search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    கோலி மாதிரி விளையாட கற்று வருகிறேன்- இளம் இந்திய வீரர்
    X

    கோலி மாதிரி விளையாட கற்று வருகிறேன்- இளம் இந்திய வீரர்

    • நான் எப்போதும் கோலி பேட்டிங் செய்யும் போது வலைகளுக்குப் பின்னால் இருந்து கவனித்து வருகிறேன்.
    • குறிப்பாக பேட்டிங் செய்யும் போது அவரது கால் நகருவது மற்றும் உடல் அசைவுகளை நான் கவனிக்கிறேன்.

    விசாகப்பட்டினம்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனால் இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.

    இதனை தொடர்ந்து இரு அணிகள் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை தொடங்குகிறது. இந்திய அணியில் விராட் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. மேலும் கேஎல் ராகுல் மற்றும் ஜடேஜா காயம் காரணமாக விலகி உள்ள நிலையில் அவர்களுக்கு பதிலாக சர்பராஸ் கான் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் சௌரப் குமார் ஆகியோர் இந்திய அணியில் இணைந்துள்ளனர்.

    இதனால் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில் 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாட ராஜத் பட்டிதாருக்கு இடம் கிடைத்துள்ளது. இந்நிலையில் விராட் கோலி போல பேட்டிங் செய்ய கற்றுக் கொண்டிருக்கிறேன் என பட்டிதார் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் எப்போதும் கோலி பேட்டிங் செய்யும் போது வலைகளுக்குப் பின்னால் இருந்து கவனித்து வருகிறேன். குறிப்பாக பேட்டிங் செய்யும் போது அவரது கால் நகருவது மற்றும் உடல் அசைவுகளை நான் கவனிக்கிறேன். இந்த விஷயங்களை கற்று எனது பேட்டிங்கில் சேர்க்க முயற்சிக்கிறேன்.

    உள்நாட்டு சுற்றுகளில் பல இந்திய வீரர்களுடன் நான் விளையாடியுள்ளேன். கடந்த இரண்டு தொடர்களில் இருந்து ராகுல் சாருடன் உரையாடி வருகிறேன். நான் ரோகித் பாயுடன் அதிகம் பேசவில்லை. ஆனால் இந்த சுற்றுப்பயணத்தில் நான் அவருடன் பேட்டிங் பற்றி பேச நேர்ந்தது. வலைகளில் அவர் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இவை அனைத்தும் எனது நம்பிக்கையை அதிகரித்துள்ளன.

    என்று படிதார் கூறினார்.

    Next Story
    ×