என் மலர்
துபாய்
- சுசுகி நிறுவனம் தனது சூப்பர் பைக்கான ‘ஹயபூசா’வை காட்சிப்படுத்தினர்.
- மணிக்கு 300 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்.
இளைய தலைமுறையினரின் கனவு பட்டியலில் மோட்டார் சைக்கிள் வாங்குவது முக்கியமானதாக ஒன்றாக இருக்கும். பல லட்சம் செலவழித்து தங்களுக்கு பிடித்த மோட்டார் சைக்கிளை வாங்குவதில் மெனக்கெடுவார்கள். அந்த மோட்டார் சைக்கிளே தங்கத்தில் இருந்தால் அவற்றை வாங்குவதற்கு என தனிக்கூட்டம் முந்தும் அல்லவா.
அவ்வாறான சம்பவம் துபாயில் அரங்கேறியுள்ளது. துபாயில் சர்வதேச வாகன கண்காட்சி நடந்தது. இதில் சுசுகி நிறுவனம் தனது சூப்பர் பைக்கான 'ஹயபூசா'வை காட்சிப்படுத்தினர்.
மணிக்கு 300 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட இந்த மோட்டார் சைக்கிளை அவர்கள் முழுக்க முழுக்க தங்கத்தில் வடிவமைத்திருந்தனர். இதன் விலை ரூ.1.67 கோடியாம். இதனை சுற்றி வாலிபர்கள் ஈக்கள் மொய்ப்பது போல சுற்றி வர அது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
- தரவரிசைப் பட்டியலில் ஸ்மிருதி மந்தனா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
- பந்துவீச்சில் இந்தியாவின் தீப்தி சர்மா 3வது இடத்துக்கு முன்னேறினார்.
லண்டன்:
மகளிர் ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசைப் பட்டியல் வெளியாகியது. அதில், இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 809 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
தற்போது நடந்து வரும் மகளிர் உலகக்கோப்பை ஒரு நாள் போட்டிகளில் கடைசி இரு ஆட்டங்களிலும் மந்தனா அசத்தலாக ஆடி அரை சதங்கள் விளாசினார்.
2வது இடத்தில் இங்கிலாந்து கேப்டன் நாட் சீவர்பிரன்ட் உள்ளார். ஆஸ்திரேலியா வீராங்கனை ஆலிசா ஹீலி ஒரு நிலை உயர்ந்து 3ம் இடம் பிடித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 3 நிலை உயர்ந்து 15-ம் இடத்தை பிடித்துள்ளார்.
பந்து வீச்சில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா 3 நிலை உயர்ந்து 669 புள்ளிகளுடன் 3ம் இடத்துக்கு சென்றுள்ளார். இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் 778 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். ஆஸி வீராங்கனை ஆஷ்லே கார்ட்னர் 686 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் நீடிக்கிறார்.
இந்திய வீராங்கனை ஸ்நே ராணா 20-வது இடத்தில் உள்ளார்.
- ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது.
- இதில் இங்கிலாந்தின் நாட் சீவர்-புருன்ட் 731 புள்ளியுடன் 2வது இடத்தில் உள்ளார்.
துபாய்:
ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. இன்று வெளியிட்டது.
இதில் பேட்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 791 புள்ளிகளுடன் தொடர்ந்து 'நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறார்.
சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தொடர்ச்சியாக சதங்களை விளாசினார்.
இங்கிலாந்தின் நாட் சீவர்-புருன்ட் 731 புள்ளியுடன் 2வது இடத்தில் உள்ளார்.
ஆஸ்திரேலியாவின் பெத் மூனி 713 புள்ளியுடன் 3வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் தஸ்மின் பிரிட்ஸ் 4வது இடத்திலும் உள்ளனர்.
பவுலர் தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா ஒரு இடம் முன்னேறி 6வது இடத்தில் நீடிக்கிறார். டாப் 10-ல் இடம்பிடித்தவர் இவர் மட்டுமே.
- இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நடந்தது.
- இந்தப் போட்டியில் நேபாளம் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.
சார்ஜா:
வெஸ்ட் இண்டீஸ், நேபாளம் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் சார்ஜாவில் நடக்கிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நடந்தது. முதலில் பேட் செய்த நேபாளம் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரோகித் பவுடல் 38 ரன்கள் எடுத்தார்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஹோல்டர் 4 விக்கெட்டும், நவின் பிடாய்சி 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.
தொடர்ந்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீசுக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நேபாளம் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் முழு உறுப்பினர் அணிக்கு எதிராக முதல் வெற்றியை நேபாளம் பதிவு செய்தது.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 146 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய இந்தியா 150 ரன்கள் எடுத்து ஆசிய கோப்பையை வென்றது.
துபாய்:
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 19.1 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஜோடி அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. ஆனால் அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. பர்ஹான் 57 ரன்னிலும், பகர் சமான் 47 ரன்னிலும் வெளியேறினர்.
இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. சிறப்பாக ஆடி வந்த அபிஷேக் சர்மா 5 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னிலும், சுப்மன் கில் 12 ரன்னிலும் அவுட்டாகினர். இதனால் 20 ரன்னுக்குள் 3 விக்கெட்களை இழந்து இந்தியா தத்தளித்தது.
4வது விக்கெட்டுக்கு திலக் வர்மாவுடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி 57 ரன்களை சேர்த்த நிலையில் சஞ்சு சாம்சன் 24 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து இறங்கிய ஷிவம் துபே திலக் வர்மாவுடன் இணைந்து அதிரடியாக ஆடினார். பொறுப்புடன் ஆடிய திலக் வர்மா அரை சதம் கடந்து அசத்தினார்.
இறுதியில், இந்தியா 19.4 ஓவரில் 150 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றி அசத்தியது. திலக் வர்மா 69 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
நடப்பு ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து 3 போட்டிகளில் இந்தியாவிடம் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 19.1 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
துபாய்:
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின்போது பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ராஃப், இந்தியாவின் 6 விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதை குறிக்கும் வகையில், 6 கைவிரல்களை காட்டினார். மேலும், விமானம் விழுவது போன்று சைகை காட்டினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது செயலுக்கு போட்டிச் சம்பளத்தில் முப்பது சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதற்கிடையே, ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. முதலில் ஆடிய பாகிஸ்தான் 19.1 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்நிலையில், பாகிஸ்தானி ஹரிஸ் ராஃப் விக்கெட்டை போல்டாக்கிய பும்ரா, அதன்பிறகு விமானம் மேலிருந்து கீழே விழுந்து நொறுங்குவதைப் போல சைகை செய்தார்.
ஹரிஸ் ராஃப் செய்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பும்ரா அதே சைகையை செய்தது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
- டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 146 ரன்னுக்கு ஆல அவுட்டானது.
துபாய்:
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஜோடி அதிரடியாக ஆடியது. முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்த நிலையில் பர்ஹான் 57 ரன்னில் அவுட்டானார். பகர் சமான் 47 ரன்னில் வெளியேறினார்.
ஆனால் அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், பாகிஸ்தான் அணி 19.1 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.
- துபாயில் தொடங்கும் இறுதிப்போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
- இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையேயான இறுதிபோட்டிக்கான டாஸ் போடப்பட்டது.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு துபாயில் தொடங்கும் இறுதிப்போட்டி யில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இத்தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் லீக் மற்றும் சூப்பர்-4 சுற்றில் மோதி இருந்தன. இந்த 2 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையேயான இறுதிபோட்டிக்கான டாஸ் போடப்பட்டது.
இதில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
இதற்கிடையே, ஆசியகோப்பை தொடர் இறுதிப்போட்டியில் காயம் காரணமாக இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா விளையாடவில்லை.
ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக ரிங்கு சிங் இந்திய அணியில் இடம் பிடித்து உள்ளார்.
- அபிஷேக் சர்மா டி20 போட்டிகளில் தொடர்ந்து 3 முறை அரை சதம் அடித்தார்.
- ஆட்டநாயகன் விருது பதும் நிசங்காவுக்கு அளிக்கப்பட்டது.
துபாய்:
ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது. அபிஷேக் சர்மா 61 ரன் விளாசினார்.
அடுத்து ஆடிய இலங்கை அணி பதும் நிசங்கா அதிரடி சதத்தால் 202 ரன்கள் எடுத்தது. இதனால் சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை 5 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 3 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருது பதும் நிசங்காவுக்கு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சர்வதேச டி20 போட்டிகளில் தொடர்ந்து 3 முறை அரைசதம் அடித்த 6வது இந்திய வீரரானார் அபிஷேக் சர்மா.
இதற்கு முன்னதாக, விராட் கோலி, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மா, ஷ்ரேயஸ் அய்யர் ஆகியோர் ஹாட்ரிக் அரை சதமடித்து அசத்தி உள்ளனர்.
- முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 202 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய இலங்கை 202 ரன்கள் எடுத்ததால் சூப்பர் ஓவருக்கு சென்றது.
துபாய்:
ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது. அபிஷேக் சர்மா 61 ரன்னும், திலக் வர்மா 49 ரன்னும், சஞ்சு சாம்சன் 39 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை களமிறங்கியது. குசால் மெண்டிஸ் டக் அவுட்டானார்.
2வது விக்கெட்டுக்கு பதும் நிசங்காவுடன் குசால் பெராரா இணைந்தார். இந்த ஜோடி அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தது, குசால் பெராரா அரை சதம் கடந்து 58 ரன்னில் அவுட்டானார்.
சிறப்பாக ஆடிய பதும் நிசங்கா சதம் கடந்து 107 ரன்னில் ஆட்டமிழந்தார்.இறுதியில், இலங்கை 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, சூப்பர் ஒவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி, முதலில் ஆடிய இலங்கை 5 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 3 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது.
இந்தியா ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
- வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
- இதனால் இறுதிப்போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோத உள்ளன.
துபாய்:
ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் நேற்று மோதின. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்தது.
அடுத்து ஆடிய வங்கதேசம் 20 ஓவரில் 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில், இந்த வெற்றியின் மூலம் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதும் வாய்ப்பை பாகிஸ்தான் பெற்றது.
ஆசிய கோப்பை வரலாற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே லீக் சுற்று மற்றும் சூப்பர் 4 சுற்றுகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. எனவே ஆசிய கோப்பை இறுதிப்போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
- முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 135 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய வங்கதேசம் 124 ரன்கள் மட்டுமே எடுத்தது.
துபாய்:
ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்தது. முகமது ஹாரிஸ் 31 ரன்னும், முகமது நவாச் 25 ரன்னும் எடுத்தனர்.
வங்கதேசம் சார்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டும், மெஹிதி ஹசன், ரிஷாத் ஹொசைன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. பாகிஸ்தான் பந்துவீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.
ஷமிம் ஹொசைன் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார். சைப் ஹசன் 18 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், வங்கதேசம் 20 ஓவரில் 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.






