search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    3வது டி20 போட்டியில் வெற்றி: வங்காளதேசத்துக்கு எதிரான டி20 தொடரை சமன் செய்தது நியூசிலாந்து
    X

    3வது டி20 போட்டியில் வெற்றி: வங்காளதேசத்துக்கு எதிரான டி20 தொடரை சமன் செய்தது நியூசிலாந்து

    • இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி மவுண்ட்மாங்கானுவில் நடைபெற்றது.
    • முதலில் பேட் செய்த வங்காளதேசம் 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    மவுண்ட்மாங்கானு:

    வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நடைபெற்றது. முதல் டி20 போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்றது. 2வது போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதனால் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வங்காளதேசம் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

    இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி மவுண்ட்மாங்கானுவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 19.2 ஓவர்களில் 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    நியூசிலாந்து சார்பில் சாண்ட்னர் 4 விக்கெட்டும், சவுத்தி, மில்னே, பென் சீயர்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    தொடந்து 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இறங்கிய நியூசிலாந்து 14.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது..

    தொடர்ந்து மழை பெய்ததால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி நியூசிலாந்து 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் 1-1 என சமனிலையில் முடிந்துள்ளது.

    சாண்ட்னர் ஆட்ட நாயகன் விருதும், ஷோரிபுல் இஸ்லாம் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

    Next Story
    ×