என் மலர்
விளையாட்டு
- இந்தியா முதல் இன்னிங்சில் 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 2-ம் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது.
கேப் டவுன்:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கேப் டவுன் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதல் இன்னிங்ஸ் ஆடிய தென் ஆப்பிரிக்கா சிராஜ் பந்துவீச்சில் சிக்கியது. முன்னணி வீரர்களை விரைவில் வெளியேற்றினார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா 23.2 ஓவரில் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் சிராஜ் 6 விக்கெட், பும்ரா, முகேஷ் குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ரோகித் சர்மா 39 ரன்னும், சுப்மன் கில் 36 ரன்னும் எடுத்தனர்.
அடுத்து வந்த வீரர்கள் விரைவில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் விராட் கோலி பொறுப்புடன் ஆடி 46 ரன்னில் அவுட்டானார். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா, பர்கர், நிகிடி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இந்நிலையில், 98 ரன்கள் பின் தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. டீன் எல்கர் 12 ரன்னும், டி சோர்ஜி ஒரு ரன்னும், ஸ்டப்ஸ் ஒரு ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில், முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 2வது இன்னிங்சில் 17 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது. மார்கிரம் 36 ரன்னுடன் களத்தில் உள்ளார்.
இந்தியா சார்பில் முகேஷ் குமார் 2 விக்கெட்டும், பும்ரா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 55 ரன்களில் சுருண்டது.
- இந்தியாவின் முகமது சிராஜ் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
கேப் டவுன்:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கேப் டவுன் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 23.2 ஓவரில் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முகமது சிராஜ் அசத்தலாக பந்துவீசி முன்னணி வீரர்களை வெளியேற்றினார்.
இந்தியா சார்பில் சிராஜ் 6 விக்கெட், பும்ரா, முகேஷ் குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவின் யான்சென் விக்கெட்டை எடுக்க விராட் கோலி சிராஜுக்கு யோசனை தெரிவித்தார். இதை செயல்படுத்திய சிராஜ் அடுத்த பந்தில் யான்சென் விக்கெட் கைப்பற்றினார்.
இதையடுத்து, விராட் கோலியின் டெஸ்ட் போட்டிகளின் அனுபவமே யான்சென் விக்கெட் எடுக்க காரணமாக இருந்தது என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
- பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
- இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்லாந்து:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. அதில் டி20 உலகக் கோப்பைக்கு பிறகு கேப்டனாக கேன் வில்லியம்சன் நியூசிலாந்து அணிக்கு திரும்பியுள்ளார்.
கடைசியாக 2022, நவம்பர் 20-ம் தேதி டி20 போட்டியில் விளையாடிய நிலையில் தற்போது 14 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கேன் வில்லியம்சன் நியூசிலாந்து டி20 அணி கேப்டனாக இடம்பெற்றுள்ளார்.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் 12-ம் தேதி ஆக்லாந்தில் நடைபெற உள்ளது.
இந்தாண்டு ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் நியூசிலாந்து அணி கேப்டனாக கேன் வில்லியம்சன் திரும்பி இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 55 ரன்களில் சுருண்டது.
- தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 153 ரன்னில் சுருண்டது.
கேப் டவுன்:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கேப் டவுன் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதல் இன்னிங்ஸ் ஆடிய தென் ஆப்பிரிக்கா சிராஜ் பந்துவீச்சில் சிக்கியது. முன்னணி வீரர்களை விரைவில் வெளியேற்றினார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா 23.2 ஓவரில் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் சிராஜ் 6 விக்கெட், பும்ரா, முகேஷ் குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ரோகித் சர்மா 39 ரன்னும், சுப்மன் கில் 36ரன்னும் எடுத்தனர்.
அடுத்து வந்த வீரர்கள் விரைவில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் விராட் கோலி பொறுப்புடன் ஆடி 46 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா, பர்கர், நிகிடி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
- டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 55 ரன்களில் சுருண்டது.
கேப் டவுன்:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி கேப் டவுன் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணியில் அஸ்வின், ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு ஜடேஜா, முகேஷ் குமார் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதன்படி முதல் இன்னிங்ஸ் ஆடிய தென் ஆப்பிரிக்கா சிராஜ் பந்துவீச்சில் சிக்கியது. முன்னணி வீரர்களை விரைவில் வெளியேற்றினார்.
இறுதியில் தென் ஆப்பிரிக்கா 23.2 ஓவரில் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் சிராஜ் 6 விக்கெட், பும்ரா, முகேஷ் குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- ஜாக்ரெப் ஓபன் மல்யுத்த போட்டி குரோஷியாவில் வரும் 10-ம் தேதி தொடங்குகிறது.
- இந்திய அணியில் 13 வீரர், வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.
புதுடெல்லி:
முதலாவது உலக ரேங்கிங் போட்டியான ஜாக்ரெப் ஓபன் மல்யுத்த போட்டி குரோஷியாவில் வரும் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடக்கிறது.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் இந்திய மல்யுத்த அணியை இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் நியமிக்கப்பட்ட பூபிந்தர் சிங் பஜ்வா தலைமையிலான இடைக்கால கமிட்டி அறிவித்துள்ளது. இந்திய மல்யுத்த சம்மேளனம் இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு அறிவிக்கப்பட்ட முதல் அணி இதுவாகும். அணியில் 13 வீரர், வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.
ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற வீரருமான பஜ்ரங் பூனியா, சீனியர் உலக போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இளம் வீராங்கனை அன்திம் பன்ஹால் ஆகியோர் இடம் பெறவில்லை.
இந்நிலையில், மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் கூறுகையில், சஞ்சய் சிங்குடன் தான் எங்களுக்கு பிரச்சனை ஏற்பட்டது. புதிய கூட்டமைப்பு அமைப்பு அல்லது தற்காலிகக் குழுவுடன் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. சஞ்சய் சிங்கிற்கு மல்யுத்த கூட்டமைப்பு ஆணையத்தில் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை உறுதி செய்யுமாறு பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரை கேட்டுக் கொள்கிறேன். பிரிஜ் பூஷன் என் குடும்பத்தைக் குறிவைக்கிறார். எங்கள் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் பொறுப்பு என தெரிவித்தார்.
#WATCH | After WFI suspension, former wrestler Sakshee Malikkh says, "We only had a problem with Sanjay Singh. We don't have any problem with the new federation body or the Ad-hoc committee. I request PM Modi ji, Amit Shah ji to ensure that Sanjay Singh has no involvement in WFI.… pic.twitter.com/F66hegGM5z
— ANI (@ANI) January 3, 2024
- இந்திய அணியில் ஜடேஜா, முகேஷ் குமார் சேர்க்கப்பட்டுள்ளனர்.
- தென்ஆப்பிரிக்கா அணியில் மகாராஜ், லுங்கி நிகிடி இடம் பிடித்துள்ளனர்.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி கேப் டவுன் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டீல் எல்கர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணியில் அஸ்வின், ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு ஜடேஜா, முகேஷ் குமார் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம:-
ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், கே.எல். ராகுல், ஜடேஜா, பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, முகேஷ் குமார்.
தென்ஆப்பிரிக்கா அணி:
டீன் எல்கர், மார்க்கிராம், ஜோர்சி, ஸ்டப்ஸ், பெடிங்காம், வெர்ரைன், யான்சென், மகாராஜ், ரபாடா, பர்கர், லுங்கி நிகிடி.
- பாகிஸ்தானின் தொடக்க வீரர்கள் இருவரும் டக்அவுட் ஆனார்கள்.
- 227 ரன்கள் எடுப்பதற்குள் 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா முதல் 2 போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றியதுடன் தொடரில் 2-0 முன்னிலை விக்கிறது.
பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் 360 ரன் வித்தியாசத்திலும், மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 79 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் பாகிஸ்தான் அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. தொடக்க வீரர்கள் அப்துல்லா ஷபிக், சாய்ம் ஆயுப் ஆகியோர் ரன்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறினர்.

ஐந்து விக்கெட் வீழ்த்தி கம்மின்ஸ்
ஷான் மசூத் 35 ரன்னிலும், பாபர் அசாம் 26 ரன்னிலும் ஆட்டமிழக்க 96 ரன்னுக்குள் 5 விக்கெட்டை இழந்தது. சிறப்பாக ஆடிவந்த முகமது ரிஸ்வான் 88 ரன்னில் அவுட் ஆனார். ஆகா சல்மான் 53 ரன்னிலும் அவுட் ஆனார். இதனால் பாகிஸ்தான் 227 ரன்கள் எடுப்பதற்குள் 9 விக்கெட்டுகளை இழந்தது.
கடைசி விக்கெட்டுக்கு ஆமிர் ஜமால் உடன் மிர் ஹம்சா ஜோடி சேர்ந்தார். மளமளவென விக்கெட்டை வீழ்த்திய ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் கடைசி விக்கெட்டை எளிதாக வீழ்த்தி பாகிஸ்தானை 250 ரன்னுக்குள் சுருட்டி விடலாம் என நினைத்தனர்.
ஆனால், ஹம்சா ஒரு பக்கம் நிலைத்து நிற்க மறுபக்கம் ஜமால் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தார். கம்மின்ஸ், ஸ்டார்க் வேகத்தையும், லயனின் சுழற்பந்தையும் இந்த ஜோடி திறமையாக எதிர்கொண்டது. இதனால் பாகிஸ்தானின் ஸ்கோர் 250, 275, 300 என உயர்ந்து கொண்டே சென்றது. அதேவேளையில் ஜமால் அரைசதத்தை கடந்தார்.
என்னடா... கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியவில்லையே... என ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் விரக்தியடைந்தனர்.

அரைசதம் அடித்த ஜமால்
ஜமால் சதம் அடிப்பார்... பாகிஸ்தான் 325 ரன்னைத் தாண்டும் என எதிர்பார்த்த நிலையில் நாதன் லயன் கடைசி விக்கெட்டை வீழ்த்தினார். ஜமால் 82 ரன்னில் அவரது பந்தில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 77.1 ஓவரில் 313 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்சில் ஆல்அவுட் ஆனது.
ஜமால்- ஹம்சா ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 86 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. பேட் கம்மின்ஸ் ஐந்து விக்கெட்டும், ஸ்டார்க் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.
- டி20-யில் இருந்து ஒதுங்கிக் கொள்வார்கள் என பிசிசிஐ நினைத்தது.
- இருவரும் விளையாட விருப்பம் தெரிவித்ததால் அணியை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் விராட் கோலி, ரோகித் சர்மா. சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் (50 ஓவர்) இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
2022-ம் ஆண்டு அக்டோபர்- நவம்பரில் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு இருவரும் 20 ஓவரில் விளையாடவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு பிறகு இருவரும் ஆடவில்லை.
9-வது ஐ.சி.சி. 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி ஜூன் 4 முதல் ஜூன் 30 வரை வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது. இந்த போட்டியில் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் இளம் வீரர்களான சுப்மன் கில், ஜெய்ஷ்வால், இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ரிங்கு சிங் ஆகியோர் 20 ஓவர் போட்டியில் அதிரடியாக விளையாடி வருகிறார்கள். இதனால் விராட் கோலிக்கும், ரோகித் சர்மாவுக்கும் 20 ஓவர் உலக கோப்பையில் வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் 20 ஓவர் உலகக் கோப்பையில் விளையாட விராட் கோலி, ரோகித் சர்மா ஆர்வத்துடன் விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்காக 30 இளம் வீரர்களை பி.சி.சி.ஐ. அடையாளம் கண்டுள்ளது. இந்திய அணி மற்றும் ஐ.பி.எல்.லில் அவர்கள் முத்திரை பதித்தவர்கள் ஆவார்கள். விராட் கோலியும், ரோகித்தும் 20 ஓவரில் ஓய்வு முடிவை அறிவிப்பார்கள் என்று பி.சி.சி.ஐ. கருதி வந்த நிலையில் இருவரும் உலகக் கோப்பையில் விளையாடும் விருப்பத்தை வெளியிட்டு உள்ளனர்.
இதன்காரணமாக ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்த அணியை தேர்வு செய்வதில் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழு குழப்பத்தில் உள்ளது. இது தொடர்பாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட், டெஸ்ட் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருடன் தேர்வுகுழு ஆலோசனை நடத்த உள்ளது.

தேர்வு குழு உறுப்பினர்கான சிவசுந்தர் தாஸ், சலீல் அங்கோலா ஆகியோர் தென்ஆப்பிரிக்காவில் உள்ளனர். தேர்வு குழு தலைவரான அஜித் அகர்கர் அவர்களுடன் இணைந்தார். அவர்கள் 3 பேரிடமும் பேசுகிறார்கள். இதன் பிறகே ஆப்கானிஸ்தான் 20 ஓவர் தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்படும்.
விராட் கோலியும், ரோகித் சர்மாவும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 20 ஒவர் தொடரில் ஆடுவார்களா? என்பது உறுதியாக தெரியவில்லை. ஏனென்றால் ஜனவரி 25-ந்தேதி இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையேயான மூன்று 20 ஓவர் போட்டிகள் ஜனவரி 11, 14 மற்றும் 17-ந்தேதிகளில் மொகாலி, சங்கர்பூர் (மேற்கு வங்காளம்), பெங்களூரில் முறையே நடக்கிறது.
- முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது.
- 2-வது போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும்.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
முதல் இன்னிங்சில் இந்தியா 245 ரன்னில் சுருண்டது. கே.எல். ராகுல் மட்டும் தாக்குப்பிடித்து சதம் அடித்தார். 2-வது இன்னிங்சில் விராட் கோலி அரைசதம் அடித்தார்.
தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 408 ரன்கள் குவித்தது. இந்தியா 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய பந்து வீச்சாளர்களால் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
பும்ரா மட்டும் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட் வீழ்த்தியிருந்தார். தென்ஆப்பிரிக்காவின் டீல் எல்கர் 185 ரன்கள் குவித்து இந்தியாவை தோற்கடித்து விட்டார். மேலும் பந்து வீச்சாளரான ஜேன்சன் 84 ரன்கள் எடுத்தது இந்தியாவுக்கு பாதகமாக அமைந்தது.
இந்த நிலையில்தான் இன்று 2-வது போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேன்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த ஆடுகளமும் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் வகையில்தான் அமைக்கப்பட்டிருக்கும்.

இந்திய தொடக்க பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று விளையாடுவது அவசியம். விராட் கோலி, கே.எல். ராகுல் ஒரே இன்னிங்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால்தான் இந்தியா அதிக ரன்கள் குவிக்க இயலும். ரோகித் சர்மா, சுப்மான் கில் ஆகியோரும் ரன்கள் குவிப்பது அவசியம்.
பந்து வீச்சில் ஷர்துல் தாகூர், பிரசித் கிருஷ்ணா ஆகியோரில் ஒருவர் மாற்றப்படலாம். அஸ்வின் அல்லது ஜடேஜா ஆகியோரில் ஒருவர் இடம் பெறலாம்.
தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் பவுமா காயத்தால் விலகியுள்ளதால் அவருக்குப் பதிலாக ஒரு மாற்றம் மட்டும் செய்யப்படலாம்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியா தொடரை சமன் செய்ய முடியும். அதற்கு அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம்.
அதேவேளையில் தென்ஆப்பிரிக்கா தொடரை கைப்பற்ற முனைப்பு காட்டும். இந்த போட்டி முடிவு தெரியக்கூடிய போட்டியாக அமையும்.
- ஆஸ்திரேலியா அணி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
- இந்தியா 148 ரன்களில் ஆட்டமிழந்தது.
இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
இந்த நிலையில் இந்த இரு அணிகள் இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனைகளான ஃபோப் லிட்ச்ஃபீல்ட்- அலிசா ஹீலி களமிறங்கினர். இருவரும் இந்திய அணியின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ரன்களை குவித்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் விளாசினர்.

50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் ஸ்ரேயங்கா பாட்டீல் 3 விக்கெட்டுகளையும், அமன்ஜோத் கௌர் 2 விக்கெட்டுகளையும், தீப்தி ஷர்மா மற்றும் பூஜா வஸ்த்ராக்கர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணியின் துவக்க வீராங்கனையான யாஸ்திகா பாட்டியா 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா 29 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ரிச்சா கோஷ் 19 ரன்களிலும், ஹர்மன்பிரீத் கௌர் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்தடுத்து களமிறங்கிய வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினர். இதன் காரணமாக இந்திய அணி 32.4 ஓவர்களில் 148 ரன்களை மட்டும் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஆஸ்திரேலியா சார்பில் ஜார்ஜியா வார்ஹெம் 3 விக்கெட்டுகளையும், அலானா கிங், அனபெல் சதர்லாந்து மற்றும் மேகன் ஸ்கட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆஷ்லெய்க் கார்ட்னர் 1 விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலியா அணி 3-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியது.
- ஃபோப் லிட்ச்ஃபீல்ட் சதம் அடித்து அசத்தினார்.
- இந்திய தரப்பில் ஸ்ரேயங்கா பாட்டீல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மும்பை:
இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனைகளான ஃபோப் லிட்ச்ஃபீல்ட்- அலிசா ஹீலி களமிறங்கினர். இருவரும் இந்திய அணியின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர் கொண்டு ரன்களை குவித்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் விளாசினார்.
82 ரன்கள் இருந்த போது அலிசா ஹீலி அவுட் ஆனார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 189 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய ஃபோப் லிட்ச்ஃபீல்ட் சதம் அடித்து அசத்தினார். அவர் 119 ரன்கள் எடுத்திருந்த போது அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் ஸ்ரேயங்கா பாட்டீல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.






