என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்- ஹர்திக் பாண்ட்யா
    X

    தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்- ஹர்திக் பாண்ட்யா

    • நாங்கள் விரும்பிய வழியில் செயல்பட முடியவில்லை.
    • என்னால் சரியான நேரத்தில் விக்கெட்களை எடுக்க முடியவில்லை.

    பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோற்று வெளியேறியதால் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஏமாற்றம் அடைந்தார். மைதானத்தில் அமர்ந்து அவர் துவண்டு போய் கண்ணீர் விட்டார்.

    தோல்விக்கு தானே பொறுப்பேற்று கொள்வதாக அவர் தெரிவித்தார். தோல்வி குறித்து ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-

    ஷ்ரேயாஸ் பேட்டிங் செய்த விதம், வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டது. அவர் விளையாடிய சில ஷாட்கள் மிகவும் சிறப்பாக இருந்தன. அவர்கள் நன்றாக பேட்டிங் செய்தார்கள். அவர்கள் மிகவும் நிதானமாக இருந்தார்கள். எங்களை அழுத்தத்தில் ஆழ்த்தினர். நாங்கள் விரும்பிய வழியில் செயல்பட முடியவில்லை. என்னால் சரியான நேரத்தில் விக்கெட்களை எடுக்க முடியவில்லை. தோல்விக்கு பொறுப்பேற்று கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×