search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஆண்டுக்கு 8.8 மில்லியன் பேர் உயிரிழப்பு- புற்று நோய் செல்கள் உடலில் பரவுவதை தடுக்க விஞ்ஞானிகள் புதிய ஆராய்ச்சி
    X

    ஆண்டுக்கு 8.8 மில்லியன் பேர் உயிரிழப்பு- புற்று நோய் செல்கள் உடலில் பரவுவதை தடுக்க விஞ்ஞானிகள் புதிய ஆராய்ச்சி

    • ரத்த ஓட்டத்தில் உள்ள கட்டி செல்கள் தேர்ச்சி பெறுவதற்கு எண்டோபிலியா சிகிச்சை முறையை முதலில் கடைபிடிக்க வேண்டும்
    • மனித திசுக்களில் மெட்டாஸ்டாசிஸை கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.

    புற்றுநோய் தற்போது பெரும் சவாலாக மாறி வருகிறது. எந்த வயதினரையும் தாக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. புற்றுநோய் காரணமாக சுமார் 13 சதவீதம் மனித உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 14.1 மில்லியன் மக்கள் இந்த நோயால் தாக்கப்படுகின்றனர். இவற்றில், 8.8 மில்லியன் இறப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன

    நுரையீரல் புற்றுநோய், முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய், பெருங்குடல் மலகுடலுக்குரிய புற்று நோய், வயிற்றுப் புற்றுநோய் (இரைப்பைப் புற்றுநோய்) பெண்களில் மார்பகப் புற்றுநோய், கருப்பப்பை வாய்ப் புற்றுநோய், பெருங்குடல் மலகுடலுக்குரிய புற்று நோய், நுரையீரல் புற்றுநோய் என பலவகை உள்ளன. குழந்தைகளையும் புற்றுநோய் விட்டு வைப்பதில்லை. 2012-ம் ஆண்டில், 165,000 எண்ணிக்கையான 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் புற்று நோயால் பாதிக்கப்பட்டனர். வளர்ந்து வரும் நாடுகளில் புற்று நோய் அதிகளவில் பரவுகிறது.

    உடலின் ஒரு பகுதியில் உருவாகும் புற்றுநோய் மற்ற பகுதிகளுக்கும் பரவி நோயாளியின் நிலையை சிக்கலாக்குகிறது.அத்தகையவர்களுக்கு சிகிச்சை அளிப்பதும் கடினம்.

    இந்நிலைதான் பெரும்பாலான புற்றுநோய் இறப்புகளுக்கு காரணம். கட்டி செல்கள் ரத்த ஓட்டத்தில் இருந்து வெளியேறி மற்ற உறுப்புகளுக்கு பரவுகின்றன.

    இதனை தடுக்க அமெரிக்க, பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் புதிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (எம்ஐடி) மற்றும் பிரிட்டனில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜ் லண்டன் (யுசி) விஞ்ஞானிகள் மெட்டாஸ்டாசிஸின் வழிமுறைகளை ஆழமாக ஆராய்ச்சி செய்தனர்.

    முதன்முறையாக, விஞ்ஞானிகள் புற்றுநோய் செல்கள் உறுப்புகளில் ஊடுருவும் முறையை விரிவாக கண்டுபிடித்தனர். புற்றுநோயானது உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவுவதைத் தடுக்கும் நோக்கில் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

    புதிய மருந்துகள் தயாரிக்க இந்த ஆராய்ச்சி வழிவகை செய்யப்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    உடலில் ஒரு இடத்தில் புற்றுநோய் தொடங்குகிறது. அங்கிருந்து கட்டி செல்கள் உடைந்து, ரத்த ஓட்டம் அல்லது நிணநீர் மண்டலத்தின் மூலம் உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவுகிறது. இது மெட்டாஸ்டாஸிஸ் என்று அழைக்கப்படுகிறது.

    இதன் விளைவாக மற்ற உறுப்புகளில் 2-ம் நிலை கட்டிகள் உருவாகின்றன. புற்றுநோய் செல்கள் ரத்த ஓட்டத்தில் அல்லது நிணநீர் மண்டலத்தில் நுழைவதற்கு முன்பு முதன்மைக் கட்டியிலிருந்து பிரிந்து செல்ல வேண்டும். கட்டி பெரிதாகி, அருகில் உள்ள திசு, நிணநீர், ரத்த நாளங்களில் பரவும் போது அந்த செல்கள்தான் முதன்மையான தளமாக அமைகிறது.

    புற்றுநோய் பரவலை தடுக்க விஞ்ஞானிகள் அதன் முன்மாதிரியை ஆய்வகத்தில் உருவாக்கியுள்ளனர்.

    ரத்த ஓட்டத்திற்கும் உடலின் மற்ற பகுதிகளுக்கும் இடையில் எண்டோடெலியம் எனப்படும் ஒரு அடுக்கு உள்ளது. விஞ்ஞானிகள் இதை முன்மாதிரியாகக் கொண்டுள்ளனர்.

    ரத்த ஓட்டத்தில் உள்ள கட்டி செல்கள் தேர்ச்சி பெறுவதற்கு எண்டோபிலியா சிகிச்சை முறையை முதலில் கடைபிடிக்க வேண்டும் என்பதை விஞ்ஞானிகள் அங்கீகரித்துள்ளனர்.

    "சேற்றில் சிக்கிக் கொண்டால், வெளியே வருவதற்கு கல் போன்ற சுவர் வேண்டும். புற்றுநோய் செல்கள், எண்டோடெலியத்தில் இருந்து வெளியேறி, மற்ற சுவர்களில் பரவுவதையே தடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

    உடலில் உள்ள திசுக்களில் அதிக நுண்துளைகள் உள்ளன. மென்மையானதாக இருப்பதால் மேலும் வேகமாக புற்றுநோய் செல்கள் ஊடுருவ முடியும் என்று ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.

    உடலில் உள்ள குறிப்பிட்ட திசுக்களின் புதிய வேதியியல் பண்புகள் 2-ம் நிலை கட்டிகள் எங்கு உருவாகின்றன என்பதை தீர்மானிக்க முடியுமா என்ற கேள்வியை இந்த ஆராய்ச்சி எழுப்பியுள்ளது.

    மனித திசுக்களில் மெட்டாஸ்டாசிஸை கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.

    இந்த ஆராய்ச்சி மூலம் உடலில் புற்றுநோய் பரவலை தடுக்க முடியுமா? எனவும் மருத்துவ வல்லுனர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    Next Story
    ×