என் மலர்
உலகம்
- துருக்கியில் உள்ள ஓட்டலில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
- இதனால் ஓட்டல் முழுவதும் கரும் புகை சூழ்ந்து காணப்பட்டது.
அங்காரா:
துருக்கி நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள போலு மாகாணத்தில் சுமார் 12 மாடிகளைக் கொண்ட ஓட்டல் மற்றும் பனிச்சறுக்கு விடுதி அமைந்துள்ளது. தற்போது துருக்கியில் 2 வாரம் பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில், இந்த ஓட்டலில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை 66 பேர் உயிரிழந்ததாகவும், 51 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் ஓட்டலில் சுமார் 238 பேர் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
தீ விபத்து ஏற்பட்டதை அறிந்து ஓட்டலில் தங்கியிருந்தவர்கள் சிலர் ஜன்னல் வழியாக வெளியே குதித்து தப்பிக்க முயன்றதாகவும், அதில் சிலர் கீழே விழுந்து உயிரிழந்ததாகவும் உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
துருக்கி தலைநகர் அங்காராவில் இருந்து சுமார் 170 கி.மீ. தொலைவில் இந்த ஓட்டல் அமைந்துள்ளது. தீ விபத்து குறித்து அறிந்து பல்வேறு மந்திரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தற்போது தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தகவல் வெளியாகியது.
இதுதொடர்பாக துருக்கி அதிபர் எர்டோகன் கூறுகையில், தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
- இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
- மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள 9 கிராமங்கள் நாசமாகின.
ஜகார்த்தா:
இந்தோனேசியா நாட்டின் முக்கிய தீவான ஜாவாவில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலச்சரிவில் இருந்து தப்பித்த 11 பேர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேற்கு ஜாவா மாகாணத்தின் பெக்கலோங்கன் பகுதியில் உள்ள 9 கிராமங்கள் நாசமாகின. தொடர் மழையால் மலையோர குக்கிராமங்களில் மண், பாறைகள் மற்றும் மரங்கள் இடிந்து விழுந்ததால் பல கிராமங்களில் ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ரிசார்ட்டில் உள்ள ஓட்டலில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
- இதனால் ஓட்டல் முழுவதும் கரும் புகை சூழ்ந்து காணப்பட்டது.
அங்காரா:
வடமேற்கு துருக்கியின் போலு மாகாணத்தின் கர்தல்காயா ரிசார்ட்டில் உள்ள ஓட்டலில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ஓட்டல் முழுவதும் கரும் புகை சூழ்ந்து காணப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கடுமையாகப் போராடிய பிறகே தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 32 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்த ஓட்டலில் 234 விருந்தினர்கள் தங்கியிருந்தனர் என்றும், முன்னெச்சரிக்கையாக ரிசார்ட்டில் உள்ள மற்ற ஓட்டல்களில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசின் செயல்திறனை மேம்படுத்தும் முகமை DODGE.
- DODGE இணை தலைவராக தொடர முடியாததால் அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் திங்கள் கிழமை (இந்திய நேரப்படி நேற்றிரவு) பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழா வாஷிங்டனில் உள்ள கேபிட்டல் ஒன் அரங்கில் நடைபெற்றது.
இந்நிலையில் டிரம்ப் பதவியேற்ற சில மணிநேரங்களிலேயே அவர் உருவாக்கிய DODGE துறையின் இணை தலைவராக நியமிக்கப்பட்ட விவேக் ராமசாமி (39 வயது) பதவி விலகியுள்ளார்.
அரசின் செயல்திறனை மேம்படுத்தும் முகமை DODGE. புதிதாக உருவான இந்த துறையின் தலைவர்களாக உலக பணக்காரருக்கு டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்டவற்றின் நிறுவனருமான எலான் மஸ்க் மற்றும் இந்திய-அமெரிக்க தொழிலதிபரும் அரசியல்வாதியுமான விவேக் ராமசுவாமி நியமிக்கப்பட்டனர்.
இருவரும் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக தீவிரமாக செயல்பட்டனர். முதலில் டிரம்பை எதிர்த்து போட்டியிட முனைந்த ராமசாமி, பின்னர் அந்த போட்டியில் இருந்து விலகி டிரம்ப் ஆதரவாளர்களில் ஒருவராக மாறினார்.
இவர்களின் ஆதரவை அங்கீகரிக்கும் விதமாகவே டிரம்ப் DODGE துறையை உருவாக்கி இவர்களை தலைவர்களாக்கினார். ஆனால் தற்போது விவேக் ராமசாமி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராமசாமி, DOGE ஐ உருவாக்க உதவும் வாய்ப்பு, எனக்கு கிடைத்த மரியாதை. அரசாங்கத்தை சீரமைப்பதில் எலான் மஸ்க் & குழு வெற்றிபெறும் என்று நான் நம்புகிறேன்.
ஓஹியோவில் எனது எதிர்காலத் திட்டங்களைப் பற்றி நான் மிக விரைவில் கூறுவேன். மிக முக்கியமாக, அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்ற அதிபர் டிரம்பிற்கு உதவ நாங்கள் அனைவரும் தயாராக இருக்கிறோம்! என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஓஹியோ மாகாண கவர்னர் பதவிக்கு விவேக் ராமசாமி போட்டியிட திட்டமிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் DODGE இணை தலைவராக தொடர முடியாததால் அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. 2026 ஆம் ஆண்டு கவர்னர் தேர்தல் நடைபெறுகிறது.
அவுட்பேக் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் ராமசாமி, "ஓஹியோவில் உள்ள மக்கள் என்னை கவர்னர் பதவிக்கு போட்டியிட அதிகளவில் வற்புறுத்துகின்றனர். அதை நான் ஏன் கருத்தில் கொள்ளக்கூடாது?" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- வழக்கமாக இதுபோன்ற அறுவை சிகிச்சை 15 நிமிடங்கள் மட்டுமே நடைபெறும்.
- அறுவை சிகிச்சை குறித்த வீடியோ வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் அவரின் துணிச்சலை பாராட்டி பதிவிட்டனர்.
குடும்ப கட்டுப்பாடு என்று வரும் போது பொதுவாக பெண்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். ஆனால் தற்போதைய நவீன மருத்துவ சிகிச்சையில் ஆண்களுக்கும் குடும்ப கட்டுப்பாடு செய்யும் அளவுக்கு வந்து விட்டது. ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை வாசக்டோமி என்று அழைக்கப்படுகிறது.
இந்நிலையில் தைவானின் தைபே பகுதியை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணரான சென் வெய்-நாங் என்பவர் தனக்கு தானே வாசக்டோமி அறுவை சிகிச்சை செய்து கொண்டதோடு அதனை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ 40 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. 3 குழந்தைகளின் தந்தையான டாக்டர் சென் வெய்-நாங் தனது மனைவி மேலும் குழந்தைகளை பெற விரும்பவில்லை. அதோடு மனைவியை மகிழ்விப்பதற்காகவும், ஆண்களின் கருத்தடை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் தனக்குதானே வாசக்டோமி அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கூறினார்.
வழக்கமாக இதுபோன்ற அறுவை சிகிச்சை 15 நிமிடங்கள் மட்டுமே நடைபெறும். ஆனால் டாக்டர் சென் வெய்-நாங் தனக்குதானே அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் சுமார் 1 மணி நேரம் எடுத்து கொண்டதாகவும், தனக்கு தானே கருத்தடை செய்து கொள்வது விசித்திரமான அனுபவமாக இருந்ததாகவும் கூறினார். அவரது அறுவை சிகிச்சை குறித்த வீடியோ வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் அவரின் துணிச்சலை பாராட்டி பதிவிட்டனர்.
- இல்லையெனில் ரஷியாவுக்கு பெரிய சிக்கல் ஏற்படும்.
- நான் அவருடன் நன்றாகப் பழகினேன்.
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் திங்கள் கிழமை (இந்திய நேரப்படி நேற்றிரவு) பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழா வாஷிங்டனில் உள்ள கேபிட்டல் ஒன் அரங்கில் நடைபெற்றது. இதில் உலக தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பதிவேற்றபின் அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. 42 முக்கிய ஆவணங்களிலும், பல நிர்வாக ரீதியான உத்தரவுகள் என 100க்கும் மேற்பட்டவற்றில் கையொப்பம் இட்டுள்ளார். அமெரிக்கவில் ஆண், பெண் இருபாலாருக்கு மட்டுமே அனுமதி, உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறுவது உள்ளிட்ட முக்கிய முடிவுகளும் அதில் அடங்கும்.
இந்நிலையில் பதவியேற்றபின் உக்ரைன் போர் குறித்தும் ரஷியாவை கடுமையாக டிரம்ப் சாடியுள்ளார்.
2022 பிப்ரவரி தொடங்கி உக்ரானில் ஏறக்குறைய சுமார் 3 ஆண்டுகளாக நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வரும் ஒப்பந்தத்துக்கு ரஷிய அதிபர் புதின் இணங்க வேண்டும் என்றும், இல்லையெனில் ரஷியாவுக்கு பெரிய சிக்கல் ஏற்படும் என்றும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனது ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதின் ஒரு ஒப்பந்தத்திற்கு வர வேண்டும், ஒப்பந்ததிற்கு இணங்காமல் அவர் ரஷியாவை அழிக்கிறார் என்று நான் நினைக்கிறேன். பணவீக்கம் உள்ளிட்டவற்றால் ரஷியப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று டிரம்ப் கூறியுள்ளார்.

மேலும் புடினைச் சந்திக்கவும் டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார். தனது முந்தைய ஆட்சிக் காலத்தை [2016-20] நினைவு கூர்ந்த டிரம்ப், புதினுடன் உச்சிமாநாட்டில் பங்கேற்றதுபற்றி குறிப்பிட்டார். "நான் அவருடன் நன்றாகப் பழகினேன். அவர் ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார் என்று நான் நம்புகிறேன்" என்று டிரம்ப் கூறினார்.
போரை முடிவுக்குக் கொண்டுவர அமைதி ஒப்பந்தம் தேவை என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தன்னிடம் கூறியதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேற்கத்திய நாடுகள் அடங்கிய நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைந்தால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறி ரஷியா உக்ரைன் மீது போர் தொடுத்தது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்கா இரண்டாவது முறையாக உத்தரவிட்டுள்ளது.
- டஜன் கணக்கான நிர்வாக நடவடிக்கைகளில் கையெழுத்திட்டார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்ள செய்யும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் உலக அமைப்பிலிருந்து விலகுவதாக அமெரிக்கா இரண்டாவது முறையாக உத்தரவிட்டுள்ளது.
குடியேற்றம் முதல் வெளியுறவுக் கொள்கை, பேச்சு சுதந்திரம், காலநிலை மாற்றம் வரையிலான பிரச்சினைகள் குறித்து இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்ற டிரம்ப் டஜன் கணக்கான நிர்வாக நடவடிக்கைகளில் கையெழுத்திட்டார்.
தனது முதல் பதவிக் காலத்தின் இறுதி ஆண்டில் உலகளாவிய சுகாதார நெருக்கடியாக உருவெடுத்த கொரோனா பெருதொற்றுக்கு உலக சுகாதார அமைப்பு செயல்பட்ட விதத்திற்கு 2020-ம் ஆண்டு டொனால்டு டிரம்ப் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
"உலக சுகாதார அமைப்பு அமெரிக்காவிடம் இருந்து நியாயமற்ற முறையில் கடுமையான தொகையை தொடர்ந்து கோருகிறது. இது மற்ற நாடுகளின் மதிப்பிடப்பட்ட தொகையுடன் ஒப்பிடும்போது மிகவும் அதிகம். 1.4 பில்லியன் மக்கள்தொகை கொண்ட சீனா, அமெரிக்காவை விட 300 சதவீதத்தை மக்கள் தொகை கொண்டுள்ளது. ஆனால் உலக சுகாதார அமைப்புக்கு கிட்டத்தட்ட 90 சதவீதம் குறைவாகவே பங்களிக்கிறது," என்று உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகுவது குறித்து அமெரிக்கா கூறியுள்ளது.
டிரம்பின் உத்தரவைத் தொடர்ந்து உலக சுகாதார அமைப்பு நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் நிதியை இழக்க உள்ளது.
- சட்டவிரோத குடியேற்றத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
- அரசு ஊழியர்கள் உடனே அலுவலகத்திற்கு திரும்ப வேண்டும்.
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் திங்கள் கிழமை (இந்திய நேரப்படி நேற்றிரவு) பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழா வாஷிங்டனில் உள்ள கேபிட்டல் ஒன் அரங்கில் நடைபெற்றது. இதில் உலக தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர் பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப் முதல் நாளிலேயே ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி அமெரிக்கா பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் என்று அறிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவில் இனி ஆண் மற்றும் பெண் என இரண்டு பாலினங்கள் மட்டும் அங்கீகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அதிபர் டிரம்ப் பதவியேற்ற முதல் நாளில் வெளியிட்ட அறிவிப்புகள்:
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி இருப்பவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள். சட்டவிரோத குடியேற்றத்தை முற்றிலுமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
வீட்டில் இருந்து பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் உடனே அலுவலகத்திற்கு திரும்ப வேண்டும். வாரத்திற்கு ஐந்து நாட்கள் அவர்கள் கட்டாயம் அலுவலகம் வந்து பணியாற்ற வேண்டும். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.
அமெரிக்காவில் போதை பொருள் கலாச்சாரம் ஒழிக்கப்படும். போதை பொருட்களை விற்பனை செய்வோர் பயங்கரவாதிகளாக வகைப்படுத்தப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பனாமா கால்வாய் கட்டுப்பாட்டை மீட்டெடுக்க தனி திட்டம் உருவாக்கப்படும். விரைவில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும். மெக்சிகோ வளைகுடா அமெரிக்கா வளைகுடா என்று பெயர் மாற்றப்படும். பிறப்புரிமைக் குடியுரிமையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு தனி திட்டம் வகுக்கப்படும்.
ஏற்கனவே அறிவித்ததை போல் பாலின வேறுபாடு முடிவுக்கு கொண்டுவரப்படும். அமெரிக்க அரசு ஆண் மற்றும் பெண் என்ற இரு பாலினங்களை மட்டும் தான் அங்கீகரிக்கும். இது அரசின் அதிகாரப்பூர்வ கொள்கை முடிவு.
சீனா, கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து வரும் இறக்குமதிக்கு புதிய வரிகள் விதிக்கப்படும். கனடா மற்றும் மெக்சிகோ தயாரிப்புகள் மீது 25% வரி விதிக்கப்படும். சீன பொருட்களுக்கான வரி குறித்து எந்த தகவலும் தற்போது வெளியிடப்படவில்லை. இந்த நடவடிக்கை பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும்.
மற்ற நாடுகளில் வரி விதித்து வர்த்தக அமைப்பில் சில சீர்திருத்தங்களை மேற்கொள்ப்படும். அமெரிக்க மக்களின் நலன் கருதி நிதி மற்றும் வரி சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதன் மூலம் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.
அரசு கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படும். அமெரிக்க மக்களுக்கு மீண்டும் பேச்சு சுதந்திரம் கொண்டு வரப்படும். அனைத்து மக்களும் மின்சார வாகனம் (EV) தான் வாங்கியாக வேண்டும் என்ற கட்டுப்பாடு நீக்கப்படும். மக்கள் தங்களுக்கு விருப்பமான வாகனங்களை வாங்கி கொள்ளலாம்.
எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் அமெரிக்கா தன்னிறைவு அடைய நவடிக்கை எடுக்கப்படும். இதற்காக எரிசக்தி செலவை குறைத்தல், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை குறைக்க தேசிய எரிசக்தி அவசரநிலை கொண்டுவரப்படும்.
உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் போது, மக்களுக்கு குறைந்த விலையில் அவற்றை வழங்க முடியும். இது அமெரிக்காவிற்கும் பலன் தரும்.
- நிலநடுக்கத்தால் கட்டிடங்களின் கூரைகள் இடிந்து விழுந்தது.
- பீதி அடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
தைபே:
தைவானின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதில் 27 பேர் காயமடைந்தனர்.
தைவானில் நள்ளிரவில் தாக்கிய நிலநடுக்கமானது யூஜிங்கிற்கு வடக்கே 12 கிலோமீட்டர் (7.5 மைல்) தொலைவில் மையம் கொண்டிருந்ததாகவும் இது ரிக்டர் அளவுகோலில் 6.4ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்களின் கூரைகள் இடிந்து விழுந்ததாகவும், 27 பேர் படுகாயமடைந்ததாகவும், பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பீதி அடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
தைவானில் கடைசியாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 25 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய நிடுநடுக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஹுவாலியனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலச்சரிவுகள் மற்றும் கட்டிடங்களை கடுமையாக சேதப்படுத்தியதுடன் 17 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஏற்கனவே டிரம்ப் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டார்.
- இலக்குகள் காலப்போக்கில் மிகவும் கடுமையானதாக மாறும்.
பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்வதாக அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். உலகில் அதிகளவு கார்பன் மாசு ஏற்படுத்தும் நாடான அமெரிக்கா காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகும் முடிவு, புவி வெப்பமயமாதலை எதிர்த்து போரிடும் உலகளாவிய முயற்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் அமெரிக்காவை அதன் நெருங்கிய கூட்டாளிகளிடம் இருந்து விலக செய்யும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாக திங்கள் கிழமை பதவியேற்ற அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முன்னதாக கடந்த 2017-ம் ஆண்டு அதிபர் பதவியில் இருந்தபோதும் டிரம்ப் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
2015 பாரிஸ் ஒப்பந்தம் தன்னார்வமானது. இது நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை எரிப்பதன் மூலம் ஏற்படும் பசுமை வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான இலக்குகளை நாடுகளே வழங்க அனுமதிக்கிறது.
அந்த இலக்குகள் காலப்போக்கில் மிகவும் கடுமையானதாக மாறும், நாடுகள் புதிய தனிப்பட்ட திட்டங்களை பிப்ரவரி 2025-க்குள் அறிவிக்க வேண்டும் என்ற காலக்கெடுவை எதிர்கொள்கின்றன.
சமீபத்தில் வெளியேறிய ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் 2035 ஆம் ஆண்டுக்குள் அமெரிக்க பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை 60 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைக்கும் திட்டத்தை கடந்த மாதம் வழங்கியது.
- அமெரிக்கர்களின் பாதுகாப்பு மீட்டெடுக்கப்படும்.
- எனது வெற்றி அமெரிக்கா முழுமைக்கும் ஆனது.
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். இதன்பின்னர் பொதுமக்களுக்கு அவர் ஆற்றிய உரையில்,
ஜனவரி 20-ஆம் தேதி தான் அமெரிக்காவுக்கு விடுதலை நாள். அமெரிக்காவின் பொற்காலம் தொடங்குகிறது. உலகம் மதிக்கப்படும் அமெரிக்கா மாறும். இதுவரை இல்லாத அமெரிக்காவைக் கட்டமைப்பேன்
என்னுடைய உயிர் ஒரு காரணத்திற்காகவே காக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சிறந்ததாக மாற்றுவதற்காகவே கடவுள் என்னுடைய உயிரை காப்பாற்றியுள்ளார்." என்றார்.
எனது வெற்றி அமெரிக்கா முழுமைக்கும் ஆனது. அமெரிக்கர்களின் பாதுகாப்பு மீட்டெடுக்கப்படும். அமெரிக்காவுக்கே முதலில் முன்னுரிமை என்பதைச் செயல்படுத்துவேன். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவுகள் கையெழுத்திட உள்ளேன்" என்று கூறினார்.
- கலிபோர்னியா காட்டுத்தீ பெரும் பணக்காரர்களையும் வீதியில் நிறுத்தி விட்டது.
- அமெரிக்காவில் சட்ட விரோத குடியேற்றம் உடனடியாக தடுத்து நிறுத்தப்படும்"
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றுக்கொண்டார்.
பதவியேற்ற பிறகு டிரம்ப் கூறியாதவது:-
அமெரிக்காவில் இந்த நொடி முதல் சுதந்திரம் பிறந்திருக்கிறது
கலிபோர்னியா காட்டுத்தீ பெரும் பணக்காரர்களையும் வீதியில் நிறுத்தி விட்டது.
தேசிய அளவிலான அவசர நிலை தென் எல்லைகளில் பிரகடனம்.
பலம் மிகுந்த, சுதந்திரமான, நம்பிக்கையான தேசத்தை உருவாக்குவதே நோக்கம்.
இதற்கு முன் எப்போதும் கிடைக்காத வாய்ப்பு அமெரிக்காவுக்கு கிடைத்திருக்கிறது
அமெரிக்காவில் சட்ட விரோத குடியேற்றம் உடனடியாக தடுத்து நிறுத்தப்படும்"
இவ்வாறு அவர் கூறினார்.






