ஆனைமலை அருகே கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்

36 வயது இளம்பெண் அங்கன்வாடி மையத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது கள்ளக்காதலை வளர்த்து வந்தனர்.
ஆனைமலை அருகே கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்
Published on

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் ஆனைமலையை சேர்ந்த 36 வயது இளம்பெண். இவர் அந்த பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

இவரது கணவர் லாரி டிரைவராக உள்ளார். இவர்களுக்கு 19-வயதில் ஒரு மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த திருமணமாகாத ஆட்டோ டிரைவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது கள்ளக்காதலை வளர்த்து வந்தனர்.மேலும் இளம்பெண் தனது கணவர் வெளியூருக்கு செல்லும் நேரத்தில் ஆட்டோ டிரைவரை வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.

இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென மாயமானார். அவரை அவரது கணவர் அக்கம் பக்கத்தில் தேடினார்.

அப்போது அவர் ஆட்டோ டிரைவருடன் ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது.இது குறித்து இளம்பெ ண்ணின் கணவர் ஆட்டோ டிரைவருடன் ஓட்டம் பிடித்த தனது மனைவியை கண்டு பிடித்து தருமாறு ஆனைமலை போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 குழந்தைகள் மற்றும் கணவரை தவிக்க விட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com