என் மலர்
ஐ.பி.எல்.(IPL)
- கடந்த 7 ஆண்டுகளாக முதலாவது தகுதி சுற்றில் வெற்றி பெற்று இறுதி சுற்றை எட்டிய அணியே கோப்பையை உச்சி முகர்ந்து இருக்கிறது.
- நடப்பு தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை 3 முறை மோதி இருக்கின்றன.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 22-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.
ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி இந்த சீசனில் வலுவாக விளங்கி வருகிறது. லீக் சுற்றில் 9 வெற்றியுடன் 2-வது இடம் பிடித்த பெங்களூரு அணி முதலாவது தகுதி சுற்றில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை பந்தாடி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தது. வெளியூரில் நடந்த 8 ஆட்டங்களிலும் வாகை சூடி அமர்க்களப்படுத்திய பெங்களூரு அணியின் வெற்றி ரகசியம் என்னவெனில், ஒவ்வொரு ஆட்டத்திலும் ஏதாவது ஒரு வீரர் ஜொலிக்கிறார்கள். அந்த அணியில் இதுவரை 9 வீரர்கள் ஆட்டநாயகன் விருதை பெற்று இருப்பதே அதற்கு சான்றாகும்.
அறிமுக சீசனில் இருந்து தொடர்ந்து 18-வது ஆண்டாக பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் நட்சத்திர வீரர் விராட் கோலி இந்த முறையாவது கோப்பையை கையில் ஏந்தி தனது நீண்ட கால ஏக்கத்தை தணிப்பதோடு, அணியின் நெடுங்கால கோப்பை வறட்சிக்கு வடிகால் அமைப்பாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். கடந்த 7 ஆண்டுகளாக முதலாவது தகுதி சுற்றில் வெற்றி பெற்று இறுதி சுற்றை எட்டிய அணியே கோப்பையை உச்சி முகர்ந்து இருக்கிறது. அந்த ராசி இந்த சீசனில் முதலாவது தகுதி சுற்றில் வெற்றி பெற்ற பெங்களூரு அணிக்கு கைகொடுக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட் கோலி சூப்பர் பார்மில் இருக்கிறார். அவர் இதுவரை 8 அரைசதங்களுடன் 614 ரன்கள் குவித்துள்ளார். பில் சால்ட், கேப்டன் ரஜத் படிதார், ஜிதேஷ் ஷர்மா ஆகியோரும் பங்களிக்கின்றனர். பந்து வீச்சில் ஹேசில்வுட் (21 விக்கெட்), குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள் பலம் சேர்க்கிறார்கள்.
பஞ்சாப் அணி லீக் சுற்றில் 9 வெற்றியுடன் பெங்களூருவுடன் சமநிலை வகித்தாலும், ரன்-ரேட் அடிப்படையில் முன்னிலை பெற்று முதலிடத்தை பிடித்தது. முதலாவது தகுதி சுற்றில் பெங்களூருவுக்கு எதிராக 101 ரன்னில் சுருண்டு தோல்வியை சந்தித்த பஞ்சாப் அணி 2-வது தகுதி சுற்றில் மும்பைக்கு எதிராக எழுச்சி கண்டு 204 ரன் இலக்கை ஒரு ஓவர் மீதம் வைத்து எட்டிப்பிடித்து அசத்தியதுடன் 2-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. மேலும் அந்த அணி இந்த சீசனில் 8-வது முறையாக 200 ரன்களுக்கு மேல் குவித்து சாதனை படைத்தது.
கடந்த ஆண்டு கொல்கத்தா அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த கேப்டனான ஸ்ரேயாஸ் அய்யர் இந்த முறை தனது நேர்த்தியான திட்டமிடுதல் மற்றும் அணுகுமுறையால் பஞ்சாப் அணியை கோப்பையின் பக்கம் வரை அழைத்து சென்று விட்டார். அவர் இன்னும் ஒரு தடையை வெற்றிகரமாக கடந்தால் ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் இரு அணிகளுக்கு கோப்பையை வென்று கொடுத்த முதல் கேப்டன் என்ற மகத்தான பெருமையை பெறுவார்.
பஞ்சாப் அணியின் பிரதான பலமே இந்திய வீரர்கள் என்றால் மிகையாகாது. சர்வதேச போட்டியில் விளையாடாத 6 வீரர்களை (பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், நேஹல் வதேரா, ஷசாங் சிங், ஹர்பிரீத் பிரார், விஜயகுமார் வைஷாக்) ஆடுல் லெவனில் கொண்டுள்ள அந்த அணி அவர்களின் அபாரமான ஆட்டத்தால் வீறுநடை போடுகிறது.
பேட்டிங்கில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (39 சிக்சருடன் 603 ரன்), பிரப்சிம்ரன் சிங் (523), பிரியான்ஷ் ஆர்யா (451), நேஹல் வதேரா, ஷசாங் சிங், ஜோஷ் இங்லிஸ்சும், பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், ஹர்பிரீத் பிரார், அஸ்மத்துல்லா ஒமர்ஜாயும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
நடப்பு தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை 3 முறை மோதி இருக்கின்றன. முதலாவது ஆட்டத்தில் பஞ்சாப் அணியும், அடுத்த 2 ஆட்டங்களில் பெங்களூரு அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஏறக்குறைய சரிசம பலத்துடன் முதல்முறையாக கோப்பையை முத்தமிட இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
ஒட்டுமொத்தத்தில் இவ்விரு அணிகளும் 36 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் இரு அணிகளும் தலா 18-ல் வெற்றி பெற்று இருக்கின்றன.
போட்டிக்கான பரிசுத் தொகை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.20 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.12½ கோடியும் பரிசாக வழங்கப்படும் என்று தெரிகிறது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
பஞ்சாப்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஜோஷ் இங்லிஸ், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), நேஹல் வதேரா, ஷசாங் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், விஜய்குமார் வைஷாக், கைல் ஜாமிசன், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல் அல்லது ஹர்பிரீத் பிரார்.
பெங்களூரு: பில் சால்ட், விராட் கோலி, மயங்க் அகர்வால், ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன் அல்லது டிம் டேவிட், ஜிதேஷ் ஷர்மா, ரொமாரியோ ஷெப்பர்டு, குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், ஹேசில்வுட், சுயாஷ் ஷர்மா.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் கூறுகின்றன.
- இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் ஜூன் 4-ந் தேதி ரிசர்வ் டே அறிவிக்கப்படும்.
அகமதாபாத்:
10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது. அதன்படி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை இரவு 7.30 மணியளவில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.
இந்நிலையில் இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. போட்டி நடைபெறும் சமயத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அகமதாபாத் வானிலைத்துறை கணித்துள்ளது. லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் கூறுகின்றன.
நாளை இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் ஜூன் 4-ந் தேதி ரிசர்வ் டே அறிவிக்கப்படும். அந்த நாளிலும் போட்டி மழையால் கைவிடப்பட்டால் லீக் போட்டிகளில் அதிக புள்ளிகளைப் பெறும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும்.
முன்னதாக நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் இடையிலான தகுதி சுற்று 2 ஆட்டம் மழை காரணமாக 2.15 மணி நேரம் தாமதமாக தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
- பஞ்சாப்புக்கு எதிரான தோல்வியின் மூலம் மும்பை இந்த மைதானத்தில் 6-வது தோல்வியை பதிவு செய்துள்ளது.
- நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத் அணிக்கு எதிராக 4 போட்டிகளில் மும்பை தோல்வியடைந்துள்ளது.
ஐபிஎல் தொடரின் குவாலிபையர் 2-ல் மும்பை - பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 203 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 200 ரன்களுக்கு மேல் எடுத்தால் மும்பை அணி தோல்வியை சந்தித்தே இல்லை. அந்த சாதனையை நேற்று பஞ்சாப் அணி தகர்த்தது.
இந்நிலையில் இந்த தோல்வியில் மும்பை அணி மோசமான சாதனையை படைத்துள்ளது. இந்த தோல்வியின் மூலம் மும்பை இந்த மைதானத்தில் 6-வது தோல்வியை பதிவு செய்துள்ளது. குறிப்பாக குஜராத் அணிக்கு எதிராக 4 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.
2014-ம் ஆண்டிற்கு பிறகு நரேந்திர மோடி ஸ்டேயத்தில் நடந்த போட்டிகளில் மும்பை வெற்றி பெற்றதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் விவரம்:-
2015 VS ராஜஸ்தான்
2023 VS குஜராத்
2023 VS குஜராத்
2024 VS குஜராத்
2025 VS குஜராத்
2025 VS பஞ்சாப் கிங்ஸ்
- நாங்கள் விரும்பிய வழியில் செயல்பட முடியவில்லை.
- என்னால் சரியான நேரத்தில் விக்கெட்களை எடுக்க முடியவில்லை.
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோற்று வெளியேறியதால் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஏமாற்றம் அடைந்தார். மைதானத்தில் அமர்ந்து அவர் துவண்டு போய் கண்ணீர் விட்டார்.
தோல்விக்கு தானே பொறுப்பேற்று கொள்வதாக அவர் தெரிவித்தார். தோல்வி குறித்து ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-
ஷ்ரேயாஸ் பேட்டிங் செய்த விதம், வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டது. அவர் விளையாடிய சில ஷாட்கள் மிகவும் சிறப்பாக இருந்தன. அவர்கள் நன்றாக பேட்டிங் செய்தார்கள். அவர்கள் மிகவும் நிதானமாக இருந்தார்கள். எங்களை அழுத்தத்தில் ஆழ்த்தினர். நாங்கள் விரும்பிய வழியில் செயல்பட முடியவில்லை. என்னால் சரியான நேரத்தில் விக்கெட்களை எடுக்க முடியவில்லை. தோல்விக்கு பொறுப்பேற்று கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஷ்ரேயஸ் 41 பந்துகளில் 87 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
- பும்ரா வீசிய யார்க்கர் பந்துகளை சிறப்பாக விளையாடிய ஷ்ரேயஸ் பவுண்டரிக்கு விளாசினார்.
நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழக்கு 203 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவரில் 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஷ்ரேயஸ் 41 பந்துகளில் 87 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
குறிப்பாக இந்த போட்டியில் பும்ரா வீசிய யார்க்கர் பந்துகளை சிறப்பாக விளையாடிய ஷ்ரேயஸ் பவுண்டரிகள் விளாசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. சொன்னபோனால் இதற்கு முன்பாக டெல்லி அணிக்கு விளையாடிய போதும் பும்ராவின் யார்க்கர் பந்துகளை இதே போல் ஷ்ரேயஸ் பவுண்டரிகள் அடித்துள்ளார்.
இந்நிலையில், "பும்ராவுக்கு எதிராக ஸ்ரேயஸ் விளையாடிய ஷாட் தான் இந்தாண்டு ஐபிஎல் தொடரின் மிகச் சிறந்த ஷாட்" என்று ஏபி டிவில்லியர்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய டிவில்லியர்ஸ், "பும்ராவின் யார்க்கர் பந்துகளை ஷ்ரேயஸ் விளையாடிய ஷாட் தான் இந்த ஆண்டு ஐபிஎல்-ன் சிறந்த ஷாட். பும்ரா வீசிய யார்க்கர் பந்துகளை நான் எதிர்கொண்டிருந்தால் என் மிடில் ஸ்டம்புகளை பந்து தாக்கியிருக்கும்.
ஸ்ரேயஸ் அடித்த சிக்ஸர்கள் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தன. அவரது தலை அசையாமல் இருந்தது. அவர் அமைதியாகவும், சமநிலையுடனும் இருக்கிறார். அவர் திமிர்பிடித்தவர் அல்ல. அதனால் எனக்கு அவரைப் பற்றி மிகவும் பிடிக்கும். எதிர்காலத்தில் அவர் இன்னும் அதிக ரன்களை குவிப்பார்" என்று பாராட்டினார்.
- மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அணி ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது
- இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியை பஞ்சாப் அணி எதிர்கொள்கிறது.
ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 2 மணி நேரம் தாமதமானது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழக்கு 203 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவரில் 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதனையடுத்து, பஞ்சாப் அணியின் வெற்றிக்கு வித்திட்ட கேப்டன் ஸ்ரேயஸ் உடன் அந்த அணியின் இணை உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா செல்ஃபி எடுத்துக்கொண்டார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அணி ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
- மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தரையில் உற்கார்ந்து சோகத்தில் மூழ்கினார்.
ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 2 மணி நேரம் தாமதமானது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழக்கு 203 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவரில் 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப்போட்டிக்கு செல்ல முடியாமல் தோல்வியை தழுவியதால் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தரையில் உற்கார்ந்து சோகத்தில் மூழ்கினார். இதனையடுத்து பஞ்சாப் வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ், பாண்ட்யாவுக்கு ஆறுதல் கூறினார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- ஐபிஎல் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக ரன்களைக் குவித்த மிடில் ஆர்டர் வீரர் என்ற சாதனையை சூர்யகுமார் படைத்தார்.
- நடப்பு ஐ.பி.எல் தொடரில் சூர்யகுமார் யாதவ் 717 ரன்களை அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 2 மணி நேரம் தாமதமானது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழக்கு 203 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவரில் 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில், இந்த போட்டியில் ஏபி டி வில்லியர்ஸின் 9 ஆண்டு கால சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சூர்யகுமார் யாதவ் முறியடித்துள்ளார்.
இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் 15 ரன்களை கடந்த போது, ஐபிஎல் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக ரன்களைக் குவித்த தொடக்க வீரர் அல்லாத வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
கடந்த 2016ம் ஆண்டு பெங்களூரு அணிக்காக விளையாடிய ஏபி டி வில்லியர்ஸ் 687 ரன்களைக் குவித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. நடப்பு ஐ.பி.எல் தொடரில் சூர்யகுமார் யாதவ் 717 ரன்கள் அடித்து இந்த சாதனையை முறியடித்துள்ளார்..
ஒரு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் எடுத்த மிடில் ஆர்டர் வீரர்
சூர்யகுமார் யாதவ் - 717 ரன்கள் (2025)
ஏபி டி வில்லியர்ஸ் - 687 ரன்கள் (2016)
ரிஷப் பண்ட் - 684 ரன்கள் (2018)
கேன் வில்லியம்சன் - 622 ரன்கள் (2018)
- 2024 ஆம் ஆண்டு ஸ்ரேயஸ் தலைமையிலான கொல்கத்தா அணி கோப்பையை வென்றது
- வேறு எந்த வீரரும் ஒன்றுக்கு மேற்பட்ட அணிகளை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றதில்லை.
ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 2 மணி நேரம் தாமதமானது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழக்கு 203 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவரில் 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றதன் மூலம் அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது, ஐபிஎல் வரலாற்றில் 3 வெவ்வேறு வெவ்வேறு அணிகளை இறுதிப்போட்டிக்குள் அழைத்து சென்ற ஒரே கேப்டன் என்ற மகத்தான சாதனையை அவர் படைத்துள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டு டெல்லி அணியையும், 2024ம் ஆண்டு கொல்கத்தா அணியையும், நடப்பு சீசனில் பஞ்சாப் அணியையும் ஸ்ரேயஸ் இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றுள்ளார். மேலும் தொடர்ச்சியான 2 ஐபிஎல் சீசன்களில் இரண்டு வெவ்வேறு அணிகளை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்ற ஒரே வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். வேறு எந்த வீரரும் ஒன்றுக்கு மேற்பட்ட அணிகளை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றதில்லை.
இதில், 2024 ஆம் ஆண்டு ஸ்ரேயஸ் தலைமையிலான கொல்கத்தா அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
- மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 200+ ரன்கள் அடித்த 18 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தனர்.
- மும்பை அணியின் இந்த மகத்தான சாதனைக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 2 மணி நேரம் தாமதமானது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவரில் 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 200+ ரன்கள் இலக்கை துரத்தி வெற்றி பெற்ற முதல் அணி என்ற சாதனையை பஞ்சாப் கிங்ஸ் அணி படைத்தது.
ஐபிஎல் வரலாற்றில் இதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 200+ ரன்கள் அடித்த 18 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தனர். அண்மையில் முடிந்த எலிமினேட்டர் போட்டியில் கூட முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 200+ ரன்கள் அடித்து வெற்றி பெற்றிருந்தது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த மகத்தான சாதனைக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
மேலும், ஐபிஎல் பிளேஆப் போட்டிகளில் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கும் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் நாக் அவுட் போட்டிகளில் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு:
204 - PBKS vs MI, அகமதாபாத், 2025*
200 - KKR vs PBKS, பெங்களூரு, 2014
191 - KKR vs CSK, சென்னை, 2012
189 - GT vs RR, கொல்கத்தா, 2022
179 - CSK vs SRH, மும்பை, 2018
- நேற்று நடந்த குவாலிபையர் 2 ஆட்டத்தில் பஞ்சாப் அணி மும்பையை வீழ்த்தியது.
- இதன்மூலம் பஞ்சாப் அணி ஐபிஎல் தொடரில் இரண்டாவது முறையாக இறுதிக்கு முன்னேறியது.
அகமதாபாத்:
ஐ,பி.எல். போட்டியில் பிளே ஆப் சுற்று கடந்த 29-ம் தேதி தொடங்கியது. குவாலிபையர் 1 ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை வெளியேற்றியது.
நேற்று நடந்த குவாலிபையர் 2 ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி
2வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில், அகமதாபாத்தில் நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ஆர்.சி.பி. அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது.
இதன்மூலம் எந்த அணி வென்றாலும் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்க்கது. இரு அணிகளும் வெற்றிபெற போராடும் என்பதால் இறுதிப்போட்டி ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையப் போவது நிச்சயம்.
- முதலில் ஆடிய மும்பை அணி 203 ரன்களைக் குவித்தது.
- அடுத்து ஆடிய பஞ்சாப் 207 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
அகமதாபாத்:
ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது.
மழை காரணமாக போட்டி 2 மணி நேரம் தாமதமானது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழக்கு 203 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 8 ரன்னில் அவுட்டானார். பேர்ஸ்டோவ் 24 பந்தில் 38 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 29 பந்தில் 44 ரன்னும், திலக் வர்மா 26 பந்தில் 44 ரன்னும் குவித்தனர். கடைசி கட்டத்தில் நமன் தீர் 18 பந்தில் 37 ரன் எடுத்து அவுட்டானார்.
இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் களமிறங்கியது. பிரப் சிம்ரன் சிங் 8 ரன்னும், பிரியான்ஷு ஆர்யா 20 ரன்னும் எடுத்தனர்.
3வது விக்கெட்டுக்கு ஜோஷ் இங்கிலிஸ், ஷ்ரேயஸ் அய்யர் ஜோடி இணைந்தது. இங்லிஸ் 21 பந்தில் 38 ரன்கள் எடுத்தார்.
அடுத்து இறங்கிய நேஹல் வதேரா ஷ்ரேயசுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 48 ரன்னில் அவுட்டானார்.
ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் ஷ்ரேயஸ் அய்யர் பொறுப்புடன் ஆடி சிக்சர், பவுண்டரிகளாக விளாசி அரை சதம் கடந்தார்.
இறுதியில், பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவரில் 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஷ்ரேயஸ் அய்யர் 41 பந்தில் 8 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 87 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.






