என் மலர்
விளையாட்டு
- ஃபோப் லிட்ச்ஃபீல்ட் சதம் அடித்து அசத்தினார்.
- இந்திய தரப்பில் ஸ்ரேயங்கா பாட்டீல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மும்பை:
இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனைகளான ஃபோப் லிட்ச்ஃபீல்ட்- அலிசா ஹீலி களமிறங்கினர். இருவரும் இந்திய அணியின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர் கொண்டு ரன்களை குவித்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் விளாசினார்.
82 ரன்கள் இருந்த போது அலிசா ஹீலி அவுட் ஆனார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 189 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய ஃபோப் லிட்ச்ஃபீல்ட் சதம் அடித்து அசத்தினார். அவர் 119 ரன்கள் எடுத்திருந்த போது அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் ஸ்ரேயங்கா பாட்டீல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- அர்ஜென்டினா அணியில் இருந்து மெஸ்ஸி ஓய்வு பெற்ற பிறகு இந்த ஜெர்சி நம்பரை யாரும் பயன்படுத்த முடியாது.
- மெஸ்ஸியின் ஜெர்சி நம்பர் 10-க்கு அர்ஜென்டினா கால்பந்து வாரியம் ஓய்வு அறிவித்துள்ளது.
புவெனஸ் ஐரிஸ்:
கால்பந்து உலகின் நட்சத்திர வீரரும், அர்ஜென்டினா அணியின் கேப்டனுமான மெஸ்ஸியின் ஜெர்சி நம்பர் 10-க்கு அர்ஜென்டினா கால்பந்து வாரியம் ஓய்வு அறிவித்துள்ளது.
அர்ஜென்டினா அணியில் இருந்து மெஸ்ஸி ஓய்வு பெற்ற பிறகு இந்த ஜெர்சி நம்பரை யாரும் பயன்படுத்த முடியாது. இது அவருக்கு நாங்கள் அளிக்கும் கவுரவம் என அர்ஜென்டினா கால்பந்து வாரியத்தின் தலைவர் கிளாடியோ டாபியா தெரிவித்துள்ளார்.
கத்தாரில் 2022-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி கோப்பையை வென்றது. இதனால் அவருக்கு இந்த சிறப்பு வழங்கப்பட்டுள்ளது.
- முதல் இரு ஆட்டங்களில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
- இந்திய அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 16 ஆண்டுகள் ஆகிறது.
மும்பை:
இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரு ஆட்டங்களில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 16 ஆண்டுகள் ஆகிறது. அந்த நீண்ட கால சோகத்துக்கு இந்த ஆட்டத்திலாவது இந்தியா முடிவு கட்டுமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
- பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி நாளை சிட்னியில் தொடங்க உள்ளது.
- உங்களுக்கு அது போன்ற பை தான் வேண்டும் என நினைக்கிறேன்., என்னிடம் ஒரு பை உள்ளது, அதை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
சிட்னி:
ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தான் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் கடைசி போட்டி சிட்னியில் நாளை நடைபெற உள்ளது. அதற்காக மெல்போர்னில் இருந்து சிட்னிக்கு சென்ற போது இடையே அவரது பை காணாமல் போயுள்ளது.
அந்தப் பையில் டேவிட் வார்னரின் டெஸ்ட் போட்டிகளில் அணியும் தொப்பி உள்ளது. ஆஸ்திரேலிய வீரர்களை பொறுத்தவரை டெஸ்ட் போட்டிகளுக்கு என பிரத்யேகமாக அளிக்கப்படும் பச்சை நிற தொப்பி அவர்களுக்கு மிகப் பெரும் கவுரவமான ஒன்று.
திருடப்பட்ட அந்த பையில் அவரது இரண்டு பச்சை நிற தொப்பி உள்ளது. அதில் ஒன்று அவருக்கு முதன் முதலில் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆன போது அளிக்கப்பட்டது. அதை அணிந்து தன் கடைசி போட்டியில் ஆட வேண்டும் என நினைத்து இருந்த வார்னர் தற்போது சோகத்தில் இருக்கிறார்.
இந்த நிலையில் முகம் தெரியாத திருடனிடம் டேவிட் வார்னர் உருக்கமான வேணடுகோளை விடுத்து கோரிக்கை வைத்து இருக்கிறார் வார்னர்.
அவர் தனது பையை திரும்ப ஒப்படைக்குமாறு உருக்கமான வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். "என் லக்கேஜில் இருந்து என் பையை யாரோ ஒருவர் எடுத்து இருக்கிறார்கள். அதில் என் குழந்தைகளுக்கு வாங்கிய சில பரிசுப் பொருட்கள் உள்ளன. அதில் தான் என் பச்சை நிற தொப்பியும் உள்ளது. அது எனக்கு உணர்வுரீதியான ஒன்று. என் கடைசி டெஸ்ட் போட்டியில் அதை அணிந்து செல்ல வேண்டும் என விரும்புகிறேன். உங்களுக்கு அது போன்ற பை தான் வேண்டும் என நினைக்கிறேன்., என்னிடம் ஒரு பை உள்ளது, அதை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். உங்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது.
இவ்வாறு வார்னர் கூறினார்.
- உண்மையில் டெஸ்ட் கிரிக்கெட் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) கவலை இல்லை.
- நான் நியூசிலாந்தில் இருந்திருந்தால் இந்த டெஸ்ட் தொடரிலேயே விளையாடமாடடேன்.
சிட்னி:
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அடுத்த மாதம் நியூசிலாந்துக்கு சென்று 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. இதற்கான தென்ஆப்பிரிக்க அணியில் மார்க்ரம், ரபடா, யான்சென், இங்கிடி, கேஷவ் மகராஜ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை. அந்த சமயத்தில் உள்நாட்டில் தென்ஆப்பிரிக்க 20 ஓவர் லீக் போட்டி நடப்பதால் அதற்கான ஒப்பந்தத்தில் முன்னணி வீரர்கள் இருப்பதால், தேசிய அணியை தவிர்த்துள்ளனர். இதனால் இதுவரை சர்வதேச போட்டியில் ஆடாத நீல் பிராண்ட் என்ற வீரர் தலைமையில் 2-ம் தர அணி நியூசிலாந்துக்கு அனுப்பப்படுகிறது.
இதற்கு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், 'உண்மையில் டெஸ்ட் கிரிக்கெட் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) கவலை இல்லை. நான் நியூசிலாந்தில் இருந்திருந்தால் இந்த டெஸ்ட் தொடரிலேயே விளையாடமாடடேன். முன்னணி வீரர்கள் இன்றி விளையாடும் போட்டி எதற்கு என்று தெரியவில்லை.
நியூசிலாந்து கிரிக்கெட்டுக்கு அவர்கள் உரிய மரியாதை கொடுக்காத போது, எதற்காக விளையாட வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட் அழிவை நோக்கி செல்கிறதா என்று கேட்க வைக்கிறது. ஐ.சி.சி மற்றும் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இதில் ஐ.சி.சி.யோ அல்லது சம்பந்தப்பட்டவர்களோ விரைவில் தலையிடாவிட்டால் டெஸ்ட் கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட்டாகவே இருக்காது. ஏனெனில் நீங்கள் உங்களது திறமையை மிகச்சிறந்த வீரர்களுக்கு எதிராக சோதிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய் விடும். பெரிய கிரிக்கெட் வாரியங்கள் தங்களது வீரர்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஊக்குவிக்க வேண்டும்.' என்றார்.
- சென்னைக்கு அணிக்கு சேப்பாக்கம், மும்பை அணிக்கு வான்கடே, பஞ்சாப் அணிக்கு மொகாலி, கொல்கத்தா அணிக்கு ஈடன் கார்டன் சொந்த மைதானங்களாக இருக்கிறது.
- பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த ஐ.பி.எல். சீசனில் சொந்த மைதானத்தை மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
புதுடல்லி:
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலங்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியும் 18 லீக் போட்டியில் விளையாடும். இதில் 9 ஆட்டங்கள் சொந்த மைதானத்திலும், 9 போட்டிகள் எதிர் அணிகளின் மைதானத்திலும் நடை பெறும்.
சென்னைக்கு அணிக்கு சேப்பாக்கம், மும்பை அணிக்கு வான்கடே, பஞ்சாப் அணிக்கு மொகாலி, கொல்கத்தா அணிக்கு ஈடன் கார்டன் சொந்த மைதானங்களாக இருக்கிறது.
இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த ஐ.பி.எல். சீசனில் சொந்த மைதானத்தை மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மொகாலிக்கு பதில் பஞ்சாப் மாநிலம் முல்லான் பூரில் உள்ள மகாராஜா யத்விந்தர் சிங் சர்வதேச மைதானத்தை உள்ளூர் மைதானமாக மாற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி திட்டமிட்டுள்ளது. முல்லான்பூர் மைதானம் ரூ.230 கோடி செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தை பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகத்தினர் சமீபத்தில் பார்வையிட்டு சென்றனர்.
மொகாலியில் உள்ள ஐ.எஸ்.பிந்த்ரா மைதானத்தை விட முல்லான்பூர் ஸ்டேடியம் அதிக இருக்கைகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- 17 வயது சிறுமியை கற்பழித்த வழக்கில் சிக்கினார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் மீது பாலியல் புகார் எழுந்தது.
- கற்பழிப்பு வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரை குற்றவாளியாக அறிவித்து காத்மாண்டு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லமிச்சேன். சுழற்பந்து வீரரான அவர் 17 வயது சிறுமியை கற்பழித்த வழக்கில் சிக்கினார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் மீது பாலியல் புகார் எழுந்தது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.
கற்பழிப்பு வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரை குற்றவாளியாக அறிவித்து காத்மாண்டு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அவருக்கான தண்டனை விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சேன் மீதான தண்டனை விவரம் வருகிற 10-ந்தேதி அறிவிக்கப்படுகிறது. அவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
23 வயதான அவர் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்யவும் வாய்ப்பு இருக்கிறது.
- டெஸ்ட் கிரிக்கெட்டில் சுப்மன் கில் கொஞ்சம் அதிக ஆக்ரோஷத்துடன் விளையாடுவதாக நினைக்கிறேன்.
- இன்னும் கடினமாக உழைத்து எதிர்காலத்தில் சிறப்பாக ஆடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் 24 வயதான சுப்மன் கில் கடந்த ஆண்டில் ஒரு நாள் கிரிக்கெட்டில் 29 ஆட்டங்களில் ஆடி 5 சதம் உள்பட 1,584 ரன்கள் குவித்து கவனத்தை ஈர்த்தார்.
எதிர்பார்க்கப்பட்ட தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் அவர் சோபிக்கவில்லை. அவர் 2 மற்றும் 26 ரன்னில் வேகப்பந்து வீச்சில் வீழ்ந்தார். வெள்ளை நிற பந்தில் ஜொலிக்கும் சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதுவரை 19 டெஸ்டில் ஆடி 2 அரைசதம் உள்பட 994 ரன் எடுத்துள்ளார். கடைசி 7 இன்னிங்சில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.
இந்த நிலையில் அவருக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் (இந்தியா) டெஸ்டில் எப்படி ஆட வேண்டும் என்பது குறித்து சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
இது குறித்து கவாஸ்கர் கூறுகையில், 'டெஸ்ட் கிரிக்கெட்டில் சுப்மன் கில் கொஞ்சம் அதிக ஆக்ரோஷத்துடன் விளையாடுவதாக நினைக்கிறேன். ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆடுவதை காட்டிலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு சிறிது வித்தியாசம் உள்ளது. ஆனால் அவர் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி போன்றே டெஸ்டிலும் அதிரடியாக ஆட நினைக்கிறார்.
குறுகிய வடிவிலான போட்டிக்கு பயன்படுத்தப்படும் வெள்ளைநிற பந்தை விட டெஸ்ட் கிரிக்கெட்டுக்குரிய சிவப்பு நிற பந்து காற்றிலும், ஆடுகளத்திலும் வேகமாக நகரும். மேலும் சிவப்பு பந்து அதிகமாக பவுன்சும் ஆகும். அதை மனதில் வைத்து அவர் டெஸ்டிஸ் விளையாட வேண்டும்.
சுப்மன் கில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய போது, அவரது ஷாட்டுகள் எல்லாம் பாராட்டும்படி இருந்தது. மீண்டும் அவர் பார்முக்கு திரும்புவார் என்று நம்புகிறேன். இன்னும் கடினமாக உழைத்து எதிர்காலத்தில் சிறப்பாக ஆடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது' என்றார்.
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் கூறுகையில், 'சுப்மன் கில் 2023-ம் ஆண்டில் முதல் 9-10 மாதங்களில் நன்றாக ஆடினார். அதன் பிறகு தான் தடுமாறுகிறார். மறுமுனையில் ஆடும் ரோகித் சர்மா போன்ற வீரர்களிடம் அவர் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு வேளை உடல்நலம் பாதிப்பின் (டெங்கு காய்ச்சல்) காரணமாக இந்த தடுமாற்றம் வந்திருக்கலாம். சுப்மன் கில்லிடம் சூப்பர் திறமை இருக்கிறது. வருங்காலத்தில் இந்தியாவின் நட்சத்திர வீரராக இருப்பார். 2024-ம் ஆண்டு அவருக்கு நன்றாக அமையும் என்று நம்புகிறேன்' என்றார்.
- 9-வது லீக்கில் ஆடிய தமிழ் தலைவாசுக்கு இது 7-வது தோல்வியாகும்.
- பெங்களூரு புல்சுக்கு இது 4-வது வெற்றியாகும்.
நொய்டா:
12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது புரோ கபடி லீக் போட்டி தற்போது உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 50-வது லீக்கில் தமிழ் தலைவாஸ் அணி, முன்னாள் சாம்பியன் பெங்களூரு புல்சை எதிர்கொண்டது. இரு அணியினரும் மாறி மாறி புள்ளிகளை எடுத்ததால் ஒன்றிரண்டு புள்ளி வித்தியாசத்திலேயே போட்டி நகர்ந்தது.
கடைசி 2 நிமிடம் இருக்கும் போது தலைவாஸ் 36-33 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால் அந்த திடமான முன்னிலையை தக்க வைத்துக் கொள்ள தவறினர். கடைசி கட்டத்தில் அடுத்தடுத்து புள்ளிகளை திரட்டிய பெங்களூரு புல்ஸ் 38-37 என்ற புள்ளி கணக்கில் 'திரில்' வெற்றியை பெற்றது. பெங்களூரு அணியில் பாரத் 9 புள்ளியும், தலைவாஸ் அணியில் நரேந்தர் 12 புள்ளியும் எடுத்தனர்.
9-வது லீக்கில் ஆடிய தமிழ் தலைவாசுக்கு இது 7-வது தோல்வியாகும். சென்னையில் நடந்த லீக்கில் 4 ஆட்டங்களிலும் சறுக்கிய தமிழ் தலைவாசின் பரிதாபம் தொடருகிறது. பெங்களூரு புல்சுக்கு இது 4-வது வெற்றியாகும்.
மற்றொரு ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 51-42 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்சை தோற்கடித்து 6-வது வெற்றியை பெற்றதுடன் புள்ளி பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது.
இன்றைய லீக் ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ்- புனேரி பால்டன் (இரவு 8 மணி), உ.பி. யோத்தாஸ்- பாட்னா பைரட்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.
- 161 ஒருநாள் போட்டிகளில் 6932 ரன்கள் குவித்துள்ளார்.
- ஒரு போட்டியில் 179 ரன்கள் அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர இடது கை பேட்ஸ்மேனான டேவிட் வார்னரின் ஆட்டம் குறித்து சமீப காலமாக விமர்சனம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் முடிவடைந்ததும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சிட்னியில் 3-ந்தேதி தொடங்கும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிதான் அவரது கடைசி போட்டியாகும்.
இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. தொடக்க வீரரான வார்னர் சிறப்பான பங்களிப்பை அணிக்கு வழங்கினார்.
இரண்டு முறை உலகக்கோப்பையை வாங்கிய அணியில் இடம பிடித்துள்ளார். 161 ஒருநாள் போட்டிகளில் 6932 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 45.30 ஆகும். ஸ்டிரைக் ரேட் 97.26. ஒரு நாள் போட்டியில் 179 ரன்கள் அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். 22 சதங்கள், 33 அரைசதங்கள் அடித்துள்ளார்.
ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதாக தெரிவித்துள்ளார்.
- கனடாவில் நடைபெறும் கேன்டிடேட் செஸ் போட்டி மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும்.
- தமிழகத்தை சேர்ந்த உடன் பிறந்தவர்களான ஆர்.பிரக்ஞானந்தா, ஆர்.வைஷாலி ஆகியோர் தகுதி பெற்று இருந்தனர்.
சென்னை:
கேண்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் ஏப்ரல் 2-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடக்கிறது.
இதன் ஆண்கள் பிரிவில் 8 வீரர்களும், பெண்கள் பிரிவில் 8 பேரும் விளையாடுகிறார்கள். இதில் சாம்பியன் பட்டம் பெறும் வீரர், வீராங்கனை உலக செஸ் சாம்பியனை எதிர்கொள்வார்கள். சீனாவை சேர்ந்த டிங் லிரென் உலக செஸ் சாம்பியன் ஆவார். பெண்கள் பிரிவில் ஜூ வென்ஜுன் (சீனா) தற் போது உலக சாம்பியனாக உள்ளார்.
இதனால் கனடாவில் நடைபெறும் கேன்டிடேட் செஸ் போட்டி மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும்.
இந்த நிலையில் கனடாவில் நடைபெறும் கேன்டிடேட் செஸ் போட்டிக்கு சென்னையை சேர்ந்த டி.குகேஷ் தகுதி பெற்றுள்ளார்.
ஏற்கனவே தமிழகத்தை சேர்ந்த உடன் பிறந்தவர்களான ஆர்.பிரக்ஞானந்தா, ஆர்.வைஷாலி ஆகியோர் தகுதி பெற்று இருந்தனர். இந்த வரிசையில் 17 வயதான குகேசும் இணைந்துள்ளார்.
பீடே சர்க்கியூட் போட்டியில் அவர் 2-வது இடத்தை பிடித்தார். இதன்மூலம் குகேஷ் கேன்டிடேட் போட்டிக்கு தகுதி பெற்றார். அவர் சமீபத்தில் நடந்த சென்னை கிராண்ட் மாஸ்டர் போட்டியில் பட்டம் பெற்று இருந்தார்.
இதேபோல ஹம்பியும் கேன்டிடேட் செஸ் போட்டியின் பெண்கள் பிரிவுக்கு தகுதி பெற்றார். அவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். அதிக புள்ளிகளை பெற்றிருந்ததால் அவர் வாய்ப்பை பெற்றார்.
1991-ம் ஆண்டு விஸ்வ நாதன் ஆனந்த் மட்டுமே கேன்டிடேட் செஸ் போட் டிக்கு தகுதி பெற்றார். தற்போது அடுத்த ஆண்டு நடைபெறும் கேன்டிடேட் செஸ் போட்டியில் 5 இந்தி யர்கள் பங்கேற்கிறார்கள். ஆண்கள் பிரிவில் பிரக் ஞானந்தா, குகேஷ் (தமிழ் நாடு), விகித் குஜராத்தி (மராட்டியம்) பெண்கள் பிரிவில் வைஷாலி (தமிழ்நாடு), ஹம்பி (ஆந்திரா) ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
கேன்டிடேட் செஸ் போட்டிக்கு தகுதி பெற்ற வீரர், வீராங்கனைகள் வருமாறு:-
ஆண்கள்: பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி, குகேஷ் (இந்தியா) இயன் நேபோம்னி யாச்சி (ரஷியா), பேபினோ கருவானா, ஹிகாரு நகமுரா (அமெரிக்கா), நிஜாத் அபாசோவ் (அஜர்பை ஜான்), அலிரேசா பிர ஷஸ்ஜா (பிரான்ஸ்)
பெண்கள்: வைஷாலி, ஹம்பி (இந்தியா), லீ டிங்ஜி, டான் ஷோங்கி (சீனா), கேத்தரினா லாக்னோ, அலெக்சான்ட்ரோ கோரியச்சினா (ரஷியா), நூர்சி யுல் சலிமோவா (பல்கேரியா), அன்னா முஷிசெக் (உக்ரைன்).
- இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.
- முக்கிய நடுகள வீரர்களான ஜிக்சன் சிங், கிளான் மார்டின்ஸ் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை.
புதுடெல்லி:
ஆசியான் கோப்பை கால்பந்து போட்டி ஜனவரி 12-ந்தேதி முதல் பிப்ரவரி 10-ந்தேதி வரை கத்தாரில் நடக்கிறது.
இதில் 24 நாடுகள் பங்கேற்கிறார்கள். அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, உஸ்பெகிஸ்தான், சிரியா ஆகிய நாடுகளும் அந்த பிரிவில் உள்ளன.
'ஏ' பிரிவில் போட்டியை நடத்தும் கத்தார், சீனா, தஜிகிஸ்தான், லெபனான் அணிகளும், 'சி' பிரிவில் ஈரான், ஐக்கிய அரபு எமி ரேட்ஸ், ஆங்காங், பாலஸ் தீன், 'டி' பிரிவில் ஜப்பான், இந்தோனேசியா, ஈராக், வியட்னாம், 'இ' பிரிவில் தென்கொரியா, மலேசியா, ஜோர்டான், பக்ரைன், 'எப்' பிரிவில் சவுதி அரேபியா, தாய்லாந்து, கிர்கிஸ்தான், ஓமன் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
'லீக்' முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகளும் 3-வது இடத்தை பிடிக்கும் 4 சிறந்த அணிகளும் 'நாக் அவுட்' சுற்றுக்கு முன்னேறும். கத்தாரில் உள்ள 5 நகரங்களில் 9 மைதானங்களில் இந்த போட்டி நடை பெறுகிறது.
ஆசியான் கோப்பை கால் பந்து போட்டிகான 26 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய நடுகள வீரர்களான ஜிக்சன் சிங், கிளான் மார்டின்ஸ் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை.
அதேநேரத்தில் காயத்தில் இருந்து மீண்டுள்ள சஹல் அப்துல் சமத் அணியோடு இணைந்து உள்ளார்.
இந்திய அணி வீரர்கள் விவரம்:-
அமரிந்தர் சிங், குர்பிரீத் சிங் சாந்து, விஷால் சைத் (கோல் கீப்பர்கள்), ஆகாஸ் மிஸ்ரா, லால் சுங்னுங்கா, மெஹதாப் சிங், நிதில் புஜாரி, பிரித்தம் கோட்டல், ராகுல் பெகே, சந்தேஷ்ஜிங் கன், சுபாஷிஸ் போஸ் (பின்களம்), அணிருத் தாபா, பிராண் டன் பெர்னாண்டஸ், தீபக் தாங்ரி, லாலெங் மாவியா ரால்டே, லிஸ்டன் கொலாகோ, நாவ்ரெம் மகேஷ் சிங், சஹல் அப்துல் சமத், சுரேஷ் சிங், உதாந்த் சிங் (நடுகளம்), இஷான் பண்டிதா சாங்கே, மன்வீர் சிங், ராகுல் கனோலி பிரவீன், சுனில் சேத்ரி, விக்ரம் பிரதாப்சிங் (முன் களம்).
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 13-ந்தேதி எதிர் கொள்கிறது. உஸ்பெகிஸ்தானுடன் 18-ந்தேதியும், சிரியாவுடன் 23-ந்தேதியும் மோதுகிறது.






