என் மலர்
கனடா
- காலிஸ்தான் கொடியுடன் அவர்கள் பக்தர்களைத் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியானது.
- இந்திய தேசியக் கொடி மீது நின்றபடி கையில் காலிஸ்தான் கொடியுடன் இந்திரஜித் நிற்கிறார்
கனடாவின் பிராம்டன் நகரில் அமைந்துள்ள ஹிந்து மகாசபை கோவிலுக்கு வந்த பக்தர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. பிராம்டனில் உள்ள ஹிந்து மகா சபை கோவிலுக்கு வந்த பக்தர்கள் மீது அங்கு கூடிய காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் குச்சியால் தாக்னர். காலிஸ்தான் கொடியுடன் அவர்கள் பக்தர்களைத் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியானது.
இந்த சம்பத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ தெரிவித்தார். மேலும் இந்த சம்பத்தை விசாரித்து வந்த பீல் பகுதி போலீஸார் 5-வது நபரைக் கைது செய்திருந்தனர்.
கனடாவில் செயல்பட்டு வந்த காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கமான எஸ்எஃப்ஜெ [சீக் ஃபார் ஜஸ்டீஸ்] இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தெரிகிறது. கைது செய்யப்பட்டவர்களில் இந்தர்ஜித் கோசல் என்று நபர் எஸ்எஃப்ஜெ இயக்க ஒருங்கிணைப்பாளர் என்று தெரியவந்துள்ளது.
முன்னதாக மேடையின் படிகளில் விரிக்கப்பட்டிருக்கும் இந்திய தேசியக் கொடி மீது நின்றபடி கையில் காலிஸ்தான் கொடியுடன் இந்திரஜித் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.

- இந்திய அதிகாரிகளைக் கனடா அரசு உளவு பார்த்தாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.
- இந்தியா - கனடா உறவில் விரிசல் விழுந்துள்ளது.
கனடாவைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு உள்ளதாக கனடா குற்றம்சாட்டி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. இருநாட்டு தலைவர்களும் தூதர்களை வெளியேற்றினர்.
இதற்கிடையே, கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளைக் குறிவைத்து வன்முறை, மிரட்டல் மற்றும் உளவுத்தகவல்கள் சேகரிப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டதாகக் கனடா வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டேவிட் மாரிசன் குற்றம்சாட்டினார். இதை கண்டித்து மாரிசனுக்கு எதிராக இந்தியா சம்மன் அனுப்பியது.
மேலும் இந்திய அதிகாரிகளைக் கனடா அரசு உளவு பார்த்தாக மத்திய அரசு நேற்றைய தினம் புதிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது. ஆடியோ மற்றும் வீடியோ மூலம் கனடா அரசால் இந்திய தூதரக அதிகாரிகள் உளவு பார்க்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கனடா, தங்களின் பாதுகாப்பாகவே அவர்கள் கண்காணிக்கப்பட்டதாகத் தெரிவித்தது.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து கனடா வரும் மாணவர்கள் விரைவில் விசா பெற உதவும் Direct Stream Program (SDS) என்ற திட்டத்தை திடீரென கனடா அரசு ரத்து செய்துள்ளது.
இந்தியா, சீனா உட்பட 14 நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கான விசா செயல்முறையை எளிதாக்கும் SDS திட்டம், 2018 ஆண்டு கொண்டு வரப்பட்டது.
கனடாவில் உள்ள தற்காலிக குடியிருப்பாளர்களின் அளவைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
SDS திட்டத்தின் மூலம், குறைந்தது 2 வாரங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கிடைக்கும். இதுவே சாதாரண முறையில் விசா பெற வேண்டும் என்றால் குறைந்தது 8 வாரங்கள் வரை ஆகும். இதனால் கனடா சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் இனி நீண்ட நாட்கள் விசாவுக்காக காத்திருக்க நேரிடும்.
- இந்திய தூதரக அதிகாரிகள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கனடா கூறியது.
- விண்ணப்பதாரர்களுக்கு வாழ்க்கைச் சான்றிதழ் வழங்க திட்டமிடப்பட்ட தூதரக முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஒட்டாவா:
கனடாவில் வசித்த காலிஸ்தான் அமைப்பு தலைவர் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் இவ்விவகாரத்தில் இந்திய தூதரக அதிகாரிகள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கனடா கூறியது. இதற்கிடையே கனடாவின் பிரம்ப்டன் நகரில் இந்து கோவிலுக்குள் காலிஸ்தான் ஆதரவாளர்கள் புகுந்து பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.
இந்த நிலையில் கனடாவில் உள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்த தூதரக முகாம்களை பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்துள்ளது.
விண்ணப்பதாரர்களுக்கு வாழ்க்கைச் சான்றிதழ் வழங்க திட்டமிடப்பட்ட தூதரக முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது குறித்து இந்திய தூதரகம் கூறும்போது,
"சமூக முகாம் அமைப்பாளர்களுக்கு பாதுகாப்பு ஏஜென்சிகள் தங்களது குறைந்தபட்ச பாதுகாப்பை வழங்க முடியாததால் திட்டமிடப்பட்ட சில தூதரக முகாம்களை ரத்து செய்ய துணைத் தூதரகம் முடிவு செய்துள்ளது. உள்ளூர் இணை அமைப்பாளர்களின் முழு ஒத்துழைப்புடன் எங்கள் துணைத் தூதரகங்களால் ஏற்பாடு செய்யப்படும் வழக்கமான தூதரகப் பணிகளுக்கு இதுபோன்ற இடையூறுகள் அனுமதிக்கப்படுவதைப் பார்ப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்திய குடிமக்கள் உள்பட விண்ணப்பதாரர்களின் பாதுகாப்பில் நாங்கள் மிகவும் அக்கறை கொண்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளது.
- பிராம்டனில் ஹிந்து மகா சபை கோவில் உள்ளது
- இந்த சம்பத்துக்கு எதிர்க்கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கனடாவின் பிராம்டன் நகரில் அமைந்துள்ள ஹிந்து மகாசபை கோவிலுக்கு வந்த பக்தர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிராம்டனில் உள்ள ஹிந்து மகா சபை கோவிலுக்கு வந்த பக்தர்கள் மீது அங்கு கூடிய காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் குச்சியால் தாக்கியுள்ளனர்.
கையில் காலிஸ்தான் கொடியுடன் அவர்கள் பக்தர்களை தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியானது. இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு கனடா பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, மதத் தளத்தில் நடக்கும் வன்முறைச் செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது.
ஒவ்வொரு கனேடியருக்கும் தங்கள் நம்பிக்கையை சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் கடைப்பிடிக்க உரிமை உண்டு. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துளளார். இந்த சம்பத்துக்கு எதிர்க்கட்சி மற்றும் இந்திய வம்சாவளி அரசியல்வாதிகள் தரப்பில் இருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வன்முறை, மிரட்டல் மற்றும் உளவு நடவடிக்கைகளை மேற்கொள்ள அமித்ஷா கூறியதாக கனடா கூறியது.
- அதுவாக கழன்று விழும்வரை தான் அவற்றை அவிழ்க்கப்போவதில்லை என்றும் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கனடாவில் இயங்கி வந்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை இந்தியா - கனடா இடையே மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இருநாட்டு தூதரக உறவுகளும் முறிந்த நிலையில் கனடாவில் வன்முறை, மிரட்டல் மற்றும் உளவுத்தகவல்கள் சேகரிப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டதாகப் பரபரப்பு குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவால் தங்களுக்கு சைபர் ஆபத்து உள்ளது என்றும் கனடா தெரிவித்துள்ளது. இவையனைத்தும் இந்தியாவைக் கோபப்படுத்தி உள்ள நிலையில் தற்போது கனடா அதிபர் ட்ரூடோ அந்நாட்டில் வாழும் இந்தியாவைச் சேர்ந்த இந்து மதத்தினருடன் சேர்ந்து தீபாவளி கொண்டாட்டங்களில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
கடந்த சில மாதங்களில் தான் 3 இந்து கோவில்களுக்கு சென்றதாகவும் அங்கு தனது அதிஷ்டத்துக்காக கையில் அன்புடன் கயிறு கட்டி விடப்பட்டதாகவும் அதுவாக கழன்று விழும்வரை தான் அவற்றை அவிழ்க்கப்போவதில்லை என்றும் தனது சமூக வலைதள பக்கத்தில் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இந்த ஒளி மிகுந்த பண்டிகையில் இருள் அழிய வேண்டும். கனடாவில் வாழும் இந்து மக்கள் சிறத்தவர்கள். நவம்பர் மாதம் இந்து மத காலாச்சார மாதமாக கனடாவில் கொண்டாடப்படுகிறது. கனடா இந்துக்களுக்கு நாங்கள் எப்போதும் உறுதுணையாக நிற்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தில் நடக்க இருந்த தீபாவளி நிகழ்ச்சிகளை இந்திய வெளியுறவுத்துறை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
- ஆடியோ மற்றும் வீடியோ மூலம் கனேடிய அரசால் இந்திய தூதரக அதிகாரிகள் உளவு பார்க்கப்பட்டனர்
- தேசிய சைபர் அச்சுறுத்தல் மதிப்பீடு 2025-2026 அறிக்கை வெளியிடப்பட்டது
கனடாவைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு உள்ளதாக கனடா குற்றம்சாட்டி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. இருநாட்டு தலைவர்களும் தூதர்களை வெளியேற்றினர்.
இதற்கிடையே, கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளைக் குறிவைத்து வன்முறை, மிரட்டல் மற்றும் உளவுத்தகவல்கள் சேகரிப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டதாகக் கனடா வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டேவிட் மாரிசன் குற்றம்சாட்டினார். இதை கண்டித்து மாரிசனுக்கு எதிராக இந்தியா சம்மன் அனுப்பியது.
மேலும் இந்திய அதிகாரிகளைக் கனடா அரசு உளவு பார்த்தாக மத்திய அரசு நேற்றைய தினம் புதிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது. ஆடியோ மற்றும் வீடியோ மூலம் கனேடிய அரசால் இந்திய தூதரக அதிகாரிகள் உளவு பார்க்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கனடா, தங்களின் பாதுகாப்பாகவே அவர்கள் கண்காணிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியாவை சைபர் எதிரியாகவும் கனடா அறிவித்துள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள கனடா தேசிய சைபர் அச்சுறுத்தல் மதிப்பீடு 2025-2026 அறிக்கையில், தங்கள் நாட்டின் இணைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எதிரி நாடுகளின் பட்டியலில், சீனா, ரஷ்யா, ஈரான், வடகொரியா ஆகிய நாடுகளுக்குப் பிறகு ஐந்தாவது நாடாக இந்தியாவின் பெயரை சேர்த்துள்ளது. இந்த அறிக்கையானது கனேடிய இணைய பாதுகாப்பிற்கான தேசிய தொழில்நுட்ப மையம் வெளியிட்டுள்ளது.
- திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர இரும்பு தடுப்பில் மோதியது
- மோதிய வேகத்தில் கார் தீப்பற்றி எரிந்தது
கனடாவில் நடத்த கார் விபத்தில் 4 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள டொரன்டோ நகரில் கடந்த வியாழக்கிழமை அதிவேகமாக சென்றுகொண்டிருந்த கார், திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர இரும்பு தடுப்பில் மோதி பின்னர் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
மோதிய வேகத்தில் கார் தீப்பற்றி எரிந்த நிலையில் காரில் இருந்த 4 இந்தியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த ஒரு பெண்ணை, அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் விபத்தில் இந்தியர்கள் உயிரிழந்ததற்கு டொரன்டோவில் உள்ள இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது. அவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதாகவும் கூறி உள்ளது.
- கனடாவில் டெஸ்லா கார் டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது.
- விபத்தினால் டெஸ்லா காரின் பேட்டரி தீப்பிடித்தது.
கனடாவின் டொராண்டோ அருகே டிவைடரில் மோதிய டெஸ்லா எலக்ட்ரிக் கார் தீப்பிடித்து எரிந்ததில் காரில் பயணித்த 4 இந்தியர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.
குஜராத்தை சேர்ந்த கேட்டா கோஹில் (30) மற்றும் நில் கோஹில் (26) ஆகியோர் மேலும் 2 நபர்களுடன் டெஸ்லா எலக்ட்ரிக் காரில் பயணம் செய்துள்ளனர். அப்போது டிவைடரில் டெஸ்லா கார் மோதியுள்ளது. அதனால் டெஸ்லா காரின் பேட்டரி தீப்பிடித்தது. இதனால் சம்பவ இடத்திலேயே 4 பேரும் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் கடுமையான காயங்களுடன் உயிர் பிழைத்த 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுவதற்காக காரின் கண்ணாடிகளை உடைக்க சிலர் முயன்றதாக இந்த விபத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.
- ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சிக்கு வந்த பிறகு எடுக்கும் முதல் நடவடிக்கை இதுவாகும்.
- ட்ரூடோ அரசின் இந்த அறிவிப்பு கனடா பொருளாதாரத்தை பாதிக்கும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஒட்டாவா:
வடஅமெரிக்க நாடான கனடா சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக உள்ளது. வெளிநாடுகளில் இருந்து குடியேறுபவர்களை நம்பி தான் இந்நாட்டின் பொருளதார வளர்ச்சி உள்ளது. ஆனால் சமீப காலமாக இந்திய வம்சாவளியினர் என்ற போர்வையில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கனடாவில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
அங்கிருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டுள்ளனர். காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதில் இருந்து இருநாட்டு உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
அவருக்கு எதிராக எம்.பி.க்களும் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். அவர் பதவி விலக வேண்டும் என கெடுவும் விதித்துள்ளனர். இதனால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இனி வரும் காலங்களில் வெளிநாடுகளில் இருந்து கனடாவில் குடியேறும் மக்களின் எண்ணிக்கையை குறைக்க போவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் வலை தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் அடுத்த 2 ஆண்டுகளுக்கு கனடாவில் புலம் பெயர்ந்தோரின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க போகிறோம். இது தற்காலிகமானது தான் என தெரிவித்துள்ளார்.
அதன்படி இந்த ஆண்டு 4 லட்சத்து 85 ஆயிரமாக இருக்கும் வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்களின் எண்ணிக்கை 2025-ம் ஆண்டு 3 லட்சத்து 95 ஆயிரமாகவும், 2026-ம் ஆண்டு 3 லட்சத்து 80 ஆயிரமாகவும் குறைக்கப்படும். 2027-ம் ஆண்டு இது 3 லட்சத்து 65 ஆயிரமாக குறையும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.
தொழிலாளர்கள் தேவையை நிவர்த்தி செய்யவும், மக்கள் தொகையை கட்டுப்படுத்தி பொருளாதாரத்தை வளர்ச்சி அடைய செய்யவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சிக்கு வந்த பிறகு எடுக்கும் முதல் நடவடிக்கை இதுவாகும். இதனை சிலர் விமர்சனம் செய்துள்ளனர். கனடா போன்ற மிகப்பெரிய நிலப்பரப்பு கொண்ட நாட்டில் உற்பத்தி நிலையானதாக இருக்கிறது. இதனை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் ஆட்களின் எண்ணிக்கை அவசியம். ஆனால் ட்ரூடோ அரசின் இந்த அறிவிப்பு கனடா பொருளாதாரத்தை பாதிக்கும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
- வால்மார்ட் ஸ்டோரில் 19 வயது இளம்பெண் வேலை பார்த்து வந்துள்ளார்.
- போலீசார் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சனிக்கிழமை இரவு முதல் கடை மூடப்பட்டுள்ளது.
கனடாவில் வால்மார்ட்டில் வாக்-இன் ஓவனுக்குள் 19 வயது இளம்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹாலிஃபாக்ஸ் நகரில் உள்ள வால்மார்ட் ஸ்டோரில் 19 வயது இளம்பெண் வேலை பார்த்து வந்துள்ளார். அப்பெண் கடந்த சனிக்கிழமை அன்று வால்மார்ட் ஸ்டோரின் பேக்கரி டிபார்ட்மெண்டில் உள்ள வாக்-இன் ஓவனில் பிணமாக கிடந்துள்ளார்.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் போலீசார் இதுவரை நடத்திய விசாரணையில் அப்பெண்ணின் பெயர் மற்றும் இதர விவரங்களை தெரிவிக்கவில்லை.
போலீசார் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சனிக்கிழமை இரவு முதல் கடை மூடப்பட்டுள்ளது.
- இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்போவதாக கனடா தெரிவித்தது.
- இதனால் கனடாவுக்கான இந்திய தூதரை திரும்பப்பெற மத்திய அரசு முடிவு செய்தது.
ஒட்டாவா:
கனடாவில் வசித்து வந்த சீக்கிய பிரிவினைவாத காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். இதனால் இரு நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டது.
இதுதொடர்பாக, இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்போவதாக கனடா தெரிவித்தது. இதனால் கனடாவுக்கான இந்திய தூதரை திரும்பப்பெற மத்திய அரசு முடிவு செய்தது. மேலும் இந்தியாவில் கனடா அதிகாரிகள் 6 பேரை வெளியேற உத்தரவிட்டது.
இதற்கிடையே, நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், இந்திய தூதரான சஞ்சய் வர்மா கனடா செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
நிஜ்ஜார் கொலை தொடர்பாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த குற்றச்சாட்டுகள் உறுதியான ஆதாரத்தின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டதல்ல. கனடா உளவுத்துறை தெரிவித்த தகவலின் படியே அந்தக் குற்றச்சாட்டை அவர் கூறியுள்ளார். இதை அவரே சமீபத்தில் ஒப்புக்கொண்டார். அவரின் குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது. இந்தியா, கனடா இடையிலான உறவை அவர் தகர்த்துள்ளார். நிஜ்ஜார் கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்தார்.
- நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இல்லை என்று நாங்கள் தொடர்ந்து தெரிவித்து வருவது உறுதியாகி இருக்கிறது.
- இந்தியா-கனடா உறவுகளில் ஏற்படுத்தப்பட்ட சேதத்திற்கு கனடா பிரதமர் மட்டுமே பொறுப்பு என்று தெரிவித்துள்ளது.
நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை என்று கனடா பிரதமர் கூறியது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ள கருத்து வருமாறு:-
நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இல்லை என்று நாங்கள் தொடர்ந்து தெரிவித்து வருவது உறுதியாகி இருக்கிறது. இந்தியா மற்றும் இந்திய தூதர்களுக்கு எதிராக கூறிய கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு கனடா எங்களிடம் எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை.
இந்தியா-கனடா உறவுகளில் ஏற்படுத்தப்பட்ட சேதத்திற்கு கனடா பிரதமர் மட்டுமே பொறுப்பு என்று தெரிவித்துள்ளது.






