என் மலர்
விளையாட்டு
- 2-வது இன்னிங்சில் பேட்டிங்கும் மோசமாக இருந்தது.
- விராட் கோலியின் பேட்டிங் மட்டும் சிறப்பாக இருந்தது.
தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் தென்ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 3-ந்தேதி கேப்டவுனில் தொடங்குகிறது.
முதலாவது டெஸ்ட் தோல்வியின் மூலம் தென்ஆப்பிரிக்க மண்ணில் 31 ஆண்டுகளாக டெஸ்ட் தொடரை கைப்பற்றியதில்லை என்ற இந்திய அணியின் சோகம் தொடருகிறது. கடைசி டெஸ்டில் இந்தியா ஜெயித்தாலும் தொடரை சமன் செய்ய முடியுமே தவிர வெல்ல முடியாது.
செஞ்சூரியன் டெஸ்டில் தோல்வியை தழுவிய பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், 'வெற்றி பெறும் அளவுக்கு நாங்கள் விளையாடவில்லை. லோகேஷ் ராகுல் அற்புதமாக ஆடி சதம் அடித்தார். ஆனால் பந்துவீச்சுக்கு உகந்த சூழலை கச்சிதமாக பயன்படுத்த தவறி விட்டோம். 2-வது இன்னிங்சில் பேட்டிங்கும் மோசமாக இருந்தது. இதில் விராட் கோலியின் பேட்டிங் மட்டும் சிறப்பாக இருந்தது. ஆனால் டெஸ்டில் வெற்றி பெற வேண்டும் என்றால் ஒரு அணியாக கூட்டு முயற்சி தேவை. அதை செய்யவில்லை.
வெவ்வேறு நேரங்களில் எங்களது பேட்ஸ்மேன்கள் கடும் சவால்களை எதிர்கொண்டனர். இங்குள்ள சூழலுக்கு தக்கபடி எங்களை மாற்றிக்கொள்வது மெச்சும்படி இல்லை. தோல்வியில் இருந்து மீண்டு அடுத்த டெஸ்டுக்கு தயாராக வேண்டியது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அம்பதி ராயுடு இந்திய கிரிக்கெட் அணி சார்பில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார்.
- ஐ.பி.எல். போட்டியில் கடைசியாக சென்னை அணியில் விளையாடினார்.
திருப்பதி:
ஆந்திராவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு. இவர் இந்திய கிரிக்கெட் அணி சார்பில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார். மேலும் ஐ.பி.எல். போட்டியில் சென்னை அணியில் விளையாடினார். இந்த நிலையில் நேற்று அம்பதி ராயுடு முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் முகாம் அலுவலகத்திற்கு வந்தார்.
முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி,துணை முதல் மந்திரி நாராயணசாமி முன்னிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அம்பதி ராயுடுவுக்கு முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கட்சியில் இணைந்ததற்கான அடையாள அட்டை வழங்கினார்.
- ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 54 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
- 2-வது இன்னிங்சில் 262 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் இடையே மெல்போர்னில் பாக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த 26-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 318 ரன்கள் சேர்த்த நிலையில், பாகிஸ்தான் 264 ரன்னில் சுருண்டது.
பின்னர் 54 ரன்கள் முன்னிலைப் பெற்ற ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிறகு 187 ரன்கள் எடுத்திருந்தது. அலேக்ஸ் கேரி 16 ரன்களுடன் களத்தில் இருந்தார். இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய அலேக்ஸ் கோரி 53 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் ஆஸ்திரேலியா 262 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பாகிஸ்தான் அணி சார்பில் ஷாஹீன் அப்ரிடி, மிர் ஹம்சா ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.
ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலியா 316 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு 317 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
317 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது. பாகிஸ்தான் 8 ரன்கள் எடுப்பதற்குள் முதல் விக்கெட்டை இழந்தது. 7 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 20 ரன்கள் எடுத்துள்ளது.
- இந்தியா சார்பில் விராட் கோலி 76 ரன்களை குவித்தார்.
- தென் ஆப்பிரிக்காவின் பர்கர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தென் ஆப்பிரிக்கா, இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது.
2-ம் நாள் இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 66 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் சேர்த்த நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. டீன் எல்கர் 140 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா சார்பில் பும்ரா, சிராஜ் தலா 2 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. யான்சன் - எல்கர் ஜோடி இந்திய அணியின் பந்து வீச்சை சிறப்பாக விளையாடினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யான்சன் அரை சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து ஆடிய டீன் எல்கர் 185 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதன் காரணமாக தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸ்-இல் 408 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி 163 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது.
2-வது இன்னிங்சை இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணியின் துவக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5 ரன்களிலும், கேப்டன் ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சுப்மன் கில் 26 ரன்களில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.
ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், மறுபுறம் விராட் கோலி நிலைத்து நின்று பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனினும், இந்திய அணி 131 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவை இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்தியா சார்பில் சிறப்பாக ஆடிய விராட் கோலி 76 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். தென் ஆப்பிரிக்கா சார்பில் சிறப்பாக பந்துவீசிய பர்கர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், யென்சென் 3 விக்கெட்டுகளையும், ரபாடா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
- தென் ஆப்பிரிக்கா அனைத்து விக்கெட்டுகளையும் 408 ரன்கள் எடுத்தது.
- இந்திய தரப்பில் பும்ரா 4 விக்கெட்டும் சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தென் ஆப்பிரிக்கா, இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. தொடக்க ஆட்டக்காரர் மார்க்ரம் 5 ரன்னில் அவுட்டானார். சோர்சி 28 ரன்னிலும், பீட்டர்சன் 2 ரன்னிலும் டேவட் பெடிங்காம் 56 ரன்னிலும் வெளியேறினார். டீன் எல்கர் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார்.
2-ம் நாள் இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 66 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் சேர்த்த நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. டீன் எல்கர் 140 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா சார்பில் பும்ரா, சிராஜ் தலா 2 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. யான்சன் - எல்கர் ஜோடி இந்திய அணியின் பந்து வீச்சை சிறப்பாக விளையாடினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யான்சன் அரை சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து ஆடிய டீன் எல்கர் 185 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில் தென் ஆப்பிரிக்கா அனைத்து விக்கெட்டுகளையும் 408 ரன்கள் எடுத்தது. யான்சன் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய தரப்பில் பும்ரா 4 விக்கெட்டும் சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததால் இந்த போட்டி தள்ளி வைக்கப்பட்டது.
- மார்ச் மாதம் நடைபெற வேண்டிய போட்டி தற்போது நடந்துள்ளது.
கார்டிப்:
உலக கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் 21-ந்தேதி முதல் டிசம்பர் 1-ந்தேதி வர ஆசிய கண்டத்தில் உள்ள கத்தாரில் நடக்கிறது. இந்தப் போட்டியில் மொத்தம் 32 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் கத்தார் மட்டும் நேரடியாக விளையாடுகிறது. மற்ற நாடுகள் தகுதி சுற்று மூலமே முன்னேறி இருந்தன. உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு 3 நாடுகள் தகுதி பெற வேண்டி இருந்தது.
இந்த நிலையில் ஐரோப்பா கண்டத்தில் இருந்து வேல்ஸ் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. கார்டிப் நகரில் நேற்று நடந்த ஆட்டத்தில் வேல்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் உக்ரைனை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் அந்த அணி உலக கோப்பை போட்டிக்கு முன்னேறியது.
மார்ச் மாதம் நடைபெற வேண்டிய போட்டி தற்போது நடந்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததால் இந்த போட்டி தள்ளி வைக்கப்பட்டது. ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் வேல்ஸ் கேப்டன் காரெத் பாலே இந்த கோலை அடித்தார். 64 ஆண்டுகளுக்கு பிறகு வேல்ஸ் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இதற்கு 1958-ம் ஆண்டு முதல் முறையாக முன்னேறி இருந்தது. வேல்ஸ் அணி 'பி' பிரிவில் இருக்கிறது. இங்கி லாந்து, அமெரிக்கா, ஈரான் ஆகிய நாடுகளும் அந்த பிரிவில் உள்ளன. உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு இன்னும் 2 நாடுகள் தகுதி பெற வேண்டி உள்ளது.
- சென்சுரியன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முகமது சமியை அதிகமாக மிஸ் செய்கிறது.
- முகமது சமி இருந்திருந்தால் சில விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்திருப்பார்.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மெற்கொண்டு விளையாடி வருகிறது. டி20 தொடர், ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது.
இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி, 67.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி இன்றைய 3-ம் நாள் உணவு இடைவெளி வரை 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 392 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா, அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சமியை அதிகமாக மிஸ் செய்வதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-
சென்சுரியன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முகமது சமியை அதிகமாக மிஸ் செய்கிறது. பந்து வீச்சு படைக்கு ஒரு தலைவனாக முகமது சமி செயல்படுவார். பும்ராவுக்கு அனைத்து வகையிலும் ஆதரவாக இருப்பார். இந்த பிட்ச் பந்தின் சீம் பகுதியை பிடித்து வீசும் பவுலர்களுக்கு சாதகமானது என்பதை போல் தெரிகிறது.
முகமது சமி இருந்திருந்தால் சில விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்திருப்பார். இந்திய அணி அவரை அதிகமாக மிஸ் செய்கிறது என்பது உறுதி. ஷர்துல் தாக்கூர் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் 27 ஓவர்கள் வீசி 118 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளனர்.
இன்னொரு பக்கம் சிராஜ் மற்றும் பும்ரா இருவரும் 31 ஓவர்கள் வீசி 111 ரன்களை தான் விட்டுக் கொடுத்துள்ளனர். சிராஜும் கொஞ்சம் ரன்களை வாரி வழங்கியிருந்தாலும், அவரால் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் வகையில் வீச முடிந்துள்ளது.
ஒவ்வொரு பந்தை வீசும் போது சிராஜ் அல்லது பும்ரா ஆகியோர் விக்கெட்டுக்கு அருகில் சென்று வருகின்றனர். அதுபோன்ற உணர்வை களத்தில் அளிக்கிறார்கள். ஆனால் ஷர்துல் தாக்கூர் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் பேட்ஸ்மேன்கள் தவறு செய்வதற்காக காத்திருப்பதை போல் தெரிகிறது.
என்று அவர் தெரிவித்துள்ளார்.
- யான்சன் அரை சதம் விளாசினார்.
- டீன் எல்கர் 190 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
செஞ்சூரியன்:
தென் ஆப்பிரிக்கா, இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 14 பவுண்டரி, 4 சிக்சருடன் சதமடித்து 101 ரன்களில் கே.எல்.ராகுல் ஆட்டமிழந்தார். தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. தொடக்க ஆட்டக்காரர் மார்க்ரம் 5 ரன்னில் அவுட்டானார். சோர்சி 28 ரன்னிலும், பீட்டர்சன் 2 ரன்னிலும் டேவட் பெடிங்காம் 56 ரன்னிலும் வெளியேறினார். டீன் எல்கர் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 66 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் சேர்த்த நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. டீன் எல்கர் 140 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா சார்பில் பும்ரா, சிராஜ் தலா 2 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. யான்சன் - எல்கர் ஜோடி இந்திய அணியின் பந்து வீச்சை சிறப்பாக விளையாடினர். அஸ்வின் பந்து வீச்சில் யான்சனுக்கு ஒரு கேட்ச் வாய்ப்பு கிடைத்தது. அதனை ராகுல் தவறவிட்டார். இதனால் அவர் அரை சதம் விளாசினார்.
தற்போது வரை தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 360 ரன்கள் எடுத்ததுள்ளது.
- இன்றைய 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.
- அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 96 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 318 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 264 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டும், நாதன் லயன் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 54 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த ராட்சத திரையில் காதலர்கள் மடியில் படுத்து இருப்பது போன்ற காட்சி வெளியானது. இதனை பார்த்த அந்த காதலர்கள் முகத்தை மூடிக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். நல்ல வேலை செய்தீர்கள் கேமரான் மேன், கொடுத்த வேலைக்கு மேல் கூடுதல் வேலை பார்த்துள்ளீர்கள், போட்டியை காண வந்தீர்களா காதல் செய்ய வந்தீர்களா, என சில ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். பல ரசிகர்கள் போட்டியை வீடியோ எடுக்க சொன்னா அப்பாவி காதலர்களை வீடியோ எடுத்து காட்டிக் கொடுத்து வீட்டீர்களே கேமரா மேன் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- மிட்செல் மார்ஷ் 96 ரன்களிலும் ஸ்மித் 50 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
- பாகிஸ்தான் தரப்பில் அப்ரிடி, ஹம்சா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 318 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன் எடுத்து இருந்தது.முகமது ரிஸ்வான் 26 ரன்னும், அமீர் ஜமால் 2 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் 264 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இது ஆஸ்திரேலியா ஸ்கோரை விட 54 ரன் குறைவாகும். அப்துல்லா ஷபீக் 62 ரன்னும், கேப்டன் ஷான் மசூத் 54 ரன்னும், முகமது ரிஸ்வான் 42 ரன்னும், அமீர் ஜமால் 33 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் 5 விக்கெட் வீழ்த்தினார். நாதன் லயனுக்கு 4 விக்கெட் டும், ஹாசல்வுட்டுக்கு 1 விக்கெட்டும் கிடைத்தது.
54 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சை ஆடியது. டேவிட் வார்னரும், உஸ்மான் கவாஜாவும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆஸ்திரேலிய அணி 16 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டை இழந்து திணறியது.
உஸ்மான் கவாஜா ரன் எதுவும் எடுக்காமலும், லபுஷேன் 4 ரன்னிலும் ஷகீன் ஷா அப்ரிடி பந்தில் ஆட்டம் இழந்தனர். வார்னர் 4 ரன்னிலும், டிரெவிஸ் ஹெட் ரன் எதுவும் எடுக்காமலும் மிர் ஹம்சா பந்தில் அவுட் ஆனார்கள்.
இந்நிலையில் 5-வது விக்கெட்டுக்கு ஸ்டீவ் சுமித்-மிட்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மார்ஷ் 96 ரன்னில் அவுட் ஆனார். 3-ம் நாள் ஆட்டம் முடியும் நேரத்தில் ஸ்மித் 50 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் 3-ம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது. அலெக்ஸ் கேரி 16 ரன்களுடன் களத்தில் இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் அப்ரிடி, ஹம்சா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
- 3-வது நாள் உணவு இடைவெளி வரை ஆஸ்திரேலியா 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
- உஸ்மான் கவாஜா 0, மார்னஸ் லபுஸ்ஷேன் 4 ரன்களுடன் ஆட்டமிழந்தனர்.
ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி 26-ம் தேதி மெல்போர்ன் நகரில் துவங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா கடுமையாகப் போராடி முதல் இன்னிங்சில் 318 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதிகபட்சமாக மார்னஸ் லபுஸ்ஷேன் 63 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அமீர் ஜமால் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அப்துல்லா ஷபிக் 62 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா சார்பில் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அதைத்தொடர்ந்து 54 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலியாவுக்கு உஸ்மான் கவாஜா 0, மார்னஸ் லபுஸ்ஷேன் 4 ரன்களுடன் ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இந்நிலையில் 3-வது நாள் உணவு இடைவெளி வந்தது. இந்த இடைவெளி முடிந்து போட்டி மீண்டும் துவங்குவம் நேரத்தில் பெவிலியனில் இருந்த 3-வது நடுவர் ரிச்சர்ட் இல்லிங்ஒர்த் திடீரென காணவில்லை. அதன் காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. நடுவர் எங்கே என்று அனைவரும் தேடிப் பார்த்தனர்.
சில நிமிடங்கள் கழித்து மிகவும் சோர்வாக வந்த அம்பயர் நாற்காலியில் அமர்ந்து தாம் லிஃப்டில் மாட்டிக் கொண்டதாக வேடிக்கையாக தெரிவித்தார். மைதானத்தின் மற்றொரு தளத்திற்கு சென்று வரும் வழியில் அவர் லிஃப்டில் மாட்டிக்கொண்டதாக தெரிகிறது. அதன் பின் அதிலிருந்து வந்த அவர் நாற்காலியில் அமர்ந்து "நான் நன்றாக இருக்கிறேன்" என்பது போல் கையை சிக்னல் கொடுத்தது ரசிகர்களையும் வர்ணனையாளர்களையும் சிரிப்பில் ஆழ்த்தினார்.
3rd umpire is back#PAKvsAUS #Leo2#Dhoom4 #MunawarIsTheBoss
— Jagbir Chahal (@JagbirChahal6) December 28, 2023
pic.twitter.com/G65dkKYIs4
குறிப்பாக பேட்டிங் செய்வதற்காக களத்தில் இருந்த டேவிட் வார்னர் மற்றும் எஞ்சிய 2 அம்பயர்களும் 3வது அம்பயர் லிஃப்டில் மாட்டிக் கொண்டார் என்பதை அறிந்து வாய்விட்டு சிரித்தார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ஸ்மிருதி மந்தனா, கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார்.
- பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிகபட்சமாக ரூ.3.4 கோடிக்கு பெங்களூரு அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.
மும்பை:
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார். பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிகபட்சமாக ரூ.3.4 கோடிக்கு பெங்களூரு அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.
27 வயதான மந்தனா மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் இஷான் கிஷனுடன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பார்வையாளர் ஒருவர் 'இன்ஸ்டாகிராமில் உங்களை நிறைய ஆண்கள் பின்தொடர்கிறார்கள். உங்களது கணவர் எப்படி இருக்க வேண்டும், எந்தவிதமான குணாதிசயங்களை கொண்டவராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்' என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு சிரித்தபடி மந்தனா அளித்த பதிலில், 'இதுபோன்ற கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை. அவர் நல்ல பையனாக இருக்க வேண்டும். என் மீது அக்கறை உடையவராக, என் விளையாட்டை புரிந்து கொள்பவராக இருக்க வேண்டும்.
நான் விரும்பும் இரண்டு குணங்கள் இது தான். நான் விளையாட்டில் இருப்பதால் அவரிடம் அதிக நேரம் செலவிட முடியாது. அதை புரிந்துகொண்டு என் மேல் மிகுந்த அன்பு காட்டுபவராக இருக்க வேண்டும். இது தான் நான் முக்கியமாக பார்க்கக்கூடியது' என்று கூறினார்.






