என் மலர்
நீங்கள் தேடியது "உலக பணக்கார நகரம்"
- நியூயார்க் நகரில் 3 லட்சத்து 40 ஆயிரம் மில்லினியர்கள் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- 2-வது இடத்தில் ஜப்பானின் டோக்கியோ நகரம் உள்ளது.
நியூயார்க்:
உலக பணக்கார நகரங்களின் பட்டியலை குளோபல் வெல்த் டிராக்கர் ஹென்லி அண்ட் பார்ட்னர் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. இங்கு 3 லட்சத்து 40 ஆயிரம் மில்லினியர்கள் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளதாக கூறப்பட்டு இருக்கிறது.
2-வது இடத்தில் ஜப்பானின் டோக்கியோ நகரம் உள்ளது. இங்கு 2 லட்சத்து 90 ஆயிரத்து 300 மில்லினியர்கள் வசிக்கிறார்கள். 3-வது இடம் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு கிடைத்துள்ளது. இங்கு 2 லட்சத்து 85 ஆயிரம் மில்லினியர்கள் வசிப்பதாக தெரியவந்துள்ளது.
உலக நாடுகளில் உள்ள மொத்தம் 97 நகரங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பியா உள்ளிட்ட நாடுகளின் நகரங்கள் இடம் பிடித்து இருக்கின்றன. அதிகபட்சமாக அமெரிக்காவைச் சேர்ந்த நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ, தி பே ஏரியா ஆகிய 4 நகரங்களும், அடுத்ததாக சீனாவின் பீஜிங், சாங்காய் ஆகிய நகரங்களும் இடம்பிடித்துள்ளன.
இந்த பணக்கார நகரங்களின் பட்டியலில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது. மும்பை, டெல்லி, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய 4 நகரங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.






