என் மலர்
ஓமன்
- ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் மஸ்கட்டில் நடந்து வருகிறது.
- இதில் 2வது சுற்றில் இந்தியா ஜப்பானை வென்றது.
மஸ்கட்:
10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. டிசம்பர் 4-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, தென் கொரியா, ஜப்பான், சீனதைபே, தாய்லாந்தும், பி பிரிவில் பாகிஸ்தான், மலேசியா, வங்காளதேசம், ஓமன், சீனாவும் இடம் பிடித்துள்ளன.
நேற்று நடந்த முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா தாய்லாந்தை வீழ்த்தியது.
இந்நிலையில், இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் ஜப்பானைச் சந்தித்தது. இதில் இந்தியா 3-2 என திரில் வெற்றி பெற்றது.
சனிக்கிழமை நடைபெறும் அடுத்த லீக் போட்டியில் இந்தியா சீன தைபே அணியை எதிர்கொள்கிறது.
- இந்திய அணி தொடக்க லீக் ஆட்டத்தில் தாய்லாந்தை சந்தித்தது.
- இதில் சிறப்பாக ஆடிய இந்தியா 11-0 என அபார வெற்றி பெற்றது.
மஸ்கட்:
10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. டிசம்பர் 4-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, தென் கொரியா, ஜப்பான், சீனதைபே, தாய்லாந்தும், பி பிரிவில் பாகிஸ்தான், மலேசியா, வங்காளதேசம், ஓமன், சீனாவும் இடம் பிடித்துள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அத்துடன், அடுத்த ஆண்டு நடைபெறும் ஜூனியர் உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதி பெறும்.
இந்நிலையில், இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் தாய்லாந்தை சந்தித்தது. ஆரம்பம் முதலே இந்திய வீரர்கள் அதிரடியாக ஆடினர்.
இறுதியில் இந்தியா 11-0 என அபார வெற்றி பெற்றது. தாய்லாந்து தான் ஆடிய இரு ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது.
- முதலில் பேட் செய்த இலங்கை 133 ரன்கள் எடுத்தது.
- ஆப்கானிஸ்தான் 18.1 ஓவரில் 134 ரன்கள் எடுத்து வென்றது.
அல் அமேரத்:
வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை 2024 (எமர்ஜிங் ஆசிய கோப்பை) டி20 கிரிக்கெட் தொடர் ஓமனில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற 8 அணிகளில் இருந்து குரூப் ஏ-வில் இருந்து இலங்கை ஏ, ஆப்கானிஸ்தான் ஏ அணியும், குரூப் பி-யில் இருந்து இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ அணியும் அரையிறுதிக்கு முன்னேறின. வங்காளதேசம் ஏ, ஹாங்காங், யு.ஏ.இ., ஓமன் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.
இந்த தொடரின் அரையிறுதி ஆட்டங்களில் பாகிஸ்தான் ஏ அணியை வீழ்த்தி இலங்கை ஏ அணியும், இந்தியா ஏ அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் ஏ அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இந்நிலையில், இலங்கை ஏ, ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நேற்று அல் அமேரத்தில் நடந்தது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்தது. சஹன் ஆராசிகே 64 ரன்கள் எடுத்தார்.
அடுத்து, 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 18.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றதுடன், எமர்ஜிங் ஆசிய கோப்பையையும் வென்று அசத்தியது.
- ஆசியக்கோப்பை தொடரில் நேற்று இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் மோதின.
- இப்போட்டியில் சூப்பர் மென் போல பாய்ந்து ரமன்தீப் சிங் கேட்ச் பிடித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
வளர்ந்துவரும் வீரர்களுக்கான டி20 ஆசியக்கோப்பை தொடர் ஓமன் நாட்டில் கடந்த 18-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்டோபர் 27-ம் தேதிவரை மொத்தம் 10 நாட்கள் இந்த தொடர் நடைபெறுகிறது.
இந்த தொடரில் நேற்று இந்தியா ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களை இந்திய அணி எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் திலக் வர்மா 44 ரன்களும் பிரப்சிம்ரன் சிங் 36 ரன்களும் எடுத்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் சுபியான் முகீம் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 184 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக அராபத் மின்ஹாஸ் 41 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி தரப்பில் அன்ஷுல் கம்போஜ் 3 விக்கெட்டும் ராசிக் சலாம் மற்றும் நிஷாந்த் சிந்து தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்
இப்போட்டியில் சூப்பர் மென் போல பாய்ந்து ரமன்தீப் சிங் கேட்ச் பிடித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பாகிஸ்தான் அணியில் அதிரடியாக விளையாடி வந்த யாசிர் கான் தூக்கி அடித்த பந்தை ஓடிச்சென்று பாய்ந்து ஒற்றை கையால் ரமன்தீப் சிங் பிடித்தார்.
ரமன்தீப் சிங்கின் அந்த கேட்ச் ஒரு இந்தியரின் மிகச்சிறந்த கேட்ச்களில் ஒன்று என்று முன்னாள் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் புகழாரம் சூட்டியுள்ளார்.
- கிராம பகுதிகளில் அதிகமாக விவசாய நிலங்கள் உள்ளது.
- பெரும்பாலும் அணையின் நீர்பாசனத்தின் மூலம் பல்வேறு பயிர்கள் இங்கு விளைவிக்கப்படுகிறது.
ஓமன் வாதி தேக்கா அணை பாசனத்திற்காக 15-ந்தேதி திறக்கப்படும்மஸ்கட்:
ஓமனில் தலைநகர் மஸ்கட்டில் இருந்து 75 கி.மீ. தொலைவில் குரையத் பகுதியில் வாதி தேக்கா அணை உள்ளது. சுமார் 246 அடி உயரம் கொண்ட இந்த அணை அரேபிய பகுதியில் கட்டப்பட்ட அணைகளை விட பெரியதாகும்.
இந்த அணை 10 கோடி கன மீட்டர் கொள்ளளவு உடையது. இது அமைந்துள்ள பகுதியில் தகாமர் மற்றும் ஹைல் அல் காப் ஆகிய கிராமங்கள் உள்ளன.
இந்த கிராம பகுதிகளில் அதிகமாக விவசாய நிலங்கள் உள்ளது. பெரும்பாலும் அணையின் நீர்பாசனத்தின் மூலம் பல்வேறு பயிர்கள் இங்கு விளைவிக்கப்படுகிறது. எனவே, கிராமங்களில் உள்ள விவசாயிகளின் நலன் கருதி பாசனத்திற்காக வாதி தேக்கா அணை வருகிற 15-ந் தேதி திறக்கப்படும் என ஓமன் வேளாண்மை, மீன்வளம் மற்றும் நீர்வள அமைச்சகம் அறிவித்துள்ளது.
அணை திறப்பு அறிவிப்பை தொடர்ந்து அந்த கிராமங்களில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.
- கொமாரோஸ் நாட்டின் `பிரெஸ்டீஜ் பால்கன்' என்ற அந்த கப்பலில் 13 இந்தியர்கள் உள்பட 16 பணியாளர்கள் பயணித்தனர்.
- மீதமுள்ள 7 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மஸ்கட்:
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹம்ரியா துறைமுகத்தில் இருந்து ஏமனின் ஏடன் துறைமுகத்துக்கு ஒரு எண்ணெய் கப்பல் புறப்பட்டது. கொமாரோஸ் நாட்டின் `பிரெஸ்டீஜ் பால்கன்' என்ற அந்த கப்பலில் 13 இந்தியர்கள் உள்பட 16 பணியாளர்கள் பயணித்தனர். அப்போது ஓமன் கடற்கரையில் இருந்து சுமார் 25 கடல் மைல் தூரத்தில் அந்த கப்பல் விபத்துக்குள்ளானது. இதனால் கப்பலில் இருந்தவர்கள் கடலில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தனர். மேலும் இந்த விபத்தால் அங்கு எண்ணெய் படலமாக மிதந்தது.
இதுகுறித்து தகவலறிந்த ஓமன் கடலோர போலீசார் அங்கு விரைந்தனர். மேலும் இந்த மீட்பு பணியில் ஓமனுடன் இந்திய கடற்படையும் இணைந்தது. இதன்மூலம் நேற்று 8 இந்தியர்கள் மீட்கப்பட்ட நிலையில் தற்போது இலங்கையைச் சேர்ந்த ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளார். அதேசமயம் ஒரு இந்தியர் சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து மீதமுள்ள 7 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- கொமாரோஸ் நாட்டுக்குச் சொந்தமான ‘பிரெஸ்டீஜ் பால்கன்’ என்ற அந்த கப்பல் ஏமனின் ஏடன் துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
- மாயமான மற்ற மாலுமிகளை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
மஸ்கட்:
13 இந்திய மாலுமிகளுடன் சென்ற எண்ணெய் கப்பல் ஓமன் நாட்டின் கடற்பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு 8 இந்தியர்கள் மற்றும் இலங்கையை சேர்ந்த ஒருவர் என 9 மாலுமிகள் உயிருடன் மீட்கப்பட்டனர். மாயமான மற்ற மாலுமிகளை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள ஹம்ரியா துறைமுகத்தில் இருந்து ஒரு எண்ணெய் கப்பல் புறப்பட்டது. கொமாரோஸ் நாட்டுக்குச் சொந்தமான 'பிரெஸ்டீஜ் பால்கன்' என்ற அந்த கப்பல் ஏமனின் ஏடன் துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
இதில் 13 இந்திய மாலுமிகள் மற்றும் இலங்கையை சேர்ந்த 3 மாலுமிகள் என மொத்தம் 16 பேர் இருந்தனர். இந்த கப்பல் ஓமன் நாட்டின் ராஸ் மத்ரகா கடற்கரையில் இருந்து சுமார் 25 கடல் மைல் தொலைவுக்கு அருகே பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென கவிழ்ந்தது. இதில் கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரும் கடலில் மூழ்கினர்.
இதுகுறித்து தகவலறிந்த ஓமன் கடலோர காவல்படையினர் அங்கு விரைந்தனர். அவர்கள் கடலில் மூழ்கி மாயமான மாலுமிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு 8 இந்தியர்கள் மற்றும் இலங்கையை சேர்ந்த ஒருவர் என 9 மாலுமிகள் உயிருடன் மீட்கப்பட்டனர். மாயமான மற்ற மாலுமிகளை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
- எண்ணெய் கப்பல் விபத்து குறித்த தகவல் உடனடியாக அந்த நாட்டு கடலோர பாதுகாப்பு படையினர் மற்றும் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
- இந்திய போர்க்கப்பல் ஜூலை 15 -ந்தேதி முதல் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள இயக்கப்பட்டது.
ஓமன் அருகே கடலில் சென்று கொண்டிருந்த எண்ணெய் கப்பல் கவிழ்ந்ததில் 13 இந்தியர்கள் உள்பட 16 பேர் மாயமானார்கள்.
எண்ணெய் கப்பல் விபத்து குறித்த தகவல் உடனடியாக அந்த நாட்டு கடலோர பாதுகாப்பு படையினர் மற்றும் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மற்றும் மீட்பு படையினர் கப்பலில் இருந்து மாயமான 16 பேரையும் தேடும் பணியை துரிதப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் ஓமன் அருகே கொமரோஸ் கொடியுடன் கூடிய கப்பல் கவிழ்ந்ததை அடுத்து, இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் தேஜ் (INS Teg) ஆனது P-81 கடல்சார் கண்காணிப்பு விமானம் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள பணியாளர்களுடன் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்திய போர்க்கப்பல் ஜூலை 15 -ந்தேதி முதல் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள இயக்கப்பட்டது. போர்க்கப்பல் ஜூலை 16-ந்தேதி கவிழ்ந்த எண்ணெய் டேங்கரை கண்டுபிடித்தது.
- எண்ணெய் டேங்கர் ஓமன் கடற்கரையில் கவிழ்ந்ததாக அந்நாட்டின் கடல் பாதுகாப்பு மையம் நேற்று தெரிவித்தது.
- ஓமனின் தென்மேற்கு கடற்கரையில் டுகும் துறைமுகம் அமைந்துள்ளது.
கொமொரோஸின் கொடியுடன் கூடிய எண்ணெய் கப்பலான 'பிரெஸ்டீஜ் பால்கன்' ஏடன் துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது கவிழ்ந்தது. இந்த விபத்தில் கப்பலில் பயணம் செய்த 16 பேர், 13 இந்தியர்களும், இலங்கையை சேர்ந்த மூன்று பேர் மாயமாகினர்.
இந்த எண்ணெய் கப்பல் டேங்கர் ஏடன் துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்தது. மத்ரகாவில் இருந்து தென்கிழக்கே 25 கடல் மைல் தொலைவில் ஓமனின் துறைமுகத்திற்கு அருகே கப்பல் கவிழ்ந்தது.
எண்ணெய் டேங்கர் ஓமன் கடற்கரையில் கவிழ்ந்ததாக அந்நாட்டின் கடல் பாதுகாப்பு மையம் நேற்று தெரிவித்தது. இந்த விபத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணி மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஓமனின் கடல்சார் பாதுகாப்பு மையம் கூறுகையில், எண்ணெய் டேங்கர் மூழ்கி, தலைகீழாக இருந்தது. இருப்பினும், கப்பல் நிலைபெற்றதா அல்லது எண்ணெய் அல்லது எண்ணெய் பொருட்கள் கடலில் கசிகிறதா என்பதை உறுதிப்படுத்தவில்லை.
இந்த கப்பல் 2007ல் கட்டப்பட்ட 117 மீட்டர் நீளமுள்ள எண்ணெய் தயாரிப்பு டேங்கர் ஆகும். இத்தகைய சிறிய டேங்கர்கள் பொதுவாக குறுகிய பயணங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
ஓமனின் தென்மேற்கு கடற்கரையில் டுகும் துறைமுகம் அமைந்துள்ளது. இது நாட்டின் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு சுரங்கத் திட்டங்களின் முக்கிய மையமாகும். பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் டுகும்-ன் பரந்த தொழில்துறை மண்டலத்தின் ஒரு பகுதியாகும்.
- புதிதாக தொடங்க இருக்கும் இஸ்லாமிய வருடம் ஹிஜ்ரி 1446 ஆகும்.
- வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை அரசுத்துறையினருக்கு வழக்கமான வார விடுமுறை தினமாகும்.
மஸ்கட்:
இஸ்லாமியநாட்காட்டியின் முதல் மாதம் 'முகரம்' மாதமாகும். நபித்தோழர் உமர் (ரழி), தனது ஆட்சிக் காலத்தில் நபித்தோழர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து எப்பொழுது முதல் இஸ்லாமிய வருடம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று ஆலோசனை கேட்டார்கள். இதனடிப்படையில் பலரும் பல மாதங்களை குறிப்பிட்டார்கள். இறுதியில் இஸ்லாமியர் முதல் மாதமாக முகரம் மாதத்தை ஆரம்பிப்பது என்று முடிவெடுத்தார்கள்.
'ஹிஜ்ரி' ஆண்டு என்பது நபிகள் நாயகம் மெக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் பயணத்தை மேற்கொண்டதை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்பட்டதாகும். இஸ்லாமிய வருடப் பிறப்பு வருகிற 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்க இருக்கிறது. புதிதாக தொடங்க இருக்கும் இஸ்லாமிய வருடம் ஹிஜ்ரி 1446 ஆகும்.
இதையொட்டி அமீரக மனிதவளம் மற்றும் அமீரகமயமாக்கல் துறை வெளியிட்ட அறிவிப்பில், "அமீரகத்தில் இஸ்லாமிய வருடப் பிறப்பை முன்னிட்டு வருகிற 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தனியார் நிறுவனங்களுக்கு பொது விடுமுறையாக இருக்கும்" என கூறப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வழக்கமான வார விடுமுறை தினம் ஆகும். இதனால் இந்த விடுமுறை காரணமாக தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு பயன் இல்லை.
ஓமன் தொழிலாளர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஓமன் நாட்டில் இஸ்லாமிய வருடப் பிறப்பு வருகிற 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்க இருக்கிறது. புதிதாக தொடங்க இருக்கும் இஸ்லாமிய வருடம் ஹிஜ்ரி 1446 ஆகும். வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை அரசுத்துறையினருக்கு வழக்கமான வார விடுமுறை தினமாகும்.
இஸ்லாமிய வருடப்பிறப்பையொட்டி 7-ந்தேதி பொது விடுமுறை விடப்படுவதால் அரசுத்துறையினருக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அன்றைய தினம் ஒரு சில ஊழியர்களின் பணி மிகவும் அத்தியாவசியமாக கருதி அவர்களுக்கு வேலை வழங்கப்பட்டால், அதற்கேற்ப அவர்களுக்கு மாற்று விடுமுறை அல்லது அதனை ஈடு செய்யும் வகையில் ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தற்போது 1.7 கோடி பயணிகள் ஓமன் விமான நிலையங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
- விமான நிலையங்கள் முசந்தம் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்படும்.
மஸ்கட்:
ஓமன் நாட்டின் சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் நைப் அல் அப்ரி கூறியதாவது:-
ஓமன் நாட்டில் தற்போது மஸ்கட், சலாலா, சுகர் மற்றும் துகும் உள்ளிட்ட இடங்களில் 4 விமான நிலையங்கள் உள்ளன. ஓமன் நாட்டுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து கணிசமாக அதிகரித்து வருகிறது. மேலும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. தற்போது 1.7 கோடி பயணிகள் ஓமன் விமான நிலையங்களை பயன்படுத்தி வருகின்றனர். வருகிற 2040-ம் ஆண்டில் இந்த பயணிகள் எண்ணிக்கை 5 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு புதிய விமான நிலையங்கள் கட்டப்பட உள்ளன.
வருகிற 2028-29-ம் ஆண்டில் மட்டும் புதிதாக 6 விமான நிலையங்கள் பயன்பாட்டுக்கு வரும். இந்த விமான நிலையங்கள் முசந்தம் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்படும். இதனை தொடர்ந்து ஓமன் நாட்டில் மேலும் புதிய விமான நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு மொத்த விமான நிலையங்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரிக்கும். முசந்தம் நகரில் அமைக்கப்பட்டு வரும் புதிய விமான நிலையத்தின் பணிகள் நிறைவடைந்து வருகிற 2028-ம் ஆண்டு இறுதியில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்.
இதனை தொடர்ந்து ஓமன் நாட்டின் பிற இடங்களில் அமைக்கப்பட்டு வரும் விமான நிலையங்கள் செயல்பட தொடங்கும். இந்த புதிய விமான நிலையங்கள் மூலம் உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்களும் ஆங்காங்கே முறிந்து விழுந்தன.
- ஓமனில் இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மஸ்கட்:
மத்திய கிழக்காசிய நாடான ஓமனில் கனமழை பெய்யும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி அங்கு கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் முசாண்டம், அல் புரைமி, அல் தஹிரா மற்றும் அல் தகிலியா உள்ளிட்ட 5 மாகாணங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் அங்குள்ள பல வீடுகள் சேதம் அடைந்தன. இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி அங்கு 8 பேர் உயிரிழந்தனர். அதேபோல் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்களும் ஆங்காங்கே முறிந்து விழுந்தன. இதன் காரணமாக அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
அதேபோல் தலைநகர் மஸ்கட்டில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்துக்கு மாணவர்கள் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இந்த வெள்ளப்பெருக்கில் பஸ் அடித்துச்செல்லப்பட்டது.
இதனையடுத்து தகவல் அறிந்த மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்களின் முயற்சியால் பல மாணவர்கள் மீட்கப்பட்டனர். எனினும் 9 பேர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு பலியாகினர்.
மேலும் பலர் இந்த வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
ஓமனில் இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தலைநகர் மஸ்கட் உள்பட பல நகரங்களில் பள்ளிக்கூடம், அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. எனவே தொழிலாளர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.