என் மலர்tooltip icon

    வங்காளதேசம்

    • 16 பேர் உயிரிழந்த நிலையில் 100-க்கும் மேற்பட்டோர் காயம்.
    • காயம் அடைந்தவர்களில் 6 மாணவர்கள் கவலைக்கிடமாக உள்ளனர்.

    வங்கதேசத்தில் போர் விமானம் பள்ளிக்கூடம் மீது விழுந்து மோதிய விபத்தில், பள்ளியில் இருந்த 16 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் உயிரிழந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது.

    வங்கதேசம் தலைநகர் டாக்காவில் உள்ள உத்தாராவில் மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி இயங்கி வருகிறது. வங்கதேசத்தின் பயிற்சி போர் விமானம் திடீரென இந்த பள்ளியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பள்ளியில் படித்து வந்த 6ஆம் வகுப்பு மாணவர்கள் 17 பேர், 2 ஆசிரியர்கள் உயிரிழந்தனர். விமானியும் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.

    100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். அவற்றில் சிலருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீக்காயம் அடைந்தவர்களில் 6 மாணவர்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    • டாஸ் வென்ற வங்காளதேச அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 110 ரன்னில் ஆல் அவுட்டானது.

    டாக்கா:

    பாகிஸ்தான் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

    பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டாக்காவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேச அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.3 ஓவரில் 110 ரன்களுக்கு சுருண்டது. தொடக்க ஆட்டக்காரர் பகத் சமான் 44 ரன்னும், அப்பாஸ் அப்ரிடி 22 ரன்னும் எடுத்தனர்.

    வங்காளதேசம் சார்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டும், முஸ்தபிசுர் ரகுமான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வங்காளதேசம் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பர்வேஸ் ஹொசைன் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து வெற்றிக்கு உறுதுணையாக நின்றார். தவ்ஹித் ஹிருடோய் 36 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், வங்காளதேசம் 15.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 112 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 தொடரில் வங்காளதேசம் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகன் விருது பர்வேஸ் ஹொசைனுக்கு வழங்கப்பட்டது.

    • இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவில் சற்று விரிசல் ஏற்பட்டுள்ளது.
    • சத்யஜித் ரேயின் இல்லத்தை புனரமைக்க உதவி செய்வதாக இந்தியா தெரிவித்தது.

    இந்திய சினிமாவின் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் சத்யஜித் ரேயின் மூதாதையர்களுக்குச் சொந்தமாக வங்கதேசத்தில் உள்ள இல்லத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்டுவதற்கான முயற்சியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவில் சற்று விரிசல் ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்த அறிவிப்பை வங்கதேச அரசு வெளியிட்டது. இதையடுத்து, இந்த நடவடிக்கையை கைவிடுமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் வங்கதேச அரசுக்கு கடிதம் எழுதியது. அக்கடிதத்தில் சத்யஜித் ரேயின் இல்லத்தை புனரமைக்க உதவி செய்வதாக இந்தியா தெரிவித்தது.

    இந்நிலையில், சத்யஜித் ரேயின் மூதாதையர் வீட்டை இடிக்கும் பணியை வங்கதேச அரசு நிறுத்தியுள்ளது. மேலும் அதை எவ்வாறு மீண்டும் கட்டுவது என்பது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

    • அரசாங்க எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு அவர் நேரடியாகக் கட்டளையிட்டார்.
    • போராட்டங்களின் போது நடந்த வன்முறையில் 1,400 பேர் வரை கொல்லப்பட்டதாக ஐ.நா. உண்மை கண்டறியும் குழு கண்டறிந்துள்ளது.

    வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும், மூத்த அரசு அதிகாரி ஒருவருக்கும் இடையே நடந்த பழைய உரையாடலின் ஆடியோ ஒன்று லீக் ஆகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த ஆண்டு மாணவர் போராட்டங்கள் காரணமாக ஆகஸ்ட் 5 தனது பதவியை ராஜினாமா செய்து ஷேக் ஹசீனா இந்தியா தப்பி வந்தார். மாணவர் போராட்டங்களை ஒடுக்க ஷேக் ஹசீனா மனிதாபிமான மீறல் குற்றங்களை ஏவியதாக புதிதாக அமைந்த இடைக்கால அரசு குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக ஷேக் ஹசீனா மீது அந்நாட்டு நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில் தற்போது வெளியான ஆடியோவில், ஷேக் ஹசீனா, போராட்டம் நடத்தும் மாணவர்களை ஒடுக்க ஆபத்தான ஆயுதங்களைப் பயன்படுத்தவும், போராட்டக்காரர்களை எங்கு பார்த்தாலும் சுடவும் பாதுகாப்புப் படையினரிடம் ஹசீனா கூறுவதைக் கேட்க முடிகிறது.

    பிபிசி உறுதிப்படுத்திய ஆடியோவின்படி, அரசாங்க எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு அவர் நேரடியாகக் கட்டளையிட்டார்.

    இந்த ஆடியோ, ஜூலை 18 அன்று டாக்காவில் உள்ள வங்கதேச பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான கணபபனில் இருந்து செய்யப்பட்ட தொலைபேசி அழைப்பின் போது பதிவு செய்யப்பட்டது.

    இந்த அழைப்பிற்குப் பிறகு டாக்கா முழுவதும் இராணுவ நிலை துப்பாக்கிகள் மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக போலீஸ் பதிவுகளை மேற்கோள் காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

    போராட்டங்களின் போது நடந்த வன்முறையில் 1,400 பேர் வரை கொல்லப்பட்டதாக ஐ.நா. உண்மை கண்டறியும்  குழு கண்டறிந்துள்ளது.

    தடயவியல் ஆய்வாளர்களும் இந்த ஆடியோ உண்மையானது என்பதை உறுதிப்படுத்தினர். ஷேக் ஹசீனா தற்போது சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் இனப்படுகொலைக்காக விசாரணையில் உள்ளார்.

    குற்றவாளிஎன நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.  

    • "என் மீது 227 வழக்குகள் உள்ளன, எனவே எனக்கு 227 பேரைக் கொல்ல உரிமம் உள்ளது" என்று கூறிய ஆடியோ வெளியானது.
    • மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் கொலைகள் ஆகியவற்றை அரங்கேற்றியதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

    மாணவர் எழுச்சியை அடுத்து கடந்த ஆகஸ்ட் 5, 2024 வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியா தப்பிவந்தார். இந்நிலையில் அவரை நாடு கடத்த வங்கதேச இடைக்கால அரசு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

    இடைக்கால நிர்வாகத்தின் வெளியுறவு விவகார ஆலோசகர் முகமது தௌஹித் ஹொசைன், இந்திய அதிகாரிகளுக்கு அதிகாரப்பூர்வமாகக் கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார்.

    அண்மையில் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT), நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதித்த நிலையில் இந்த நாடுகடத்தல் முயற்சியில் வங்கதேசம் முனைப்பு காட்டி வருகிறது.

    கடந்த 2024 மாணவர் போராட்டத்துடன் தொடர்புடைய விசாரணை குறித்து ஷேக் ஹசீனா மற்றும் அவாமி லீக் தலைவர் ஷகில் ஆலம் புலபுல் ஆகியோர் பேசிய ஆடியோ கிளிப் பின்னணியில் இந்த வழக்கு நடந்து வந்தது.

    அந்த ஆடியோவில் பேசும் ஷேக் ஹசீனா "என் மீது 227 வழக்குகள் உள்ளன, எனவே எனக்கு 227 பேரைக் கொல்ல உரிமம் உள்ளது" என்று கூறியதாகக் கூறப்படுகிறது.

    மேலும், சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம், ஷேக் ஹசீனா மீது அரசுக்கு எதிரான இயக்கத்தின் போது வன்முறையைத் தூண்டியது, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் திட்டமிட்ட கொலைகள் ஆகியவற்றை அரங்கேற்றியதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. இந்தச் செயல்கள் அனைத்தும் நேரடியாக அவரது உத்தரவின் பேரில் நடந்ததாக முறையான குற்றச்சாட்டுகள் தெரிவிக்கின்றன.

    ஆனால், இந்தத் தீர்ப்பாயத்தின் முடிவை அவாமி லீக் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது. இது அரசியல் நோக்கங்களுக்காக தேச விரோத மற்றும் சுதந்திரத்திற்கு எதிரான சக்திகளால் நடத்தப்படும் போலி விசாரணை என்று விமர்சித்துள்ளது.  

    • மாணவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனாவ வங்கதேசத்தில் இருந்து வெளியேறினார்.
    • அவர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்ட நிழைலயில், நீதிமன்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் செயல்பட்டதாக வழக்கு போடப்பட்டது.

    வங்கதேச நாட்டின் முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனாவுக்கு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

    நீதிமன்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் செயல்பட்டதாக ஷேக் ஹசீனா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு வங்கதேசத்தில் திடீரென மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஆளுங்கட்சிக்கு எதிரான போராட்டம் வன்முறையாக வெடித்தது. பின்னர் மாணவர்கள், ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என வன்முறையில் ஈடுபட்டனர். அவரது மாளிகையை முற்றுகையிட்டனர்.

    இதனால் பிரதமர் மாளிகையில் இருந்து வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா திரும்பிய ஷேக் ஹசீனாவுக்கு எதிராக ஏராளமான வழக்குகள் பதியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • உள்ளூர்வாசிகள் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தினர்.
    • தாகூர் தனது பல இலக்கியப் படைப்புகளை இங்குதான் உருவாக்கினார்.

    நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் பூர்வீக இல்லமான, வங்கதேசத்தின் சிராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள கச்சாரிபரி அருங்காட்சியகம் சூறையாடப்பட்டது.

    இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதுடன், அருங்காட்சியகத்தை தற்காலிகமாக மூடியுள்ளனர்.

    ஒரு பார்வையாளர் தனது குடும்பத்துடன் அருங்காட்சியகத்திற்கு வந்தபோது, வாகன நிறுத்துமிடக் கட்டணம் தொடர்பாக ஊழியர்களுடன் தகராறு ஏற்பட்டது. இது முற்றிய நிலையில், பார்வையாளர் ஒரு அலுவலக அறையில் பூட்டப்பட்டு ஊழியர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இந்தச் சம்பவம் உள்ளூர் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, நேற்று (செவ்வாய்க்கிழமை) உள்ளூர்வாசிகள் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தினர். பின்னர் ஒரு கும்பல் அருங்காட்சியக வளாகத்திற்குள் புகுந்து அதன் அரங்கத்தை சூறையாடியதுடன், இயக்குநரையும் தாக்கியது.

    இந்தத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த, தொல்லியல் துறை மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.

    தாகூர் தனது பல இலக்கியப் படைப்புகளை இங்குதான் உருவாக்கினார். இந்த மாளிகை இப்போது அவரின் வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கலாச்சார பாரம்பரிய தளமாகவும், அருங்காட்சியகமாகவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    • ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுத்ததற்கு வங்காளதேச இடைக்கால அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
    • தங்கள் நாட்டு அரசியலில் இந்தியா தலையிடுவதாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தது.

    டாக்கா, ஜூன்.9-

    வங்கதேசத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலகினார். இதையடுத்து வங்காள தேசத்தில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்டது.

    இதன் காரணமாக ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்தார். அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிறகு இந்தியா-வங்கதேசம் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

    ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுத்ததற்கு வங்கதேசம் இடைக்கால அரசு எதிர்ப்பு தெரிவித்தது. தங்கள் நாட்டு அரசியலில் இந்தியா தலையிடுவதாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தது. இதைத் தொடர்ந்து, இரு நாடுகளிடையே வர்த்தக உறவு பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், பக்ரீத் பண்டிகையையொட்டி வங்கதேசம் மக்களுக்கும், இடைக்கால அரசின் தலை வர் முகமது யூனுசுக்கும், பிரதமர் மோடி வாழ்த்துக்களை கூறியிருந்தார்.

    அதற்கு நன்றி தெரிவித்து பதில் கடிதம் அனுப்பிய முகமது யூனுஸ், இந்தியாவுடன் பரஸ்பர உறவையே விரும்புவதாக தெரிவித்து உள்ளார்.

    வங்காளதேச இடைக் கால அரசின் எக்ஸ் வலை தளத்தில் பகிரப்பட்ட அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    பரஸ்பர உறவு, மரியாதை மற்றும் புரிதல் ஆகியவை இந்தியா, வங்காளதேசம் ஆகிய 2 நாடுகளையும் ஒன்றிணைத்து மக்களின் நலனுக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறேன்.

    தியாக திருநாளானது, தியாகம், தாராள மனப்பான்மை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றால் ஒன்றிணைக்கிறது. இது உலகம் முழுவதும் உள்ள மக்களின் நலனுக்காக நாம் அனைவரும் ஒன்றாக பணியாற்ற உத்வேகம் அளிக்கிறது.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

    • ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
    • வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரலில் தேர்தல் நடைபெறும் என்றார்.

    டாக்கா:

    வங்கதேசத்தில் மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் எதிரொலியாக, பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலகி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து, அங்கு பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.

    அதன்பின், ராணுவத்தின் கண்காணிப்பில் முகமது யூனுஸ் இடைக்கால தலைவராக அறிவிக்கப்பட்டார். அவரது தலைமையிலான இடைக்கால அரசு அங்கு அமைந்தது.

    ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்ட நிலையில், அந்நாட்டின் ஒரே பெரிய கட்சியான வங்கதேச தேசியக் கட்சி தேர்தலில் வெற்றி பெறும் சூழல் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, தேர்தலை உடனே நடத்தாமல் அதிகாரத்தில் ஒட்டிக்கொள்ள யூனுஸ் விரும்புவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இந்நிலையில், 2026-ம் ஆண்டு ஏப்ரலில் தேர்தல் நடத்தப்படும் என இடைக்கால தலைவர் யூனுஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தின் முதல் பாதியில் எந்த நாளிலும் தேர்தல் நடைபெறும் என்பதை குடிமக்களுக்கு அறிவிக்கிறேன். தேர்தல் ஆணையம் அதற்கான அனைத்து அறிவிப்புகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என தெரிவித்தார்.

    • விடுதலைப் போராட்டம், ஷேக் முஜிபுர் ரஹ்மானின் அழைப்பின் பேரில் நடத்தப்பட்டது.
    • 'விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்பாளர்கள்' ஆக்கப்பட்டுள்ளனர்.

    முகமது யூனுஸ் தலைமையிலான வங்கதேச அரசு, ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 'தேசத்தந்தை' என்ற பட்டத்தை திரும்பப் பெற்றுள்ளது.

    சமீபத்தில் புதிதாக அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளில் இருந்து முஜிபுர் ரஹ்மானின் உருவப்படம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இடைக்கால அரசாங்கம் 'தேசிய சுதந்திரப் போராட்ட கவுன்சில் சட்டத்தில்' திருத்தம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

    பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் ஒரு சுதந்திர நாடாக உருவாவதற்குக் காரணமானவிடுதலைப் போராட்டம், ஷேக் முஜிபுர் ரஹ்மானின் அழைப்பின் பேரில் நடத்தப்பட்டது.இது ஒரு தனி நாட்டை உருவாக்க வழிவகுத்தது.

    விடுதலை காலத்தில் வங்கதேச அரசாங்கத்தில் இருந்தவர்கள், சுதந்திரப் போராளிகள் என்று அழைக்கப்பட்டவர்கள் தற்போது இடைக்கால அரசால், 'விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்பாளர்கள்' ஆக்கப்பட்டுள்ளனர்.

    அதேநேரம் முஜிபுர் ரஹ்மானின் தேசத்தந்தை பட்டம் நீக்கப்பட்டாலும், அவரின் சுதந்திரப் போராட்ட வீரர் அந்தஸ்து தக்கவைக்கப்பட்டுள்ளது.

    • மே 11-ந் தேதி மட்டும் நீங்கள் (இந்தியா) தாக்கியிருந்தால் நாங்களும் பதிலுக்கு உங்களை தாக்கியிருப்போம்.
    • ஷேக் ஹசீனா அரசு இந்தியாவுடனும், பிரதமர் மோடியுடனும் நல்ல நட்புடன் செயல்பட்டு வந்தது.

    வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ஆட்சிக்கு எதிராக மாணவர்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர்.

    இதனால் பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

    இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சியை கவிழ்த்தது நாங்கள்தான் என்று லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு தெரிவித்துள்ளது.

    மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்புடைய ஜமாத்-உத்-தாவா அமைப்பைச் சேர்ந்த சைபுல்லா கசூரி மற்றும் ஐ.நா.வால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட முசம்மில் ஹாஷ்மி ஆகியோர் ரஹீம் யார் கான் நகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    அப்போது முசம்மில் ஹாஷ்மி பேசும் போது, "கடந்த ஆண்டு வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சியை கவிழ்த்து நாங்கள் தோற்கடித்தோம். இது இந்திய பிரதமர் மோடிக்கு நன்கு தெரியும்.

    மே 11-ந் தேதி மட்டும் நீங்கள் (இந்தியா) தாக்கியிருந்தால் நாங்களும் பதிலுக்கு உங்களை தாக்கியிருப்போம். மே 7-ந்தேதி இரவில் தாக்குதல் நடத்தினீர். ஆனால் மே 10-ந் தேதி நாங்கள் காலை வேளையில் தாக்குதல் நடத்தினோம். நாங்கள் உங்களுக்கு பதிலடி கொடுப்போம். கொடுத்து கொண்டிருக்கிறோம். நீங்கள் போர்க்களத்துக்கு வந்தால் நாங்களும் போர்க்களத்துக்கு வருவோம்" என்றார்.

    வங்காளதேசத்தில் இருந்த ஷேக் ஹசீனா அரசு இந்தியாவுடனும், பிரதமர் மோடியுடனும் நல்ல நட்புடன் செயல்பட்டு வந்தது. இதற்கிடையே ஷேக் ஹசீனா அரசு கவிழ்க்கப்பட்டது.

    இதில் பாகிஸ்தானின் சதி இருக்கலாம் என்று கருதப்பட்டது. இந்த நிலையில் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ப்புக்கு நாங்கள்தான் காரணம் என்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
    • கலீதா ஜியா மீண்டும் பிரதமராக பதவியேற்க வேண்டும் என்றனர்.

    டாக்கா:

    வங்கதேசத்தில் புதிய இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் வன்முறையாக மாறியது.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்ய அரசாங்கம் போலீசாரை களம் இறக்கியதை தொடர்ந்து சுமார் 200 பேர் இறந்தனர். இதனால் வன்முறை தீவிரமான நிலையில் அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதையடுத்து, அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால ஆட்சி நடந்து வருகிறது.

    இந்நிலையில், வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மீண்டும் பிரதமராக பதவியேற்க வேண்டும் என அவருடைய ஆதரவாளர்கள் நேற்று பெரும் பேரணி நடத்தினர்.

    தலைநகர் டாக்காவில் சாலையில் குவிந்த அவர்கள் கட்சிக் கொடிகளை ஏந்தியும், பதாகைகளை சுமந்தபடியும் சென்றனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    ×