என் மலர்
ஆன்மிகம்
- ஆண்டாள் அவதரித்த தினம் ஆடிப்பூரம்.
- ‘ஆடி செவ்வாய் தேடிக் குளி’ என்பது பழமொழி.
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் தேர்த் திருவிழா, தீமிதி திருவிழா என அனைத்து விதமான திருவிழாக்களும் நடைபெறும். குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு, கிராம தெய்வ வழிபாடு, சிவ வழிபாடு, சக்தி வழிபாடு, திருமால் வழிபாடு, மகாலட்சுமி வழிபாடு என அனைத்து தெய்வ வழிபாட்டிற்கும் இந்த மாதம் ஏற்றதாகும்.
ஆடி மாதத்தில்தான் தட்சணாயனம் தொடங்குகிறது. தட்சணாயனம் என்பது சூரிய பகவான் வடதிசையில் இருந்து தென் திசை நோக்கி பயணம் செய்யும் காலமாகும். இது ஆடி மாதம் தொடங்கி மார்கழி வரை ஆறு மாதங்களை கொண்டதாகும். இந்தக் காலம் முழுவதும் தேவர்களுக்கு இரவு பொழுதாக கருதப்படுகிறது. இந்த புண்ணிய காலத்தில் நதிகளில் நீராடுவது மிகவும் விசேஷமானது. ஆடி மாதத்தில் ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், ஆடி அமாவாசை போன்ற சிறப்பு வாய்ந்த நாட்கள் வருகின்றன.
ஆண்டாள் அவதரித்த தினம் ஆடிப்பூரம் ஆகும். அன்றைய தினம் திருவில்லிபுத்தூர் கோவிலில் ஆண்டாள் நந்தவனத்துக்கு எழுந்தருள்வார். அப்போது திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாடி வழிபட வேண்டும். இதனால் நாம் வேண்டிய அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேறும். அதுபோல ஆடி பவுர்ணமி தினத்தில்தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது. எனவே அன்றைய தினம் வைணவ தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ்வார்க்கும் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு கூழ் படைத்து வழிபட்டால் அன்னையின் மனம் குளிர்ந்து அருள் வழங்குவார் என்பது நம்பிக்கை.
சிலர் ஆடி மாதத்தை 'பீடை மாதம்' என்று சொல்வார்கள். இது அவர்களது அறியாமையால் கூறுவதாகும். உண்மையில் 'பீட மாதம்' என்றுதான் அதற்குப் பெயர். அதாவது இறைவனை நமது மனமாகிய பீடத்தில் வைத்து வழிபட வேண்டிய மாதம் என்பதே இதன் உண்மையான பொருள்.
பொதுவாக வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த தினமாகும். அதிலும் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை தனிச்சிறப்பு வாய்ந்தது. ஆடி மாத வெள்ளிக்கிழமை அம்பிகையை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். அம்மனை வழிபடும்போது லலிதா சகஸ்ர நாமம் சொல்லி வழிபட வேண்டும். ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் இருப்பது கூடுதல் பலன்களை அள்ளித் தரும்.
'ஆடி செவ்வாய் தேடிக் குளி' என்பது பழமொழி. அதாவது பெண்கள் விரதம் இருந்து எண்ணெய் தேய்த்து குளித்து அம்மனை வழிபட்டால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை. ஆடி மாதத்தில் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல்களை பெண்கள் அணிந்து கொண்டால் திருமணப் பாக்கியம், குழந்தை பாக்கியம், செல்வம் மற்றும் அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிய வேண்டும். பின்பு சூரிய உதயத்துக்கு முன்பாக சாணத்தைப் பிள்ளையாராக பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அருகம்புல் கொண்டு பிள்ளையாரை பூஜிக்க வேண்டும். வாழை இலையில் நெல் பரப்பி, அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட்டால் செல்வம் செழிக்கும்.
ஆடி பவுர்ணமி அன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்புப் பட்டாடை, கருப்பு ஊமத்தம் பூமாலை, நூறு முத்துக்கள் கோர்த்த மணி மாலை அணிவித்து, மூங்கில் அரிசிப் பாயசம் படைத்து வழிபட்டால் எத்தகைய பகைமையும் விலகும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆடி மாதத்தில் இறைவனை வழிபட்டு சகல நன்மைகளையும் பெறுவோம்.
- நவக்கிரக கோவில் பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் கடந்த 13-ந்தேதி நடைபெற்றது.
- கணபதி ஹோமம், உஷபூஜை உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடக்கின்றன.
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைகளுக்காக ஒவ்வொரு மாதமும் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி ஆனி மாத வழிபாட்டுக்காக நாளை (16-ந் தேதி) சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது.
சபரிமலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள நவக்கிரக கோவில் பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் கடந்த 13-ந்தேதி நடைபெற்றது. இதற்காக 11-ந்தேதி திறக்கப்பட்ட கோவில் நடை 13-ந்தேதி இரவு சாத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கோவில் நாளை நடை திறக்கப்படுகிறது. இந்த நடை 21-ந்தேதி வரை திறந்திருக்கும்.
நாளை மறுநாள் (17-ந்தேதி) முதல் தினமும் கணபதி ஹோமம், உஷபூஜை உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடக்கின்றன. உதயாஸ்தமய பூஜை, நெய் அபிஷேகம் மற்றும் படி பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெறும். 21-ந்தேதி பூஜைக்கு பிறகு இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.
- சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம்.
- நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள்.
சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம். இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள். தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். இந்த தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.
பாடல்:-
நாமரு கேள்வியர் வேள்விஒவா
நான்மறை யோர்வழி பாடுசெய்ய
மாமரு வும்மணிக் கோயில்மேய
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
தேமரு பூம்பொழில் சேலைசூழ்ந்த சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
காமரு சீர்மகிழ்ந்து எல்லிஆடும்
கணபதி ஈச்சரம் காமுறவே.
- திருஞானசம்பந்தர்
விளக்கம்:-
நடுநிலை தவறாது கேள்வி ஞானத்தை உடையவர்களும், வேதங்களை கற்ற அந்தணர்களும் வழிபாடு செய்யும் பெருமை உடைய மணிக்கோவிலை கொண்டது திருமருகல். இங்கு எழுந்தருளி உள்ள இறைவனே! நல்ல மணம் தரும் மலர் சோலைகள் சூழ்ந்த சிறப்புமிக்க செங்காட்டங்குடியில் நடனம் புரியும் காட்சியை கணபதி ஈச்சரத்தில் விருப்பத்துடன் செய்வதற்கு என்ன காரணமோ? சொல்வாயாக!
- திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
- நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன், திருவாடானை சிநேகவல்லியம்மன் தலங்களில் விழா தொடக்கம்.
இந்த வார விசேஷங்கள்
15-ந் தேதி (செவ்வாய்)
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
* குரங்கணி முத்துமாலை அம்மன் பவனி.
* மேல்நோக்கு நாள்.
16-ந் தேதி (புதன்)
* முகூர்த்த நாள்.
* திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* மேல்நோக்கு நாள்.
17-ந் தேதி (வியாழன்)
* சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* திருவரங்கம் நம்பெருமாள் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
18-ந் தேதி (வெள்ளி)
* திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் ஆடிப்பூர உற்சவம் ஆரம்பம்.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
19-ந் தேதி (சனி)
* மேல்மருவத்தூர், ராமேஸ்வரம், நயினார் கோவில், திருவானைக்காவல், காளையார் கோவில் முதலிய தலங்களில் ஆடிப்பூர உற்சவம் ஆரம்பம்.
* திருப்போரூர் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன், திருவாடானை சிநேகவல்லியம்மன் தலங்களில் விழா தொடக்கம்.
* கீழ்நோக்கு நாள்.
20-ந் தேதி (ஞாயிறு)
* கார்த்திகை விரதம்.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூர உற்சவம் ஆரம்பம்.
* நயினார்கோவில் சவுந்திரவல்லி பல்லாங்குழி ஆடி வரும் காட்சி.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் பவனி.
* கீழ்நோக்கு நாள்.
21-ந் தேதி (திங்கள்)
* சர்வ ஏகாதசி.
* திருநெல்வேலி காந்திமதி அம்மன் ரிஷப வாகனத்தில் பவனி.
* திருத்தணி முருகப்பெருமான் தெப்ப உற்சவம்.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்திர பிரபையில் பவனி.
* மேல்நோக்கு நாள்.
- சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
- ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆனி-31 (செவ்வாய்க்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : பஞ்சமி இரவு 10.47 மணி வரை பிறகு சஷ்டி
நட்சத்திரம் : சதயம் காலை 7.17 மணி வரை பிறகு பூரட்டாதி
யோகம் : மரணயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம்
சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. குரங்கணி ஸ்ரீ முத்து மாலையம்மன் பவனி. ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை.
ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் அபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி யம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தல மான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நன்மை
ரிஷபம்-அமைதி
மிதுனம்-பாராட்டு
கடகம்-பெருமை
சிம்மம்-சுகம்
கன்னி-முயற்சி
துலாம்- வெற்றி
விருச்சிகம்-வரவு
தனுசு- சிறப்பு
மகரம்-தனம்
கும்பம்-நலம்
மீனம்-லாபம்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகலாம். இடம், பூமி வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோக மாற்றத்திற்காக முக்கியப் புள்ளியைச் சந்திப்பீர்கள்.
ரிஷபம்
உறவினர்கள் உதவிக்கரம் நீட்டும் நாள். வரவு திருப்தி தரும். ஊக்கத்தோடும். உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். வீட்டைப் பராமரிப்பதில் அக்கறை காட்டுவீர்கள்.
மிதுனம்
நிதிநிலை உயர்ந்து நிலைமை சீராகும் நாள். இளைய சகோதரத்தின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மதிய நேரத்தில் மனதிற்கினிய சம்பவமொன்று நடைபெறும்.
கடகம்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். அருகில் உள்ளவர்களின் ஆதரவு குறையும். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் ஏற்படும். பயணங்களை மாற்றியமைக்க நேரிடும்.
சிம்மம்
சலுகைகள் கிடைத்து சந்தோஷம் அடையும் நாள். தனவரவு திருப்தி தரும். எடுத்த காரியங்களை எளிதில் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு உண்டு.
கன்னி
வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். வெளியூர் பயணமொன்றால் கையிருப்புக் கரையும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.
துலாம்
மனக்குழப்பம் ஏற்படும் நாள். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. எதிர்பாராத விரயம் உண்டு. எப்படியும் முடிந்துவிடும் என்று நினைத்த .காரியம் முடியடையாமல் போகலாம்.
விருச்சிகம்
அதிகாலையிலேயே நல்ல தகவல் வந்து சேரும் நாள். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள். வருமானம் உயரும். திடீர் பயணமொன்று ஏற்படலாம்.
தனுசு
பற்றாக்குறை அகலும் நாள். பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட பகை மாறும். விலகிச்சென்ற சொந்தங்கள் விரும்பி வந்திணைவர். சிநேகிதர்கள் செல்வ நிலை உயர வழிகாட்டுவர்.
மகரம்
எந்த முக்கிய முடிவும் குடும்பத்தினர்களுடன் கலந்து ஆலோசித்து எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் உங்களுக்குரிய மரியாதை குறையாமல் பார்த்துக் கொள்ளவும்.
கும்பம்
களைப்பை மறந்து உழைப்பில் ஈடுபடும் நாள். கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிக்கலாம். உடல்நலத்தில் கவனம் தேவை.
மீனம்
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொலைதூரப் பயணத்திற்கு உறுதுணை புரியும். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
- திதி என்பது சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கோள்களுக்கிடையே உள்ள இடைவெளி தூரத்தின் ஆதிக்கம் ஆகும்.
- பஞ்சமி திதி அன்று விரதமிருந்து ஐந்து எண்ணெய் கலந்து குத்து விளக்கின் ஐந்து முகத்தினையும் ஏற்றி வழிபட வேண்டும்.
பஞ்சமி திதி ஓர் மகத்தான சக்தி. பஞ்சமி சக்தி தேவியை விரதமிருந்து வழிபாடு செய்தால் எல்லா நன்மையும் உண்டாகும். இந்த விரதத்தை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அமாவாசை முடிந்த ஐந்தாம் நாள் மற்றும் பவுர்ணமி முடிந்த ஐந்தாம்நாள் பஞ்சிமி திதி வரும். பஞ்ச என்றால் ஐந்து எனப் பொருள். திதி என்பது சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கோள்களுக்கிடையே உள்ள இடைவெளி தூரத்தின் ஆதிக்கம் ஆகும்.
பஞ்சமி திதி அன்று விரதமிருந்து ஐந்து எண்ணெய் கலந்து குத்து விளக்கின் ஐந்து முகத்தினையும் ஏற்றி வழிபட வேண்டும். தீபத்தின் ஓர் முகத்தை உற்றுப் பார்த்தபடி நம்முடைய வேண்டுதல்களை மனத்திற்குள் நினைத்துக் கொண்டே 108 முறை சொல்லி கற்கண்டு அல்லது பழம் நைவேத்தியம் செய்ய வேண்டும். சொல்ல வேண்டிய மந்திரம் 'ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ'. இந்த விரதத்தை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.
- சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
- உப்பூர் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகப் பெருமான் கோவில்களில் காலையில் ஹோமம், அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆனி-30 (திங்கட்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சதுர்த்தி நள்ளிரவு 12.30 மணி வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம் : அவிட்டம் காலை 7.58 மணி வரை பிறகு சதயம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
சுபமுகூர்த்த தினம், சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் கோவில்களில் ஹோமம், அபிஷேகம்
இன்று சுபமுகூர்த்த தினம். சங்கடஹர சதுர்த்தி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் சோமவார அபிஷேகம்.
நத்தம் வர குணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலையில் அலங்கார திருமஞ்சனம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருமஞ்சனம். கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு. பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர், திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப்பிள்ளையார், திருவலஞ்சுழி ஸ்ரீ சுவேத விநாயகர், திருச்சி உச்சிப்பிள்ளையார், ஸ்ரீ மாணிக்க விநாயகர், மதுரை ஸ்ரீ முக்குறுணி பிள்ளையார், உப்பூர் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகப் பெருமான் கோவில்களில் காலையில் ஹோமம், அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வெற்றி
ரிஷபம்-சாதனை
மிதுனம்-தெளிவு
கடகம்-கடமை
சிம்மம்-போட்டி
கன்னி-லாபம்
துலாம்- ஆர்வம்
விருச்சிகம்-வரவு
தனுசு- பக்தி
மகரம்-நலம்
கும்பம்-சுகம்
மீனம்-நட்பு
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
குடும்ப ஒற்றுமை பலப்படும் நாள். கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்ட பிரச்சனை இன்று முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும்.
ரிஷபம்
நன்மைகள் நடைபெறும் நாள். வியாபார முயற்சி வெற்றி தரும். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். எண்ணங்கள் எளிதில் நிறைவேற நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.
மிதுனம்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். வியாபார விருத்திக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்கள் உங்களை விட்டு விலகுவர்.
கடகம்
வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். வரவைவிடச் செலவு கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கூடுதல் பொறுப்புகளைக் கொடுப்பர். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.
சிம்மம்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். வாகன மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் நிரந்தர பணிகளுக்காக எடுத்த முயற்சி பலன் தரும்.
கன்னி
பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் நாள். உள்ளம் மகிழும் செய்தியொன்றை உடன்பிறப்புகள் வழியில் கேட்கலாம். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு.
துலாம்
முக்கியப் புள்ளிகளின் சந்திப்பால் முன்னேற்றம் கூடும் நாள். நிதிநிலை உயரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பயணத்தால் பலன் கிடைக்கும்.
விருச்சிகம்
சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும் நாள். வரவு போதுமானதாக இருக்கும். வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
தனுசு
விடிகாலையிலேயே விரயம் ஏற்படும் நாள். பொருளாதார முன்னேற்றம் கருதி புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் தொல்லையுண்டு.
மகரம்
சந்தோஷ வாய்ப்புகளைச் சந்திக்கும் நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். தொழில் மாற்றம் செய்யலாமா என்று யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்பு மாறும்.
கும்பம்
நிம்மதி கிடைக்க நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். மற்றவர்களுக்காக வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும்.
மீனம்
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். உங்கள் பொறுமைக்கு இன்று பெருமை கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகளை வரவழைத்துக் கொள்ள ஆன்மிக வழிபாடுகளை மேற்கொள்வீர்கள்.
- சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம்
- . ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆனி-29 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : திருதியை நள்ளிரவு 1.50 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம் : திருவோணம் காலை 8.14 மணி வரை பிறகு அவிட்டம்
யோகம் : அமிர்த, மரணயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
மாரியம்மன் கோவில்களில் பால் அபிஷேகம், திருவல்லிக்கேணி ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்
இன்று சுபமுகூர்த்த தினம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம். திருத்தங்கல் ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாள் ஸப்தாவர்ணம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி.
சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. காஞ்சி காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் பால் அபிஷேகம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமிக்கும் அபிஷேகம். ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீவாஞ்சிநாத சுவாமிக்கு காலையில் சிறப்பு அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-தனம்
ரிஷபம்-நட்பு
மிதுனம்-விருத்தி
கடகம்-துணிவு
சிம்மம்-போட்டி
கன்னி-லாபம்
துலாம்- மேன்மை
விருச்சிகம்-வெற்றி
தனுசு- பரிவு
மகரம்-மகிழ்ச்சி
கும்பம்-ஆதரவு
மீனம்-கடமை
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
அதிகாலையிலேயே அனுகூலமான தகவல் வந்து சேரும் நாள். தொழில் வளர்ச்சி கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள்.
ரிஷபம்
சிக்கல்கள் விலகி சிகரத்தைத் தொடும் நாள். சாமர்த்தியமாகப் பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளை ஏற்கும் சூழ்நிலை உண்டு.
மிதுனம்
வாக்குவாதங்களைத் தவிர்த்து வளம் காண வேண்டிய நாள். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். வரவைக் காட்டி லும் செலவு கூடும். ஆரோக்கியத்திற்காக செலவு செய்வீர்கள்.
கடகம்
யோகமான நாள். எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். புதுமனை கட்டிக் குடியேறும் எண்ணம் மேலோங்கும்.
சிம்மம்
பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சனைகள் தீரும் நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். தொழில் வளர்ச்சி உண்டு.
கன்னி
அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். வழக்குகள் சாதகமாகும். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் பிறரின் விமர்சனங்களைத் தாண்டி முன்னேற்றம் காண்பீர்கள்.
துலாம்
உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.
விருச்சிகம்
மகிழ்ச்சி கூடும் நாள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உடன்பிறப்புகள் வழியில் நன்மை உண்டு. உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடு மற்றவர்களின் மனதை வாட்டும்.
தனுசு
புதிய பாதை புலப்படும் நாள். பொருளாதார நலன் கருதி முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள். சுற்றியிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. விரயங்கள் அதிகரிக்கும்.
மகரம்
வரவு திருப்தி தரும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் இழந்த பதவியை மீண்டும் பெறும் வாய்ப்பு உண்டு.
கும்பம்
பணத்தேவைகள் உட னுக்குடன் பூர்த்தியாகும் நாள். நிச்சயித்த காரியம் நிச்சயித்த படி நடைபெறும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் உங்களைத் தேடி வரும்.
மீனம்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் அகலும். முன்னோர் சொத்துகளில் முறையான பங்கீடு உண்டு. அதிகாரப் பதவியில் உள்ளவர்களால் நன்மை உண்டு.
- திருநள்ளாறு ஸ்ரீ சனி பகவான் அலங்காரம்.
- திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆனி-28 (சனிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : துவிதியை நள்ளிரவு 2.47 மணி வரை பிறகு திருதியை
நட்சத்திரம் : உத்திராடம் காலை 8.04 மணி வரை பிறகு திருவோணம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
காஞ்சி வரதராஜப் பெருமாள் ஜேஷ்டாபிஷேகம், திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்
இன்று திருவோணம் விரதம். திருநள்ளாறு ஸ்ரீ சனி பகவான் அலங்காரம். காஞ்சி ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஜேஷ்டாபிஷேகம். திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் ரதோற்சவம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் அலங்கார திருமஞ்சன சேவை. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.
உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரெங்கராஜ பெருமாள் புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வரவு
ரிஷபம்-பெருமை
மிதுனம்-தெளிவு
கடகம்-மாற்றம்
சிம்மம்-பணிவு
கன்னி-நன்மை
துலாம்- நலம்
விருச்சிகம்-வெற்றி
தனுசு- உயர்வு
மகரம்-நிறைவு
கும்பம்-மகிழ்ச்சி
மீனம்-சிறப்பு






