search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    கடைசி ஒருநாள் போட்டி.. இந்தியாவை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றிய ஆஸ்திரேலியா
    X

    கடைசி ஒருநாள் போட்டி.. இந்தியாவை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றிய ஆஸ்திரேலியா

    • ஆஸ்திரேலியா அணி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
    • இந்தியா 148 ரன்களில் ஆட்டமிழந்தது.

    இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.

    இந்த நிலையில் இந்த இரு அணிகள் இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனைகளான ஃபோப் லிட்ச்ஃபீல்ட்- அலிசா ஹீலி களமிறங்கினர். இருவரும் இந்திய அணியின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ரன்களை குவித்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் விளாசினர்.


    50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் ஸ்ரேயங்கா பாட்டீல் 3 விக்கெட்டுகளையும், அமன்ஜோத் கௌர் 2 விக்கெட்டுகளையும், தீப்தி ஷர்மா மற்றும் பூஜா வஸ்த்ராக்கர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

    கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணியின் துவக்க வீராங்கனையான யாஸ்திகா பாட்டியா 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா 29 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ரிச்சா கோஷ் 19 ரன்களிலும், ஹர்மன்பிரீத் கௌர் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.


    அடுத்தடுத்து களமிறங்கிய வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினர். இதன் காரணமாக இந்திய அணி 32.4 ஓவர்களில் 148 ரன்களை மட்டும் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    ஆஸ்திரேலியா சார்பில் ஜார்ஜியா வார்ஹெம் 3 விக்கெட்டுகளையும், அலானா கிங், அனபெல் சதர்லாந்து மற்றும் மேகன் ஸ்கட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆஷ்லெய்க் கார்ட்னர் 1 விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலியா அணி 3-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியது.

    Next Story
    ×