என் மலர்
விளையாட்டு
- நான் எப்போதும் கோலி பேட்டிங் செய்யும் போது வலைகளுக்குப் பின்னால் இருந்து கவனித்து வருகிறேன்.
- குறிப்பாக பேட்டிங் செய்யும் போது அவரது கால் நகருவது மற்றும் உடல் அசைவுகளை நான் கவனிக்கிறேன்.
விசாகப்பட்டினம்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனால் இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.
இதனை தொடர்ந்து இரு அணிகள் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை தொடங்குகிறது. இந்திய அணியில் விராட் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. மேலும் கேஎல் ராகுல் மற்றும் ஜடேஜா காயம் காரணமாக விலகி உள்ள நிலையில் அவர்களுக்கு பதிலாக சர்பராஸ் கான் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் சௌரப் குமார் ஆகியோர் இந்திய அணியில் இணைந்துள்ளனர்.
இதனால் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில் 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாட ராஜத் பட்டிதாருக்கு இடம் கிடைத்துள்ளது. இந்நிலையில் விராட் கோலி போல பேட்டிங் செய்ய கற்றுக் கொண்டிருக்கிறேன் என பட்டிதார் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் எப்போதும் கோலி பேட்டிங் செய்யும் போது வலைகளுக்குப் பின்னால் இருந்து கவனித்து வருகிறேன். குறிப்பாக பேட்டிங் செய்யும் போது அவரது கால் நகருவது மற்றும் உடல் அசைவுகளை நான் கவனிக்கிறேன். இந்த விஷயங்களை கற்று எனது பேட்டிங்கில் சேர்க்க முயற்சிக்கிறேன்.
உள்நாட்டு சுற்றுகளில் பல இந்திய வீரர்களுடன் நான் விளையாடியுள்ளேன். கடந்த இரண்டு தொடர்களில் இருந்து ராகுல் சாருடன் உரையாடி வருகிறேன். நான் ரோகித் பாயுடன் அதிகம் பேசவில்லை. ஆனால் இந்த சுற்றுப்பயணத்தில் நான் அவருடன் பேட்டிங் பற்றி பேச நேர்ந்தது. வலைகளில் அவர் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இவை அனைத்தும் எனது நம்பிக்கையை அதிகரித்துள்ளன.
என்று படிதார் கூறினார்.
- இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.
- விசாகப்பட்டினத்தில் பிறந்த இவர், 11 வயதில், ஆந்திராவின் உள்நாட்டு (domestic) அணியுடன் பயிற்சி செய்யத் தொடங்கினார்.
இந்தியா -இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எஸ்.பாரத் ஆந்திர கிரிக்கெட் சங்கத்தால் கவுரவிக்கப்பட்டார்.
அவர் தனது சொந்த ஊர் மைதானத்தில் இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடியதால் கௌரவிக்கப்பட்டுள்ளார். சொந்த ஊர் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடும் மாநிலத்தின் இரண்டாவது கிரிக்கெட் வீரர் பரத் ஆவார்.

விசாகப்பட்டினத்தில் பிறந்த இவர், 11 வயதில், ஆந்திராவின் உள்நாட்டு (domestic) அணியுடன் பயிற்சி செய்யத் தொடங்கினார். 2005-ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஒருநாள் போட்டி நடந்தபோது, அந்த போட்டியில் கே.எஸ்.பாரத் பால் யாயாக (Ball boy) இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு முன்னர் இரு ஆந்திர வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடி உள்ளனர். அவர்கள் விஹாரி, எம்எஸ்ஏகே பிரசாத் ஆகியோர் ஆவர்.
- இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை நடக்கிறது.
- வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டுக்கு பதிலாக ஆண்டர்சன் இடம் பிடித்துள்ளார்.
விசாகப்பட்டினம்:
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 28 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோற்றது.
இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை (2-ந் தேதி) தொடங்குகிறது.
2-வது டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவன் அணியை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. இதில் 2 மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் பதிலாக ஆண்டர்சன் இடம் பிடித்துள்ளார். ஜேக் லீச் காயத்தால் விலகியதால் அவருக்கு பதிலாக சோயிப் பஷீர் இடம் பிடித்துள்ளார்.
- கே.எல்.ராகுல், ஜடேஜா காயம் காரணமாக இந்த போட்டியில் ஆடவில்லை.
- சுழற்பந்து வீரர் ஜேக் லீச் காயத்தால் இந்த டெஸ்டில் ஆடவில்லை. அவர் இடத்தில் சோயிப் பஷீர் இடம் பெறலாம்.
விசாகப்பட்டினம்:
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 28 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோற்றது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை (2-ந் தேதி) தொடங்குகிறது.
ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கே.எல்.ராகுல், ஜடேஜா காயம் காரணமாக இந்த போட்டியில் ஆடவில்லை. ஏற்கனவே விராட் கோலி முதல் 2 டெஸ்டில் விளை யாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் அணி பலவீனத்துடன் காணப்படுகிறது.
இந்திய அணியில் சர்பிராஸ்கான் அல்லது ரஜத்படிதார் டெஸ்டில் அறிமுகமாகலாம். ஜடேஜா இடத்தில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படுவார். மேலும் வேகப்பந்தில் மாற்றம் செய்யப்படலாம். ஸ்ரேயாஸ் அய்யர், சுப்மன் கில் இந்த டெஸ்ட்டில் சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இங்கிலாந்து அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது. கடந்த டெஸ்டில் அந்த அணியின் வெற்றிக்கு ஆலிபோப், டாம் ஹார்ட்லே முக்கிய பங்கு வகித்தனர்.
சுழற்பந்து வீரர் ஜேக் லீச் காயத்தால் இந்த டெஸ்டில் ஆடவில்லை. அவர் இடத்தில் சோயிப் பஷீர் இடம் பெறலாம்.
இங்கிலாந்து அணி இந்த டெஸ்டிலும் இந்தியாவை வீழ்த்தி 2-0 என்ற முன்னிலையை பெறும் வேட்கையில் இருக்கிறது.
இரு அணிகளும் நாளை மோதுவது 133-வது டெஸ்ட் போட்டியாகும். இதுவரை நடந்த 132 டெஸ்டில் இந்தியா 31-ல், இங்கிலாந்து 51-ல் வெற்றி பெற்றுள்ளன. 50 போட்டி 'டிரா' ஆனது.
நாளைய டெஸ்ட் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
- முதல் டெஸ்ட் போட்டியில் பீல்டிங் செய்யும்போது காயம் ஏற்பட்டது.
- காயம் இன்னும் முழுமையாக குணமடையாததால் 2-வது போட்டியில் இருந்து விலகல்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
2-வது போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜேக் லீச் காயம் காரணமாக 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியின்போது பீல்டிங் செய்தபோது அவருக்கு கால் மூட்டில் காயம் ஏற்பட்டது. இருந்தபோதிலும் 2-வது இன்னிங்சில் 10 ஓவர்கள் வீசினார்.
காயம் குணமடைந்து 2-வது டெஸ்ட் போட்டிக்கு தயாராகி விடுவார் என இங்கிலாந்து அணி நம்பிக்கையில் இருந்தது. ஆனால், 2-வது போட்டியில் அவர் பங்கேற்கமாட்டார் என இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
32 வயதான அனுபவ வீரரான ஜேக் லீச் இல்லாதது அந்த அணிக்கு பாதகத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
- இந்த சம்பவம் குறித்து மயங்கின் மேலாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
- மயங்கின் மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால் தற்போது ரஞ்சி தொடரில் விளையாடி வருகிறார். கர்நாடக அணி கேப்டனான மயங்க் அகர்வால் தனது அணியினருடன் டெல்லி புறப்பட விமான நிலையம் சென்றார். அணியினருடன் விமானத்தில் ஏறிய மயங்க் அகர்வாலுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
விமானத்தில் இருந்த படி சில முறை அவர் வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து விமானத்தில் இருந்து அவசரஅவசரமாக வெளியேறிய மயங்க் அகர்வால் உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அவரு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் மயங்க் அகர்வாலின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மயங்க் அகர்வால் குணமடைய வேண்டிக்கொண்ட அனைவருக்கும் நன்றி என எக்ஸ் தளத்தில் தனது புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
அதில், நான் இப்போது நன்றாக உணர்கிறேன். மீண்டு வர தயாராகி வருகிறேன். குணமடைய வேண்டிக்கொண்ட அனைவருக்கும் நன்றி. பிரார்த்தனைக்கும், அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி, அனைவருக்கும்' என்று பதிவிட்டுள்ளார்.
இருப்பினும், இந்த சம்பவம் குறித்து மயங்கின் மேலாளர் போலீசில் புகார் அளித்துள்ளார். விமானத்தில் அமர்ந்திருக்கும் போது தண்ணீர் என்று தவறாக நினைத்து மயங்க் அந்த திரவத்தை தனக்கு முன்னால் குடித்ததாக மேலாளர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மேற்கு திரிபுரா எஸ்பி கிரண் குமார் கூறுகையில், மயங்கின் மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
- வைத்யா தற்போது விதர்பா கிரிக்கெட் சங்கத்தின் கிரிக்கெட் மேம்பாட்டுக் குழுவின் தலைவராக உள்ளார்.
- காசோலை முறைகேடு வழக்கில் வைத்யா கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரசாந்த் வைத்யா. இவர் இந்தியாவுக்காக 1990-களில் 4 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி உள்ளார். வைத்யா தற்போது விதர்பா கிரிக்கெட் சங்கத்தின் கிரிக்கெட் மேம்பாட்டுக் குழுவின் தலைவராக உள்ளார்.
இந்நிலையில் காசோலை முறைகேடு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் உள்ளூர் வியாபாரி ஒருவரிடம் இருந்து ஸ்டீல் வாங்கியதாக கூறப்படுகிறது. இதற்கான கட்டணத்தை காசோலையாக வழங்கினார். எனினும் அவரது வங்கி கணக்கில் போதுமான தொகை இல்லாததால் காசோலை பவுன்ஸ் ஆனது.
அதைத் தொடர்ந்து வியாபாரி பணம் செலுத்துமாறு கூறியிருக்கிறார். கிரிக்கெட் வீரர் பணம் செலுத்த மறுத்ததாகக் கூறப்படுகிறது. எனவே வியாபாரி நீதிமன்றத்தை நாடினார். அவர் நீதிமன்ற விசாரணைகளைத் தவிர்த்ததற்காக அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- சர்வதேச டெஸ்ட் போட்டியில் 2021-ம் ஆண்டு அறிமுகம் ஆனார்.
- கடந்த வாரம் பிசிசியின் 2023-ம் ஆண்டின் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனை என்ற விருதையும் தீப்தி சர்மா பெற்றார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீராங்கனையாக தீப்தி சர்மா உள்ளார். இவர், இங்கிலாந்து அணிக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் போட்டியில் 2021-ம் ஆண்டு அறிமுகம் ஆனார். இதனைதொரந்து 2014 -ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளிலும், 2016 -ம் ஆண்டு டி20 போட்டிகளிலும் அறிமுகமானார். இவர், சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
மேலும் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான இவர் 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டிங்கில் 225 ரன்கள் எடுத்து 2023 டிசம்பரில் ஐசிசியின் மாதாந்திர வீராங்கனை விருதை வென்றார். கடந்த வாரம் பிசிசியின் 2023-ம் ஆண்டின் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனை என்ற விருதையும் தீப்தி சர்மா பெற்றார்.
இந்நிலையில் இவரின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக உத்தரபிரதேச மாநில அரசு துணை காவல் கண்காணிப்பாளர் என்ற உயரிய பதவியை தீப்தி சர்மா-வுக்கு வழங்கியுள்ளது. இதற்கான பணி நியமன ஆணையை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவருக்கு வழங்கினார். மேலும் இவருக்கு, 3 கோடி ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் விருது வழங்கப்பட்டது.
- ஷிகர் தவான் இந்திய அணிக்காக 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
- தவான் இந்திய அணிக்கு கடைசியாக 2022-ம் ஆண்டு விளையாடினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவான் தற்போது இந்திய அணியில் இடம் கிடைக்காமல் திணறி வருகிறார். அவர் இந்திய அணிக்கு கடைசியாக 2022-ம் ஆண்டில் ஒருநாள் போட்டியிலும் 2021-ம் ஆண்டில் டி20 போட்டியிலும் விளையாடினார்.
அவர் இந்திய அணிக்காக 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அவர் ஐபிஎல்லில் அதிக ரன் குவித்தவர்களில் ஒருவராக உள்ளார். 217 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 6600 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். டி20 போட்டியில் 2 சதங்கள் அடித்துள்ளார்.
கிரிக்கெட் விளையாடவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் செய்து ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளார். மனைவியை பிரிந்து வாழும் அவர், தனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக பேட்டியளித்துள்ளார்.
அவரை பேட்டியெடுக்க வந்த பெண் தொகுப்பாளரிடம் என்னை நீங்கள் மிகவும் கவர்ந்து விட்டீர்கள் என தெரிவித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இருவரும் பேசியது:-
தவான்: பார்த்ததும் ஈர்ப்பதை நம்புகிறேன். எனக்கு அதில் நம்பிக்கை உண்டு.
தொகுப்பாளர்: எனக்கும் நம்பிக்கை இருக்கிறது.
தவான்: நீங்களும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டீர்கள்.
தொகுப்பாளர்: இந்த பேட்டி நிச்சயமாக 100 சதவீதம் அனைவரையும் கவரும் என கூறினார்.
அந்த பேட்டியில் சச்சின், விராட் கோலி, டோனி போன்றவர்கள் பற்றியும் வெளிப்படையாக பேசினார். மேலும் தனது மகன் குறித்தும் உருக்கமாக பேசினார்.
- காயத்தால் சென்னை அணியில் நான் நினைத்த அளவுக்கு விளையாட முடியவில்லை.
- பயிற்சியாளராக ஒருவர் கேப்டனாக ஒருவர் எடுக்கும் முடிவுகளில் அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட்டில் இந்திய அணியை பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி வீழ்த்தியுள்ளது.
பென் ஸ்டோக்ஸ்- மெக்கல்லம் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பஸ்பால் எனப்படும் தங்களுடைய அணுகுமுறையை வைத்து வெற்றி காண முடியும் என்பதை இங்கிலாந்து அணி நிரூபித்துள்ளது.
இந்நிலையில் டோனி மற்றும் ஸ்டீபன் பிளெமிங் போல நானும் ப்ரெண்டன் மெக்கலமும் கற்றுக் கொள்வதாக பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
காயத்தால் சென்னை அணியில் நான் நினைத்த அளவுக்கு விளையாட முடியவில்லை. ஆனால் அந்த நம்ப முடியாத சிறந்த அணியில் நானும் ஒரு அங்கமாக இருந்தேன். புனே அணிக்காக விளையாடிய போது நான் டோனி மற்றும் பிளெமிங் ஆகியோருடன் நிறைய விளையாடியுள்ளேன்.
பயிற்சியாளராக ஒருவர் கேப்டனாக ஒருவர் எடுக்கும் முடிவுகளில் அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். டோனி ஆட்டத்தில் வெளியே இருப்பது போன்ற உணர்ச்சியை கொண்டிருப்பார். அதே சமயம் சில நேரங்களில் நீங்கள் ஓரத்தில் அமர்ந்திருக்கும் போது அந்த உணர்ச்சி உங்களுக்கு இருக்காது. அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சிறந்த புரிதலை கொண்டிருப்பதாக நினைக்கிறேன்.
டோனி மற்றும் பிளெமிங் ஆகியோர் வீரர்களை தேர்வு செய்வது சம்பந்தமாக அல்லது எந்த முடிவாக இருந்தாலும் அதை வேகமாக எடுப்பார்கள். அது எப்போதும் அணிக்கு நன்மையை ஏற்படுத்துவதாக இருக்கும். அதைத் தான் நானும் மெக்கலமும் எப்போதும் பின்பற்ற முயற்சித்து கடைபிடிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 12 வருடங்களாக உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட இந்தியா தோற்றதில்லை. இந்த நிலையை இந்தியா தக்கவைத்து கொள்ளுமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 2-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.
- செஸ் விளையாட்டில் வீரர்களுக்கு நிகராக வீராங்கனைகள் பாராட்டுகளை பெறுவதில்லை.
- மாறாக எனது உடை, முடி, வார்த்தை உச்சரிப்பு உள்ளிட்ட பிற தேவையில்லா விஷயங்களை கவனிக்கின்றனர்.
நெதர்லாந்தில் நடைபெற்ற செஸ் தொடரில் இந்திய இளம் வீராங்கனை திவ்யா தேஷ்முக் 12-ம் இடம் பிடித்தார். 18 வயதான அவர் இது போன்று வெற்றி பெறுவதை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவது வழக்காமக கொண்டிருந்தார்.
இந்நிலையில் இதற்கு பலர் பாலியல் சார்ந்த சர்ச்சை கூறிய கருத்துக்களை பதிவிடுவதாக அவர் வருத்தத்துடன் கூறினார்.
இது குறித்து திவ்யா தேஷ்முக் கூறியதாவது:-
நான் விளையாடிய போட்டிகளில் சில முக்கிய நகர்வுகளை செய்தேன். இதனால் என்னைப்பற்றி நானே பெருமையும் பட்டேன். ஆனால் பார்வையாளர்கள் அதை பற்றி எந்த அக்கறையும் கொள்ளவில்லை.
மாறாக எனது உடை, முடி, வார்த்தை உச்சரிப்பு உள்ளிட்ட பிற தேவையில்லா விஷயங்களை கவனிக்கின்றனர். தொடர்ந்து இது போன்ற கருத்துக்களை சந்தித்து வருகிறேன். இதனால் நான் மிகவும் வருத்தமடைந்தேன்.
செஸ் விளையாட்டில் வீரர்களுக்கு நிகராக வீராங்கனைகள் பாராட்டுகளை பெறுவதில்லை. பெண்கள் சிறப்பாக செஸ் விளையாடினாலும், பார்வையாளர்கள் அவர்களின் திறமையை கவனிக்காமல் இருப்பது சோகமான உண்மையாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்தோனேசியாவின் பாலி நகரில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
- ஏசிசி தலைவர் பொறுப்பை ஜெய் ஷா ஜனவரி 2021-ல் ஏற்றுக்கொண்டார்.
பாலி
இந்தோனேசியாவின் பாலி நகரில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருக்கும் ஜெய் ஷாவின் பதவிக்காலம் மேலும் 1 ஆண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஏசிசி தலைவரின் பதவிக்காலம் 2 ஆண்டுகள். அதில் தற்போது ஜெய் ஷா 2-வது ஆண்டில் இருக்கிறார். இந்நிலையில் அவரது பதவிக்காலம் மேலும் 1 ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவர் வங்காளதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் நஸ்முல் ஹாசனுக்குப் பிறகு ஜனவரி 2021-ல் ஏசிசி தலைவர் பொறுப்பை ஜெய் ஷா ஏற்றுக்கொண்டார். 2022-ல் ஷாவின் தலைமையின் கீழ், ஏசிசி ஆசிய கோப்பை டி20 போட்டியாகவும், 2023-ல் ஒருநாள் போட்டியாகவும் வெற்றிகரமாக ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.






