search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமானம் தீ"

    • விமான நிலையம் அருகே வந்தபோது விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது.
    • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நைரோபி:

    கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கென்யா. இந்நாட்டின் மலிண்டி மாகாணத்தில் நேற்று சிறிய ரக விமானம் பறந்துகொண்டிருந்தது அந்த விமானத்தில் 3 பேர் பயணித்தனர்.

    மலிண்டி விமான நிலையம் அருகே வந்தபோது விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால், விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் மலிண்டி-மாம்பசா நெடுஞ்சாலையில் விழுந்து தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் சாலையில் பைக்கில் சென்ற பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். அதேவேளை, விமானத்தில் பயணித்த உள்பட விமானி உள்பட 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

    தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விமானம் ஒன்றில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
    • விமானம் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

    டெல்லி விமான நிலையத்தில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை சேர்ந்த விமானம் ஒன்றில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

    அப்போது ஒரு என்ஜினில் திடீரென்று தீப்பிடித்தது. தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தீயணைப்பு கருவி மூலம் தீயை அணைக்க முயன்றனர்.

    மேலும் தீயணைப்பு படையினர் அங்கு வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட பணியாளர்கள் மற்றும் விமானம் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானமான போயிங் 737 விமானம் கொலம்பஸ்சில் இருந்து பீனிக்ஸ் நகருக்கு புறப்பட்டு சென்றது.
    • விமானம் சென்று கொண்டிருந்த போது பறவை ஒன்று விமானத்தின் இறக்கையில் மோதியது.

    அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானமான போயிங் 737 விமானம் கொலம்பஸ்சில் இருந்து பீனிக்ஸ் நகருக்கு புறப்பட்டு சென்றது.

    விமானம் சென்று கொண்டிருந்த போது பறவை ஒன்று விமானத்தின் இறக்கையில் மோதியது. இதனால் விமானத்தின் என்ஜின் இருக்கும் பகுதியின் ஒருபுறத்தில் இருந்து புகை வந்துள்ளது.

    சிறிது நேரத்தில் தீ பிடிக்க தொடங்கியது. இதையடுத்து உடனடியாக விமானம் தரை இறக்கப்பட்டது. இதனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறக்கி மற்றொரு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் விமானத்தில் தீ பிடித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    ×