் கழிவுகளை கடை உரிமையாளர்கள் முறையாக அப்புறப்படுத்த வேண்டும். இதை மீறி ஆற்றங்கரையில் கழிவுகளை வீசினால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் வாகனம் பறிமுதல் செய்யப்படும். பொதுமக்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- 36 வயது இளம்பெண் அங்கன்வாடி மையத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.
- 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது கள்ளக்காதலை வளர்த்து வந்தனர்.
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் ஆனைமலையை சேர்ந்த 36 வயது இளம்பெண். இவர் அந்த பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது கணவர் லாரி டிரைவராக உள்ளார். இவர்களுக்கு 19-வயதில் ஒரு மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த திருமணமாகாத ஆட்டோ டிரைவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது கள்ளக்காதலை வளர்த்து வந்தனர்.மேலும் இளம்பெண் தனது கணவர் வெளியூருக்கு செல்லும் நேரத்தில் ஆட்டோ டிரைவரை வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.
இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென மாயமானார். அவரை அவரது கணவர் அக்கம் பக்கத்தில் தேடினார்.
அப்போது அவர் ஆட்டோ டிரைவருடன் ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது.இது குறித்து இளம்பெ ண்ணின் கணவர் ஆட்டோ டிரைவருடன் ஓட்டம் பிடித்த தனது மனைவியை கண்டு பிடித்து தருமாறு ஆனைமலை போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 குழந்தைகள் மற்றும் கணவரை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
- அஜீஸ் கிணற்று சுற்றுச்சுவரில் அமர்ந்து செல்போனில் பேசினார்.
- போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர்.
கோவை
கேரள மாநில் ஆலப்பு லாவை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் அஜீஸ் (வயது 29). இவர் கோவை மாவட்டம் ஆனைமலை தேவதாசம்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று மது போதையில் இருந்த அஜீஸ் அந்த பகுதியில் உள்ள கிணற்றின் சுற்றுச்சுவரில் அமர்ந்து செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென நிலை தடுமாறி கிணற்றுக்கு விழுந்தார். அஜீசுக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து ஆனைமலை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்த அஜீசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- பிளஸ்-2 வரை படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
- சிறுமிக்கு தாழி கட்டினார்.
கோவை, :
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. அவர் பிளஸ்-2 வரை படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன் (27). கூலி தொழிலாளி.
இருவரும் உறவினர்கள் என்பதால் நட்பாக பழகி வந்தனர். நாளடைவில் அது காதலாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தனர்.
இந்தநிலையில் அவர்களது காதல் சிறுமியின் பெற்றோர் வீட்டுக்கு தெரிந்தது. இதனால் சிறுமியின் குடும்பத்தினர் 2 பேரையும் கண்டித்துள்ளனர். அதன்பின்னர் சிறுமி கன்னியப்பனிடம் பேசுவதை குறைத்ததாக தெரிகிறது.
சமபவத்தன்று கன்னியப்பன் சிறுமியை கடத்தி திருமணம் செய்ய திட்டமிட்டார்.
இதையடுத்து அவர் சிறுமியை கடத்தி தம்மம்பதி பகுதியில் உள்ள கன்னியம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு வைத்து சிறுமிக்கு தாழி கட்டினார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து சமூக நல அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சமூக நல அலுவலர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுமியை திருமணம் செய்த கன்னியப்பனை படித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தார்.
போலீசார் குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கன்னியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மகேஸ்வரி வீட்டின் அருகே உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார்.
- தீனதயாளன், மகேஸ்வரியை தகாத வார்த்தைகளால் திட்டி கன்னத்தில் அறைந்து தாக்கினார்.
கோவை:
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை திவான்சாபுதூர் மதுரைவீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் கோபி. இவரது மனைவி மகேஸ்வரி (வயது 33). கூலி வேலை செய்து வருகிறார்.
இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்தவர் தீனதயாளன் (22). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று மகேஸ்வரி வீட்டின் அருகே உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அப்போது தீனதயாளன் அங்கு குடிபோதையில் கையில் கத்தியை வைத்து கொண்டு தகராறில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.
இதனை பார்த்த மகேஸ்வரி அங்கு சென்று அவரை கண்டித்து அமைதியாக வீட்டு செல்லுமாறு கூறினார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.
இதில் ஆத்திரம் அடைந்த தீனதயாளன், மகேஸ்வரியை தகாத வார்த்தைகளால் திட்டி கன்னத்தில் அறைந்து தாக்கினார். பின்னர் தான் வைத்திருந்த கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் மகேஸ்வரியை அவரிடம் இருந்து மீட்டனர்.
இதுகுறித்து மகேஸ்வரி ஆனைமலை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீனதயாளனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை:
ஆனைமலை அருகே உள்ள காளியாபுரத்தை சேர்ந்தவர் பிச்சை முத்து என்கிற சின்ராஜ். இவரது மனைவி காயத்ரி (வயது 26). இவர்களுக்கு சாதனா (8) என்ற மகளும் , சங்கர் (6) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். சம்பவத்தன்று காயத்ரி தனது கணவரிடம் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார்.
ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனையடுத்து சின்ராஜ் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் எந்த பலனும் இல்லை.
பின்னர் இது குறித்து ஆனைமலை போலீசில் மாயமான தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை கண்டுபிடித்து தரும்படி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 குழந்தைகளுடன் மாயமான காயத்ரியை தேடி வருகிறார்கள்.
கோவை:
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள வேட்டைக்காரன்புதூரை சேர்ந்தவர் வடிவேலன் (வயது 30). தனியார் நிறுவன ஊழியர். சம்பவத்தன்று இரவு இவர் தனது வீட்டின் முதல் மாடியில் உள்ள பால்கனியில் படுத்து தூங்கினார்.
நள்ளிரவில் தூக்கத்தில் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே வடிவேலன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.