என் மலர்
உலகம்
- மீட்பு படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
- விபத்தில் பலியானவர்களுக்கு அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒபரடார் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
மெக்சிகோ சிட்டி:
வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் சில நாட்களே உள்ளதால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதன் ஒருபகுதியாக அங்குள்ள அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அதன்படி நியூவோ லியோன் மாகாணம் சான் பெட்ரோ கார்சா கார்சியா நகரில் மக்கள் இயக்க கட்சி சார்பில் தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
அப்போது அந்த கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜார்ஜ் அல்வாரெஸ் மேனெஸ் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார். இந்தநிலையில் அங்கு திடீரென பலத்த சூறாவளி காற்று வீசியது.
இதன் காரணமாக அந்த பிரசார மேடையின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இந்த விபத்தில் சிக்கி ஒரு குழந்தை உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் பலியானவர்களுக்கு அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒபரடார் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதற்கிடையே பலத்த காற்றால் மேடை சரிந்து விழும் காட்சிகள் அங்குள்ள சமூகவலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
PANOORIN: 9 PATAY SA STAGE COLLAPSE SA ISANG PRESIDENTIAL RALLY SA MEXICO
— NET25 (@NET25TV) May 24, 2024
Bumagsak ang entablado sa isang presidential rally sa Mexico nitong Miyerkules ng gabi na ikinasawi ng siyam na katao habang nasa 60 ang sugatan.
Nag-collapse ang entablado sa presidential rally ni Jorge… pic.twitter.com/uFCUuTKjT4
- கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சோதனை அடிப்படையில் மின்சார பஸ் இயக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
- பொதுமக்களுக்கு மின்சார பஸ்சின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
துபாய்:
துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
துபாயில் பொதுமக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்லும் வகையில் பஸ், மெட்ரோ ரெயில், டிராம், டாக்சி, படகு உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த போக்குவரத்து சேவையில் இயக்கப்படும் வாகனங்களின் மூலம் கார்பன் உமிழ்தலை தடுக்கும் வகையில் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. துபாய் அரசின் பூஜ்ய கார்பன் உமிழ்தல் போக்குவரத்து திட்டத்தின் அடிப்படையில் அரசு பஸ் போக்குவரத்தில் இயக்கப்பட்டு வரும் பஸ்களை மின்சார பஸ்களாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சோதனை அடிப்படையில் மின்சார பஸ் இயக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
அப்போது மின்சார பஸ் லா மெர் முதல் அல் சுபூ வரை இயக்கப்பட்டது. இந்த பஸ் சேவையில் பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர். இதனால் மின்சார பஸ் சேவையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பயணம் செய்தனர். பொதுமக்களுக்கு மின்சார பஸ்சின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
துபாய் அரசின் கொள்கைக்கு ஏற்ப பூஜ்ய கார்பன் உமிழ்தல் மூலம் துபாய் நகரின் முக்கிய பகுதிகளில் 30 மின்சார பஸ்கள் விரைவில் இயக்கப்பட இருக்கிறது. இந்த பஸ்கள் பிசினஸ் பே, அல் வாசல் சாலை மற்றும் துபாய் மால் ஆகிய இடங்களில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொதுமக்கள் லா மெர், ராஷித் பின் பகைத் பள்ளிவாசல், அல் கொரைபா, உம்சுகிம் 1, உம்சுகிம் பூங்கா, வைல்ட் வாடி, மெர்கடோ மால், புர்ஜ் அல் அரப், அல் சுபு டிராம் நிலையம் மற்றும் துபாய் ஆப்சோர் செய்லிங் கிளப் ஆகிய இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளலாம்.
இந்த பயணத்துக்கு ஏற்ப டீசல் என்ஜினால் இயக்கப்பட்டு வரும் 30 பஸ்கள் மின்சாரம் மூலம் இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்படும். மேலும் படிப்படியாக மற்ற பஸ்களையும் இதேபோல் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தற்போது 1.7 கோடி பயணிகள் ஓமன் விமான நிலையங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
- விமான நிலையங்கள் முசந்தம் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்படும்.
மஸ்கட்:
ஓமன் நாட்டின் சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் நைப் அல் அப்ரி கூறியதாவது:-
ஓமன் நாட்டில் தற்போது மஸ்கட், சலாலா, சுகர் மற்றும் துகும் உள்ளிட்ட இடங்களில் 4 விமான நிலையங்கள் உள்ளன. ஓமன் நாட்டுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து கணிசமாக அதிகரித்து வருகிறது. மேலும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. தற்போது 1.7 கோடி பயணிகள் ஓமன் விமான நிலையங்களை பயன்படுத்தி வருகின்றனர். வருகிற 2040-ம் ஆண்டில் இந்த பயணிகள் எண்ணிக்கை 5 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு புதிய விமான நிலையங்கள் கட்டப்பட உள்ளன.
வருகிற 2028-29-ம் ஆண்டில் மட்டும் புதிதாக 6 விமான நிலையங்கள் பயன்பாட்டுக்கு வரும். இந்த விமான நிலையங்கள் முசந்தம் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்படும். இதனை தொடர்ந்து ஓமன் நாட்டில் மேலும் புதிய விமான நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு மொத்த விமான நிலையங்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரிக்கும். முசந்தம் நகரில் அமைக்கப்பட்டு வரும் புதிய விமான நிலையத்தின் பணிகள் நிறைவடைந்து வருகிற 2028-ம் ஆண்டு இறுதியில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்.
இதனை தொடர்ந்து ஓமன் நாட்டின் பிற இடங்களில் அமைக்கப்பட்டு வரும் விமான நிலையங்கள் செயல்பட தொடங்கும். இந்த புதிய விமான நிலையங்கள் மூலம் உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- அணுஆயுத சக்தியை அமைதியான நோக்கங்களுக்காக பயன்படுத்த இந்தியாவோடு எங்களுடைய ஒத்துழைப்பை நீட்டிக்க தயாராக இருக்கிறோம்.
- கூடங்குளத்தில் 3 மற்றும் 4-வது உலைகளுக்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.
இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளத்தில் ரஷியா உதவியுடன்ம அணுஉலைகள் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆறு லைட்-வாட்டர் அணுஉலைகள் கட்டுவதற்கு இருநாடுகளும் ஒப்பந்தம் செய்துள்ளன. ஒவ்வொரு அணு உலையும் தலா ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்டது.
இந்த திட்டம் கடந்த 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2014-ல் முதல் அணுஊலை செயல்பட தொடங்கியது. 2-வது உலை 2016-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது. மேலும் இரண்டு அணுஉலைகளுக்கான வேலை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்தியா வேறு இடத்தில் அணுஉலை கட்ட நாங்கள் உதவி செய்ய தயாராக இருக்கிறோம் என ரஷியாவின் அணுசக்தி அமைப்பின் தலைவர் அலெக்சி லிகாசெவ் தெரிவித்துள்ளார்.
ரஷியாவில் அலெக்சி லிகாசெவ் இந்தியாவின் அணு சக்தி கமிஷன் தலைவர் அஜித் குமார் மெகந்தியை சந்தித்தார். இந்த சந்திப்பின் தொடர்ச்சியாக அவ்வாறு தெரிவித்துள்ளார்.
அணுஆயுத சக்தியை அமைதியான நோக்கங்களுக்காக பயன்படுத்த இந்தியாவோடு எங்களுடைய ஒத்துழைப்பை நீட்டிக்க தயாராக இருக்கிறோம். இது ரஷியாவால் வடிவமைக்கப்பட்ட உயர்திறன் கொண்ட அணுஉலைகளை இந்தியாவின் மற்றொரு இடத்தில் கட்டுவதற்கானதையும் உள்ளடக்கியதாகும்" என்றார்.
இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மும்பையில் கடந்த 13-ந்தேதி நடைபெற்ற செய்தி மாநாட்டின்போது "ரஷியாவின் அணுஉலைக்காக கூடுதலான இடங்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.
- ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவின் திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்தது.
- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரக அரசு கவுரவப்படுத்தியுள்ளது.
துபாய்:
ஐக்கிய அரபு அமீரக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கவுரவிக்க கோல்டன் விசா வழங்கி வருகிறது. கோல்டன் விசா வைத்து இருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள்.
இந்திய நடிகர்கள் பலருக்கு ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.
நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், மம்முட்டி, மோகன்லால், பிருதிவிராஜ், துல்கர் சல்மான், கமல்ஹாசன் ஆகியோர் கோல்டன் விசா பெற்றுள்ளனர்.
நடிகைகள் மீரா ஜாஸ்மின், திரிஷா, ஜோதிகா, அமலா பால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பாடகி சித்ரா மற்றும் இயக்குனரும் நடிகருமான ஆர்.பார்த்திபன், நடிகர் விஜய் சேதுபதி ஆகியோருக்கும் அமீரக அரசு கோல்டன் விசா வழங்கியுள்ளது.
இந்நிலையில், சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்திற்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரக அரசு கவுரவப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ரஜினிகாந்த் கூறுகையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசிடம் இருந்து விசா அங்கீகாரம் பெற்றதற்கு பெருமைப் படுகிறேன் என தெரிவித்தார்.
ரஜினிகாந்த் கோல்டன் விசா பெற்றது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- 2008-ம் ஆண்டில் இருந்து மூன்று நாடுகளுக்கு இடையிலான மாநாடு நடைபெற்று வருகிறது.
- கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2019-க்குப் பிறகு நடைபெறவில்லை.
தென்கொரியா, சீனா, ஜப்பான் ஆகிய மூன்று நாட்டு தலைவர்கள் வருகிற திங்கட்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தென்கொரியா தெரிவித்துள்ளது. கடைசியாக இந்த மூன்று நாடுகள் இடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தை 2019-ம் ஆண்டு நடைபெற்றது. அதன்பின் நான்கு வருடங்கள் கழித்து தற்போது நடைபெற இருக்கிறது.
இந்த முத்தரப்பு சந்திப்பில் அவர்களுடைய ஒத்துழைப்பு புதுப்பிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று நாடுகளுக்கு இடையிலான உச்சி மாநாடு கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கியது. ஆண்டுதோறும் நடத்த முடிவு செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2019-ம் ஆண்டுக்குப்பின் நடத்தப்படவில்லை.
இந்த முத்தரப்பு பேச்சுவார்தை தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல், சீன பிரதமர் லி கியாங், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இடையில் நடைபெற இருக்கிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொள்ளமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன பிரதமர் லி கியாங், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை தென்கொரியா செல்கிறார்கள். தனிப்பட்ட முறையில் தென்கொரிய அதிபரை சந்திக்கிறார்கள். அதன்பின் முத்தரப்பு மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.
சீனாவுடன் ஜப்பான் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து முடிவு செய்யப்படவில்லை என ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வானிலை மாற்றம், வணிகம், சுகாதாரம், டெக்னாலாஜி மற்றும் பேரழிவுகள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கடந்த 7-ம் தேதி சுனிதா செல்ல இருந்த விண்வெளி பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது.
- தற்போது 3-வது முறையாக சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் மேற்கொள்ள உள்ளார்.
வாஷிங்டன்:
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (58). இவர் கடந்த 1998-ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவில் இணைந்தார்.
இதனையடுத்து அங்கு விண்வெளிக்குச் சென்று பல்வேறு ஆய்வுகளை அவர் மேற்கொண்டுள்ளார். அதன்படி இவரது முதல் பயணம் 2006-ம் ஆண்டிலும், 2-வது விண்வெளிப் பயணம் 2012-ம் ஆண்டிலும் வெற்றிகரமாக அமைந்தது. இதன்மூலம் மொத்தம் 322 நாட்கள் விண்வெளியில் தங்கி உள்ள அவர் அங்கு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இருக்கிறார்.
இதற்கிடையே, 3-வது முறையாக மீண்டும் அவர் விண்வெளி பயணம் மேற்கொள்ள இருந்தார். இவருடன் ஸ்டார்லைனர் வில்லியம்ஸ், புல்ச் வில்மோர் ஆகியோரும் செல்ல இருந்தனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் கனாவெரலில் உள்ள விண்வெளி ஏவுதளத்தில் இருந்து போயிங் ஸ்டார்லைனர் நிறுவனத்துக்குச் சொந்தமான விண்கலம் கடந்த 7ம் தேதி அனுப்பப்பட இருந்தது. ஆனால் அவர்களது விண்வெளி பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ் அடுத்த மாதம் விண்வெளி பயணம் மேற்கொள்ள உள்ளார் என நாசா தெரிவித்துள்ளது. ஜூன் 1-ம் தேதி பகல் 12.25 மணிக்கு இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது எனவும், 2,5,6 ஆகியவை மாற்றுத் தேதிகளையும் அறிவித்துள்ளது.
விண்வெளியில் அதிக முறை நடந்த பெண் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான சுனிதா, 321 நாட்கள் விண்ணில் கழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தைவானை மிரட்டுவதற்காக அந்நாட்டை சுற்றி சீனா போர் பயிற்சியில் ஈடுபடுகிறது.
- சீனாவின் இந்த நடவடிக்கையை தைவான் கண்டித்துள்ளது.
பீஜிங்:
தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதற்கு தைவான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இவ்விவகாரத்தில் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது.
தைவானை மிரட்டுவதற்காக அந்நாட்டை சுற்றி சீனா போர் பயிற்சியில் ஈடுபடுகிறது. இதற்கிடையே தைவானின் புதிய அதிபராக வில்லியம் லாய் சமீபத்தில் பதவியேற்ற நிலையில் அந்நாட்டை சுற்றி சீனா இன்று காலை திடீரென்று இரண்டு நாள் போர்ப்பயிற்சியை தொடங்கியுள்ளது.
மேற்கில் உள்ள தைவான் ஜலசந்தி உள்பட தீவைச் சுற்றியும், தைவான் கட்டுப்பாட்டில் உள்ள கின்மென், மாட்சு, வுகியு, டோங்கியின் தீவுகளைச் சுற்றியும் போர் பயிற்சிகள் நடந்து வருகிறது. இதில் சீன ராணுவத்தின் போர் விமானங்கள், கப்பல்கள் ஈடுபட்டுள்ளன.
இதுகுறித்து சீன ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறும்போது, இந்த போர் பயிற்சிகள் பிரிவினைவாத செயல்களுக்கு வலுவான தண்டனையாக இருக்கும். கூட்டு கடல்-வான் போர் தயார்நிலை ரோந்து, முக்கிய இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்கள், படைகளின் கூட்டு உண்மையான போர் திறன்களை சோதிக்க தீவிற்கு உள்ளேயும் வெளியேயும் ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படுகிறது. தைவான் படைகளின் பிரிவினைவாதச் செயல்களுக்கு இது ஒரு வலுவான தண்டனை மற்றும் வெளி சக்திகளின் தலையீடு, ஆத்திரமூட்டலுக்கு எதிரான கடுமையான எச்சரிக்கையாகும் என்றார்.
சீனாவின் இந்த நடவடிக்கையை தைவான் கண்டித்துள்ளது. இதுகுறித்து தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் கூறும்போது, சீனாவின் நடவடிக்கைகள் பகுத்தறிவற்ற ஆத்திரமூட்டல்கள் ஆகும். தைவானின் இறையாண்மையைப் பாதுகாக்க கடற்படை, வான் மற்றும் தரைப்படைகள் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
- இங்கிலாந்து தனது எதிர்காலத்தைத் தேர்ந்தெடுக்கும் தருணம் இது.
- தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்ல தயாராக இருக்கிறோம்.
இங்கிலாந்தில் வரும் ஜூலை 4ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். அவர் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு பொதுத் தேர்தல் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதுகுறித்து பிரதமர் ரிஷி சுனக் கூறும்போது, "பாராளுமன்றத்தை கலைக்க இங்கிலாந்து மன்னர் சார்லசிடம் கோரினேன். இந்த கோரிக்கையை மன்னர் ஏற்றுக்கொண்டார். ஜூலை 4ம் தேதி பொதுத் தேர்தலை நடத்துவோம். இங்கிலாந்து தனது எதிர்காலத்தைத் தேர்ந்தெடுக்கும் தருணம் இது" என்றார்.
இங்கிலாந்தில் 2025-ம் ஆண்டு ஜனவரிக்குள் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும். இது தொடர்பாக பிரதமர் ரிஷி சுனக் 2024-ம் ஆண்டு பிற்பகுதியில் தேர்தல் நடைபெறும் என்று கூறிவந்தார். இதற்கிடையே தேர்தல் தேதி வெளியாகி உள்ளது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார். அதன்பின் பிரதமராக பொறுப்பேற்றார். ரிஷி சுனக், பிரதமராக முதல் முறையாக சந்திக்கும் தேர்தல் இதுவாகும். 2016-ம் ஆண்டு பிரெக்சிட் வாக்கெடுப்புக்குப் பின்னர் நடைபெற உள்ள 3-வது பொதுத் தேர்தலாகும்.
இதனிடையே எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தேர்தலுக்கு எப்போதும் தயாராக இருப்பதாக கூறியிருந்தது.
இது தொடர்பாக தொழிலாளர் கட்சியின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, "தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்ல தயாராக இருக்கிறோம். எங்களிடம் ஒரு முழுமையான ஒழுங்கமைக்கப்பட்ட பிரச்சாரக்குழு தயாராக உள்ளது. நாடு தற்போது பொதுத் தேர்தல் வேண்டும் என்று விரும்புகிறது என்று நாங்கள் நினைக்கிறோம்" என்றார்.
- ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.
- அவரது உடல் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டது. இந்தியாவில் நேற்று துக்கம் அனுசரிப்பு.
டெஹ்ரான்:
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் கடந்த 19-ம் தேதி மாயமானது. அதன்பின், ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது உறுதி செய்யப்பட்டது. இந்த விபத்தில் அதிபர் இப்ராஹிம் ரைசி, ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி மற்றும் முக்கிய அதிகாரிகள் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் இப்ராஹிம் ரைசி உடல் கண்டெடுக்கப்பட்டது.
இப்ராஹிம் ரைசி மறைவுக்கு இந்தியா ஒருநாள் துக்கம் அனுசரிப்பதாக தெரிவித்திருந்தது. இதையடுத்து, இந்திய தேசியக் கொடி நேற்று அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.
இதற்கிடையே, இப்ராஹிம் ரைசி இறுதிச்சடங்கில் இந்திய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்பார் என இந்திய வெளியுறவுத்துறை அறிவித்தது.
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஈரான் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவரை தூதரக அதிகாரிகள் வரவேற்றனர்.
இந்நிலையில், டெஹ்ரானில் வைக்கப்பட்டுள்ள ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் உடலுக்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் அஞ்சலி செலுத்தினார்.
#WATCH | Vice President Jagdeep Dhankhar pays tribute to the President of Iran Dr Seyyed Ebrahim Raisi in Tehran.
— ANI (@ANI) May 22, 2024
Source: Vice President Office pic.twitter.com/GES6B8i8Na
- இங்கிலாந்து, நேபாளம் இடையிலான நட்பு ஒப்பந்தம் 100 ஆண்டு கடந்துள்ளது.
- நேபாளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மனிஷா கொய்ராலா இங்கிலாந்து பிரதமரை சந்தித்தார்.
லண்டன்:
இங்கிலாந்துக்கும் நேபாளத்துக்கும் இடையிலான நட்பு ஒப்பந்தம் 100 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. இதைக் கொண்டாடும் விதமாக நடிகை மனிஷா கொய்ராலா உள்பட 4 நேபாள பிரதிநிதிகள் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்துள்ளனர்.
இந்நிலையில், நேபாளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மனிஷா கொய்ராலா இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்துப் பேசியிருக்கிறார்.
இதுதொடர்பாக மனிஷா வெளியிட்டுள்ள பதிவில், இங்கிலாந்து-நேபாள நாடுகள் இடையேயான 100 ஆண்டு நட்பைக் கொண்டாடும் விதமாக அந்நாட்டு பிரதமரை நேரில் சந்தித்தது மகிழ்ச்சியாக உள்ளது. நட்பின் அடிப்படையில் அவரையும் அவரது குடும்பத்தையும் இமயமலை அடிவார கேம்ப்பிற்கு அழைத்திருக்கிறேன். அவருக்கு நான் நடித்த ஹீரமண்டி வெப் தொடர் பிடித்திருக்கிறது என்பது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனின் இந்தியன், ரஜினிகாந்தின் பாபா போன்ற படங்களில் நடித்துள்ள மனிஷா கொய்ராலா, புற்றுநோயில் இருந்து போராடி மீண்டவர். சமீபத்தில் இவர் நடித்திருந்த ஹீரமண்டி வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது.
- கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
- டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்பின் வாழ்க்கையை மையமாக கொண்டு திரைப்படம் எடுக்கப்பட்டது. இதை அலி அப்பாசி என்பவர் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
இதில் டிரம்ப் தனது முன்னாள் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக காட்சி இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. இதற்கு டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து இயக்குனர் அலி அப்பாசி கூறும்போது, எங்கள் மீது டிரம்ப் தரப்பினர் வழக்குத் தொடரும் முன் படத்தைப் பார்க்க காத்திருக்க வேண்டும். இது அவர் விரும்பாத படம் என்று நான் நினைக்கவில்லை. அவர் ஆச்சரியப்படுவார் என்று நான் நினைக்கிறேன் என்றார்.






