ஜெர்மனியில் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு

மே மாதம் நிலவரப்படி ஜெர்மனியில் 2.722 மில்லியன் பேர் வேலைவாய்ப்பு இல்லாமல் இருந்தனர். வேலையாப்பின்மை எண்ணிக்கை 15 ஆயிரமாக உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 19 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
ஜெர்மனியில் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு
Published on

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் வேலைவாய்ப்பின்மை கடந்த மே மாதம் 5.9 சதவீதமாக இருந்த நிலையில், ஜூன் மாதம அது 6 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஜெர்மனியின் மத்திய வேலைவாய்ப்பு ஏஜென்சி இந்த தகவலை தெரிவித்துள்ளது.

ஜூன் மாதத்தில் வேலையாப்பின்மை எண்ணிக்கை 15 ஆயிரமாக உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 19 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

மே மாதம் நிலவரப்படி ஜெர்மனியில் 2.722 மில்லியன் பேர் வேலைவாய்ப்பு இல்லாமல் இருந்தனர். இதன் எண்ணிக்கை ஜூன் மாதம் 2.726 மில்லியமான உயர்ந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com