என் மலர்
நீங்கள் தேடியது "ஸ்ரேயஸ் அய்யர்"
- ஷ்ரேயஸ் 41 பந்துகளில் 87 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
- பும்ரா வீசிய யார்க்கர் பந்துகளை சிறப்பாக விளையாடிய ஷ்ரேயஸ் பவுண்டரிக்கு விளாசினார்.
நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழக்கு 203 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவரில் 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஷ்ரேயஸ் 41 பந்துகளில் 87 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
குறிப்பாக இந்த போட்டியில் பும்ரா வீசிய யார்க்கர் பந்துகளை சிறப்பாக விளையாடிய ஷ்ரேயஸ் பவுண்டரிகள் விளாசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. சொன்னபோனால் இதற்கு முன்பாக டெல்லி அணிக்கு விளையாடிய போதும் பும்ராவின் யார்க்கர் பந்துகளை இதே போல் ஷ்ரேயஸ் பவுண்டரிகள் அடித்துள்ளார்.
இந்நிலையில், "பும்ராவுக்கு எதிராக ஸ்ரேயஸ் விளையாடிய ஷாட் தான் இந்தாண்டு ஐபிஎல் தொடரின் மிகச் சிறந்த ஷாட்" என்று ஏபி டிவில்லியர்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய டிவில்லியர்ஸ், "பும்ராவின் யார்க்கர் பந்துகளை ஷ்ரேயஸ் விளையாடிய ஷாட் தான் இந்த ஆண்டு ஐபிஎல்-ன் சிறந்த ஷாட். பும்ரா வீசிய யார்க்கர் பந்துகளை நான் எதிர்கொண்டிருந்தால் என் மிடில் ஸ்டம்புகளை பந்து தாக்கியிருக்கும்.
ஸ்ரேயஸ் அடித்த சிக்ஸர்கள் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தன. அவரது தலை அசையாமல் இருந்தது. அவர் அமைதியாகவும், சமநிலையுடனும் இருக்கிறார். அவர் திமிர்பிடித்தவர் அல்ல. அதனால் எனக்கு அவரைப் பற்றி மிகவும் பிடிக்கும். எதிர்காலத்தில் அவர் இன்னும் அதிக ரன்களை குவிப்பார்" என்று பாராட்டினார்.
- மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அணி ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது
- இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியை பஞ்சாப் அணி எதிர்கொள்கிறது.
ஐ.பி.எல். தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 2 மணி நேரம் தாமதமானது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழக்கு 203 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவரில் 207 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதனையடுத்து, பஞ்சாப் அணியின் வெற்றிக்கு வித்திட்ட கேப்டன் ஸ்ரேயஸ் உடன் அந்த அணியின் இணை உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா செல்ஃபி எடுத்துக்கொண்டார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- ஒப்பந்த பட்டியலில் இருந்து இருவரின் பெயரும் நீக்கப்பட்டது.
- ரஞ்சி கோப்பையின் நான்கு, ஐந்தாம் நாள் போட்டிகளில் களமிறங்கவில்லை.
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் உள்ளூர் போட்டிகளிலும் விளையாட வேண்டியது அவசியம் என்று முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வாரிய உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். மேலும், இவ்வாறு செய்யாத பட்சத்தில் இந்திய அணியில் விளையாடுவதற்கான ஒப்பந்த பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
எனினும் ஸ்ரேயஸ் அய்யர் மற்றும் இஷான் கிஷன் உள்ளிட்ட வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதை தவிர்த்தனர். இதன் காரணமாக பி.சி.சி.ஐ. வெளியிட்ட இந்திய அணி வீரர்களின் ஒப்பந்த பட்டியலில் இருந்து இருவரின் பெயரும் நீக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஸ்ரேயஸ் அய்யர் ரஞ்சி கோப்பையில் விளையாடினார். ரஞ்சி கோப்பை போட்டிகளில் சிறப்பாக ஆடியதை தொடர்ந்து ஸ்ரேயஸ் அய்யர் பெயரை மீண்டும் ஒப்பந்த பட்டியலில் சேர்க்கலாமா என்று பி.சி.சி.ஐ. ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுதவிர ஸ்ரேயஸ் அய்யருக்கு முதுகு வலி ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக அவர் ஐ.பி.எல். தொடரின் சில போட்டிகளை விளையாட முடியாத சூழல் உருவாகலாம் என்றும் கூறப்பட்டது. முதுகு வலி காரணமாக ரஞ்சி கோப்பையின் நான்கு மற்றும் ஐந்தாம் நாள் போட்டிகளில் அவர் களமிறங்கவில்லை.
இது தொடர்பாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஸ்ரேயஸ் அய்யர் இந்த சீசனில் கொல்கத்தா அணிக்காக துவக்கத்தில் இருந்தே விளையாடுவார் என்று கூறப்படுகிறது. 2024 ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணி தனது முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை மார்ச் 23-ம் தேதி எதிர்கொள்கிறது.
- ஐ.பி.எல். அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
- நாங்கள் உங்களுக்கு கடினமான நேரத்தை கொடுத்திருக்கிறோம்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று (மே 26) இரவு 7.30 மணிக்கு துவங்க இருக்கிறது. சென்னை சேப்பாகத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற இருக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதும் இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ஐ.பி.எல். 2024 இறுதிப் போட்டியை ஒட்டி கொல்கத்த கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் மற்றும் ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் இடம்பெற்றுள்ள சிறப்பு வீடியோ ஐ.பி.எல். அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
வீடியோவில் பேசிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர், "அன்பார்ந்த பேட், இன்று. உனக்காக சிறு தகவலை தெரிவிப்பது மகிழ்வாக இருக்கும் என்று நினைக்கிறேன். முதலில், இந்த சீசனில் ஆரஞ்சு ஆர்மியை நீங்கள் சிறப்பாக வழிநடத்தி வந்துள்ளீர்கள் என்பதை நான் கூறிக் கொள்கிறேன். இந்த சீசனில் நாங்கள் உங்களுக்கு கடினமான நேரத்தை கொடுத்திருக்கிறோம்."
"ஒரே எதிரணியை வேறொரு களத்தில் நீங்கள் எதிர்கொண்டீர்கள் என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன். ஆனால், இன்று நீங்கள் எதிர்கொள்ள இருக்கும் நிறங்கள் உங்களுக்கு மிகவும் பரீட்சயமான பர்பில் மற்றும் கோல்டு ஆகும். பரபரப்பான இறுதிப்போட்டியில், சிறப்பான அணி வெல்லட்டும், இதன் மூலம் நான் நமது அணியை குறிப்பிடுகிறேன்," என்று தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், "சிறிய தகவலுக்கு நன்றி. நீங்கள் அருமையாக இருந்துள்ளீர்கள். நீங்கள் இருவரும் swag-க்கு எடுத்துக்காட்டாக இருந்துள்ளீர்கள். ஆனால், இந்த மைதானத்தில் எங்களின் சிறப்பான வெற்றியை பெற போகிறோம். கே.கே.ஆர். வீரர்களுக்கு எதை எதிர்பார்க்க வேண்டும் என்று தெரியும்."
"ஞாயிற்றுக் கிழமை வாருங்கள், இந்த சீசனில் நீங்கள் கடுமையான போட்டியை ஏற்படுத்தியதாக தெரிவித்தீர்கள், ஆனால் ஆரஞ்சு ஆர்மி தனது சிறப்பான ஆட்டத்தை இறுதிப்போட்டியில் வெளிப்படுத்த சேமித்து வைத்திருக்கிறது என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்," என்று தெரிவித்தார்.
- எங்கு சென்றாலும் எடுத்து செல்வேன் என தலைப்பிடப்பட்டு இருக்கிறது.
- கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்றாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் கொல்கத்தா அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
மூன்றாவது முறை கோப்பையை வென்ற கொல்கத்தா அணி வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில், கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் ஐ.பி.எல். கோப்பையுடன் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இது தொடர்பான பதிவில், "எங்கு சென்றாலும் எடுத்து செல்வேன்," என தலைப்பிடப்பட்டு இருக்கிறது.
பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி உலகக் கோப்பையை வென்றதும் கொண்டாடியதை போன்றே கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அந்த வரிசையில், தற்போது எங்கு சென்றாலும் கோப்பையுடன் செல்வேன் என்ற பாணியில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.






