என் மலர்
விளையாட்டு
- இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி மவுண்ட்மாங்கானுவில் நடைபெற்றது.
- முதலில் பேட் செய்த வங்காளதேசம் 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
மவுண்ட்மாங்கானு:
வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நடைபெற்றது. முதல் டி20 போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்றது. 2வது போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதனால் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வங்காளதேசம் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி மவுண்ட்மாங்கானுவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 19.2 ஓவர்களில் 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
நியூசிலாந்து சார்பில் சாண்ட்னர் 4 விக்கெட்டும், சவுத்தி, மில்னே, பென் சீயர்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
தொடந்து 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இறங்கிய நியூசிலாந்து 14.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது..
தொடர்ந்து மழை பெய்ததால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி நியூசிலாந்து 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் 1-1 என சமனிலையில் முடிந்துள்ளது.
சாண்ட்னர் ஆட்ட நாயகன் விருதும், ஷோரிபுல் இஸ்லாம் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.
- டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
- இந்தியா தரப்பில் தீப்தி சர்மா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மும்பையில் நடந்த ஒரே டெஸ்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை முதல்முறையாக தோற்கடித்து வரலாறு படைத்தது. தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி ஆஸ்திரேலிய அணியின் வீராங்கனைகளான ஃபோப் லிட்ச்ஃபீல்ட் மற்றும் எல்லிஸ் பெர்ரி ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினார். மற்ற வீராங்கனைகள் தீப்தி சர்மா பந்து வீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். போட்டி முடிவில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் தீப்தி சர்மா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதைத் தொடர்ந்து 259 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணிக்கு யாஸ்திகா பாட்டியா மற்றும் ஸ்மிருதி மந்தனா முறையே 14 மற்றும் 34 ரன்களை எடுத்து சுமாரான துவக்கத்தை கொடுத்தனர். அடுத்து களமிறங்கிய ரிச்சா கோஷ் பொறுப்பாக விளையாடி 96 ரன்களை குவித்தார். இவருடன் விளையாடிய ரோட்ரிக்ஸ் 44 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி கடைசி ஓவரில் எட்டி விக்கெட்டுகளை இழந்து 255 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய சதர்லாந்து மூன்று விக்கெட்டுகளையும், ஜார்ஜியா வார்ஹெம் 2 விக்கெட்டுகளையும், ஆஷ்லி கார்ட்னர், டார்சி பிரவுன் மற்றும் அலானா கிங் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- 2-வது டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 3-ந் தேதி தொடங்குகிறது.
- முதல் டெஸ்ட் போட்டியின்போது தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் இடுப்பு பகுதியில் காயம் அடைந்தார்.
கேப்டவுன்:
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1 -0 என முன்னிலையில் உள்ளது. 2-வது டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 3-ந் தேதி தொடங்குகிறது.
இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டியின்போது தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி இடுப்பு பகுதியில் காயம் அடைந்தார். எனினும் காயத்தை பொருட்படுத்தாமல் அவர் பந்து வீசினார். இதனால் காயம் தீவிரமானது. இதன்காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் அவரை அணியில் இருந்து விடுவித்துள்ளார்.
எனினும் அவருக்கு பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா காயம் காரணமாக விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது
- ஆஸ்திரேலியா தரப்பில் ஃபோப் லிட்ச்ஃபீல்ட் மற்றும் எல்லிஸ் பெர்ரி ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினார்.
- இந்திய தரப்பில் தீப்தி சர்மா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மும்பையில் நடந்த ஒரே டெஸ்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை முதல்முறையாக தோற்கடித்து வரலாறு படைத்தது. தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி ஆஸ்திரேலிய அணியின் வீராங்கனைகளான ஃபோப் லிட்ச்ஃபீல்ட் மற்றும் எல்லிஸ் பெர்ரி ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினார். மற்ற வீராங்கனைகள் தீப்தி சர்மா பந்து வீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.
That moment when Shreyanka Patil scalped her first wicket in ODIs on debut#TeamIndia | #INDvAUS | @shreyanka_patil | @IDFCFIRSTBank pic.twitter.com/tYD65fd8qx
— INDIA CRICKET TEAM ? (@V_D_Brother) December 30, 2023
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் தீப்தி சர்மா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
- 2-வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3-ந் தேதி தொடங்குகிறது.
ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. கடந்த 26-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 318 ரன்கள் சேர்த்த நிலையில், பாகிஸ்தான் 264 ரன்னில் சுருண்டது.
பின்னர் 54 ரன்கள் முன்னிலைப் பெற்ற ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 262 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு 317 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
317 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 237 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3-ந் தேதி தொடங்குகிறது.
2-வது டெஸ்ட் போட்டியின் போது ஸ்மித் - பாபர் அசாம் குறித்த ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மைதானத்தில் களமிறங்கும் பேட்டர்கள் ஸ்டெம்ப் பக்கத்தில் நின்று லெக் ஸ்டெம்ப் மற்றும் நடு ஸ்டெம்ப் திசையில் சரியாக நிற்கிறேனா என்பதை நடுவரிடம் கேட்டு அதற்கு ஏற்றார்போல் மார்க் பண்ணுவார்கள்.
அந்த வகையில் பாபர் அசாம் ஆடுகளத்திற்கு வந்து ஸ்டெம்ப் பக்கத்தில் நின்று நடுவரிடம் கேட்பார். அப்படி எடுக்கும் போது ஸ்டெம்ப் பின்னால் நின்ற ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் ஏதோ (சரியாவே எடுக்க தெரியல என்பது போல) கூறினார். உடனே பாபர் அசாம் பேட்டை நீட்டி ஏதோ (நீ எடுத்து கொடுக்கிறாயா என்பது போல) கூறினார். உடனே ஸ்மித் கையெடுத்து கும்பிட்டு ஆள விடு சாமி என்பது போல சென்றார்.
பேட்டர்கள் இப்படி எடுக்க வரும் போது எல்லாம் ஸ்மித் இது மாதிரி எதாவது சொல்லுவது வழக்கமாக கொண்டுள்ளார். அதற்கும் மேலாக அவர்கள் மார்க் செய்து வச்ச இடத்தை தடம் தெரியாத மாதிரி அழித்து விடவும் செய்துள்ளார். அந்த வகையில் இது நடந்துள்ளது. ஆனால் இது சற்று வித்தியாசமாக ரசிகர்களை கவர்ந்துள்ளது.
- கடந்த 2018, 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் சந்தீப் லமிச்சனே இடம் பெற்றிருந்தார்.
- காத்மண்டுவில் உள்ள ஹோட்டலில் 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.
பாகிஸ்தான் மற்றும் இலங்கை நடத்திய ஆசிய கோப்பை தொடரில் நேபாள் அணியில் இடம் பெற்று விளையாடியவர் சந்தீப் லமிச்சனே. இவர் கடந்த 2022-ம் ஆண்டு காத்மண்டுவில் உள்ள ஹோட்டலில் 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகார் கூறப்பட்டபோது சந்தீப் லமிச்சனே வெஸ்ட் இண்டீஸில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அதன் பிறகு அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் மறுப்பு தெரிவித்தார்.
பாலியல் புகார் கூறப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு, சில மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். எனினும் நேபாள் அணியில் இடம் பெற்று விளையாடி வந்தார்.
இந்த நிலையில் தான் அவர் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதில், அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டது. மேலும், வரும் ஜனவரி மாதம் அவருக்கான தண்டனை விவரங்கள் குறித்து அறிவிக்கபட உள்ளது.
ஆசிய கோப்பை தொடரில் நேபாள் அணியில் விளையாடிய 2 போட்டியிலும் தோல்வி அடைந்து ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது. நேபாள் அணியில் இடம் பெற்று விளையாடி வரும் சந்தீப் இதுவரையில் 51 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 112 விக்கெட்டுகளையும், 52 டி20 போட்டிகளில் விளையாடி 98 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.
கடந்த 2018, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு இவர் இடம் பெற்றார். 2018-ம் ஆண்டில் 3 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளும், 2019-ம் ஆண்டுகளில் 6 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளும் கைப்பற்றினார். அதன் பிறகு ஐபிஎல் தொடரில் இடம் பெறவில்லை.
- முதல் டெஸ்ட் போட்டியில் முதுகுப்பிடிப்பு காரணமாக ரவீந்திர ஜடேஜா இடம் பெறவில்லை.
- ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக தான் ஜடேஜா இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியானது கடந்த 26 ஆம் தேதி செஞ்சூரியனில் நடந்தது. இதில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 245 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 408 ரன்கள் குவித்தது.
இதில், டீன் எல்கர் அதிகபட்சமாக 185 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதையடுத்து 163 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸ் செய்தது. ஆனால், இதில், தென் ஆப்பிரிக்கா பவுலர்களின் வேகத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியாக விராட் கோலி மட்டுமே 76 ரன்கள் எடுக்க, இந்திய அணி 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 32 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது.
இதுவரையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி ஒருமுறை கூட கைப்பற்றவில்லை. ஆனால், இந்த முறை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிலேயும் இந்திய அணி கோட்டைவிட்டது. 2-வது போட்டியில் எப்படியும் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் முதுகுப்பிடிப்பு காரணமாக இடம் பெறாத ரவீந்திர ஜடேஜா, 2-வது போட்டியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அவர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக தான் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது. ஜடேஜா தற்போது கேப்டவுனில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
- டெஸ்ட் சாம்பியன்ஷிப் டிராபியை கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.
- பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி ஒருநாள் உலகக் கோப்பை தொடரை வென்றது.
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவில் பேட் கம்மின்ஸ் அதிக தொகைக்கு ஏலம் போனார். ரூ.20.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணி ஏலம் எடுத்தது.
இவர் இவ்வளவு தொகைக்கு தகுதி ஆனவரா என்பது குறித்து கருத்து சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இந்நிலையில் அவர் அந்த தொகைக்கு தகுதியானவர் என்பது போல அவரது பல சாதனைகளை இந்த ஆண்டு படைத்துள்ளார். ஆஸ்திரேலிய கேப்டனான பேட் கம்மின்ஸ் தலைமையில் தொடர்ச்சிய ஐசிசி கோப்பைகளை வென்று சாதித்துள்ளது.
இவர் தலைமையிலான முதலில் டெஸ்ட் சாம்பியன் டிராபியை கைப்பற்றியது. இந்தியா - ஆஸ்திரேலிய மோதிய இறுதி ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன்களும் இந்தியா 296 ரன்களும் எடுத்தது. அடுத்து 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 270 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் இந்தியாவுக்கு 444 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனை சேஸ் செய்த இந்திய அணி 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் டிராபியை ஆஸ்திரேலியா தட்டிச் சென்றது.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு ரூ.13.2 கோடியும், இந்திய அணிக்கு ரூ.6.5 கோடியும் பரிசு தொகை வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இங்கிலாந்தில் ஆஷஸ் தொடர் நடைபெற்றது. முதல் 2 டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவும் கடைசி 2 டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 3-வது டெஸ்ட் டிரா ஆனது. இதன்மூலம் தொடர் சமனில் முடிந்தது. இருந்தாலும் இங்கிலாந்து அணிக்கு மிகவும் நெருக்கடியை கொடுத்ததாக முன்னாள் வீரர்கள் பலரும் அவரை பாராட்டினர்.
இதனையடுத்து நடந்த ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதலில் தடுமாறிய ஆஸ்திரேலிய அணி கடைசி வரை போராடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த இறுதிப் போட்டியிலும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெற்று உலகக் கோப்பையை கைப்பற்றியது.

இதமட்டுமல்லாமல் தற்போது நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது டெஸ்ட்டில் அவர் 10 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
டெஸ்டில் ஆஸ்திரேலிய கேப்டன் ஒருவர் 10 விக்கெட் எடுப்பது இது 2-வது முறையாகும். இதற்கு முன்பு 1989-ம் ஆண்டு சிட்னியில் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் ஆலன் பார்டர் 11 விக்கெட் எடுத்திருந்தார். கம்மின்ஸ் இதுவரை 252 விக்கெட் (57 டெஸ்ட்) கைப்பற்றி இருக்கிறார். டெஸ்டில் 250-க்கு மேல் விக்கெட் வீழ்த்திய 10-வது ஆஸ்திரேலிய பவுலர் ஆவார்.
இந்த ஆட்டத்தில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில், '2023-ம்ஆண்டு எங்களுக்கு நம்ப முடியாத ஒரு ஆண்டாக அமைந்தது. நிறைய கிரிக்கெட்.... நிறைய வெற்றி (உலகக் கோப்பை உள்பட). திரும்பி பார்க்கும் போது, 2023 சிறப்பு வாய்ந்த ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும். என்றார்.
- ஜிம்பாப்வே அணி அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
- இந்த தொடர் அடுத்த மாதம் 6-ம் தேதி தொடங்குகிறது.
காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரை தவற விட்ட ஹசரங்கா தற்போது காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். இதனால் அடுத்த வரும் தொடர்களில் அவரை காணலாம். அடுத்த மாதம் ஜிம்பாப்வே அணி 3 ஒருநாள் , 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கைக்கு வர உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 6-ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான இலங்கை அணியின் டி20 கேப்டனாக வனிந்து ஹசரங்காவும் ஒருநாள் கேப்டனாக குசல் மெண்டீஸ் நியமிக்கப்பட்டுள்ளனர். இருவரும் ஜிம்பாப்வே தொடரில் இருந்து கேப்டன்களாக செயல்பட உள்ளனர்.
- ஆஸ்திரெலியாவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது.
- ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி ஜனவரி 3-ந் தேதி தொடங்குகிறது.
பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இதில் முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்திலும் 2-வது டெஸ்ட்டில் 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
2 டெஸ்ட்டில் ஏற்பட்ட தோல்வியின் மூலம் பாகிஸ்தான் அணி மோசமான சாதனையை படைத்துள்ளது. பாகிஸ்தான் அணி 1999-ம் ஆண்டு சுற்றுப்பயணத்தில் இருந்து ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற்றதில்லை. அங்கு தொடர்ந்து 16 டெஸ்டுகளில் தோற்று இருக்கிறது.
ஒரு நாட்டில் தொடர்ச்சியாக அதிக டெஸ்டுகளில் தோற்று பரிதாபத்திற்குரிய அணியாக பாகிஸ்தான் திகழ்கிறது. இதற்கு முன்பு வங்காளதேசம் சொந்த மண்ணில் தொடர்ந்து 13 டெஸ்டில் தோற்று இருந்தது.
- 84 டெஸ்ட் போட்டிகளில் 342 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
- 121 ஒருநாள் போட்டிகளில் 236 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் சர்வதேச கிரிக்கெட்டில் 650 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் (2 மற்றும் 3) வீழ்த்திய ஸ்டார்க், 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 263 போட்டியில் 651 விக்கெட்டுகள் சாய்த்து சாதனைப் படைத்தார்.
சர்வதேச போட்டியில் அவரது சிறந்த பந்து வீச்சு 28 ரன் கொடுத்து 6 விக்கெட் சாய்த்ததாகும். 23 முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இரண்டு முறை 10 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார்.
651 விக்கெட்டுகள் மூலம் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 4-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். வார்னே 1001 விக்கெட்டுகள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளது.
ஸ்டார்க் 84 டெஸ்ட் போட்டிகளில் 342 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 50 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்து வீச்சாககும். டெஸ்ட் போட்டியில் 14 முறை ஐந்து விக்கெட், இரண்டு முறை 10 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
121 ஒருநாள் போட்டிகளில் 236 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்து வீச்சாகும். 9 முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் 58 போட்டிகளில் 73 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
- முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன் வித்தியாசத்தில் இந்திய அணியை தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியது.
- 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1 -0 என முன்னிலையில் உள்ளது.
கேப்டவுன்:
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் 1-1 என டிராவில் முடிந்தது. ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் கடந்த 26ம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1 -0 என முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக இந்திய அணிக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைக்கான புள்ளிப்பட்டியலில் இரண்டு புள்ளிகளும் குறைக்கப்பட்டுள்ளது.






