என் மலர்
விளையாட்டு
- 84 டெஸ்ட் போட்டிகளில் 342 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
- 121 ஒருநாள் போட்டிகளில் 236 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் சர்வதேச கிரிக்கெட்டில் 650 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் (2 மற்றும் 3) வீழ்த்திய ஸ்டார்க், 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 263 போட்டியில் 651 விக்கெட்டுகள் சாய்த்து சாதனைப் படைத்தார்.
சர்வதேச போட்டியில் அவரது சிறந்த பந்து வீச்சு 28 ரன் கொடுத்து 6 விக்கெட் சாய்த்ததாகும். 23 முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இரண்டு முறை 10 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார்.
651 விக்கெட்டுகள் மூலம் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 4-வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். வார்னே 1001 விக்கெட்டுகள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளது.
ஸ்டார்க் 84 டெஸ்ட் போட்டிகளில் 342 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 50 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்து வீச்சாககும். டெஸ்ட் போட்டியில் 14 முறை ஐந்து விக்கெட், இரண்டு முறை 10 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
121 ஒருநாள் போட்டிகளில் 236 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்து வீச்சாகும். 9 முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் 58 போட்டிகளில் 73 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
- முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன் வித்தியாசத்தில் இந்திய அணியை தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியது.
- 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1 -0 என முன்னிலையில் உள்ளது.
கேப்டவுன்:
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் 1-1 என டிராவில் முடிந்தது. ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் கடந்த 26ம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1 -0 என முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக இந்திய அணிக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைக்கான புள்ளிப்பட்டியலில் இரண்டு புள்ளிகளும் குறைக்கப்பட்டுள்ளது.
- முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.
- பவுமா காயம் காரணமாக 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோகன்னஸ்பர்க்:
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தொடக்க ஆட்டக்காரருமான டீன் எல்கர் 2012-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகமானார். இதுவரை 84 டெஸ்ட் போட்டியில் விளையாடி 13 சதம், 23 அரைதம் உள்பட 5,146 ரன்கள் எடுத்துள்ளார். 19 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாகவும் இருந்து இருக்கிறார். 2018-ம் ஆண்டுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கிய அவர் 8 ஒருநாள் போட்டியிலும் ஆடியுள்ளார்.
36 வயதான டீன் எல்கர் இந்த தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து டீன் எல்கர் கூறுகையில், 'கிரிக்கெட் ஆடுவது எப்போதும் எனது கனவாக இருந்து வந்தது. ஆனால் உங்கள் நாட்டு அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெறுவது ஆகச்சிறந்ததாகும்.இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் அழகான விளையாட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். உலகில் எனக்கு மிகவும் பிடித்தமான மைதானமான கேப்டவுனில் எனது முதல் ரன்னை எடுத்தேன். அதே மைதானத்தில் எனது கடைசி ஆட்டத்திலும் ஆடுகிறேன்' என்றார்.
ஓய்வு அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் எல்கர் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரின் ஓய்வுக்கு மரியாதை கொடுக்கும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் இதனை தெரிவித்துள்ளது.
பவுமா காயம் காரணமாக 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி மவுண்ட்மாங்கானுவில் இன்று நடைபெற்றது.
- முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 11 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.
வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் முதலாவது டி20 போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி மவுண்ட்மாங்கானுவில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி 11 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.
இதனையடுத்து போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் தொடரில் 1-0 என்ற கணக்கில் வங்காளதேசம் முன்னிலையில் இருக்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி வருகிற 31-ந் தேதி நடைபெறுகிறது.
இதில் வங்காளதேசம் வெற்றி பெற்றால் முதல் முறையாக நியூசிலாந்து மண்ணில் முதல் முறையாக டி20 தொடரை கைப்பற்றி வரலாறு படைக்க முடியும்.
- விஜயகாந்த் மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் என பல தரப்பட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- இந்திய அணி வீரரும் தமிழக வீரருமான வாஷிங்டன் சுந்தர் மறைந்த விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகரும் தே.மு.தி.க. நிறுவன தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (டிசம்பர் 28) காலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் என பல தரப்பட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணி வீரரும் தமிழக வீரருமான வாஷிங்டன் சுந்தர் மறைந்த விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், கேப்டன் அனைவரும் உங்களை மிஸ் பண்ணுவாங்க. RIP என பதிவிட்டிருந்தார்.
விஜயகாந்தின் உடல் சென்னை, அண்ணா சாலை அருகே உள்ள தீவுத்திடலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இவரது உடல் மதியம் 1 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தே.மு.தி.க. அலுவலகத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.
- முதல் டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ந் தேதி தொடங்குகிறது.
தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகள் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி 26-ந் தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதை தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 408 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து 163 ரன்கள் பின் தங்கிய நிலையில் களமிறங்கிய இந்தியா 131 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஆவேஷ் கான் இடம் பிடித்துள்ளார். தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் சீனியர் வீரரான முகமது சமி இடம் பிடித்த நிலையில் அவருக்கு காயம் ஏற்பட்டதால் இந்த தொடரில் இருந்து விலகினார். இதனையடுத்து அவருக்கு பதிலாக ஆவேஷ் கான் இந்த தொடரில் இணைந்துள்ளார்.
இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ந் தேதி தொடங்குகிறது.
- பாகிஸ்தான் அணி 237 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
- ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. கடந்த 26-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 318 ரன்கள் சேர்த்த நிலையில், பாகிஸ்தான் 264 ரன்னில் சுருண்டது.
பின்னர் 54 ரன்கள் முன்னிலைப் பெற்ற ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிறகு 187 ரன்கள் எடுத்திருந்தது. அலேக்ஸ் கேரி 16 ரன்களுடன் களத்தில் இருந்தார். இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய அலேக்ஸ் கோரி 53 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் ஆஸ்திரேலியா 262 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பாகிஸ்தான் அணி சார்பில் ஷாஹீன் அப்ரிடி, மிர் ஹம்சா ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலியா 316 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு 317 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
317 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் விளையாடியது. தொடக்க வீரர்கள் சபீக் 4 ரன்னிலும் இமாம் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து கேப்டன் மசூத்- பாபர் அசாம் ஜோடி நிதானமாக விளையாடினர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மசூத் 60 ரன்களில் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து பாபர் அசாம் 41 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் சகீல் 24, ரிஸ்வான் 35, சல்மான் 50, ஜமால் 0, அஃப்ரிடி 0, ஹம்சா 0 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
இதனால் பாகிஸ்தான் அணி 237 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3-ந் தேதி தொடங்குகிறது.
- தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவை இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
- 2-வது இன்னிங்சில் விராட் கோலி 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தென் ஆப்பிரிக்கா, இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடர்ந்த தென் ஆப்பிரிக்கா அணி, 408 ரன்களை குவித்து ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து இந்திய அணி 163 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கியது.
முதலில் இருந்தே விக்கெட்டுகளை பறிகொடுத்த இந்தியா 131 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவை இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தியா சார்பில் சிறப்பாக ஆடிய விராட் கோலி 76 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். தென் ஆப்பிரிக்கா சார்பில் சிறப்பாக பந்துவீசிய பர்கர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், யென்சென் 3 விக்கெட்டுகளையும், ரபாடா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
2-வது இன்னிங்சில் 76 ரன்கள் குவித்ததன் மூலம் 146 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி புதிய சாதனையை படைத்துள்ளார். ஒரு காலண்டர் ஆண்டில் 7-வது முறையாக 2000 ரன்களுக்கு மேல் ரன்கள் குவித்த ஓரே வீரர் என்ற பெருமையை விராட் கொலி பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு 2012 (2186 ரன்கள்), 2014 (2286 ரன்கள்), 2016 (2595 ரன்கள்), 2017 (2818 ரன்கள்), 2018 (2735 ரன்கள்) மற்றும் 2019 (2455 ரன்கள்) ஆகிய ஆண்டுகளில் இந்த சாதனையை அவர் செய்திருந்தார். 1877-ல் முதன்முதலாக சர்வதேச கிரிக்கெட் விளையாடப்பட்டதிலிருந்து வேறு எந்த வீரரும் இந்த சாதனையை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- தேசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டி தேதியை அறிவித்ததில் எந்த விதியையும் மீறவில்லை.
- தேசிய சாம்பியன்ஷிப்பை இந்த ஆண்டில் நடத்தாவிட்டால், அது வருங்கால இளம் வீரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
புதுடெல்லி:
பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் வீரர், வீராங்கனைகளின் போராட்டம் எதிரொலியாக பொறுப்பில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து கடந்த 21-ந்தேதி டெல்லியில் நடந்த இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தலில் புதிய தலைவராக பிரிஜ் பூஷனின் நெருங்கிய ஆதரவாளர் சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டார். பிரிஜ் பூஷனின் ஆதரவாளர்கள் யாரும் மல்யுத்த சம்மேளனத்தில் இருக்கக்கூடாது என்பதில் விடாப்பிடியாக இருக்கும் வீரர்கள் அவருக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரான பஜ்ரங் பூனியா, காமன்வெல்த் விளையாட்டு சாம்பியன் வினேஷ் போகத் ஆகியோர் மத்திய அரசு வழங்கிய விருது, பதக்கங்களை திருப்பி அளிக்கப் போவதாக அதிரடியாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
சஞ்சய் சிங்குக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்ததால் வேறு வழியின்றி புதிய நிர்வாகிகளை கொண்ட இந்திய மல்யுத்த சம்மேளனத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை மத்திய விளையாட்டு அமைச்சகம் இடைநீக்கம் செய்தது. வீரர்களுக்கு போதிய அவகாசம் வழங்காமல் ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியை இந்த மாத இறுதிக்குள் நடத்தப்போவதாக புதிய நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது, விதிமுறைகளுக்கு புறம்பானது என்றும் விளையாட்டு அமைச்சகம் கூறியது. இதையடுத்து மல்யுத்த சம்மேளனத்தின் அன்றாட பணிகளை கவனிக்க இந்திய உசூ சம்மேளன தலைவர் பூபிந்தர் சிங் பஜ்வா தலைமையில் 3 பேர் கொண்ட இடைக்கால கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசின் நடவடிக்கை குறித்து இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவர் சஞ்சய் சிங் தனது அதிருப்தியை கொட்டி தீர்த்துள்ளார். சஞ்சய் சிங் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஜனநாயக முறைப்படி நடந்த இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றோம். இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் சர்வதேச மல்யுத்த சங்கத்தின் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் ஜம்மு-காஷ்மீர் ஐகோர்டு ஓய்வு பெற்ற நீதிபதி தேர்தலை நடத்தினார். 25 மாநில மல்யுத்த சங்கங்களில் 22 மாநில சங்க நிர்வாகிகள் தேர்தலில் ஓட்டு போட்டனர். இதில் தலைவர் பதவிக்கு நின்ற எனக்கு பதிவான 47 ஓட்டுகளில் 40 வாக்குகள் கிடைத்தது. இவை எல்லாம் நடந்த பிறகு நீங்கள் (மத்திய அரசு) எங்களை இடைநீக்கம் செய்வதாக சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அமைப்புக்கு தங்களது நிலைப்பாட்டை விளக்க எந்த வித வாய்ப்பும் வழங்கப்படவில்லை. இது, இந்திய அரசியலமைப்பின் கீழ் அனைவருக்கும் உரிமை என்ற இயற்கை நீதி, கொள்கைக்கு எதிரானதாகும். இந்திய மல்யுத்த சம்மேளனம் ஒரு தன்னாட்சி அமைப்பு. இந்த விஷயத்தில் மத்திய அரசு நடைமுறைகளை முறையாக பின்பற்றவில்லை. நாங்கள் மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவோம். அவர்கள் இடைநீக்கத்தை தளர்த்தாவிட்டால், சட்டநிபுணர்களுடன் ஆலோசித்து கோர்ட்டு செல்வோம்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீரர்களின் (பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத், சாக்ஷி மாலிக்) பின்னணியில் காங்கிரஸ் கட்சி, இடதுசாரிகள் இன்னும் சில கூட்டம் இருப்பது தெளிவாகிறது. இந்த 3 பேரையும் தவிர்த்து வேறு யாராவது இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு எதிராக இருக்கிறார்களா என்பதை சொல்லுங்கள் பார்ப்போம். இவர்கள் ஜூனியர் மல்யுத்த வீரர்கள் வளர்வதை விரும்பவில்லை. அவர்களின் உரிமைகளை தட்டிப்பறிக்கிறார்கள்.
தகுதி போட்டிஇன்றி ஆசிய விளையாட்டு போட்டிக்கு சென்ற பஜ்ரங் பூனியா 0-10 என்ற புள்ளி கணக்கில் மோசமாக தோற்று திரும்பினார். அவர்கள் மல்யுத்தம் விளையாடவில்லை. அரசியல் செய்கிறார்கள். உண்மையிலேயே மல்யுத்தம் மீது அக்கறை இருந்தால் முன்நோக்கி வாருங்கள். உங்களுக்கு உள்ள பாதை சரியாக இருக்கும். அரசியல் செய்ய விரும்பினால், தயவு செய்து அதை வெளிப்படையாக செய்யுங்கள்.
நிர்வாகிகள் தேர்தல் முறைப்படி நடந்து முடிந்து விட்ட நிலையில் தடையை நீக்கக்கோரி நாங்கள் சர்வதேச மல்யுத்த சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம். தற்போது அங்கு (ஐரோப்பா) விடுமுறையாகும். அதனால் அது குறித்து பரிசீலிக்க இன்னும் சில நாட்கள் ஆகக்கூடும்.
தேசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டி தேதியை அறிவித்ததில் எந்த விதியையும் மீறவில்லை. தேசிய சாம்பியன்ஷிப்பை இந்த ஆண்டில் நடத்தாவிட்டால், அது வருங்கால இளம் வீரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அது தான் இப்போது நிகழ்ந்துள்ளது. ஏனெனில் தாமதம் ஆகும் போது, அவர்களின் வயது அதிகரித்து விட்டால் அதன் பிறகு குறிப்பிட்ட வயது பிரிவு போட்டிகளில் பங்கேற்க முடியாது.
இவ்வாறு சஞ்சய்சிங் கூறினார்.
- டி.என்.பி.எல். கோப்பையை 4 முறை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 11 வீரர்களை தக்க வைத்துள்ளது.
- ஜனவரி 1-ந்தேதி முதல் 20-ந்தேதிக்குள் வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாடு பிரிமீயர் 'லீக்' என்று அழைக்கப்படும் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
8 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் இதுவரை 7 சீசன்கள் முடிந்து விட்டது.
அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் டி.என்.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 7-ந்தேதி நடக்கிறது. ஏலம் நடை பெறும் இடமும், நேரமும் பின்னர் அறிவிக்கப்படும்.
டி.என்.பி.எல். போட்டியில் விளையாடும் 8 அணிகளும் தக்க வைத்துக் கொண்ட வீரர்களையும், விடுவிக்கப்பட்ட வீரர்கள் விவரத்தையும் அறிவித்து உள்ளன.
8 அணிகளும் மொத்தம் 98 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
டி.என்.பி.எல். கோப்பையை 4 முறை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 11 வீரர்களை தக்க வைத்துள்ளது. பி.அபராஜித், என்.ஜெகதீசன், அருணாச் சலம், அய்யப்பன், ஜிதேந்தர் குமார், லோகேஷ் ராஜ், மதன்குமார், பிரதோஷ் ரஞ்சன் பவுல், ரஹீல்ஷா, சிபி, சிலம்பரசன் ஆகி யோரை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதற்காக ரூ.28.70 லட்சம் செலவழித்து உள்ளது.
ஹரீஸ்குமார், ராக்கி, ரோகித், சஞ்சய் யாதவ், சசிதேவ், சந்தோஷ் ஷிவ், விஜி அருள் ஆகிய 8 வீரர்களை விடுவித்துள்ளது.
ஒவ்வொரு அணியும் 20 வீரர்களை தேர்வு செய்யலாம். இதற்காக ரூ.70 லட்சம் செலவழிக்கலாம். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கைவசம் ரூ.41.30 லட்சம் இருக்கிறது. அந்த அணி ஏலத்தில் 9 வீரர்களை தேர்வு செய்யலாம்.
நடப்பு சாம்பியனான கோவை கிங்ஸ் அதிகபட்சமாக 17 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. கிரண் ஆகாஷ் என்ற வீரரை மட்டும் விடுவித்துள்ளது. அந்த அணி மொத்தம் ரூ.63.15 லட்சம் செலவழித்து உள்ளது. கைவசம் ரூ.6.85 லட்சம் மட்டுமே இருக்கிறது.
நெல்லை ராயல் கிங்ஸ் 14 வீரர்களையும், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் தலா 13 பேரையும், பால்சி திருச்சி 11 வீரர்களையும், திருப்பூர் தமிழன்ஸ் 10 பேரையும் சேலம் ஸ்பார்ட்ன்ஸ் 9 வீரர்களையும் தக்க வைத்து கொண்டு உள்ளன.
8 அணிகளிலும் மொத்தம் 62 இடத்துக்கான வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். சேலம் அணியில் தான் அதிகபட்சமாக 11 வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியும். அந்த அணியின் தான் அதிகபட்சமாக ரூ.46.70 லட்சம் இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக திருப்பூர் அணியிடம் ரூ.45.90 லட்சம் உள்ளது. அந்த அணி 10 வீரர்களை தேர்வு செய்யலாம்.
சாய்கிஷோர் (திருப்பூர் தமிழன்ஸ்), டி.நடராஜன் (திருச்சி), சந்தீப் வாரியர் (நெல்லை ராயல் கிங்ஸ்) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
விடுவிக்கப்பட்ட வீரர்கள் மற்றும் டி.என்.பி.எல். போட்டியில் விளையாட தகுதி பெற்றவர்கள் டி.என்.பி.எல். ஏலத்துக்காக tnpl.cricket/home என்ற இணையதளத்தில் பதிவு செய்துக் கொள்ளலாம்.
ஜனவரி 1-ந்தேதி முதல் 20-ந்தேதிக்குள் வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- 2-வது இன்னிங்சில் பேட்டிங்கும் மோசமாக இருந்தது.
- விராட் கோலியின் பேட்டிங் மட்டும் சிறப்பாக இருந்தது.
தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் தென்ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 3-ந்தேதி கேப்டவுனில் தொடங்குகிறது.
முதலாவது டெஸ்ட் தோல்வியின் மூலம் தென்ஆப்பிரிக்க மண்ணில் 31 ஆண்டுகளாக டெஸ்ட் தொடரை கைப்பற்றியதில்லை என்ற இந்திய அணியின் சோகம் தொடருகிறது. கடைசி டெஸ்டில் இந்தியா ஜெயித்தாலும் தொடரை சமன் செய்ய முடியுமே தவிர வெல்ல முடியாது.
செஞ்சூரியன் டெஸ்டில் தோல்வியை தழுவிய பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், 'வெற்றி பெறும் அளவுக்கு நாங்கள் விளையாடவில்லை. லோகேஷ் ராகுல் அற்புதமாக ஆடி சதம் அடித்தார். ஆனால் பந்துவீச்சுக்கு உகந்த சூழலை கச்சிதமாக பயன்படுத்த தவறி விட்டோம். 2-வது இன்னிங்சில் பேட்டிங்கும் மோசமாக இருந்தது. இதில் விராட் கோலியின் பேட்டிங் மட்டும் சிறப்பாக இருந்தது. ஆனால் டெஸ்டில் வெற்றி பெற வேண்டும் என்றால் ஒரு அணியாக கூட்டு முயற்சி தேவை. அதை செய்யவில்லை.
வெவ்வேறு நேரங்களில் எங்களது பேட்ஸ்மேன்கள் கடும் சவால்களை எதிர்கொண்டனர். இங்குள்ள சூழலுக்கு தக்கபடி எங்களை மாற்றிக்கொள்வது மெச்சும்படி இல்லை. தோல்வியில் இருந்து மீண்டு அடுத்த டெஸ்டுக்கு தயாராக வேண்டியது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அம்பதி ராயுடு இந்திய கிரிக்கெட் அணி சார்பில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார்.
- ஐ.பி.எல். போட்டியில் கடைசியாக சென்னை அணியில் விளையாடினார்.
திருப்பதி:
ஆந்திராவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு. இவர் இந்திய கிரிக்கெட் அணி சார்பில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார். மேலும் ஐ.பி.எல். போட்டியில் சென்னை அணியில் விளையாடினார். இந்த நிலையில் நேற்று அம்பதி ராயுடு முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் முகாம் அலுவலகத்திற்கு வந்தார்.
முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி,துணை முதல் மந்திரி நாராயணசாமி முன்னிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அம்பதி ராயுடுவுக்கு முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கட்சியில் இணைந்ததற்கான அடையாள அட்டை வழங்கினார்.






