என் மலர்

  உலகம்

  அமெரிக்காவின் நியூயார்க்கில் கார் பார்க்கிங் பகுதி இடிந்து ஒருவர் பலி
  X
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

  அமெரிக்காவின் நியூயார்க்கில் கார் பார்க்கிங் பகுதி இடிந்து ஒருவர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விபத்து ஏற்பட்ட 4 தளம் கொண்ட அந்த கட்டிடம் சரிந்து உள்ளது.
  • கட்டிடம் சரிந்தபோது அப்பகுதியில் மற்ற கட்டிடங்களும் குலுங்கின. இதனால் அங்கிருந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

  அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மான்ஹாட்டனில் ஒரு கட்டிடத்தில் கார்களை நிறுத்தும் பகுதி திடீரென்று இடிந்து விழுந்தது. கீழ் தளத்தின் மீது விழுந்ததில் கார்கள் கடும் சேதமடைந்தன.

  கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் காயம் அடைந்தனர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இவர்கள் அனைவரும் தொழிலாளர்கள் என்பது தெரிய வந்தது. விபத்து ஏற்பட்ட 4 தளம் கொண்ட அந்த கட்டிடம் சரிந்து உள்ளது. இதனால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அங்கு மீட்பு பணியில் ரோபோக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

  இக்கட்டிடம் சரிந்தபோது அப்பகுதியில் மற்ற கட்டிடங்களும் குலுங்கின. இதனால் அங்கிருந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

  Next Story
  ×