என் மலர்
ஜெர்மனி
- இரு நாட்டு அதிபர்களுடனும் இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் நல்லுறவு இருக்கிறது.
- இதனால் போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியாவின் முன்முயற்சியை உலகம் எதிர்பார்க்கிறது.
பெர்லின்:
ரஷியா-உக்ரைன் இடையே 2 ஆண்டுக்கு மேலாக போர் நடந்துவருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமைதிப் பேச்சு வார்த்தையில் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் மத்தியஸ்தர்களாக செயல்பட முடியும் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்தார்.
இந்திய பிரதமர் மோடியின் ரஷியா, உக்ரைன் பயணத்துக்கு பிறகு புதின் இந்தக் கருத்தை தெரிவித்தார். இதே கருத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் கூறியுள்ளார்.
இரு நாட்டு அதிபர்களுடனும் இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் நல்லுறவு இருக்கும் நிலையில், போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியாவின் முன்முயற்சியை உலகமே எதிர்பார்க்கிறது.
இந்நிலையில், ஜெர்மனியில் நடந்த வெளியுறவு அலுவலகத்தின் தூதர்கள் மாநாட்டில் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கலந்துகொண்டார். அப்போது ரஷியா-உக்ரைன் போர் குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இந்த மோதல் போர்க்களத்தில் தீர்க்கப்படும் என நினைக்கவில்லை. ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தை நடக்கும். பேச்சுவார்த்தை நடக்கும்போது ரஷியா மற்றும் உக்ரைன் அந்தப் பேச்சுவார்த்தையில் இருக்கவேண்டும்.
போர்க்களத்தில் இருந்து நீங்கள் ஒரு தீர்வைப் பெறப் போகிறீர்கள் என நாங்கள் நினைக்கவில்லை. நீங்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம்.
உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்பட்டால், நாங்கள் எப்போதும் அதை வழங்க தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார்.
- கத்தியால் கழுத்தை அறுத்தும், உடலில் பல பகுதிகளில் குத்தியும் அவர் தாக்குதல் நடத்தியுள்ளார்
- இந்த கத்திக்குத்துத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
ஜெர்மனி நாட்டில் சொலிங்ஜென் நகரில் நூற்றுக்கணக்கனோர் பங்கேற்ற நிகழ்ச்சியில் புகுந்து மர்ம நபர் கத்தியால் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். சொலிங்ஜென் நகரம் உருவாகி 650 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் சொலிங்ஜென் நகரின் மையப்பகுதியில் உள்ள சதுக்கத்தில் அந்நாட்டு நேரப்படி நேற்று இரவு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றபோது இந்த தாக்குதல் அரங்கேறியுள்ளது. தாக்குதல் நடத்திய நபர் கத்தியால் கழுத்தை அறுத்தும், உடலில் பல பகுதிகளில் குத்தியும் 2 ஆண்கள் [வயது 56, 67] மற்றும் ஒரு பெண்ணை[வயது 56] கொடூரமாக கொன்றுளளார். இந்த தாக்குதலில் மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர்.

சம்பவம் குறித்துத் தகவலறிந்து அங்கு விரைந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்நதனர். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 15 வயது சிறுவன் ஒருவனை போலீசார் கைது செய்து நடத்தி வரும் நிலையில் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பியோடியதாகச் சந்தேகிக்கப்படும் 26 வயது நபரைக் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையே இந்த கத்திக்குத்துத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாலஸ்தீனம் மற்றும் உலகின் பிற பகுதிகளில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்குப் பழிவாங்க இந்த தாக்குதலை நடந்தியகாக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட 26 வயது நபருக்கும், ஐ.எஸ். அமைப்புக்கும் இருக்கும் தொடர்பு குறித்து போலீசார் விசாரணை நடந்தி வருகின்றனர். 165,000 மக்கள் வாழும் சொலிங்ஜென் நகரம் அங்குள்ள மிகப்பெரிய கத்தி தயாரிப்பு தொழிற்சாலைக்கு பெயர் போனது குறிப்பிடத்தக்கது.
- எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் டெஸ்லா நிறுவனம் உலக அளவில் முன்னணியில் உள்ளது.
- ஒரு ஊழியர் சராசரியாக 5 காபி கோப்பைகளை தங்களது வீட்டிற்கு எடுத்து சென்றதாக சொல்லப்படுகிறது.
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்சின் சி.இ.ஓ.வாக உள்ளார்.
எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் டெஸ்லா நிறுவனம் உலக அளவில் முன்னணியில் உள்ளது. இந்நிலையில், ஜெர்மனியில் உள்ள டெஸ்லா ஆலையில் 65,000 காபி கோப்பைகள் காணாமல் போயுள்ளதாக அந்த ஆலையின் மேனேஜர் அதிர்ச்சி புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த ஆலையில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையில் அடிப்படையில், ஒரு ஊழியர் சராசரியாக 5 காபி கோப்பைகளை தங்களது வீட்டிற்கு எடுத்து சென்றதாக சொல்லப்படுகிறது.
சமீபத்தில் டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ. எலான் மஸ்க் உலகளவில் அந்நிறுவனத்தின் 10% பணியாளர்களைக் குறைக்கும் திட்டத்தை அறிவித்தார். இது டெஸ்லா நிறுவனத்தின் ஜெர்மன் ஊழியர்களை கவலையடையச் செய்தது.
இந்த ஆலையில் பணிபுரியும் ஊழியர்கள் பணிப்பாதுகாப்பு, குறைவான ஊதியம் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர் என்று சொல்லப்படுகிறது.
.
- கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
- இறுதிப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெர்லின்:
17-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஜெர்மனியில் கடந்த மாதம் 17-ந்தேதி தொடங்கிய இப்போட்டியில் 24 அணிகள் பங்கேற்றன. அவைகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன.
லீக், நாக் அவுட் மற்றும் கால் இறுதி போட்டி முடிவில் ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.
முதல் அரை இறுதியில் ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்சையும் 2-வது அரைஇறுதியில் இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் நெதர் லாந்தையும் வீழ்த்தின.
ஐரோப்பிய கால்பந்து கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி 14-ந்தேதி நள்ளி ரவு 12.30 மணிக்கு நடக்கிறது. இதில் இங்கிலாந்து-ஸ்பெயின் அணிகள் பலப் பரீட்சை நடத்துகின்றன.
3 முறை சாம்பியனான ஸ்பெயின் (1964, 2008, 2012) 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று உள்ளது. அந்த அணி 4-வது முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. ஸ்பெயின் அணியில் டானி ஓல்மோ 3 கோல்களும், பேபியன் ரூயிஸ் 2 கோலும் அடித்து உள்ளனர். அந்த அணி அனைத்து பிரிவிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இங்கிலாந்து அணி இதுவரை ஐரோப்பிய கால்பந்து கோப்பையை வென்றதில்லை. கடந்த 2020-ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்து முதல்முறையாக முன்னேறியது. இதில் இத்தாலியிடம் தோற்றது.
தற்போது 2-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இந்த முறை கோப்பையை வெல்லும் வேட்கையில் உள்ளது. இங்கிலாந்து அணியில் கேப்டன் ஹாரி கேன் (3 கோல்), ஹூட் பெல்லிங்காம் (2 கோல்), சகா, லாட்கிங்ஸ் (தலா ஒரு கோல்) உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர்.
இங்கிலாந்து அணியும் பலம் வாய்ந்ததாக உள்ளது. அதனால் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஸ்பெயின் அணி கால் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியுடன் மோதுகிறது.
- போட்டி வருகிற 5-ந் தேதி இரவு 9.30 மணிக்கு நடக்கிறது.
கொலோன்:
17-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து-சுலோவாக்கியா அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறியது.
சுலோவாக்கியா அணிக்காக 25-வது நிமிடத்தில் இவான் ஷ்ரான்ஸ் கோல் அடித்தார். ஆட்டம் நிறைவடையும் தருவாயில் இங்கிலாந்துக்காக பெல்லிங்காம் கோல் அடித்தார். கடைசி நிமிட கோலால் இங்கிலாந்து தோல்வியில் இருந்து தப்பியது.
இதனால் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டது. கூடுதல் நேரத்தின் 2-வது நிமிடத்திலேயே இங்கிலாந்து கேப்டன் ஹாரிகேன் அணிக்காக 2-வது கோலை அடித்தார். இதனால் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணி கால்இறுதியில் சுவிட்சர்லாந்தை சந்திக்கிறது.
இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த மற்றொரு 2-வது சுற்று போட்டியில் ஸ்பெயின்- ஜார்ஜியா அணிகள் மோதின. இதில் ஸ்பெயின் 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றது.
ஸ்பெயின் அணியில் ரோட்ரி (39-வது நிமிடம்), ரூயிஸ் (51), வில்லியம்ஸ் (75), ஒல்மோ(91) கோல் அடித்தனர். ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் நார்மென்ட் அடித்த சுயகோலால் ஜார்ஜியாவுக்கு ஒரு கோல் கிடைத்தது.
ஸ்பெயின் அணி கால் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியுடன் மோதுகிறது. இந்த போட்டி வருகிற 5-ந் தேதி இரவு 9.30 மணிக்கு நடக்கிறது.
- மே மாதம் நிலவரப்படி ஜெர்மனியில் 2.722 மில்லியன் பேர் வேலைவாய்ப்பு இல்லாமல் இருந்தனர்.
- வேலையாப்பின்மை எண்ணிக்கை 15 ஆயிரமாக உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 19 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் வேலைவாய்ப்பின்மை கடந்த மே மாதம் 5.9 சதவீதமாக இருந்த நிலையில், ஜூன் மாதம அது 6 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஜெர்மனியின் மத்திய வேலைவாய்ப்பு ஏஜென்சி இந்த தகவலை தெரிவித்துள்ளது.
ஜூன் மாதத்தில் வேலையாப்பின்மை எண்ணிக்கை 15 ஆயிரமாக உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 19 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
மே மாதம் நிலவரப்படி ஜெர்மனியில் 2.722 மில்லியன் பேர் வேலைவாய்ப்பு இல்லாமல் இருந்தனர். இதன் எண்ணிக்கை ஜூன் மாதம் 2.726 மில்லியமான உயர்ந்துள்ளது.
- ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்றது.
- இன்று நடந்த இறுதியில் இத்தாலி வீரர் சின்னர் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார்.
பெர்லின்:
ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்றது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், போலந்து வீரர் ஹர்காக்சை சந்தித்தார்.
இதில் சின்னர் 7-6 (10-8), 7-6 (7-2) என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
தரவரிசையில் முதலிடம் பெற்ற பிறகு வென்ற முதல் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
- பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்தது.
- இறுதிப்போட்டியில் ரஷிய வீராங்கனை காலின்ஸ்கயா தோல்வி அடைந்தார்.
பெர்லின்:
பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்றது.
இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ரஷிய வீராங்கனை அன்னா காலின்ஸ்கயா, அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை காலின்ஸ்கயா 7-6 (7-0) என கைப்பற்றினார். 2வது செட்டை பெகுலா 6-4 என வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை பெகுலா 7-6 (7-3) என கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
ஜெசிகா பெகுலா பெறும் 5-வது சாம்பியன் பட்டம் இது என்பதும், இந்த ஆண்டில் இது முதல் பட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்துவருகிறது.
- இதில் அமெரிக்க வீராங்கனை அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.
பெர்லின்:
பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப், சக நாட்டு வீராங்கனையான ஜெசிக்கா பெகுலாவை சந்தித்தார்.
இதில் கோகோ காப் 5-7, 6-7 (7-2) என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து, தொடரில் இருந்து வெளியேறினார்.
இதன்மூலம் ஜெசிக்கா பெகுலா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் பெகுலா, ரஷிய வீராங்கனை அன்னா காலின்ஸ்கயாவை சந்திக்கிறார்.
- பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்துவருகிறது.
- இதில் பெலாரஸ் வீராங்கனை அசரென்கா தோல்வி அடைந்தார்.
பெர்லின்:
பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது.
இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா, ரஷிய வீராங்கனை அன்னா காலின்ஸ்கயா உடன் மோதினார்.
இதில் காலின்ஸ்கயா முதல் செட்டை 6-1 என கைப்பற்றினார். 2வது செட்டை அசரென்கா 7-6 (7-3) என போராடி வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை காலின்ஸ்கயா 6-1 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
- ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்துவருகிறது.
- அரையிறுதியில் இத்தாலி வீரர் சின்னர் வெற்றி பெற்றார்.
பெர்லின்:
ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், சீன வீரர் ஜிஜெங் உடன் மோதினார்.
இதில் சின்னர் 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் இறுதிபோட்டியில் போலந்து வீரர் ஹர்காக்சை சந்திக்கிறார்.
- பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்துவருகிறது.
- இதில் அமெரிக்க வீராங்கனை அரையிறுதிக்கு முன்னேறினார்.
பெர்லின்:
பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப், துனீசியாவின் ஒன்ஸ் ஜபேரு டன் மோதினார்.
இதில் கோகோ காப் முதல் செட்டை 7-6 (11-9) என கைப்பற்றினார். அப்போது ஒன்ஸ் ஜபேர் உடல்நலக் குறைவால் போட்டியில் இருந்து விலகினார். இதனால் கோகோ காப் அரையிறுதிக்கு முன்னேறினார்.
அரையிறுதியில் கோகோ காப், சக நாட்டு வீராங்கனையான ஜெசிக்கா பெகுலாவை சந்திக்கிறார்.






