ஆனைமலை அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த வாலிபர் பலி

அஜீஸ் கிணற்று சுற்றுச்சுவரில் அமர்ந்து செல்போனில் பேசினார். போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர்.
ஆனைமலை அருகே  கிணற்றுக்குள் தவறி விழுந்த வாலிபர் பலி
Published on

கோவை

கேரள மாநில் ஆலப்பு லாவை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் அஜீஸ் (வயது 29). இவர் கோவை மாவட்டம் ஆனைமலை தேவதாசம்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று மது போதையில் இருந்த அஜீஸ் அந்த பகுதியில் உள்ள கிணற்றின் சுற்றுச்சுவரில் அமர்ந்து செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென நிலை தடுமாறி கிணற்றுக்கு விழுந்தார். அஜீசுக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து ஆனைமலை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்த அஜீசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.  

X

Maalai Malar
www.maalaimalar.com