என் மலர்
துபாய்
- இந்த கடையில் பாகிஸ்தானை சேர்ந்த வாலிபர் ஒருவரும் பணியாற்றி வந்தார்.
- இதுதொடர்பாக வெளியுறவு மந்திரி எஸ். ஜெய்சங்கரிடம் பேசினேன்.
தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் உள்ள சோன் கிராமத்தைச் சேர்ந்தவர் அஷ்டபு பிரேம்சாகர் (வயது 35).
இவரும், தெலுங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாஸ், சாகர் ஆகியோர் துபாயில் உள்ள மாடர்ன் பேக்கரி என்ற கடையில் வேலை பார்த்து வந்தனர். இந்த கடையில் பாகிஸ்தானை சேர்ந்த வாலிபர் ஒருவரும் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் இந்தியர்களுக்கும், பாகிஸ்தான் வாலிபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கடும் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் வாலிபர் வாளால் 3 இந்தியர்களையும் சரமாரியாக வெட்டினார். இந்த தாக்குதலில் அஷ்டபு பிரேம்சாகர், சீனிவாஸ் ஆகியோர் உயிரிழந்தனர். சாகர் படுகாயம் அடைந்தார்.
அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். துபாயில் 2 இந்தியர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்ததும் அவர்களது உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். 2 பேரின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக மத்திய மந்திரி ஜி.கிஷன் ரெட்டி கூறும்போது, தெலுங்கானாவைச் சேர்ந்த 2 இளைஞர்கள், துபாயில் கொடூரமாக கொல்லப்பட்டது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
இதுதொடர்பாக வெளியுறவு மந்திரி எஸ். ஜெய்சங்கரிடம் பேசினேன். பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு முழு ஆதரவையும், உடலை உடனடியாக தாயகம் கொண்டு வருவதற்கும் அவர் உறுதியளித்துள்ளார், இந்த விஷயத்தில் விரைவான நீதி வழங்கப்படுவதை உறுதிசெய்ய வெளியுறவு அமைச்சகம் பாடுபடும் என்றார்.
கொல்லப்பட்ட பிரேம்சாகர் கடந்த 6 ஆண்டுகளாக துபாயில் பணிபுரிந்து வந்தார். கடைசியாக 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்தைப் பார்த்துவிட்டு சென்றதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
- ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் கமிட்டி தலைவராக சவுரவ் கங்குலி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
- இந்தக் கிரிக்கெட் கமிட்டியில் வி.வி.எஸ்.லட்சுமண் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.
துபாய்:
ஐ.சி.சி. ஆண்கள் கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நேற்று மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கங்குலி தலைமையிலான கிரிக்கெட் கமிட்டியில் வி.வி.எஸ்.லட்சுமண் (இந்தியா), ஹமித் ஹசன் (ஆப்கானிஸ்தான்), தேஷ்மண்ட் ஹெய்ன்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்), பவுமா (தென் ஆப்பிரிக்கா) ஜோனதன் டிராட் (இங்கிலாந்து) ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்.
இந்த கமிட்டி சர்வதேச கிரிக்கெட் போட்டி விதிமுறை மாற்றம், ஆட்டத்தின் நீண்ட கால முன்னேற்றத்துக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஐ.சி.சி.க்கு தனது பரிந்துரையை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரெயில்களை கண்ணாடி மூலம் கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- உலகின் மிகப்பெரிய சாதனையாக மாறும்.
துபாய்:
இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்லும் மக்கள் பெரும்பாலும் விமான போக்குவரத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விமானத்தில் செல்ல குறைந்தது 4 மணி நேரம் ஆகும். இரு நாடுகளுக்கும் போக்குவரத்து சேவை இன்னும் அதிகமாகவே தேவைப்படுகிறது.
இந்தநிலையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகம்-இந்தியா இடையே கடலுக்கு அடியில் ரெயில் சேவை தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரக தேசிய ஆலோசனை குழு புதிய திட்டம் ஒன்றை பரீசிலனையில் வைத்துள்ளது. அதன்படி துபாய் மற்றும் மும்பை இடையே கடலுக்கு அடியில் செல்லும் ரெயில் பாதையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ரெயில் பாதை உருவாக்கப்பட்டால் அதில் ஓடும் ரெயில் மணிக்கு 600 முதல் 1000 கி.மீ. வேகம் வரை இயங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயில் இருந்து 2 ஆயிரம் கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள மும்பைக்கு, விமானங்களும், கப்பல்களும் இயக்கப்பட்டு வரும் நிலையில், புதிதாக அதில் கடலுக்கு அடியில் ரெயில் போக்குவரத்தும் இணையவுள்ளது.
இந்த ரெயில் சேவை தொடங்கப்பட்டால் துபாயில் இருந்து இந்தியாவின் மும்பைக்கு 2 மணி நேரத்தில் சென்றடைய முடியும்.
இந்த பாதை கடலுக்கு அடியில் அமைக்க வேண்டியது இருப்பதால் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கும். இதில் நிறைய சவால்களும் உள்ளன.
ரெயில் வேகமாக பயணிக்கும் போது ரெயில் பாதையில் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்க வேண்டும். இந்த பாதையில் ரெயில் பயணிக்கும் போது கடலின் அடியில் உள்ள ரம்மியமான காட்சிகளை பயணிகள் பார்க்கும் வகையில் ரெயில்களை கண்ணாடி மூலம் கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த ரெயில்கள் பயணிகள் போக்குவரத்திற்கு மட்டுமின்றி இரு நாடுகளுக்கும் இடையேயான சரக்கு போக்குவரத்துக்கும் பயன்படும்.
துபாய் மற்றும் இந்தியா இடையே விரைவாக சரக்கு போக்குவரத்தை கையாள முடியும். இது கச்சா எண்ணை உள்ளிட்ட முக்கியமான மூலப்பொருட்களை துபாயில் இருந்து இந்தியாவிற்குள் இறக்குமதி செய்ய புதிய மற்றும் குறைந்த செலவிலான வழியை ஏற்படுத்தும்.
இந்த திட்டத்திற்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு தேவைப்படும். இதை திட்ட ரீதியாக தயார் செய்துவிட்டார்கள்.
இதற்கான ஒப்புதலும் நிதியும் ஒதுக்கப்பட்டு இந்தியா-துபாய் இடையே கடலுக்கு அடியில் போக்குவரத்து பாதை அமைக்கப்பட்டால் நிச்சயம் இது உலகின் மிகப்பெரிய சாதனையாக மாறும்.
பின்னர் பல முக்கிய நகரங்களை இதேபோன்று இணைப்பதற்கான முயற்சிகளும் நடைபெறும். இந்த திட்டம் 2030-ம் ஆண்டுக்குள் பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- டி20 பேட்டிங் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா 3-வது இடத்தில் உள்ளார்.
- பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் தீப்தி சர்மா 3-வது இடத்தில் உள்ளார்.
துபாய்:
பெண்கள் டி20 போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது. இதில் பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா (753 ரேட்டிங் புள்ளி) 3-வது இடத்தில் நீடிக்கிறார்.
இந்தப் பட்டியலின் முதல் இரு இடங்களில் ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி மற்றும் தஹிலா இடம்பிடித்துள்ளனர்.
முதல் 10 இடங்களில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா மட்டுமே இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பட்டியலில் இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் 11வது இடத்தில் உள்ளார்.
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் தீப்தி சர்மா 3-வது இடத்திலும், ரேணுகா சிங் 5-வது இடத்திலும் உள்ளார்.
அதேபோல், ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா 3-வது இடம் பிடித்துள்ளார்.
- ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருதுகளை ஐ.சி.சி. வழங்கி வருகிறது.
- பிப்ரவரி மாத சிறந்த வீரருக்கான விருதுக்கு ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் பரிந்துரை செய்யப்பட்டார்.
துபாய்:
ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருது ஐ.சி.சி. சார்பில் வழங்கப்படுகிறது.
இதற்கிடையே, பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைக்கான பரிந்துரை செய்யப்பட்ட பட்டியல் வெளியானது.
சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்தியாவின் சுப்மன் கில், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில், பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை இந்தியாவின் சுப்மன் கில் வென்றார். சிறந்த வீரர் விருதை சுப்மன் கில் மூன்றாவது முறையாக வென்றுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேசம் (101 ரன்), பாகிஸ்தானுக்கு (46) எதிராக விளாசிய இவர், இந்தியா பைனலுக்கு செல்ல கைகொடுத்தார்.
ஏற்கனவே கடந்த 2023-ம் ஆண்டில் ஜனவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் சுப்மன் கில் சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு ஆஸ்திரேலியாவின் அலானா கிங் வென்றார்.
- பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இலங்கையின் தீட்சனா முதலிடத்தில் உள்ளார்.
- பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் சுப்மன் கில் முதலிடத்தில் நீடிக்கிறார்.
துபாய்:
சமீபத்தில் 8 அணிகள் பங்கேற்ற 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி முடிவடைந்தது. இதன் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. இன்று வெளியிட்டது.
இதில், பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இலங்கையின் தீட்சனா முதலிடத்தில் நீடிக்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக செயல்பட்ட நியூசிலாந்தின் மிட்செல் சாண்ட்னர் 6 இடங்கள் முன்னேறி 2-வது இடம் பிடித்துள்ளார்.
இந்தியாவின் குல்தீப் யாதவ் 3 இடங்கள் முன்னேறி 3-வது இடம் பிடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் இந்திய வீரரான ஜடேஜா 10-வது இடத்தில் உள்ளார்.
பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் சுப்மன் கில் முதலிடத்திலும், ரோகித் சர்மா 3வது இடத்திலும், விராட் கோலி 5வது இடத்திலும், ஷ்ரேயாஸ் அய்யர் 8வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- கேப்டன் ரோகித் சர்மா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
- இந்திய அணி சாம்பியன் டிராபி கோப்பையை தட்டிச்சென்றது.
துபாய்:
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய நியூசிலாந்து 50 ஓவரில் 251 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா 49 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 254 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் கோப்பையை தட்டிச்சென்றது.
கேப்டன் ரோகித் சர்மா பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்தார். அவர் 76 ரன்கள் சேர்த்து அணி வெற்றி பெற உதவினார். ஆட்ட நாயகனாக ரோகித் சர்மாவும், தொடர் நாயகனாக ரச்சின் ரவீந்திராவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:
எங்களுக்கு ஆதரவளித்த ஒவ்வொருவரையும் நான் பாராட்ட விரும்புகிறேன். இது எங்களுடைய சொந்த ஆடுகளம் இல்லை. ஆனால், கூடியிருக்கும் கூட்டம் இதனை எங்களுடைய சொந்த ஆடுகளம் போன்று மாற்றியிருக்கிறது.
எங்களுடைய ஆட்டம் எப்படி இருக்க போகிறது என பார்க்க திரளாக கூடிய மக்களுக்கு, இந்த வெற்றி திருப்தியளித்து இருக்கும்.
தொடர் முழுவதும் உண்மையில் சிறப்பான முறையில் கிரிக்கெட் விளையாடினோம். நாங்கள் விளையாடிய விதம் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சுழற்பந்து வீச்சாளர்கள், எதிரணியின் பலம் என்ன என அறிந்து செயல்பட்டனர்.
நீங்கள் ஏதேனும் வித்தியாசம் காட்ட வேண்டும் என முயற்சிக்கும்போது அணியின் ஒத்துழைப்பு உங்களுக்கு தேவை. அணியினர் என்னுடன் இருந்தனர். நான் மனதளவில் தெளிவாக இருந்தேன் என்பதே முக்கியம் வாய்ந்த விசயம்.
எதிர்கால திட்டங்கள் இல்லை. என்ன நடந்தாலும் அது தொடரும். நான் தற்போது ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப் போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இனிமேல் என் ஓய்வு குறித்து வதந்திகள் பரப்ப வேண்டாம் என தெரிவித்தார்.
- இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 254 ரன் எடுத்து வென்றதுடன் கோப்பையை தட்டிச்சென்றது.
- 76 ரன் எடுத்த இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
துபாய்:
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லீக் மற்றும் அரையிறுதி சுற்று முடிவில் இந்தியாவும், நியூசிலாந்தும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இரு அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி துபாயில் நேற்று நடந்தது. டாஸ் வென்று முதலில் ஆடிய நியூசிலாந்து 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 251 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா விளையாடியது.
கேப்டன் ரோகித் சர்மா பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்தார். அவர் 76 ரன்கள் சேர்த்து அணி வெற்றி பெற உதவினார். கில் 31 ரன்னும், ஷ்ரேயாஸ் அய்யர் 48 ரன்னும், அக்சர் பட்டேல் 29 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல் 34 ரன்கள் எடுத்து அணி வெற்றி பெற உதவினார்.
இறுதியில், இந்திய அணி 49 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 254 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் கோப்பையை தட்டிச்சென்றது.
இந்நிலையில், இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக ரோகித் சர்மாவும், தொடர் நாயகனாக ரச்சின் ரவீந்திராவும் தேர்வு செய்யப்பட்டனர்.
- சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி மூன்றாவது முறையாக கைப்பற்றி அசத்தியது.
- கோப்பை வென்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
துபாய்:
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய நியூசிலாந்து 251 ரன்களை எடுத்தது.
தொடர்ந்து ஆடிய இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியன்ஸ் டிராபியை மூன்றாவது முறையாக கைப்பற்றி அசத்தியது.
சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், வெற்றியை உறுதி செய்ததும் ஹர்ஷித் ராணா, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட இந்திய வீரர்கள் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதேபோல் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றதும் வீரர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர். கோப்பையுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
- சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
- கோப்பை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
துபாய்:
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய நியூசிலாந்து 251 ரன்களை எடுத்தது.
தொடர்ந்து ஆடிய இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியன்ஸ் டிராபியை மூன்றாவது முறையாக கைப்பற்றி அசத்தியது.
சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சாம்பியன்ஸ் டிராபியில் கோப்பை வென்ற இந்தியாவின் வெற்றியை நாடுமுழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், தேசியக் கொடியை அசைத்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
- சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இறுதிப்போட்டி துபாயில் இன்று நடக்கிறது.
- துபாயில் நடக்கும் இறுதி ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
துபாய்:
9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபியில் விராட் கோலி இதுவரை 17 போட்டிகளில் விளையாடி 746 ரன்கள் அடித்துள்ளார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் மேலும் 46 ரன்கள் அடித்தால் சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.
இந்தப் பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெயில் 791 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
- ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருதுகளை ஐ.சி.சி. வழங்கி வருகிறது.
- பிப்ரவரி மாதத்திற்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட பட்டியல் வெளியானது.
துபாய்:
ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருது ஐ.சி.சி. சார்பில் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைக்கான பரிந்துரை செய்யப்பட்ட பட்டியல் வெளியானது.
சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்தியாவின் சுப்மன் கில், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
இதில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேசம் (101 ரன்), பாகிஸ்தானுக்கு (46) எதிராக விளாசிய இவர், இந்தியா பைனலுக்கு செல்ல கைகொடுத்தார். ஆஸ்திரேலியாவின் ஸ்மித் (இலங்கை டெஸ்ட் தொடரில் 141, 131, ரன் எடுத்தார். நியூசிலாந்தின் பிலிப்ஸ் கடைசி 5 போட்டிகளில் 236 ரன்கள் குவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த 2023-ம் ஆண்டில் ஜனவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் சுப்மன் கில் சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார்.
சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு தாய்லாந்தின் திபாச்சா, ஆஸ்திரேலியாவின் அலானா கிங் மற்றும் அனாபெல் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.






