search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Candidate Chess Tournament"

    • குகேசுக்கு தமிழக அரசு முழு ஆதரவை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது.
    • செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றிருப்பது தமிழகத்திற்கு உலக அளவில் பெருமை சேர்த்து இருக்கிறது.

    சென்னை:

    கனடாவில் நடந்த கேன்டிடேட் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற சென்னையை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் டி.குகேசுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி:

    தமிழ்நாட்டை சேர்ந்த குகேஷ் மிக இளம் வயதில் பீடே கேன்டிடேட் சர்வதேச போட்டியில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தமைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்:

    பீடே கேன்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் எலைட் விளையாட்டு வீரர் மற்றும் கிராண்ட்மாஸ்டர் டி.குகேசுக்கு வாழ்த்துக்கள். 17 வயதான சென்னையின் பெருமை இந்திய செஸ்சில் அபாரமான சாதனையை நிகழ்த்தியுள்ளது. விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு கேண்டிடேட்ஸ் போட்டியில் வெற்றி பெற்ற இரண்டாவது இந்திய வீரர் குகேஷ் ஆவார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக டிங்லிரனுக்கு சவால் விடும் வகையில் அவர் தயாராகும் அவருக்கு நல்வாழ்த்துக்கள். குகேசுக்கு தமிழக அரசு முழு ஆதரவை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது.

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை:

    17 வயதில் கேன்டிடேட் செஸ் போட்டியில் வெற்றி பெற்று உலக சரித்திரம் படைத்த கிராண்ட் மாஸ்டர் குகேசுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    உங்களது உறுதியும், விடா முயற்சியும் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது. செஸ் உலகில் மிகப்பெரிய இடத்தைப் பிடிக்க விரும்பும் அனைத்து இளம் திறமையாளர்களுக்கும் குகேஷ் உத்வேகமாக இருக்கிறார்.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் கேண்டி டேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றிருப்பது தமிழகத்திற்கு உலக அளவில் பெருமை சேர்த்து இருக்கிறது.

    17 வயதாகும் சென்னையைச் சேர்ந்த குகேஷ் உலக சாம்பியனுடன் போட்டியிட உள்ளார் என்பது தமிழகத்திற்கு பெருமையாக இருக்கிறது. இந்திய நாட்டிற்கு புகழ் சேர்க்கிறது. உலக அளவில் இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் குகேசை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பாராட்டி, வாழ்த்துகிறேன்.



    • சென்னை கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா மற்றும் விதித் குஜராத்தி ஆகியோர் 11-வது சுற்றில் தோல்வியை தழுவினார்கள்.
    • பிரக்ஞானந்தா 5.5 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், விதித் குஜராத்தி 5 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளனர்.

    டொராண்டோ:

    உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேண்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 5 பேர் பங்கேற்றுள்ளனர்.

    14 ரவுண்டுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 11-வது சுற்று ஒருநாள் ஓய்வுக்கு பிறகு நேற்று நடந்தது.

    சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ் இந்த சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த பேபியானோ கருணாவை எதிர் கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் இந்த போட்டியில் 40-வது காய் நகர்த்தலுக்கு பிறகு டிரா செய்தார். அவரது 7-வது டிராவாகும்.

    மற்றொரு சென்னை கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா மற்றும் விதித் குஜராத்தி ஆகியோர் 11-வது சுற்றில் தோல்வியை தழுவினார்கள். ஹிகாரு நகமுரா (அமெரிக்கா) பிரக்ஞானந்தாவையும், இயன் நெபோம்னியாச்சி (ரஷியா) விதித் குஜராத்தியையும் தோற்கடித்தனர்.

    11 சுற்றுகள் முடிவில் ரஷிய வீரர் இயன் நேபோம்னியாச்சி 7 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார். டி.குகேஷ், ஹிகாரு நகமுரா ஆகியோர் தலா 6.5 புள்ளியுடன் அதற்கு அடுத்த நிலைகளில் உள்ளனர.

    பிரக்ஞானந்தா 5.5 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், விதித் குஜராத்தி 5 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளனர். பேபியானோ 6 புள்ளியுடன் 4-வது இடத்திலும், அலிசேரா பிரவுசியா (பிரான்ஸ்) 4.5 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும், நிஜாத் அப்சோவ் (அஜர்பைஜான்) 3 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளனர்.

    பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை ஹம்பி. பல்கேரிய வீராங்கனை நூர்சிபால் சலிமோவை தோற்கடித்தார். இதன் மலம் அவர் 5.5 புள்ளியுடன் 3 முதல் 5-வது இடங்களில் உள்ளார்.

    மற்றொரு இந்திய வீராங்கனையான சென்னையை சேர்ந்தவருமான வைஷாலி 11-வது சுற்றில் ரஷியாவை அலெக்சான்ட்ரா சோரியாச்சினாவை அதிர்ச்சிகரமாக வீழ்த்தினார். வைஷாலி 4.5 புள்ளிகளுடன் 6 முதல் 7-வது இடங்களில் உள்ளார்.

    • கனடாவில் நடைபெறும் கேன்டிடேட் செஸ் போட்டி மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும்.
    • தமிழகத்தை சேர்ந்த உடன் பிறந்தவர்களான ஆர்.பிரக்ஞானந்தா, ஆர்.வைஷாலி ஆகியோர் தகுதி பெற்று இருந்தனர்.

    சென்னை:

    கேண்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் ஏப்ரல் 2-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடக்கிறது.

    இதன் ஆண்கள் பிரிவில் 8 வீரர்களும், பெண்கள் பிரிவில் 8 பேரும் விளையாடுகிறார்கள். இதில் சாம்பியன் பட்டம் பெறும் வீரர், வீராங்கனை உலக செஸ் சாம்பியனை எதிர்கொள்வார்கள். சீனாவை சேர்ந்த டிங் லிரென் உலக செஸ் சாம்பியன் ஆவார். பெண்கள் பிரிவில் ஜூ வென்ஜுன் (சீனா) தற் போது உலக சாம்பியனாக உள்ளார்.

    இதனால் கனடாவில் நடைபெறும் கேன்டிடேட் செஸ் போட்டி மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும்.

    இந்த நிலையில் கனடாவில் நடைபெறும் கேன்டிடேட் செஸ் போட்டிக்கு சென்னையை சேர்ந்த டி.குகேஷ் தகுதி பெற்றுள்ளார்.

    ஏற்கனவே தமிழகத்தை சேர்ந்த உடன் பிறந்தவர்களான ஆர்.பிரக்ஞானந்தா, ஆர்.வைஷாலி ஆகியோர் தகுதி பெற்று இருந்தனர். இந்த வரிசையில் 17 வயதான குகேசும் இணைந்துள்ளார்.

    பீடே சர்க்கியூட் போட்டியில் அவர் 2-வது இடத்தை பிடித்தார். இதன்மூலம் குகேஷ் கேன்டிடேட் போட்டிக்கு தகுதி பெற்றார். அவர் சமீபத்தில் நடந்த சென்னை கிராண்ட் மாஸ்டர் போட்டியில் பட்டம் பெற்று இருந்தார்.

    இதேபோல ஹம்பியும் கேன்டிடேட் செஸ் போட்டியின் பெண்கள் பிரிவுக்கு தகுதி பெற்றார். அவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். அதிக புள்ளிகளை பெற்றிருந்ததால் அவர் வாய்ப்பை பெற்றார்.

    1991-ம் ஆண்டு விஸ்வ நாதன் ஆனந்த் மட்டுமே கேன்டிடேட் செஸ் போட் டிக்கு தகுதி பெற்றார். தற்போது அடுத்த ஆண்டு நடைபெறும் கேன்டிடேட் செஸ் போட்டியில் 5 இந்தி யர்கள் பங்கேற்கிறார்கள். ஆண்கள் பிரிவில் பிரக் ஞானந்தா, குகேஷ் (தமிழ் நாடு), விகித் குஜராத்தி (மராட்டியம்) பெண்கள் பிரிவில் வைஷாலி (தமிழ்நாடு), ஹம்பி (ஆந்திரா) ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

    கேன்டிடேட் செஸ் போட்டிக்கு தகுதி பெற்ற வீரர், வீராங்கனைகள் வருமாறு:-

    ஆண்கள்: பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி, குகேஷ் (இந்தியா) இயன் நேபோம்னி யாச்சி (ரஷியா), பேபினோ கருவானா, ஹிகாரு நகமுரா (அமெரிக்கா), நிஜாத் அபாசோவ் (அஜர்பை ஜான்), அலிரேசா பிர ஷஸ்ஜா (பிரான்ஸ்)

    பெண்கள்: வைஷாலி, ஹம்பி (இந்தியா), லீ டிங்ஜி, டான் ஷோங்கி (சீனா), கேத்தரினா லாக்னோ, அலெக்சான்ட்ரோ கோரியச்சினா (ரஷியா), நூர்சி யுல் சலிமோவா (பல்கேரியா), அன்னா முஷிசெக் (உக்ரைன்).

    ×