என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • முதலில் பேட் செய்த கனடா 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 106 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • அடுத்து ஆடிய பாகிஸ்தான் 17.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 107 ரன் எடுத்து வென்றது.

    நியூயார்க்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 22-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், கனடா அணிகள் மோதின.

    முதலில் பேட் செய்த கனடா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆரோன் ஜான்சன் 52 ரன்கள் எடுத்தார்.

    பாகிஸ்தான் சார்பில் முகமது அமீர், ஹரிஸ் ராப் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 17.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 107 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முகமது ரிஸ்வான் 53 ரன்கள் எடுத்தார். பாபர் அசாம் 33 ரன் எடுத்தார்.

    இந்நிலையில், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் அரைசதம் அடிக்க 52 பந்துகளை எடுத்துக்கொண்டார். இதன்மூலம் அவர் மோசமான சாதனையை படைத்துள்ளார்.

    டி20 உலகக் கோப்பை வரலாற்றில் மெதுவான அரைசதம் (பந்துகள் அடிப்படையில்) அடித்த வீரர் என்ற மோசமான சாதனையை ரிஸ்வான் (52 பந்துகள்) படைத்தார். இதற்கு முன் இந்தப் பட்டியலில் டேவிட் மில்லர் (50 பந்துகள் - நெதர்லாந்துக்கு எதிராக, 2024) முதல் இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின.
    • நமீபியா மற்றும் ஓமன் அணிகள் தொடரில் இருந்து வெளியேறிவிட்டன.

    நியூயார்க்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது. இதில் 4 பிரிவுகளின் கீழ் மொத்தம் 20 அணிகள் மோதுகின்றன.

    லீக் சுற்றில் வெற்றி பெறும் அணிகள் அடுத்து நடைபெறும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும். சூப்பர் 8 சுற்றில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கும், அதில் வெற்றி பெறும் இரு அணிகள் இறுதிப்போட்டிக்கும் முன்னேறும். இதுவரை 24 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளனர்.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றுக்கு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் தகுதி பெற்றுள்ளன.

     தென் ஆப்பிரிக்கா அணி இலங்கை வெறும் 77 ரன்களிலும், நெதர்லாந்தை 106 ரன்களிலும் சுருட்டியது. வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் 4 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் டி பிரிவில் தென் ஆப்பிரிக்கா அணி 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    இதேபோல், ஆஸ்திரேலியா அணி ஓமனை 39 ரன்கள் வித்தியாசத்திலும், இங்கிலாந்தை 36 ரன்கள் வித்தியாசத்திலும், நமீபியாவை 9 விக்கெட்கள் வித்தியாசத்திலும் வென்றது.

    இதன்மூலம் பி பிரிவில் ஆஸ்திரேலியா அணி 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    பி பிரிவில் இடம்பெற்ற நமீபியா மற்றும் ஓமன் அணிகள் தொடரில் இருந்து வெளியேறிவிட்டன.

    • 60 விநாடிகளில் 332.70 கிராம் சூடான சாஸை சாப்பிடும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
    • வீடியோ இன்ஸ்டாகிராமில் 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ளது.

    உலகம் முழுவதும் சமீப காலமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு துறைகளிலும் தங்களது வித்தியாசமான திறமைகளை செய்து கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர். அதிலும், வலைதளங்களின் தாக்கம் அதிகரித்து விட்ட இன்றைய சூழலில் சிறு குழந்தைகள் முதல் பெண்கள், முதியோர்கள் என பலதரப்பட்டவர்களும் தங்கள் திறமைகளை வீடியோவாக பதிவு செய்து வெளியிடுவதன் மூலம் பிரபலமாவது மட்டுமின்றி அரிய சாதனைகளையும் படைத்து விடுகின்றனர்.

    அந்த வகையில், அமெரிக்காவை சேர்ந்த சேஸ் பிராட்ஷா என்ற வாலிபர் ஒரு நிமிடத்தில் 300 கிராம் காரமான மிளகாய் சாஸை சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவர் 60 விநாடிகளில் 332.70 கிராம் சூடான சாஸை சாப்பிடும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

    அதில், சேஸ் பிராட்ஷா காரமான மிளகாய் சாஸை கஷ்டப்பட்டு சாப்பிடும் காட்சிகள் உள்ளது. என்றாலும் சவாலில் வெற்றி பெறவும், குறிப்பிட்ட கால கெடுவுக்குள் அதனை சாப்பிட்டு முடிக்கவும் அவர் வேகமாக சாப்பிடும் காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ளது.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போட்டி நடைபெற்ற போது அதில் பங்கேற்ற ஒரு காளை வேலியை தாண்டி குதித்து திடீரென பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது.
    • வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    அமெரிக்காவில் ஓரிக்கான் ரோடியோ பகுதியில் காளை சவாரி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சம்பவத்தன்று இந்த நிகழ்ச்சியின் இறுதி பிரிவு போட்டிகள் நடைபெற்றது. இதனை காண ஏராளமான பார்வையாளர்கள், கால்நடை ஆர்வலர்கள் என பலதரப்பட்டவர்களும் குவிந்திருந்தனர்.

    போட்டி நடைபெற்ற போது அதில் பங்கேற்ற ஒரு காளை வேலியை தாண்டி குதித்து திடீரென பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. இதைக்கண்ட பார்வையாளர்கள் அங்குமிங்குமாக ஓடினர். அப்போது அந்த காளை ஒரு பெண்ணை முட்டி தூக்கி வீசியது. மேலும் சில பார்வையாளர்களை காளை துரத்தியதில் அவர்கள் கீழே விழுந்து காயம் அடைந்தனர். உடனடியாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அந்த காளையை மடக்கி பிடித்து அழைத்து சென்றனர்.

    இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    • ஒரு பயனர், சிகாகோவிலும் ஒரு இந்திய உணவகத்தில் முதல் முறையாக பானிபூரியை ருசித்தேன்.
    • பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    வட இந்தியாவில் மிகவும் பிரபலமான, தெருவோர கடைகளில் தயாரிக்கப்படும் பானிபூரி தற்போது நாடு முழுவதும் தெருவோர கடைகளில் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது.

    இந்நிலையில் அமெரிக்காவிலும் பானிபூரி பிரபலமாகி வருகிறது. அங்குள்ள மினியாபோலிஸ் பகுதியில் ஒரு இந்திய உணவகத்தில் இந்த சிற்றுண்டி தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதனை அங்குள்ள இளைஞர்களும், உள்ளூர் மக்களும் விரும்பி சாப்பிடும் காட்சிகள் இன்ஸ்டாகிராமில் வெளியாகி உள்ளது. சுமார் 39 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 90 ஆயிரத்திற்கும் அதிகமான விருப்பங்களையும் குவித்த இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.

    ஒரு பயனர், சிகாகோவிலும் ஒரு இந்திய உணவகத்தில் முதல் முறையாக பானிபூரியை ருசித்தேன். அதன் சுவை எனக்கு மிகவும் பிடித்திருந்தது என பதிவிட்டிருந்தார். இதே போல பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


    • பயணிகள் எல்லோரும் அந்த பூனையை வேடிக்கையாகவும், செல்லமாகவும் கவனித்தனர் என பதிவிட்டிருந்தார்.
    • வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    பறக்கும் விமானத்திற்குள் பூனை ஒன்று சுற்றித்திரிந்த காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் இருந்து டென்னிசியின் நாஷ்வில்லி பகுதிக்கு இயக்கப்பட்ட ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

    ஜேசன் பிட்ஸ் என்பவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்த அந்த வீடியோவில் ஒரு பூனை விமானத்திற்குள் சுற்றி திரிகிறது. வீடியோவுடன் அவரது பதிவில், சில நாட்களுக்கு முன்பு ஸ்பிரிட் ஏர்லைன்சில் ஒரு பூனை சுற்றித்திரிவதை கண்டேன். விமான பணிப்பெண்கள் அதனை கவனிக்கவில்லை. விமானத்தில் இருந்த ஒருவரின் பையில் இருந்து அது வெளியேறியது. பயணிகள் எல்லோரும் அந்த பூனையை வேடிக்கையாகவும், செல்லமாகவும் கவனித்தனர் என பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


    • டெல்லி ராஷ்டிரபதி பவனில் பதவியேற்பு விழா நடைபெற்றது.
    • இதில் தொடர்ந்து 3-வது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்றார்.

    வாஷிங்டன்:

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றியது. கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.

    இதற்கிடையே, டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற விழாவில் தொடர்ந்து 3-வது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி இன்று பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    இந்நிலையில், மைக்ரோசாப்ட் இணை நிறுவனரான பில் கேட்ஸ் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, பில் கேட்ஸ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், 3-வது முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். சுகாதாரம், விவசாயம், பெண்கள் தலைமையிலான மேம்பாடு மற்றும் டிஜிட்டல் மாற்றம் போன்ற துறைகளில் உலகளாவிய முன்னேற்றத்திற்கான புதுமைக்கான ஆதாரமாக இந்தியாவின் நிலையை நீங்கள் பலப்படுத்தி உள்ளீர்கள். இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த ஒரு தொடர்ச்சியான கூட்டாண்மையை எதிர்நோக்குகிறோம் என பதிவிட்டுள்ளார்.

    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய நெதர்லாந்து 103 ரன்களை எடுத்தது.

    நியூயார்க்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நியூயார்க்கில் நடக்கும் 16-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது. தொடக்கம் முதலே தென் ஆப்பிரிக்கா வீரர்கள் துல்லியமாகப் பந்துவீசினர். இதனால் நெதர்லாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

    7-வது விக்கெட்டுக்கு இணைந்த சைப்ரண்ட், வான் பீக் ஜோடி 50 ரன்களுக்கும் மேல் எடுத்தது. அந்த அணியில் சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ஒட்னீல் பார்ட்மேன் 4 விக்கெட்டும், மார்கோ ஜான்சன், அன்ரிச் நார்ஜே ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்குகிறது.

    • ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.
    • இன்று இரவு 8 மணிக்கு நியூயார்க்கில் நெதர்லாந்தை தென்னாப்பிரிக்கா அணி எதிர்கொள்கிறது.

    9-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.

    இதில் பங்கேற்றுள்ள 20 அணிகளும் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 5 நாடுகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

    லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

    இந்நிலையில் இன்று இரவு 8 மணிக்கு நியூயார்க்கில் நெதர்லாந்தை தென்னாப்பிரிக்கா அணி எதிர்கொள்கிறது.

    உலகக்கோப்பை தொடர்களில் நெதர்லாந்திடம் தொடர்ந்து 2 முறை தோல்வியை சந்தித்துள்ள தென்னாப்பிரிக்கா அணி இன்றாவது வெற்றி வாகை சூடுமா என இப்போட்டியை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

    2022 ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பையிலும் கடந்தாண்டு நடந்த ஒருநாள் உலகக்கோப்பையிலும் நெதர்லாந்து அணியிடம் தென்னாப்பிரிக்கா அணி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. 

    • டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தான், அமெரிக்கா அணிகள் மோதின.
    • இந்தப் போட்டியில் சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை அமெரிக்கா வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது.

    வாஷிங்டன்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றது. சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய அமெரிக்கா வரலாற்று சாதனையை பதிவு செய்தது.

    இந்நிலையில், அமெரிக்க வேகப்பந்து வீச்சாளர் அலி கான் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

    பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் பெற்ற மாபெரும் வெற்றி. இந்த நிலைக்காக நாங்கள் நீண்ட காலமாக காத்திருந்தோம். இந்த வாய்ப்பை நாங்கள் இரு கைகளாலும் பிடிக்க முயற்சிக்கிறோம்.

    சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறுவதே எங்கள் வேலை என்பதால் இன்னும் வேலை முடிந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. எனவே அணி உண்மையிலேயே நம்பிக்கையுடன் உள்ளது.

    நாங்கள் இந்த வேகத்தை தக்கவைத்துக் கொள்வோம். இந்தியா மற்றும் அயர்லாந்துக்கு எதிராக வெற்றி பெறுவதே எங்களின் அடுத்த இலக்கு என தெரிவித்தார்.

    • அமெரிக்காவுக்கு எதிராக நேற்று நடந்த ஆட்டத்தில் பாபர் அசாம் 44 ரன்கள் எடுத்தார்.
    • சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தி அமெரிக்கா அபார வெற்றி பெற்றது.

    டல்லாஸ்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான், அமெரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. கேப்டன் பாபர் அசாம் 44 ரன்னும், ஷதாப் கான் 40 ரன்னும் எடுத்தனர்.

    அடுத்து ஆடிய அமெரிக்கா 20 ஓவரில் 159 ரன்கள் எடுக்க, ஆட்டம் சூப்பர் ஓவருக்குச் சென்றது. சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தி அமெரிக்கா அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் பாபர் அசாம் 44 ரன்களை எடுத்து, டி20 கிரிக்கெட்டில் இதுவரை 4,067 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை தகர்த்து, புதிய சாதனை படைத்துள்ளார்.

    இந்தப் பட்டியலில் முதலிடத்தில் 4,067 ரன்களுடன் பாபர் அசாமும், 2-வது இடத்தில் 4,038 ரன்களுடன் விராட் கோலியும், 3-வது இடத்தில் 4,026 ரன்களுடன் ரோகித் சர்மாவும் உள்ளனர்.

    • தரமற்று இருப்பதாக முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.
    • விரும்பியபடி இல்லை என்பதை ஐ.சி.சி அங்கீகரிக்கிறது.

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக அமெரிக்காவின் நியூயார்க்கில் நாசாவ் கவுண்டி ஸ்டேடியத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டது. இதில் புதிதாக உருவாக்கப்பட்ட ஆடுகளம் உருவாக்கப்பட்டது.

    இந்த செயற்கை ஆடு களத்தில் பந்து கணிக்க முடியாத அளவுக்கு சீரற்ற முறையில் பவுன்ஸ் ஆகிறது. இது சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டுக்கு ஏற்றதல்ல என்றும் தரமற்று இருப்பதாகவும் முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.

    இந்த நிலையில் இவ் விவகாரம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூறும்போது, 'நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இது வரை பயன்படுத்தப்பட்ட ஆடுகளங்கள் நாம் அனைவரும் விரும்பியபடி இல்லை என்பதை ஐ.சி.சி அங்கீகரிக்கிறது. உலகத் தரம் வாய்ந்த மைதானக் குழு, நிலைமையை சரி செய்யவும், மீதமுள்ள போட்டிகளுக்கு சிறந்த மேற்பரப்புகளை வழங்கவும் கடினமாக உழைத்து வருகிறது என்று தெரிவித்துள்ளது.

    ×