என் மலர்
அமெரிக்கா
- சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி, அதில் பதிவுகளை வெளியிடும் சிறுவர்கள் மனநல பாதிப்புகளுக்குள்ளாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் பதிவுகளை பார்வையிட மட்டும் சிறுவர்களை அனுமதிக்கலாம்.
வாஷிங்டன்:
பேஸ்புக், இன்ஸ்டாகி ராம், டிக்-டாக் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி, அதில் பதிவுகளை வெளியிடும் சிறுவர்கள் மனநல பாதிப்புகளுக்குள்ளாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழலில், 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இது போன்ற சமூக ஊடகங்களில் கணக்குகளை உருவாக்கி தங்களது படைப்புகளை பதிவு செய்வதற்கு தடை விதிப்பதற்கான சட்ட மசோதாவை அமெரிக்க நாடாளுன்றத்தில் அனைத்து கட்சி எம்.பி.க்கள் தாக்கல் செய்தனர் . சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் பதிவுகளை பார்வையிட மட்டும் சிறுவர்களை அனுமதிக்கலாம் என்று அந்த வரைவு மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.
- பென்சில்வேனியா மாகாணத்தில் தீபாவளி பண்டிகையன்று பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.
வாஷிங்டன்:
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. மக்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புகளை வழங்கி உற்சாகமாக, மகிழ்ச்சியாக இந்தப் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்தியாவில் மட்டுமின்றி, உலகளவில் வசிக்கும் இந்து மக்களும், பிற மதத்தினரும் தீபாவளியைக் கொண்டாடுவது வழக்கம்.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை வெள்ளை மாளிகையில் வைத்து அதிபர் ஜோ பைடன் கொண்டாடி இருந்தார்.
இந்நிலையில், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் ஆண்டுதோறும் தீபாவளிக்கு பொது விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொது விடுமுறை வழங்குவதற்கான சட்டத்தை அம்மாகாண மேலவையில் செனட்டர்கள் அறிமுகப்படுத்தினர். இதையடுத்து, இந்த சட்டம் பென்சில்வேனியா மாகாண மேலவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் அங்கு தீபாவளிப் பண்டிகை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது.
- துணை ஜனாதிபதி பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்
வாஷிங்டன் :
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. இதில் குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். தேர்தலுக்கான பிரசாரத்தை அவர் ஏற்கனவே தொடங்கிவிட்டார்.
அதே சமயம் குடியரசு கட்சியின் சார்பில் டிரம்புக்கு போட்டியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கிஹாலே, விவேக் ராமசாமி களமிறங்கியுள்ளனர்.
இதனிடையே ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவார் என தகவல்கள் பரவி வந்தன. ஜோ பைடனும் மீண்டும் போட்டியிடுவதற்கான விருப்பத்தை தெரிவித்திருந்தார். எனினும் அதை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் 2024 ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதை ஜோ பைடன் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
கமலா ஹாரிசும் போட்டியிடுகிறார்
இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "ஒவ்வொரு தலைமுறையும் ஜனநாயகத்திற்காக எழுந்து நிற்க வேண்டிய ஒரு தருணம் உள்ளது. அவர்களின் அடிப்படை சுதந்திரங்களுக்காக நிற்க வேண்டும். இதுவே நம்முடைய கொள்கை என்று நான் நம்புகிறேன். அதனால்தான் நான் அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறேன். எங்களுடன் சேருங்கள். வேலையை முடிப்போம்" என குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் துணை ஜனாதிபதியான இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், மீண்டும் அந்த பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "அமெரிக்கர்களாகிய நாம் சுதந்திரத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். நமது ஜனநாயகம் அதற்காகப் போராடுவதற்கான நமது விருப்பத்தைப் போலவே வலுவாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அதனால்தான் ஜோ பைடன் மற்றும் நானும் மறுதேர்தலில் போட்டியிடுகிறோம்" என தெரிவித்துள்ளார்.
- அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானமான போயிங் 737 விமானம் கொலம்பஸ்சில் இருந்து பீனிக்ஸ் நகருக்கு புறப்பட்டு சென்றது.
- விமானம் சென்று கொண்டிருந்த போது பறவை ஒன்று விமானத்தின் இறக்கையில் மோதியது.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானமான போயிங் 737 விமானம் கொலம்பஸ்சில் இருந்து பீனிக்ஸ் நகருக்கு புறப்பட்டு சென்றது.
விமானம் சென்று கொண்டிருந்த போது பறவை ஒன்று விமானத்தின் இறக்கையில் மோதியது. இதனால் விமானத்தின் என்ஜின் இருக்கும் பகுதியின் ஒருபுறத்தில் இருந்து புகை வந்துள்ளது.
சிறிது நேரத்தில் தீ பிடிக்க தொடங்கியது. இதையடுத்து உடனடியாக விமானம் தரை இறக்கப்பட்டது. இதனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறக்கி மற்றொரு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் விமானத்தில் தீ பிடித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
- இந்திய-அமெரிக்க உறவில் இந்த ஆண்டு ஒரு மிகப் பெரிய ஆண்டாக அமைந்திருக்கிறது.
- வருகிற செப்டம்பரில் ஜி-20 உச்சி மாநாடு நடக்கிறது.
வாஷிங்டன் :
அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், ஜி-20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக செப்டம்பர் மாதம் இந்தியா வருகிறார்.
தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க துணை மந்திரி டொனால்டு லு நேற்று செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்திய-அமெரிக்க உறவில் இந்த ஆண்டு ஒரு மிகப் பெரிய ஆண்டாக அமைந்திருக்கிறது.
ஜி-20 வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தை கடந்த மாதம் இந்தியா சிறப்பாக நடத்தியதை நாங்கள் பாராட்டுகிறோம்.
இந்த ஆண்டு அதுபோல மேலும் பல ஜி-20 கூட்டங்களில் ஈடுபாட்டுடன் பங்கேற்பதை அமெரிக்கா எதிர்நோக்கி இருக்கிறது. அதில், வருகிற செப்டம்பரில் புதுடெல்லியில் நடைபெறும் ஜி-20 தலைவர்கள் உச்சி மாநாடும் அடங்கும்.
அதில் பங்கேற்பதற்காக அதிபர் ஜோ பைடன் செப்டம்பர் மாதம் இந்தியா செல்கிறார். அதை அவர் ஆவலோடு எதிர்நோக்கி உள்ளார். அது இந்தியாவுக்கு அவரின் முதல் பயணமாக இருக்கும்.
இந்தியாவின் ஜி-20 தலைமை, உலகில் ஒரு நன்மை பயக்கும் சக்தியாக அதன் திறனை விரிவாக்கி இருக்கிறது.
இந்தியா உள்ளிட்ட 'குவாட்' உறுப்பினர் நாடுகளில் நடக்கும் ஜி-20 கூட்டங்கள் போன்றவை, நமது நாடுகளை மேலும் நெருக்கமாக்கும் வாய்ப்பை உருவாக்கி இருக்கின்றன.
குவாட் நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் சந்திப்பை இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சிறப்பாக நடத்தியதையும் குறிப்பிட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- கருக்கலைப்பு மாத்திரையை, மீண்டும் தற்காலிகமாக பயன்படுத்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
- கீழமை நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்டு வந்த கருக்கலைப்பு மாத்திரையை, மீண்டும் தற்காலிகமாக பயன்படுத்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அந்நாட்டில் பெண்கள் கருகலைப்பு செய்வது, நீண்டகாலமாக நீடித்து வந்தநிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மாத்திரையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வழக்கும் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவில் கலைக்கலைப்பு மாத்திரையை பயன்படுத்த தடை விதித்தும் கட்டுப்பாடு விதித்தும் கீழமை நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்மூலம், அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரை மீண்டும் தற்காலிகமாக பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.
- சூறைக்காற்றால் பல வீடுகள் மற்றும் அலுவலகங்கள் சேதம் அடைந்தன.
- 34 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பல நகரங்கள் இருளில் மூழ்கியது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தில் உள்ள பல பகுதிகள் நேற்று முன்தினம் தொடர்ச்சியாக 8 முறை கடுமையான சூறைக்காற்றை சந்தித்தன. இதனால் பெய்த கனமழையால் அங்கு ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. இதனால் 34 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பல நகரங்கள் இருளில் மூழ்கியது.
மேலும் இந்த சூறைக்காற்றால் பல வீடுகள் மற்றும் அலுவலகங்கள் சேதம் அடைந்தன. இதில் மேற்கூரை இடிந்து விழுந்து அங்கிருந்த 3 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர். எனவே மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு அவர்களை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இதற்கிடையே ஓக்லஹோமா மாகாணத்தில் உள்ள கிளீவ்லேண்ட், லிங்கன், மெக்லைன் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அவசர நிலை அறிவித்து அந்த மாகாண கவர்னர் கெவிட் ஸ்டிட் உத்தரவிட்டார்.
- மும்பையில் 2008-ம் ஆண்டு நடந்த தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர்.
- இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக ராணா உள்ளார்.
வாஷிங்டன் :
மும்பையில் 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் குண்டுகளை வெடித்தும், துப்பாக்கிகளால் சுட்டும் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக பாகிஸ்தானைப் பூர்விகமாக கொண்டுள்ள கனடா தொழில் அதிபர் ராணா (வயது 62) உள்ளார். அவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு, அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அவரை இந்தியாவிடம் ஒப்படைப்பது தொடர்பாக அமெரிக்கா தாக்கல் செய்த வழக்கு விசாரணை, லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த நிலையில், கோர்ட்டு உத்தரவின்பேரில், அரசு தரப்பும், குற்றவாளி தரப்பும் வழக்கு விவரங்களை தெரிவித்து, தற்போதைய நிலையை விவாதிப்பது தொடர்பான சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ராணா ஒரு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டு நீதிபதி ஜாக்குலின் சூல்ஜியன் விசாரித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான தீர்ப்பு 30 நாளில் வந்து விடும் என்பதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- நேற்று வடக்கு கலிபோர்னியா போலீசார் மோதலில் ஈடுபட்ட 17 சீக்கியர்களை கைது செய்தனர்.
- கும்பலிடம் இருந்து பல்வேறு பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் உள்ள வடக்கு கலிபோர்னியாவில், வார இறுதி நாளில் 2 சீக்கிய குழுவினர் மோதலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக வடக்கு கலிபோர்னியா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மோதலில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று வடக்கு கலிபோர்னியா போலீசார் மோதலில் ஈடுபட்ட 17 சீக்கியர்களை கைது செய்தனர். இவர்களில் 2 பேர் இந்தியாவில் நடந்த கொலை மற்றும் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள் ஆவர்.
இந்த கும்பலிடம் இருந்து போலீசார் ஏ.ஆர். 15 மற்றும் ஏ.கே.47 துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், மிஷின் துப்பாக்கிகள் உள்பட பல்வேறு பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறும்போது, கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் இந்தியாவில் பல கொலைகளில் தேடப்படும் முக்கிய குற்றவாளிகள். கைது செய்யப்பட்ட அனைவரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
- நியூயார்க் நகரில் 3 லட்சத்து 40 ஆயிரம் மில்லினியர்கள் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- 2-வது இடத்தில் ஜப்பானின் டோக்கியோ நகரம் உள்ளது.
நியூயார்க்:
உலக பணக்கார நகரங்களின் பட்டியலை குளோபல் வெல்த் டிராக்கர் ஹென்லி அண்ட் பார்ட்னர் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. இங்கு 3 லட்சத்து 40 ஆயிரம் மில்லினியர்கள் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளதாக கூறப்பட்டு இருக்கிறது.
2-வது இடத்தில் ஜப்பானின் டோக்கியோ நகரம் உள்ளது. இங்கு 2 லட்சத்து 90 ஆயிரத்து 300 மில்லினியர்கள் வசிக்கிறார்கள். 3-வது இடம் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு கிடைத்துள்ளது. இங்கு 2 லட்சத்து 85 ஆயிரம் மில்லினியர்கள் வசிப்பதாக தெரியவந்துள்ளது.
உலக நாடுகளில் உள்ள மொத்தம் 97 நகரங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பியா உள்ளிட்ட நாடுகளின் நகரங்கள் இடம் பிடித்து இருக்கின்றன. அதிகபட்சமாக அமெரிக்காவைச் சேர்ந்த நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ, தி பே ஏரியா ஆகிய 4 நகரங்களும், அடுத்ததாக சீனாவின் பீஜிங், சாங்காய் ஆகிய நகரங்களும் இடம்பிடித்துள்ளன.
இந்த பணக்கார நகரங்களின் பட்டியலில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது. மும்பை, டெல்லி, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய 4 நகரங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- 2017ம் ஆண்டு 60 பேரை கொண்டு பெர்ரீசில் ஸ்கை டைவிக் செய்து உலக சாதனை படைத்தது.
- 2018ம் ஆண்டில் 75 பேரை கொண்டு முந்தைய சாதனையை முறியடித்து ஸ்கை டைவிங் செய்யப்பட்டது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த ஸ்கை டைவிங் போட்டியில் 60 வயது மேல் உள்ள 100க்கும் மேற்பட்ட முதியவர்கள் பங்கேற்று உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஸ்கைடைவர்ஸ் ஓவர் சிக்ஸ்டி என பெயரிடப்பட்ட இந்த குழு, நடுவானில் உருவாக்கம் செய்து இரண்டு உலக சாதனைகளை முறியடித்தது.
இந்நிலையில், பயிற்சியை ஏற்பாடு செய்த அமைப்பின் படி, 101 முதியவர்கள் தங்களின் நான்காவது முயற்சியில் வெற்றிகரமாக ஒரு ஸ்னோஃப்ளேக் உருவாக்கத்தை உருவாக்கினர்.
இந்த குழு ஏற்கனவே இரண்டு உலக சாதனைகை படைத்துள்ளது. முதலில் கடந்த 2017ம் ஆண்டு 60 பேரை கொண்டு பெர்ரீசில் ஸ்கை டைவிக் செய்து உலக சாதனை படைத்தது. இதையடுத்து, 2018ம் ஆண்டு சிக்காகோவில் 75 பேரை கொண்டு முந்தைய சாதனையை முறியடித்து ஸ்கை டைவிங் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த இரண்டு சாதனைகளையும் முறியடிக்கும் வகையில் கடந்த 15ம் தேதி 101 முதியவர்களை கொண்டு ஸ்கை டைவிக் செய்தது. இவர்கள் அனைவரும் 60 வயது முதல் 78 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
- விபத்து ஏற்பட்ட 4 தளம் கொண்ட அந்த கட்டிடம் சரிந்து உள்ளது.
- கட்டிடம் சரிந்தபோது அப்பகுதியில் மற்ற கட்டிடங்களும் குலுங்கின. இதனால் அங்கிருந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மான்ஹாட்டனில் ஒரு கட்டிடத்தில் கார்களை நிறுத்தும் பகுதி திடீரென்று இடிந்து விழுந்தது. கீழ் தளத்தின் மீது விழுந்ததில் கார்கள் கடும் சேதமடைந்தன.
கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் காயம் அடைந்தனர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இவர்கள் அனைவரும் தொழிலாளர்கள் என்பது தெரிய வந்தது. விபத்து ஏற்பட்ட 4 தளம் கொண்ட அந்த கட்டிடம் சரிந்து உள்ளது. இதனால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அங்கு மீட்பு பணியில் ரோபோக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இக்கட்டிடம் சரிந்தபோது அப்பகுதியில் மற்ற கட்டிடங்களும் குலுங்கின. இதனால் அங்கிருந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.






