என் மலர்
அமெரிக்கா
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
- அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா தோல்வி அடைந்தார்.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஜப்பானின் நவோமி ஒசாகா, அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய ஒசாகா முதல் செட்டை 7-6 (7-4) என வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட அனிசிமோவா அடுத்த இரு செட்களை 7-6 (7-3), 6-3 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இதன்மூலம் அனிசிமோவா முதல் முறையாக அமெரிக்க ஓபன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் அனிசிமோவா, சபலென்காவுடன் மோதுகிறார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
- அரையிறுதியில் யூகி பாம்ப்ரி ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி, பிரிட்டனின் நீல் கப்ஸ்கி-ஜோ சாலிஸ்பெரி ஜோடியுடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய யூகி பாம்ப்ரி ஜோடி முதல் செட்டை7-6 (7-2) என வென்றது. இதில் சுதாரித்துக் கொண்ட பிரிட்டன் ஜோடி அடுத்த இரு செட்களை 7-6 (7-5), 6-4 என வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதன்மூலம் யூகி பாம்ப்ரி ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது. கிராண்ட்ஸ்லாம் போட்டியில் யூகி பாம்ப்ரி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அரசு உறவு வேறு, ராஜாங்க உறவு வேறு. தனிப்பட்ட நட்பு என்பது வேறு.
- அதனால் தான் அவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது என்றார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டன் இங்கிலாந்து செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
அமெரிக்க அதிபர் டிரம்புக்கும், இந்திய பிரதமர் மோடிக்கும் இடையே ஒரு காலத்தில் தனிப்பட்ட முறையில் நல்ல உறவு இருந்தது. அது இப்போது முடிந்துவிட்டது என நான் நினைக்கிறேன்.
இது அனைவருக்கும் ஒரு பாடம். உதாரணமாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு இது ஒரு பெரிய பாடம்.
டிரம்பை நம்பி ஏமாற்றம் அடைய வேண்டாம். ஒரு நல்ல தனிப்பட்ட உறவு சில சமயங்களில் உதவக்கூடும். ஆனால் அது உங்களை மோசமானவற்றில் இருந்து பாதுகாக்காது.
அரசு உறவு வேறு, ராஜாங்க உறவு வேறு. தனிப்பட்ட நட்பு என்பது வேறு. அதனால் தான் அவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
டிரம்ப் சர்வதேச உறவுகளை தலைவர்களுடனான தனது தனிப்பட்ட உறவுகளின் கண்ணோட்டத்தில் பார்க்கிறார் என நினைக்கிறேன். எனவே அவருக்கு விளாடிமிர் புதினுடன் நல்ல உறவு இருந்தால் அமெரிக்காவுக்கு ரஷியாவுடன் நல்ல உறவு இருக்கிறது என அவர் கருதுகிறார்.
ஹூஸ்டனில் நடந்த ஹவுடி மோடி பேரணி முதல் அரசு வருகைகள் வரை தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்த மோடி-டிரம்ப் இடையிலான உறவுகள் இப்போது மோசமாகி உள்ளது. இரு நாட்டு உறவு மோசமான நிலையை அடைந்துள்ளது என தெரிவித்தார்.
இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் நீடித்து வரும் சூழ்நிலையில், ஜான் பால்டன் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
- அரையிறுதியில் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா தோல்வி அடைந்தார்.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் நமப்ர் 1 வீராங்கனையும், பெலாரசைச் சேர்ந்தவருமான அரினா சபலென்கா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை சந்தித்தார்.
லஜப்பானின் நவோமி ஒசாகா, செக் குடியரசின் கரோலினா முச்சோவா உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 4-6 என இழந்த சபலென்கா, அடுத்து அதிரடியாக ஆடினார்.
இதனால் அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
- அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கு (பென்டகன்) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- துரதிர்ஷ்டவசமாக, முந்தைய நிர்வாகத்தின் பலவீனமான கொள்கைகள் காரணமாக ரஷ்யாவும் சீனாவும் நெருக்கமாகிவிட்டன.
இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று பிரமாண்டமான இராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.
இந்த அணிவகுப்பை சீன ஜின்பிங்குடன் ரசிய அதிபர் புதின் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் பார்வையிட்டனர்.
அமெரிக்காவிற்கு எதிராக சீனா, ரஷ்யா மற்றும் வட கொரியா இணைந்து சதி செய்வதாக அதிபர் டிரம்ப் நேரடியாக குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் ரஷியா, சீனாவை எதிர்கொள்ள இராணுவ தயார்நிலையை கணிசமாக அதிகரிக்க அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கு (பென்டகன்) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சீனா, ரஷியா, வட கொரியா மூன்று நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பு அமெரிக்காவிற்கு எதிராக வலுவடைந்து வருவதற்கான அறிகுறி என்று வாஷிங்டன் நம்புகிறது.
டிரம்ப்பின் உத்தரவுகளை பென்டகன் தலைவர் பீட் ஹெக்செத் உறுதிப்படுத்தினார்.
இதுகுறித்து ஃபாக்ஸ் நியூஸிடம் பேட்டியளித்த ஹெக்செத், "இந்த நடவடிக்கைகள் போரை நாடுவதற்காக அல்ல, மாறாக வீரர்களின் மன உறுதியை புதுப்பிக்க மட்டுமே.
துரதிர்ஷ்டவசமாக, முந்தைய நிர்வாகத்தின் பலவீனமான கொள்கைகள் காரணமாக ரஷ்யாவும் சீனாவும் நெருக்கமாகிவிட்டன. இது அமெரிக்கத் தலைமை இல்லாததற்கான சான்றாகும்.
அதனால்தான் ஜனாதிபதி டிரம்ப் ராணுவத்தை மீண்டும் கட்டியெழுப்பவும், தடுப்பு திறனை மறுசீரமைக்க தயாராக இருக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
நாங்கள் மோதலை விரும்பவில்லை. சீனா, ரஷ்யா மற்றும் பிற நாடுகளுக்கு நாங்கள் போரைத் தவிர்க்கத் தயாராக இருக்கிறோம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளோம்" என்று கூறினார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
- காலிறுதியில் யூகி பாம்ப்ரி ஜோடி அபார வெற்றி பெற்றது.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி, அமெரிக்காவின் ராஜீவ் ராம்-குரேஷியாவின் நிகோலா மெக்டிக் ஜோடியுடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய யூகி பாம்பரி ஜோடி 6-3, 6-7 (6-8), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. கிராண்ட்ஸ்லாம் போட்டியில் யூகி பாம்ப்ரி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.
- அமெரிக்க அரசு விதித்த வரிவிதிப்பு கடந்த 27-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
- இந்தியா உள்ளிட்ட நாடுகள்மீது விதிக்கப்பட்ட வரிகள் சட்டவிரோதம் என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றுக் கொண்ட டொனால்டு டிரம்ப், பொருளாதார ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார். அதன்படி இந்தியாவுக்கு 25 சதவீத வரியை டிரம்ப் விதித்தார். மேலும், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் கூடுதலாக 25 சதவீத வரியை டிரம்ப் அறிவித்தார். அதன்படி, இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மொத்தமாக 50 சதவீத வரி விதிக்கப்பட்டது.
இந்த வரி விதிப்பு கடந்த 27-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பை சரிகட்ட மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்கிடையே, வரிவிதிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிமன்றம், அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை. இத்தகைய வரிகளை விதிக்க டிரம்புக்கு எந்த அதிகாரமும் இல்லை என தீர்ப்பளித்தது.
இந்நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அதிபர் டிரம்ப் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். அதில், உக்ரைன் போரால் ஏற்பட்டுள்ள தேசிய அவசர நிலையை சமாளிக்கவே ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு எதிராக வரிகளை விதித்தோம் என தெரிவித்துள்ளார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
- காலிறுதியில் இத்தாலி வீரர் சின்னர் வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர் 1 வீரரான இத்தாலியைச் சேர்ந்த ஜானிக் சின்னர், சக நாட்டு வீரரான லாரன்சோ முசெட்டி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-1, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
அரையிறுதியில் இத்தாலியின் சின்னர் கனடாவின் பெலிக்ஸ் ஆகரை சந்திக்கிறார்.
இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஜப்பானின் நவோமி ஒசாகா, செக் குடியரசின் கரோலினா முச்சோவா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய ஒசாகா 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் அரையிறுதியில் ஒசாகா அமெரிக்காவின் அனிசிமோவாவை சந்திக்கிறார்.
- உலகில் எந்த மனிதனை விடவும் வரிகளைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்.
- வரி விதிப்பு அமெரிக்காவிற்கு பேரம்பேசும் சக்தியை வழங்குகிறது.
சீனா மற்றும் பிரேசில் போல இந்தியாவும் அமெரிக்காவை வரிகளால் கொல்கிறது என்று டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
ஸ்காட் ஜென்னிங்ஸ் ரேடியோ நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், "சீனா வரிகளால் எங்களை கொல்கிறது, இந்தியா வரிகளால் எங்களை கொல்கிறது, பிரேசில் வரிகளால் எங்களை கொல்கிறது. அவர்களை விட வரிகளைப் பற்றி எனக்குநன்றாகத் தெரியும்.
உலகில் எந்த மனிதனை விடவும் வரிகளைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். இந்தியா தான் உலகில் அதிக வரி விதிக்கும் நாடு. ஆனால் இப்போது அமெரிக்கா இனி மீது எந்த வரியும் இருக்காது என்று அவர்கள் என்னிடம் கூறியுள்ளனர்" என்று தெரிவித்தார்.
மேலும் " இந்தியா மீது 50 சதவீத வரி விதிப்பு இல்லாவிட்டால் அவர்கள் இந்த முடிவுக்கு வந்திருக்க மாட்டார்கள். அதனால் வரி விதிப்பு அவசியம். வரி விதிப்பு அமெரிக்காவிற்கு பேரம்பேசும் சக்தியை வழங்குகிறது" என்றார்.
- இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சீனா நேற்று இராணுவ அணிவகுப்பை நடத்தியது.
- சீனாவின் சுதந்திரத்திற்காக அமெரிக்க வீரர்கள் தங்கள் இரத்தத்தை சிந்தினர்.
இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சீனா நேற்று பிரம்மாண்ட இராணுவ அணிவகுப்பை நடத்தியது. ரஷிய அதிபர் புதினும் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும் இந்த நிகழ்வில் தலைமை விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
புதின் மற்றும் கிம் ஜாங் உன்னுடன் சேர்ந்து ஜின்பிங் அமெரிக்காவிற்கு எதிராக சதி செய்கிறார் என்று டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார்.
தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் இதுதொடர்பாக டிரம்ப், "நீங்கள் அமெரிக்காவிற்கு எதிராக சதி செய்யும் போது, தயவுசெய்து விளாடிமிர் புதின் மற்றும் கிம் ஜாங் உன்னுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும்" என்று கிண்டலாக பதிவிட்டார்.
மேலும், இரண்டாம் உலகப் போரின் போது சீனாவின் சுதந்திரத்திற்காக அமெரிக்க வீரர்கள் தங்கள் இரத்தத்தை சிந்தியதாகவும், ஜின்பிங் அரசாங்கம் அந்த தியாகங்களை மதிக்கிறதா என்றும் டிரம்ப் வினவினார்.
சீனாவின் வெற்றிக்காக பல அமெரிக்கர்கள் தங்கள் உயிரைக் கொடுத்துள்ளதாகவும், சீனா அவர்களின் தைரியத்தையும் தியாகங்களையும் நினைவில் கொள்ளும் என்று நம்புவதாகவும் டிரம்ப் கூறினார்.
- சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்றது.
- சீன அதிபர், ரஷிய அதிபர் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார்.
வாஷிங்டன்:
சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களைச் சந்தித்தார்.
ரஷியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி, அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கை ஆகியவற்றுக்கு இடையே நடைபெற்ற இந்த மாநாடு முக்கியத்துவம் பெற்றது. இந்தச் சந்திப்பு உலகம் முழுவதும் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. மூன்று தலைவர்களும் சந்தித்துப் பேசியதை உலகின் அனைத்து ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டன.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை அந்நாட்டு முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக ஜான் பால்டன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், டிரம்ப்பின் வரிவிதிப்பு நடவடிக்கை இந்தியாவையும், ரஷியாவையும் மீண்டும் ஒன்றிணைத்து விட்டது. இந்தியா-ரஷியாவை பிரிக்க பல தசாப்தங்களாக அமெரிக்கா செய்த முயற்சிகளை டிரம்ப் சீரழித்து விட்டார். டிரம்ப்பின் தவறான கொள்கையால் இந்தியா, சீனா, ரஷியா நாடுகள் வலுவான கூட்டாளியாகி விட்டன. அவரது தவறான பேரழிவு வரி கொள்கை முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது. அவரது இந்த முடிவால் கிழக்கு ஆசியாவில் சீனா நிலைமையை மறு வடிவமைக்க அனுமதித்துள்ளது என பதிவிட்டுள்ளார்.
- இந்தியாவுடன் அமெரிக்காவின் உறவு ஒருதலைப்பட்சமான பேரழிவு என டிரம்ப் வர்ணித்துள்ளார்.
- நமக்கு அதிக அளவில் பொருட்களை விற்கிறார்கள், ஆனால் நாம் அவற்றை மிகக் குறைவாகவே விற்கிறோம்.
ரஷிய எண்ணெய்யை வாங்குவதன் மூலம் இந்தியா உக்ரைன் போருக்கு உதவி செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.
இதனால் ஏற்கனவே விதித்த 25 சதவீத வரியுடன் அபராதமாக 25 சதவீத கூடுதல் வரி விதித்து கடந்த மாதம் உத்தரவிட்டார். இதனால் இந்திய பொருட்கள் 50 சதவீத வரியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் ஒருமுறை இந்தியாவை குறிவைத்துள்ளார்.
அதாவது, இந்தியாவுடன் அமெரிக்காவின் உறவு ஒருதலைப்பட்சமான பேரழிவு என டிரம்ப் வர்ணித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய டிரம்ப், இந்தியா வேறு எந்த நாட்டையும் விட எங்களிடம் அதிகம் வரிகளை விதித்துள்ளது.
அவர்கள் (இந்தியா) நமக்கு அதிக அளவில் பொருட்களை விற்கிறார்கள், ஆனால் நாம் அவர்களுக்கு மிகக் குறைவாகவே விற்கிறோம்.
2024 இல் இந்தியா அமெரிக்காவில் இருந்து 41.5 பில்லியன் டாலர் அளவிற்கு பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. அதேவேளையில் அமெரிக்காவுக்கு 80 பில்லியன் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது.
அதேவேளை இந்தியா தனது எண்ணெய் மற்றும் இராணுவப் உபகரணங்களை ரஷியாவிலிருந்து அதிகம் வாங்குகிறது. அமெரிக்காவிலிருந்து மிகக் குறைவாகவே வாங்குகிறது.
அவர்கள் (இந்தியா) இப்போது தங்கள் வரிகளை முற்றிலுமாக குறைக்க முன்வந்துள்ளனர். ஆனால் இப்போது மிகவும் தாமதமாகிவிட்டது. அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே அவ்வாறு செய்திருக்க வேண்டும். இந்தியா நீண்ட காலத்திற்கு முன்பே வரிகளைக் குறைத்திருக்க வேண்டும்" என்று கூறினார்.
சீனாவில் நேற்று நடத்த ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின், பிரதமர் மோடி நெருக்கம் காட்டிய நிலையில் டிரம்ப்பின் கருத்து வந்துள்ளது.






