search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    146 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை: கோலி புதிய சாதனை
    X

    146 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறை: கோலி புதிய சாதனை

    • தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவை இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
    • 2-வது இன்னிங்சில் விராட் கோலி 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    தென் ஆப்பிரிக்கா, இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடர்ந்த தென் ஆப்பிரிக்கா அணி, 408 ரன்களை குவித்து ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து இந்திய அணி 163 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கியது.

    முதலில் இருந்தே விக்கெட்டுகளை பறிகொடுத்த இந்தியா 131 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவை இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தியா சார்பில் சிறப்பாக ஆடிய விராட் கோலி 76 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். தென் ஆப்பிரிக்கா சார்பில் சிறப்பாக பந்துவீசிய பர்கர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், யென்சென் 3 விக்கெட்டுகளையும், ரபாடா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    2-வது இன்னிங்சில் 76 ரன்கள் குவித்ததன் மூலம் 146 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி புதிய சாதனையை படைத்துள்ளார். ஒரு காலண்டர் ஆண்டில் 7-வது முறையாக 2000 ரன்களுக்கு மேல் ரன்கள் குவித்த ஓரே வீரர் என்ற பெருமையை விராட் கொலி பெற்றுள்ளார்.

    இதற்கு முன்பு 2012 (2186 ரன்கள்), 2014 (2286 ரன்கள்), 2016 (2595 ரன்கள்), 2017 (2818 ரன்கள்), 2018 (2735 ரன்கள்) மற்றும் 2019 (2455 ரன்கள்) ஆகிய ஆண்டுகளில் இந்த சாதனையை அவர் செய்திருந்தார். 1877-ல் முதன்முதலாக சர்வதேச கிரிக்கெட் விளையாடப்பட்டதிலிருந்து வேறு எந்த வீரரும் இந்த சாதனையை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×