என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

பும்ராவுக்கு எதிராக ஸ்ரேயஸ் ஆடிய ஷாட் தான் ஐபிஎல் தொடரின் மிகச்சிறந்த ஷாட் - டிவில்லியர்ஸ்
- ஷ்ரேயஸ் 41 பந்துகளில் 87 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
- பும்ரா வீசிய யார்க்கர் பந்துகளை சிறப்பாக விளையாடிய ஷ்ரேயஸ் பவுண்டரிக்கு விளாசினார்.
நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழக்கு 203 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவரில் 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஷ்ரேயஸ் 41 பந்துகளில் 87 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
குறிப்பாக இந்த போட்டியில் பும்ரா வீசிய யார்க்கர் பந்துகளை சிறப்பாக விளையாடிய ஷ்ரேயஸ் பவுண்டரிகள் விளாசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. சொன்னபோனால் இதற்கு முன்பாக டெல்லி அணிக்கு விளையாடிய போதும் பும்ராவின் யார்க்கர் பந்துகளை இதே போல் ஷ்ரேயஸ் பவுண்டரிகள் அடித்துள்ளார்.
இந்நிலையில், "பும்ராவுக்கு எதிராக ஸ்ரேயஸ் விளையாடிய ஷாட் தான் இந்தாண்டு ஐபிஎல் தொடரின் மிகச் சிறந்த ஷாட்" என்று ஏபி டிவில்லியர்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய டிவில்லியர்ஸ், "பும்ராவின் யார்க்கர் பந்துகளை ஷ்ரேயஸ் விளையாடிய ஷாட் தான் இந்த ஆண்டு ஐபிஎல்-ன் சிறந்த ஷாட். பும்ரா வீசிய யார்க்கர் பந்துகளை நான் எதிர்கொண்டிருந்தால் என் மிடில் ஸ்டம்புகளை பந்து தாக்கியிருக்கும்.
ஸ்ரேயஸ் அடித்த சிக்ஸர்கள் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தன. அவரது தலை அசையாமல் இருந்தது. அவர் அமைதியாகவும், சமநிலையுடனும் இருக்கிறார். அவர் திமிர்பிடித்தவர் அல்ல. அதனால் எனக்கு அவரைப் பற்றி மிகவும் பிடிக்கும். எதிர்காலத்தில் அவர் இன்னும் அதிக ரன்களை குவிப்பார்" என்று பாராட்டினார்.






