என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • 2007-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பழைய ஆப்பிள் ஐ-போன் ஏலத்தில் விடப்பட்டது.
    • போனில் உள்ள சிறப்பம்சங்கள் தான் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போக காரணம் என தெரிவித்துள்ளனர்.

    ஆப்பிள் ஐ-போன்களின் விலை வழக்கமாகவே மற்ற போன்களின் விலையை விட அதிகம் என கேள்விபட்டிருப்போம். அதே நேரம் பழைய மாடல் ஆப்பிள் ஐ-போன் ஒன்று ரூ.1.5 கோடிக்கு ஏலம் போய் உள்ளது. 2023-ம் ஆண்டிற்கான கோடை கால பிரீமியர் ஏலத்தை எல்.சி.ஜி. நிறுவனம் நடத்தியது.

    இதில் 2007-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பழைய ஆப்பிள் ஐ-போன் ஏலத்தில் விடப்பட்டது. ஆரம்ப விலையாக 10 ஆயிரம் அமெரிக்க டாலர் அறிவிக்கப்பட்ட நிலையில், ஏலம் முடிவில் அந்த ஐ-போன் 1 லட்சத்து 90 ஆயிரத்து 322 அமெரிக்க டாலருக்கு விற்பனை ஆகி உள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.56 கோடி ஆகும். இந்த போனில் உள்ள சிறப்பம்சங்கள் தான் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போக காரணம் என தெரிவித்துள்ளனர்.

    • வெப்ப அலைகள் நிகழ்வுகள் தொடர்ந்து தீவிரமடையும்.
    • நீடித்த வெப்பத்தில் இருந்து மீள முடியாது. இது மாரடைப்பு மற்றும் இறப்புகளுக்கு வழி வகுக்கிறது.

    நியூயார்க்:

    ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் வெயில் சுட்டெரித்து வருகிறது. வெப்ப அலை காரணமாக மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். அவர்கள் கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கு படையெடுத்து வருகிறார்கள்.

    வெப்ப அலையால் பலருக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

    மேலும் தெற்கு ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் காட்டு தீ பரவி வருகிறது. இதில் கிரீஸ் நாட்டின் முக்கிய பகுதியும் அடங்கும்.

    ஸ்பெயினின் தெற்கு பகுதியில் 111.2 டிகிரி வெப்பம் பதிவானது. வெப்ப அலை காரணமாக இத்தாலியில் 16 நகரங்களுக்கு அந்நாட்டு அரசு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த நிலையில் வெப்ப அலைகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பின் மூத்த வெப்ப ஆலோசகர் ஜான்நேர்ன் கூறியதாவது:-

    வெப்ப அலைகள் நிகழ்வுகள் தொடர்ந்து தீவிரமடையும். மேலும் கடுமையான வெப்ப அலைகளை எதிர்கொள்ள உலக மக்கள் தயாராக வேண்டும். அதிகபட்ச பகல் வெப்ப நிலையை காட்டிலும் இரவில் குறைந்தபட்ச வெப்ப நிலை அதிகமாக இருந்தது. மீண்டும் மீண்டும் அதிக இரவு நேர வெப்ப நிலை, மனித ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது. ஏனென்றால் நீடித்த வெப்பத்தில் இருந்து மீள முடியாது. இது மாரடைப்பு மற்றும் இறப்புகளுக்கு வழி வகுக்கிறது.

    வளர்ந்து வரும் நகர மயமாக்கல் அதிக வெப்ப உச்சநிலை, வயதான மக்கள்தொகை ஆகியவற்றுக்கு மத்தியில் சுகாதார ஆபத்து வேகமாக வளர்ந்து வருகிறது.

    வெப்ப அலைகளை தடுக்க கார்பன் எரிபொருட்களை நிறுத்த வேண்டும். அனைத்தையும் மின்மயமாக்க வேண்டும் என்றார். வடஅமெரிக்காவில் இருந்து ஐரோப்பா, ஆசியா வரை வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வெப்ப அலைக்கு ஐரோப்பியாவில் கடந்த 2003-ம் ஆண்டு 70 ஆயிரம் பேரும், கடந்த ஆண்டு 62 ஆயிரம் பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • படிப்படியாக மாணவனின் நிலைமை மோசமாகி 4ம் நிலை சிறுநீரக செயலிழப்புக்கு வழி வகுத்தது.
    • அந்த ஆசிரியருக்கு நாங்கள் கடன்பட்டிருக்கிறோம் என அவர்கள் உணர்ச்சி பொங்க தெரிவித்தனர்.

    அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் 15-வயதான ரோமன் மெக்கோர்மிக் என்ற மாணவன், ப்ரான்கியோ ஓடோரீனல் சிண்ட்ரோம் (branchiootorenal syndrome) எனப்படும் மரபணு கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தான். இதனால் அவன் திசுக்களின் வளர்ச்சி மற்றும் காது, சிறுநீரகம் போன்ற உடலுறுப்புகளில் பாதிப்புகள் ஏற்பட்டன. அவனால் பிற சிறுவர்களை போன்று உண்ணவோ, விளையாடவோ முடியாமல் இருந்து வந்தது. படிப்படியாக அவனது நிலைமை மோசமாகி  சிறுநீரகம் செயலிழந்தது.

    சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு கொடையாளி கிடைக்கும் வரை அவனுக்கு டயாலிசிஸ் எனப்படும் சிறுநீரக சுத்திகரிப்பு தொடர்ந்து செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இரண்டு வருடங்களாக கொடையாளியை அவன் குடும்பத்தினர் தேடி வந்தும் அவனுக்கு பொருத்தமான சிறுநீரக கொடையாளி கிடைக்கவில்லை.

    இந்நிலையில் டொலேடோ நகரத்திலுள்ள அச்சிறுவன் படிக்கும் விட்மர் உயர்நிலை பள்ளியின் கணித ஆசிரியர் எட்டி மெக்கார்த்தி அவனுக்கு சிறுநீரகம் வழங்க முன்வந்துள்ளார். அவரது சிறுநீரகம் அந்த சிறுவனுக்கு பொருந்துமா என்பதை அறிந்து கொள்ள அவர் தானாக முன்வந்து பரிசோதனை செய்து கொண்டுள்ளார். பிறகு அவர் தகுதியானவர் என்பதை தெரிந்து கொண்டு அறுவை சிகிச்சைக்கான நாள் குறிக்கப்பட்டவுடன் அந்த சிறுவனின் குடும்பத்தாரிடம் அவர் செய்தியை தெரிவித்தார்.

    "என் வகுப்பில் படிக்கும் நல்ல மாணவன் அவன். அவனுக்கு உதவலாம் என முயற்சி செய்தேன்" என மெக்கார்த்தி கூறினார்.

    இதனையறிந்த மாணவனும் அவன் குடும்பத்தாரும் மிகுந்த மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளனர். அந்த ஆசிரியருக்கு நாங்கள் கடன்பட்டிருக்கிறோம் என அவர்கள் உணர்ச்சி பொங்க தெரிவித்தனர்.

    டொலேடோவிலிருந்து சுமார் 1 மணி நேர பயண தூரத்தில் உள்ள ஆன் ஆர்பர் பகுதியின் மிசிகன் பல்கலைகழக மருத்துவமனையில் அந்த மாணவனுக்கு நாளை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெறவிருக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குழந்தையின் சகோதரியான ஒரு வயது குழந்தை தலையில் காயம் அடைந்து உயிரிழந்தது.
    • வீட்டில் பாதுகாப்பற்ற வகையில் கைத்துப்பாக்கியை வைத்துள்ளனர் என்றும் அதை குழந்தை எடுத்த போது தவறுதலாக வெடித்தது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    அமெரிக்காவின் சான்டியாகோ கவுண்டியில் உள்ள பால்ப்ரூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 3 வயது குழந்தை ஒன்று அங்கிருந்த துப்பாக்கியை எடுத்து விளையாடியுள்ளது.

    அப்போது துப்பாக்கி தவறுதலாக சுட்டது. இதில் அந்த குழந்தையின் சகோதரியான ஒரு வயது குழந்தை தலையில் காயம் அடைந்து உயிரிழந்தது.

    வீட்டில் பாதுகாப்பற்ற வகையில் கைத்துப்பாக்கியை வைத்துள்ளனர் என்றும் அதை குழந்தை எடுத்த போது தவறுதலாக வெடித்தது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    • இந்திய வம்சாவளியினர் வீட்டின் பெல்லை அழுத்திய பின் சிறுவர்கள் ஓட்டம்
    • காரில் துரத்திச் சென்று விபத்துக்குள்ளாக்கியதில் 3 சிறுவர்கள் பலி

    1985-ம் வருடம் வெளிவந்த "பூவே பூச்சூட வா" எனும் திரைப்படத்தில் சில சிறுவர்கள், ஏதாவது ஒரு வீட்டில் அழைப்பு மணியை அழுத்தி விட்டு, அவ்வீட்டின் உள்ளே இருந்து யாரேனும் வெளியே வந்தால், உடனே ஓடிவிடும் "டோர்பெல் டிட்ச்" (Doorbell Ditch) எனப்படும் சுட்டித்தனத்தில் ஈடுபடுவார்கள்.

    அமெரிக்காவில் ஜனவரி 19, 2020 அன்று நடைபெற்ற அதே போன்றதொரு சம்பவத்தில் விளையாட்டுத்தனமான ஈடுபட்ட 3 சிறுவர்கள் பரிதாபமாக பலியானார்கள்.

    இச்சம்பவத்தை துப்பு துலக்கிய கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்து துறை தெரிவித்திருக்கும் தகவல்களின்படி, இந்த 3 சிறுவர்களும் அவர்களில் ஒரு சிறுவன் வீட்டில் இரவு தங்கியிருக்கின்றனர். அப்போது அதில் ஒருவன் டோர்பெல் டிட்ச் (Doorbell Ditch) விளையாடலாம் என கூறியிருக்கிறான். சம்மதித்த அனைத்து சிறுவர்களும் அருகிலிருந்த மோட்ஜெஸ்கா ஸம்மிட் சாலையில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்று அழைப்பு மணியை அழுத்தி விட்டு தங்கள் காருக்கு வேகமாக திரும்பியிருக்கின்றனர்.

    அவ்வீட்டில் தங்கியிருந்த கலிபோர்னியா பகுதியை சேர்ந்த இந்திய வம்சாவளியினரான அனுராக் சந்திரா (45), கோபமடைந்து காரில் தப்பிய அந்த சிறுவர்களை தனது காரில் துரத்தி சென்றுள்ளார்.

    ஸ்குவா மலை சாலையில் தனது காரின் வேகத்தை மணிக்கு 100 கி.மீ.க்கும் மேல் அதிகப்படுத்தி சிறுவர்களின் கார் மீது மோதினார். இதில் காரிலிருந்த 6 சிறுவர்களில் 16 வயதுடைய டேனியல் ஹாகின்ஸ், ஜேக்கப் இவாஸ்கு மற்றும் டிரேக் ரூயிஸ் ஆகிய 3 சிறுவர்கள் அங்கேயே பலியானார்கள். 18, 14, 13 வயதுடைய மீதம் 3 பேர் காயத்துடன் தப்பித்தனர்.

    இதனையடுத்து ஜனவரி 20, 2020 முதல் ரிவர்ஸைட் பகுதியில் உள்ள ராபர்ட் பிரெஸ்லி தடுப்புக்காவல் மையத்தில் அனுராக் சந்திரா காவலில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மேல் விசாரணை தீர்ப்பு கடந்த 14-ந்தேதி வழங்கப்பட்டது.

    ரிவர்ஸைட் கவுண்டி பகுதியின் நீதிமன்றத்தில், நடுவர் குழு குற்றவாளி என ஒருமித்த கருத்தை தெரிவித்தவுடன், சந்திராவிற்கு பரோலில் வெளி வர முடியாதபடி ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

    சில சிறுவர்களின் விளையாட்டுத்தனத்தாலும், ஒருவரின் கோபத்தாலும் அனைவரின் வாழ்வும் பாதிக்கப்பட்டிருப்பதாக அங்குள்ளவர்கள் வருத்தத்துடன் பேசி வருகின்றனர்.

    • பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தார்.
    • சுமார் 50 கலைப்பொருட்கள் இந்து, ஜெயின் மற்றும் இஸ்லாம் மதத்துடன் தொடர்புடைவை என்றும் மீதம் கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையிலானது.

    நியூயார்க்:

    இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சாமி சிலைகள் உள்ளிட்ட பழங்கால கலைப்பொருட்களை மீட்டு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

    இந்த நிலையில் 105 பழங்கால கலைப்பொருட்களை அமெரிக்கா இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. அந்த பொருட்கள் நியூயார்க்கில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண் ஜித்சிங் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.

    சமீபத்தில் பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தார். இதையடுத்து இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால கலைப்பொருட்களை இந்தியாவிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதன்படி அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 105 இந்திய பழங்கால பொருட்கள் திரும்ப வழங்கப்பட்டு உள்ளதாக இந்திய தூதர் தரண்ஜித்சிங் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்திய மக்களை பொறுத்தவரை பழங்கால பொருட்கள் வெறும் கலைப் பகுதிகள் மட்டுமல்லாமல் அவர்களின் வாழ்க்கை பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். கலைப்பொருட்களை திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க மான்ஹாட்டன் மாவட்ட நிர்வாகம், சிலை தடுப்பு பிரிவு, உள்நாட்டு பாதுகாப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பழங்கால பொருட்கள் விரைவில் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    இதில் கிழக்கு இந்தியாவில் இருந்து 47 கலைப்பொருட்கள், தென்னிந்தியாவில் இருந்து 27 பழங்கால பொருட்கள், மத்திய இந்தியாவில் இருந்து 22 கலைப்பொருட்கள், வட இந்தியாவில் இருந்து 6 பொருட்கள் மற்றும் மேற்கு இந்தியாவில் இருந்து 3 கலைப்பொருட்கள் அடங்கும் என்றார். மீட்கப்பட்ட பழங்கால பொருட்கள் கி.பி.2 முதல் 3-ம் நூற்றாண்டு மற்றும் கி.பி. 18-19-ம் நூற்றாண்டு வரையிலான கால கட்டங்களை சேர்ந்தவை ஆகும். டெரகோட்டா, கல், உலோகம், மரத்தால் செய்யப்பட்டவை.

    சுமார் 50 கலைப்பொருட்கள் இந்து, ஜெயின் மற்றும் இஸ்லாம் மதத்துடன் தொடர்புடைவை என்றும் மீதம் கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையிலானது என்றும் தெரிவிக்கப்பட்டது.

    • ஆப்கானிஸ்தான் மக்களுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்துள்ளது
    • பாகிஸ்தானில் அவர்கள் பயங்கரவாத செயலில் ஈடுபட்டதாக அறிகுறி இல்லை

    ஆப்கானிஸ்தானில் இருந்து ஏராளமானோர் பாகிஸ்தான் சென்று அகதிகளாக உள்ளனர். அவர்கள் பாகிஸ்தான் அல்லது பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதற்கான எந்த அறிகுறியையும் நாங்கள் பார்க்கவில்லை என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில் ''பாதுகாப்பான இடத்தை தேடும் பல ஆப்கானிஸ்தானியர்களுக்கு, பாகிஸ்தான் வழங்கிய நம்பமுடியாத வகையிலான மனப்பான்மைக்கு நன்றியுள்ளவராக இருக்கிறோம். பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான சவால்களில் பாகிஸ்தானுடன் தொடர்ந்து பணியாற்றுவோம்.

    பயங்கரவாத எதிர்ப்புத் திறனை மேம்படுத்துவதற்கான திறனில் தீவிரமாக அக்கறை செலுத்த இருக்கிறோம் என்பதை அதிபர் ஜோ பைடன் தெளிவாக தெரிவித்துள்ளார்'' என்றார்.

    • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான கூட்டம் இன்று நடக்கிறது.
    • இந்தக் கூட்டத்திற்கு பிரிட்டன் வெளியுறவுத் துறை செயலாளர் ஜேம்ஸ் தலைமை தாங்குகிறார்.

    நியூயார்க்:

    செயற்கை நுண்ணறிவு (AI) ஏற்படுத்தப் போகும் தாக்கம் குறித்து உலகெங்கிலும் பல விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

    வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உலக பொருளாதாரத்துக்கும், சர்வதேச பாதுகாப்புக்கும் எவ்வாறு பயன்படுத்துவது என்று பல்வேறு உலக நாடுகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.

    இந்நிலையில், நியூயார்க் நகரில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான முதல் கூட்டம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இன்று நடைபெற உள்ளது.

    இந்தக் கூட்டத்திற்கு பிரிட்டன் வெளியுறவுத் துறை செயலாளர் ஜேம்ஸ் தலைமை தாங்குகிறார். மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் நன்மை, தீமைகள் குறித்தும் முக்கிய விவாதம் நடைபெற உள்ளது.

    • 79 வயதான விமானியால் தொடர்ந்து விமானத்தை இயக்க முடியாத நிலை
    • விமான ஓடுபாதையில் இருந்து விலகி தரையில் மோதி விமானம் தரையிறங்கிய

    அமெரிக்காவின் நியூயார்க், வெஸ்ட்செஸ்டர் கவுன்ட்டியில் இருந்து குட்டி விமானம் ஒன்று சனிக்கிழமை மதியம் புறப்பட்டது. இந்த விமானத்தை ஓட்டிய விமானி, மற்றும் பயணம் செய்த பயணிகள் அனைவரும் கனெக்டிகட் இடத்தை சேர்ந்தவர்கள்.

    விமானம் மசாசுசெட்ஸ் வெஸ்ட் டிஸ்பர்ரி மர்தாஸ் வினேயார்டு விமான நிலையம் அருகே பறந்தபோது, திடீரென விமானிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    துரிதமாக செயல்பட்ட பயணி ஒருவர் விமானத்தை தரையிறக்க முயன்றார். இருந்தாலும் அவரால் விமான நிலையத்தின் ஓடுபாதையில் விமானத்தை தரையிறக்க முடியவில்லை. அருகில் உள்ள இடத்தில் விமானத்தை மோதி தரையிறக்கினார். இதனால் விமானத்தின் இடது பக்கம் இறக்கை உடைந்து சேதம் அடைந்தது.

    ஆனால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவிலலை. 79 வயதான விமானி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். விமானத்தில் பயணம் செய்தவர்கள் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

    • பிஎஸ்ஜி அணியுடன் எற்பட்ட பிரச்சினை காரணமாக அந்த அணியில் இருந்து விலகினார்.
    • மெஸ்ஸி தங்கள் அணியில் இணைந்ததை இன்டர் மியாமி கிளப் டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளது.

    அமெரிக்கா:

    உலகின் சிறந்த வீரரும் , அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான லியோனல் மெஸ்ஸி பிரான்சை சேர்ந்த பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) அனிக்காக கடந்த 2 ஆண்டுகளாக விளையாடி வந்தார். பிஎஸ்ஜி அணியுடன் எற்பட்ட பிரச்சினை காரணமாக அந்த அணியில் இருந்து விலகினார். அவர் எந்த அணியில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு உலக கால்பந்து ரசிகர்களிடையே எழுந்தது.

    இதற்கிடையே, இன்டர் மியாமி அணியை தேர்வு செய்தார் மெஸ்ஸி. அமெரிக்காவின் இன்டர் மியாமி அணிக்காக அவர் விளையாட உள்ளார்.

    இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள இன்டர் மியாமி கால்பந்தாட்ட கிளப் அணியில் மெஸ்ஸி இணைந்துள்ளது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மெஸ்ஸி தங்கள் அணியில் இணைந்ததை இன்டர் மியாமி கிளப் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது.

    • இந்திய துணை தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
    • சான்பிரான்சிஸ்கோவில் இந்திய துணை தூதரகம் முன் இந்திய வம்சாவளியினர் அமைதி பேரணி நடத்தினர்.

    வாஷிங்டன்:

    இந்தியாவில் சீக்கியர்கள் அதிகம் வாழும் பஞ்சாப் மாநிலத்தை காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடாக அறிவிக்க வேண்டுமென பல்வேறு பிரிவினைவாத அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

    இந்தப் பிரிவினைவாத அமைப்புகளின் ஆதரவாளர்கள் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் இந்தியாவுக்கு எதிரான விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய துணை தூதரகம் மீது கடந்த 2-ம் தேதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி, தீ வைத்தனர்.

    இந்நிலையில், இச்சம்பவத்தைக் கண்டித்தும், இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தும் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய துணை தூதரகம் முன் நூற்றுக்கணக்கான இந்திய வம்சாவளியினர் அமைதி பேரணி நடத்தினர்.

    தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது ஒரு பயங்கரவாத செயல். வன்முறைக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

    • அமெரிக்காவின் ஜார்ஜியா நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 4 பேர் பலியாகினர்.
    • துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகப்படும் நபர் தலைமறைவாக உள்ளார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் அட்லாண்டாவின் தெற்கே ஒரு சிறிய சமூகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டனர் என ஜார்ஜியாவில் உள்ள மாவட்ட அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    ஹென்றி கவுண்டி அதிகாரிகளின் அறிக்கையின்படி, அட்லாண்டாவிற்கு தெற்கே சுமார் 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹாம்ப்டனில் உள்ள ஒரு துணைப்பிரிவில் நேற்று காலை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை போலீசார் இன்னும் விசாரித்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளது.

    துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் இறந்துவிட்டார்கள் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும் என மாவட்ட அரசாங்க செய்தித் தொடர்பாளர் மெலிசா ராபின்சன் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்புடைய சந்தேக நபர் இன்னும் தலைமறைவாக உள்ளார் என தகவல்கள் வெளியாகின.

    ×