என் மலர்

    செய்திகள்

    ஆனைமலை அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்
    X

    ஆனைமலை அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஆனைமலை அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    ஆனைமலை அருகே உள்ள காளியாபுரத்தை சேர்ந்தவர் பிச்சை முத்து என்கிற சின்ராஜ். இவரது மனைவி காயத்ரி (வயது 26). இவர்களுக்கு சாதனா (8) என்ற மகளும் , சங்கர் (6) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். சம்பவத்தன்று காயத்ரி தனது கணவரிடம் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார்.

    ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனையடுத்து சின்ராஜ் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் எந்த பலனும் இல்லை.

    பின்னர் இது குறித்து ஆனைமலை போலீசில் மாயமான தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை கண்டுபிடித்து தரும்படி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 குழந்தைகளுடன் மாயமான காயத்ரியை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×