என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • ஏ.ஐ. மூலம் பிரபலங்களின் புகைப்படங்களை கற்பனை செய்து வெளியிட்டு வருகிறார்கள்.
    • செயற்கை நுண்ணறிவு கருவி மூலம் ஜெனிபர் மகள் போல பேசி அவரிடம் மோசடிக்கு முயன்றதும் தெரியவந்தது.

    சமீப காலமாக ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் பிரபலங்களின் புகைப்படங்களை கற்பனை செய்து வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் அந்த செயற்கை நுண்ணறிவு கருவி மூலம் ஒரு பெண்ணிடம் ரூ.8¼ கோடி மோசடி முயற்சி நடந்த சம்பவம் அமெரிக்காவில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    அங்குள்ள அரிசோனா பகுதியை சேர்ந்த ஜெனிபர் டெஸ்டெபனோ என்ற பெண்ணுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் எதிர்புறம் அவரது 15 வயது மகள் அழும் குரல் கேட்டது. உடனே ஜெனிபர் என்ன ஆனது என்று கேட்டதற்கு, நான் மிகப்பெரிய தவறை செய்துவிட்டேன் என கூறி அழதொடங்கினார். அப்போது ஜெனிபரின் மகள் பனி சறுக்கு விளையாட சென்றிருந்தார். இதனால் தனது மகள் ஏதோ ஆபத்தில் சிக்கி கொண்டார் என நினைத்த ஜெனிபர் அதிர்ச்சியடைந்தார்.

    அப்போது ஒரு ஆண், ஜெனிபரின் மகளை மிரட்டல் குரல் கேட்டது. பின்னர் ஜெனிபரிடம் பேசிய அந்த நபர் உனது மகளை கடத்திவிட்டோம். ஒரு மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 8¼ கோடி ரூபாய்) கொடுத்தால் விட்டு விடுகிறோம் என கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த ஜெனிபர் தனது மகளின் தோழியின் அம்மாவை தொடர்பு கொண்டு பேசினார்.

    பின்னர் அவர் மூலம் போலீஸ் உதவியை நாடிய போது ஜெனிபரின் மகளை யாரும் கடத்தவில்லை என்பதும், செயற்கை நுண்ணறிவு கருவி மூலம் ஜெனிபர் மகள் போல பேசி அவரிடம் மோசடிக்கு முயன்றதும் தெரியவந்தது. எனினும் இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரத்த ஓட்டத்தில் உள்ள கட்டி செல்கள் தேர்ச்சி பெறுவதற்கு எண்டோபிலியா சிகிச்சை முறையை முதலில் கடைபிடிக்க வேண்டும்
    • மனித திசுக்களில் மெட்டாஸ்டாசிஸை கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.

    புற்றுநோய் தற்போது பெரும் சவாலாக மாறி வருகிறது. எந்த வயதினரையும் தாக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. புற்றுநோய் காரணமாக சுமார் 13 சதவீதம் மனித உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 14.1 மில்லியன் மக்கள் இந்த நோயால் தாக்கப்படுகின்றனர். இவற்றில், 8.8 மில்லியன் இறப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன

    நுரையீரல் புற்றுநோய், முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய், பெருங்குடல் மலகுடலுக்குரிய புற்று நோய், வயிற்றுப் புற்றுநோய் (இரைப்பைப் புற்றுநோய்) பெண்களில் மார்பகப் புற்றுநோய், கருப்பப்பை வாய்ப் புற்றுநோய், பெருங்குடல் மலகுடலுக்குரிய புற்று நோய், நுரையீரல் புற்றுநோய் என பலவகை உள்ளன. குழந்தைகளையும் புற்றுநோய் விட்டு வைப்பதில்லை. 2012-ம் ஆண்டில், 165,000 எண்ணிக்கையான 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் புற்று நோயால் பாதிக்கப்பட்டனர். வளர்ந்து வரும் நாடுகளில் புற்று நோய் அதிகளவில் பரவுகிறது.

    உடலின் ஒரு பகுதியில் உருவாகும் புற்றுநோய் மற்ற பகுதிகளுக்கும் பரவி நோயாளியின் நிலையை சிக்கலாக்குகிறது.அத்தகையவர்களுக்கு சிகிச்சை அளிப்பதும் கடினம்.

    இந்நிலைதான் பெரும்பாலான புற்றுநோய் இறப்புகளுக்கு காரணம். கட்டி செல்கள் ரத்த ஓட்டத்தில் இருந்து வெளியேறி மற்ற உறுப்புகளுக்கு பரவுகின்றன.

    இதனை தடுக்க அமெரிக்க, பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் புதிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (எம்ஐடி) மற்றும் பிரிட்டனில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜ் லண்டன் (யுசி) விஞ்ஞானிகள் மெட்டாஸ்டாசிஸின் வழிமுறைகளை ஆழமாக ஆராய்ச்சி செய்தனர்.

    முதன்முறையாக, விஞ்ஞானிகள் புற்றுநோய் செல்கள் உறுப்புகளில் ஊடுருவும் முறையை விரிவாக கண்டுபிடித்தனர். புற்றுநோயானது உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவுவதைத் தடுக்கும் நோக்கில் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

    புதிய மருந்துகள் தயாரிக்க இந்த ஆராய்ச்சி வழிவகை செய்யப்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    உடலில் ஒரு இடத்தில் புற்றுநோய் தொடங்குகிறது. அங்கிருந்து கட்டி செல்கள் உடைந்து, ரத்த ஓட்டம் அல்லது நிணநீர் மண்டலத்தின் மூலம் உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவுகிறது. இது மெட்டாஸ்டாஸிஸ் என்று அழைக்கப்படுகிறது.

    இதன் விளைவாக மற்ற உறுப்புகளில் 2-ம் நிலை கட்டிகள் உருவாகின்றன. புற்றுநோய் செல்கள் ரத்த ஓட்டத்தில் அல்லது நிணநீர் மண்டலத்தில் நுழைவதற்கு முன்பு முதன்மைக் கட்டியிலிருந்து பிரிந்து செல்ல வேண்டும். கட்டி பெரிதாகி, அருகில் உள்ள திசு, நிணநீர், ரத்த நாளங்களில் பரவும் போது அந்த செல்கள்தான் முதன்மையான தளமாக அமைகிறது.

    புற்றுநோய் பரவலை தடுக்க விஞ்ஞானிகள் அதன் முன்மாதிரியை ஆய்வகத்தில் உருவாக்கியுள்ளனர்.

    ரத்த ஓட்டத்திற்கும் உடலின் மற்ற பகுதிகளுக்கும் இடையில் எண்டோடெலியம் எனப்படும் ஒரு அடுக்கு உள்ளது. விஞ்ஞானிகள் இதை முன்மாதிரியாகக் கொண்டுள்ளனர்.

    ரத்த ஓட்டத்தில் உள்ள கட்டி செல்கள் தேர்ச்சி பெறுவதற்கு எண்டோபிலியா சிகிச்சை முறையை முதலில் கடைபிடிக்க வேண்டும் என்பதை விஞ்ஞானிகள் அங்கீகரித்துள்ளனர்.

    "சேற்றில் சிக்கிக் கொண்டால், வெளியே வருவதற்கு கல் போன்ற சுவர் வேண்டும். புற்றுநோய் செல்கள், எண்டோடெலியத்தில் இருந்து வெளியேறி, மற்ற சுவர்களில் பரவுவதையே தடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

    உடலில் உள்ள திசுக்களில் அதிக நுண்துளைகள் உள்ளன. மென்மையானதாக இருப்பதால் மேலும் வேகமாக புற்றுநோய் செல்கள் ஊடுருவ முடியும் என்று ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.

    உடலில் உள்ள குறிப்பிட்ட திசுக்களின் புதிய வேதியியல் பண்புகள் 2-ம் நிலை கட்டிகள் எங்கு உருவாகின்றன என்பதை தீர்மானிக்க முடியுமா என்ற கேள்வியை இந்த ஆராய்ச்சி எழுப்பியுள்ளது.

    மனித திசுக்களில் மெட்டாஸ்டாசிஸை கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.

    இந்த ஆராய்ச்சி மூலம் உடலில் புற்றுநோய் பரவலை தடுக்க முடியுமா? எனவும் மருத்துவ வல்லுனர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    • ஒக்லஹோமாவை சேர்ந்த ஆசிரியை தங்களிடம் படிக்கும் மாணவர் ஒருவருடன் பாலியல் உறவில் ஈடுபட்ட புகாரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • மாணவருடன் பாலியல் உறவில் ஈடுபட்ட ஆசிரியைகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அமெரிக்காவில் டான்வில்லி பகுதியை சேர்ந்தவர் எலன்ஷெல் (வயது38). பள்ளி ஆசிரியையான இவர் தனது பள்ளியில் படிக்கும் 16 வயதுடைய 2 மாணவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து போலீசில் புகார் செய்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    இதே போல ஆர்கன்சாஸ் பகுதியை சேர்ந்த ஆசிரியை ஹீதர்ஹேர் (வயது32) என்ற ஆசிரியையும், ஒக்லஹோமாவை சேர்ந்த ஆசிரியையான எமிலி ஹான்காக் (26) என்பவரும் தங்களிடம் படிக்கும் மாணவர் ஒருவருடன் பாலியல் உறவில் ஈடுபட்ட புகாரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தொடர்ந்து வெர்ஜினியாவில் உள்ள ஆசிரியர் ஜேம்ஸ் மேடிசன் லிங்கன் கவுண்டியில் உள்ள ஆசிரியையான டெலானி ஹான்காக். அயோவாவின் டெஸ் மொயின்ஸில் உள்ள பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றும் கிறிஸ்டன் காண்ட் என்ற ஆசிரியர் தங்களிடம் படிக்கும் மாணவியுடன் முறை தவறிய உறவில் ஈடுபட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். இதை தவிர பென்சில்வேனியாவை சேர்ந்த ஈட்டி எறிதல் பெண் பயிற்சியாளர் ஹன்னா மார்த் என்பவரும் மாணவர் ஒருவருடன் உறவில் ஈடுபட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

    அமெரிக்காவில் மாணவருடன் பாலியல் உறவில் ஈடுபட்ட ஆசிரியைகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதோடு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

    • படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள டெடிவிலி பகுதியில் கேளிக்கை விடுதி உள்ளது. இந்த விடுதியில் ஒரு நபரின் 16வது பிறந்தநாள் விழா நேற்று இரவு கொண்டாடப்பட்டது.

    இந்த பிறந்தநாள் விழாவை கொண்டாட ஏராளமானோருக்கு கேளிக்கை விடுதியில் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பார்ட்டியில் சிறுவர்கள், சிறுமிகள் என பலர் பங்கேற்றனர்.

    அப்போது பார்ட்டியில் பங்கேற்றவர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்தியது யார்? அவர் கைது செய்யப்பட்டாரா? 16வது பிறந்தநாளை கொண்டாடியது சிறுவனா? சிறுமியா? என்பது குறித்த விவரங்களை போலீசார் இதுவரை வெளியிடவில்லை.

    • அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 நடைபெறுகிறது.
    • டிரம்ப், 2024-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    டப்ளின் :

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோபைடன் போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினர் மத்தியிலும் இருந்து வந்தது. இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக ஜோபைடன் அறிவித்து உள்ளார். 3 நாள் பயணமாக அயர்லாந்து சென்றுள்ள அவர், அங்கு புறப்படுவதற்கு முன் இந்த தகவலை வெளியிட்டார்.

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 2-வது முறையாக போட்டியிடுவதற்கு தனது மனதை தயார்படுத்தி விட்டதாக கூறிய ஜோபைடன், தேர்தல் பிரசாரத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளதாகவும் தெரிவித்தார். முன்னதாக, குடியரசு கட்சியை சேர்ந்தவரும், முன்னாள் ஜனாதிபதியுமான டிரம்ப், 2024-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • வாஷிங்டனில் சர்வதேச நிதியத்தின் தலைமையகத்தில் நடந்த ஒரு அமர்வில் பங்கேற்றார்.
    • இந்தியப்பொருளாதாரம் நல்ல நிலையில் செல்கிறது.

    வாஷிங்டன் :

    அமெரிக்காவில் நடைபெறுகிற சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திரக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.அவர் வாஷிங்டனில் சர்வதேச நிதியத்தின் தலைமையகத்தில் நேற்று முன்தினம் நடந்த ஒரு அமர்வில் பங்கேற்றார்.

    அப்போது அவர் பேசும்போது, "நடப்பு நிதி ஆண்டில் மிக வேகமாக வளர்ந்து வருகிற பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்று சர்வதேச நிதியமும், உலக வங்கியும் கணித்துள்ளன. இந்தியப்பொருளாதாரம் நல்ல நிலையில் செல்கிறது. நடப்பு நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையின்படி பார்த்தால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் 7 சதவீதமாக இருக்கும்" என்று குறிப்பிட்டார்.

    • அலஸ்காவில் உள்ள சுஜியாக் என்ற இடத்தில் 44.3 மைல் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
    • நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவு.

    வட அமெரிக்காவின் எல்லைப் பகுதியில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில் இன்று அதிகாலை 4.10 மணியளவில் திடீரென நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

    குறிப்பாக, அலஸ்காவில் உள்ள சுஜியாக் என்ற இடத்தில் 44.3 மைல் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • இதுகுறித்து போலீசாருக்கு தெரியவந்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டு விசாரணை நடத்தினர்.
    • நெடுஞ்சாலையில் பணத்தைத் தேட வேண்டாம் என்று ஓரிகான் மாநில காவல்துறை பொதுமக்களை வலியுறுத்துகிறது.

    அமெரிக்காவை சேர்ந்த நபர் கோலின் தேவிஸ் மெக்கர்தி (38). இவர், கடந்த செவ்வாய் கிழமை அன்று இரவு அங்குள்ள நெடுஞ்சாலை அருகில் தனது காரில் சென்றுக் கொண்டிருந்தபோது பணத்தை கார் ஜன்னலில் இருந்து அள்ளி வீசினார்.

    இதுகுறித்து போலீசாருக்கு தெரியவந்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டு விசாரணை நடத்தினர். இதில், தனது பணத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பியதால் பணத்தை அள்ளி வீசியதாக மெக்கர்தி தெரிவித்துள்ளார். மேலும் அவர் அள்ளி வீசிய பணத்தின் இந்திய மதிப்பு சுமார் 16 கோடி ஆகும்.

    மேலும், இதுகுறித்து மாநில காவல்துறை செய்தித் தொடர்பாளர் கேப்டன் கைல் கென்னடி கூறுகையில், "நெடுஞ்சாலையில் பணத்தைத் தேட வேண்டாம் என்று ஓரிகான் மாநில காவல்துறை பொதுமக்களை வலியுறுத்துகிறது. இது மிகவும் ஆபத்தானது மற்றும் அபாயகரமான நிலைக்கு பங்களிக்கிறது" என்றார்.

    • ரோபோ நாய் ரிமோட் கண்ட்ரோல் முறையில் இயக்கப்படுகிறது.
    • தப்பிச் செல்லும் கார்களில் ஜி.பி.எஸ். கருவியை பொருத்தும் எந்திரத்தையும் நியூயார்க் காவல்துறையினர் அறிமுகம்.

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 26 ஆயிரம் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. 433 கொலை குற்றங்கள் நடந்துள்ளன.

    நியூயார்க் நகர காவல்துறையில் 36 ஆயிரம் காவலர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், குற்றங்களை தடுக்க நவீன வழிமுறைகளை அந்நகர காவல்துறையினர் பின்பற்றி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தற்போது டிஜிடாக்(Digidog) என்ற ரோபோ நாய் ஒன்றை பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.

    இந்த ரோபோ நாய் ரிமோட் கண்ட்ரோல் முறையில் இயக்கப்படுகிறது. சுரங்க நடைபாதைகள், ஆபத்தான பகுதிகள், கட்டுமானம் நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இந்த ரோபோ நாய் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.

    ஆபத்தில் சிக்கும் மனிதர்களுக்கு உதவி செய்யும் திறன் கொண்ட இந்த ரோபோ நாயிடம் மனிதர்கள் தொடர்பு கொள்ள முடியும். மேலும் தப்பிச் செல்லும் கார்களில் ஜி.பி.எஸ். கருவியை பொருத்தும் எந்திரத்தையும் நியூயார்க் காவல்துறையினர் அறிமுகம் செய்துள்ளனர்.

    • பால் கறப்பதற்காக பண்ணையில் ஒன்றாக கட்டி வைக்கப்பட்டிருந்த ஏராளமான மாடுகள் தீயில் சிக்கி எரிந்து கருகியன.
    • பால்பண்ணையில் ஏற்பட்ட இந்த விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்து சென்றனர்.

    டெக்சாஸ்:

    அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸ் பகுதியில் உள்ள சவுத்போர்க் எனப்படும் மிகப்பெரிய பால்பண்ணை இயங்கி வருகிறது.

    இந்த பண்ணையில் நேற்று திடீரென தீ பிடித்துள்ளது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பண்ணை முழுவதும் பரவி பெரிய வெடி விபத்தாக மாறியது. இதனால் பயங்கர சத்தம் கேட்டுள்ளது.

    மேலும் அந்த பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்து கொண்டது. இதில் பால் கறப்பதற்காக பண்ணையில் ஒன்றாக கட்டி வைக்கப்பட்டிருந்த ஏராளமான மாடுகள் தீயில் சிக்கி எரிந்து கருகியன.

    பால்பண்ணையில் ஏற்பட்ட இந்த விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்து சென்றனர். அவர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் பண்ணையில் இருந்த ஆயிரக்கணக்கான மாடுகள் இறந்து கிடந்தன.

    அவற்றை கணக்கிட்ட போது மொத்தம் 18 ஆயிரம் மாடுகள் இறந்து கிடந்தது தெரியவந்தது. மேலும் இந்த விபத்தில் இருந்து மீட்கப்பட்ட ஒரு தொழிலாளி ஆபத்தான நிலையில் தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மின்சாதனங்களில் ஏற்பட்ட பழுது காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து டெக்சாஸ் தீயைணைப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாஷிங்டனை மையமாக கொண்டு விலங்குகள் நல வாரியம் 2013-ம் ஆண்டு கொட்டகை மற்றும் பண்ணையில் ஏற்படும் தீ விபத்தை கண்காணிக்க தொடங்கியது. அதில் இருந்து அமெரிக்காவில் அதிக கால்நடை உயிரிழப்பை ஏற்படுத்தியது இந்த விபத்துதான் என கூறுகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வக்கீல் மைக்கேல் கோஹன் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
    • மைக்கேல் கோஹன் தன்னை பற்றி பொய்களை பரப்புவதாகவும், நற்பெயருக்கு தீங்கு விளைவித்ததாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க முன்னாள் அதிபர் டெனால்டு டிரம்ப் ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் அவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    2016-ம் ஆண்டு அதிபர் தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் தீவிரமாக ஈடுபட்ட போது ஆபாச நடிகை ஸ்டார்மி, தனக்கும் டிரம்ப்புக்கும் தொடர்பு இருந்தது என்று கூறினார். இதை டிரம்ப் மறுத்தாலும் அவருக்கு தேர்தல் பிரசாரத்தில் பின்னடைவு ஏற்பட்டது.

    இதனால் ஸ்டார்மியை பேச விடாமல் தடுக்க அவருக்கு பணம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த தொகையை டிரம்ப் தனது வக்கீல் மைக்கேல் கோஹன் மூலம் நடிகைக்கு கொடுத்ததாகவும், பின்னர் அந்த தொகையை தேர்தல் பிரசார நிதியில் இருந்து எடுத்து வக்கீலுக்கு வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக வக்கீல் மைக்கேல் கோஹன் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் டிரம்ப் சமீபத்தில் கோர்ட்டில் ஆஜரானார். அப்போது தன் மீது சுமத்தப்பட்ட 34 குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.

    இந்த நிலையில் தனது முன்னாள் வக்கீல் மைக்கேல் கோஹன் மீது டிரம்ப் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். புளோரிடாவில் உள்ள அமெரிக்க மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    அதில் மைக்கேல் கோஹன் தன்னை பற்றி பொய்களை பரப்புவதாகவும், நற்பெயருக்கு தீங்கு விளைவித்ததாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். கோஹனின் இது போன்ற தொடர்ச்சியான மற்றும் முறையற்ற நடத்தை உச்சத்தை எட்டியுள்ளது.

    இதனால் சட்டப்பூர்வ தீர்வை தேடுவதை தவிர தனக்கு வேறு வழியில்லை என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    இது தொடர்பாக விசாரணை நடத்தி 500 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.4 ஆயிரம் கோடி) நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • டுவிட்டரை சொந்தமாக வைத்திருப்பது மிகவும் வேதனைக்குரியது.
    • டுவிட்டர் பெயர்ப் பலகையில் ‘டபிள்யூ' எழுத்தை மறைத்துள்ளார்.

    வாஷிங்டன் :

    உலகப்பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியது முதலே பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார்.

    இதில் ஆட்குறைப்பு, 'புளூடிக்' வசதிக்கு கட்டணம் போன்ற முடிவுகள் சர்வதேச அளவில் சர்ச்சையை கிளப்பியபோதும் எலான் மஸ்க் அதில் இருந்து பின்வாங்கவில்லை. சமீபத்தில், டுவிட்டர் 'லோகோ'வான, நீலநிற குருவியை மாற்றி, ஜப்பானின் முக்கிய நாய் இனமான 'ஷிபு' என்ற நாயின் புகைப்படத்தை புதிய 'லோகோ'வாக வைத்தார். பின்னர் அந்த லோகோ மாற்றப்பட்டு, மீண்டும் நீலநிற குருவியே வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் பிபிசிக்கு பேட்டியளித்த எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியது குறித்தும், அதை நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் மனம் திறந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    டுவிட்டரை சொந்தமாக வைத்திருப்பது மிகவும் வேதனைக்குரியது. அதனை நிர்வகிப்பது ரோலர் கோஸ்டரில் பயணிப்பது போன்று உள்ளது. டுவிட்டரை வாங்கியது ஒரு சரியான முடிவு என்று கருதினாலும், கடந்த பல மாதங்களாக நான் மிகவும் அழுத்தமாக உணர்கிறேன். பணிச்சுமையால் நான் சில நேரங்களில் அலுவலகத்தில் தூங்குகிறேன். சரியான நபரைக் கண்டுபிடித்தால் அவரிடம் டுவிட்டர் நிறுவனத்தை விற்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனிடையே அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவில் உள்ள டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை அலுவலக கட்டிடத்தில் பொறிக்கப்பட்டுள்ள டுவிட்டர் பெயர்ப் பலகையில் 'டபிள்யூ' எழுத்தை மறைத்துள்ளார். இதனால், அது டிட்டர் என்று காட்சி அளிக்கிறது.

    ×