என் மலர்
நீங்கள் தேடியது "லயோனல் மெஸ்ஸி"
- இந்தியாவுக்கு 3 நாள் பயணமாக அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லயோனல் மெஸ்ஸி வருகை தந்தார்.
- நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சதத்ரு தத்தாவை போலீசார் கைது செய்தனர்.
கொல்கத்தா:
இந்தியாவுக்கு 3 நாள் பயணமாக வருகை தந்த அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லயோனல் மெஸ்ஸி கொல்கத்தா, ஐதராபாத், மும்பை, டெல்லியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் உற்சாகமாக கலந்து கொண்டார். இதில் கொல்கத்தா சால்ட்லேக் ஸ்டேடியத்தில் நடந்த நிகழ்ச்சியில் மட்டும் பெரும் குளறுபடி ஏற்பட்டு விட்டது.
ரூ.15 ஆயிரம் வரை கட்டணம் செலுத்தி ஸ்டேடியத்தில் குழுமியிருந்த ரசிகர்கள், 10-15 நிமிடங்களிலேயே மெஸ்ஸி அங்கிருந்து கிளம்பியதால் அவரை சரியாக பார்க்க முடியாத ஆத்திரத்தில் மைதானத்தில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். பல மணிநேரம் போராடி போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நடந்த சம்பவத்துக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்டார்.
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த சதத்ரு தத்தாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 'மைானத்துக்குள் மெஸ்ஸியை சூழ்ந்து கொண்டு அவரை தொடுவதும், கட்டியணைப்பதும் அவருக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியது. மெஸ்ஸியின் வெளிநாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் முன்கூட்டியே எச்சரித்தும் அதையும் மீறி பலர் அவ்வாறு நடந்து கொண்டனர். மேலும் மைதானத்தில் 150 பேருக்கு மட்டுமே 'பாஸ்' வழங்கப்பட்ட நிலையில், செல்வாக்கு மிக்க நபரின் தலையீட்டால் அதை மூன்று மடங்கு உயர்த்த வேண்டியதாகி விட்டது. அதன் பிறகே பாதுகாப்பும் சீர்குலைந்து போனது. இதனால் தான் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பாகவே மெஸ்ஸி வெளியேறினார்.
இந்திய பயணத்துக்காக மெஸ்ஸிக்கு ரூ.89 கோடி வழங்கப்பட்டது. மேலும் ரூ.11 கோடி அரசுக்கு வரியாக செலுத்தப்பட்டது. இவற்றில் கணிசமான தொகை ஸ்பான்சர்ஷிப் மற்றும் டிக்கெட் கட்டணம் மூலம் வசூலிக்கப்பட்டது' என தத்தா போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அத்துடன் தத்தாவின் வங்கி கணக்கில் இருந்த ரூ.20 கோடி முடக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
- மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் அரங்கேறும் 7 பேர் ஆடும் கால்பந்து போட்டியில் களம் காண்கிறார்.
- 15-ந்தேதி டெல்லி செல்லும் அவர் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடுகிறார்.
கொல்கத்தா:
அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லயோனல் மெஸ்ஸி 3 நாள் சுற்றுப்பணமாக இந்தியாவுக்கு வருகிறார். 14 ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்கு வருகை தரும் அவர் மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி ஆகிய இடங்களில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
வருகிற 13-ந்தேதி அதிகாலை கொல்கத்தா வந்தடையும் மெஸ்ஸி, அங்கு நிறுவப்பட்டுள்ள அவரது 70 அடி உயர சிலையை திறந்து வைக்கிறார். ஆனால் பாதுகாப்பு கருதி அவர் ஓட்டலில் இருந்தபடி காணொலி வாயிலாக சிலையை திறந்து வைக்கிறார். உலகிலேயே மெஸ்ஸியின் உயரமான சிலையாக இது இருக்கும்.
பின்னர் கொல்கத்தா சால்ட்லேக் மைதானத்தில் நடக்கும் கால்பந்து நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அவரை பார்ப்பதற்கு 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரளுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கிருந்து ஐதராபாத் செல்லும் அவர் இரவில் தெலுங்கானா மாநில முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியுடன் இணைந்து காட்சி போட்டியில் ஆடுகிறார்.
14-ந்தேதி மும்பைக்கு கிளம்பும் கால்பந்து சூப்பர் ஸ்டார் மெஸ்ஸி 45 நிமிடங்கள் நடைபெறும் பேஷன் ஷோவில் ஒய்யாரமாக வலம் வர உள்ளார். அவருடன் அர்ஜென்டினா நடுகள வீரர் ரோட்ரிகோ டி பால், அவரது நீண்ட கால கிளப் வீரர் உருகுவேயின் லூயிஸ் சுவாரஸ் ஆகியோரும் இணைகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் பிரபலங்கள், பாலிவுட் நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் பங்கேற்கிறார்கள். முன்னதாக மாலை 5 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் அரங்கேறும் 7 பேர் ஆடும் கால்பந்து போட்டியில் களம் கண்டு ரசிகர்களை மகிழ்விக்க உள்ளார். இளம் கால்பந்து வீரர்களும் அவருடன் இணைந்து விளையாட இருக்கிறார்கள். அத்துடன் இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இறுதியாக 15-ந்தேதி டெல்லி செல்லும் அவர் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடுகிறார்.
- அர்ஜெண்டினாவின் தலைசிறந்த கால்பந்து வீரர் மெஸ்ஸி.
- இவர் பார்சிலோனா மற்றும் பிஎஸ்ஜி அணிகளுக்காக விளையாடினார்.
அர்ஜெண்டினாவின் தலைசிறந்த கால்பந்து வீரர் மெஸ்ஸி. 35 வயதான இவர் இளம் வயதில் இருந்தே பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்தார்.
கடந்த 2021-ம் ஆண்டில் பார்சிலோனா அணியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிஎஸ்ஜி அணிக்கு மாறினார் கடந்த இரண்டு வருடங்களாக பிஎஸ்ஜி அணிக்கு விளையாடிய அவர் கடந்த வாரத்துடன் அந்த அணியில் இருந்து விடைபெற்றார்.
இதற்கிடையே, மெஸ்ஸி மீண்டும் பார்சிலோனா அணிக்கு திரும்புவாரா அல்லது சவுதி அரேபியா கிளப் அணிக்காக விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது. மேலும், பார்சிலோனா அணி மீண்டும் அவரை ஒப்பந்தம் செய்ய தயாராக இருந்தது.
இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் மெஸ்ஸி அமெரிக்காவின் இன்டர் மியாமி அணியில் இணைந்துள்ளார்.
- பிஎஸ்ஜி அணியுடன் எற்பட்ட பிரச்சினை காரணமாக அந்த அணியில் இருந்து விலகினார்.
- மெஸ்ஸி தங்கள் அணியில் இணைந்ததை இன்டர் மியாமி கிளப் டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்கா:
உலகின் சிறந்த வீரரும் , அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான லியோனல் மெஸ்ஸி பிரான்சை சேர்ந்த பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.) அனிக்காக கடந்த 2 ஆண்டுகளாக விளையாடி வந்தார். பிஎஸ்ஜி அணியுடன் எற்பட்ட பிரச்சினை காரணமாக அந்த அணியில் இருந்து விலகினார். அவர் எந்த அணியில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு உலக கால்பந்து ரசிகர்களிடையே எழுந்தது.
இதற்கிடையே, இன்டர் மியாமி அணியை தேர்வு செய்தார் மெஸ்ஸி. அமெரிக்காவின் இன்டர் மியாமி அணிக்காக அவர் விளையாட உள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள இன்டர் மியாமி கால்பந்தாட்ட கிளப் அணியில் மெஸ்ஸி இணைந்துள்ளது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மெஸ்ஸி தங்கள் அணியில் இணைந்ததை இன்டர் மியாமி கிளப் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது.
- உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களுள் மெஸ்ஸியும் ஒருவர்.
- இவர் 2006-ம் ஆண்டு அர்ஜென்டினாவுக்காக முதல் முறையாக உலக கோப்பையில் களமிறங்கினார்.
பியூனஸ் அயர்ஸ்:
உலக கோப்பை கால்பந்து திருவிழா அடுத்த மாதம் கத்தாரில் தொடங்குகிறது. உலக கோப்பை கால்பந்தில் ஆதிக்கம் செலுத்திவரும் அணிகளில் ஒன்றான அர்ஜென்டினாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் லியோனல் மெஸ்ஸி.
உலகின் 'ஆல் டைம்' தலை சிறந்த கால்பந்து வீரர்களுள் மெஸ்ஸிக்கு எப்போதும் தனி இடமுண்டு. 2006-ம் ஆண்டு அர்ஜென்டினா அணிக்காக முதல் முறையாக உலகக்கோப்பையில் களமிறங்கினார்.
இந்நிலையில், இந்தாண்டு நடைபெறும் உலக கோப்பை கால்பந்து தொடரே தனது கடைசி கால்பந்து உலக கோப்பை என மெஸ்ஸி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஒரு நேர்காணலில் பேசிய மெஸ்ஸி, நிச்சயமாக இது என்னுடைய கடைசி உலக கோப்பை. இந்த முடிவை எடுத்துவிட்டேன். உலக கோப்பைக்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன். என்ன நடக்கப் போகிறது, இந்த உலக கோப்பை தொடர் எப்படிப் போகப்போகிறது என்ற பதற்றம் உள்ளது. இந்த தொடர் எங்களுக்கு சிறப்பாக செல்ல நான் ஆசைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார். மெஸ்ஸியின் இந்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.






