என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிறகு எனது தன்னம்பிக்கை அதிகரித்து இருக்கிறது.
    • எல்லாமே சரியாக அமைந்தால், 90 மீட்டர் இலக்கை பார்க்க மக்கள் ஒலிம்பிக் வரை காத்திருக்க வேண்டாம்.

    புதுடெல்லி:

    இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கிலும், அதைத் தொடர்ந்து உலக தடகளத்திலும் தங்கப்பதக்கத்தை வென்று வரலாறு படைத்தார். இப்போது ஜூலை - ஆகஸ்டு மாதத்தில் பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக்கில் மீண்டும் மகுடம் சூடும் உத்வேகத்துடன் தன்னை தீவிரமாக தயார்படுத்தி வருகிறார். அரியானாவைச் சேர்ந்த 26 வயதான நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 89.94 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்துள்ளார்.

    இந்த நிலையில் தனது அடுத்தக்கட்ட இலக்கு குறித்து ஆன்லைன் மூலம் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக 90 மீட்டர் தூரத்துக்கு மேல் ஈட்டி எறிய முயற்சிப்பேன். எல்லாமே சரியாக அமைந்தால், 90 மீட்டர் இலக்கை பார்க்க மக்கள் ஒலிம்பிக் வரை காத்திருக்க வேண்டாம். அதற்கு முன்பாகவே நடந்து விடும் என்று நம்புகிறேன். அதற்கு ஏற்ப தயாராகி உள்ளேன்.

    இந்த சீசன் தொடங்கிய போது உடல்தகுதி மற்றும் உடல் வலிமையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினேன். ஈட்டி எறிதலுக்கு என்று பிரத்யேகமாக எந்த பயிற்சியும் எடுக்கவில்லை. ஏனெனில் தொழில்நுட்பத்தில் நான் நிறைய முன்னேற்றம் கண்டுள்ளேன். மேலும் தென்ஆப்பிரிக்கா மற்றும் துருக்கியில் மேற்ெகாண்ட பயிற்சிகள் நல்லவிதமாக அமைந்தது.

    டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிறகு எனது தன்னம்பிக்கை அதிகரித்து இருக்கிறது. அதன் பிறகு இரண்டு உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றுள்ளேன். அவற்றில் ஒன்றில் வெள்ளியும், மற்றொன்றில் தங்கமும் வென்றேன். டைமண்ட் லீக் தடகளத்தில் கோப்பையை கைப்பற்றினேன். ஆசிய விளையாட்டில் பட்டத்தை தக்க வைத்தேன். டோக்கியோ மற்றும் பாரீஸ் ஒலிம்பிக்குக்கு இடைப்பட்ட காலத்தில் கிடைத்த இந்த வெற்றிகள் நிறைய நம்பிக்கையை தந்திருக்கிறது. எந்த நிலையிலும், எத்தகைய போட்டியிலும் என்னால் சிறப்பாக செயல்பட முடியும்.

    அடுத்த மாதத்தில் தோகா டைமண்ட் லீக் மற்றும் ஜூன் மாதத்தில் பாவோ நூர்மி விளையாட்டில் பங்கேற்க உள்ளேன். ஒலிம்பிக்குக்கு முன்பாக 3-4 போட்டிகளில் விளையாட விரும்புகிறேன்.

    ஜெர்மனி இளம் வீரர் குறித்து...

    ஜெர்மனியின் இளம் வீரர் மேக்ஸ் டெனிங் சமீபத்தில் 90.20 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தது குறித்து கேட்கிறீர்கள். மேக்ஸ் டெனிங்குடன் இதற்கு முன்பு நான் விளையாடியதில்லை. பாவோ நூர்மி விளையாட்டில் அவரை எதிர்கொள்ள ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.

    டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் உலக தடகளத்தில் என்னுடன் 90 மீட்டர் தூரத்திற்கு மேல் ஈட்டி எறிந்தவர்களும் களம் கண்டனர். அதில் அவர்களை தோற்கடித்தேன். அதனால் இது போன்று அதிக தூரம் ஈட்டி எறிந்தவர்களுடன் மோதுவது எனக்கு புதிதல்ல. அது ஒரு பெரிய விஷயமே இல்லை. குறிப்பிட்ட நாளில் நீங்கள் எப்படி செயல்படுகிறீர்கள் என்பதே முக்கியம்.

    சக நாட்டவரான கிஷோர் ஜெனா உலக தடகள சாம்பியன்ஷிப்பிலும், ஆசிய விளையாட்டிலும் சிறப்பாக செயல்பட்டார். அவரது முன்னேற்றத்தை பார்க்கும் போது, எனக்கு முன்பாக 90 மீட்டர் இலக்கை எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    ஊக்கத்தொகை அறிவிப்புக்கு வரவேற்பு

    பாரீஸ் ஒலிம்பிக்கில் தடகளத்தில் தங்கப்பதக்கம் வெல்வோருக்கு ஊக்கத்தொகை (ரூ.41½ லட்சம்) வழங்கப்படும் என்ற உலக தடகள சம்மேளனத்தின் அறிவிப்பு ஒரு சிறப்பான தொடக்கமாகும் இதேபோல் டைமண்ட் லீக் போன்ற மற்ற பெரிய போட்டிகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கினால் நன்றாக இருக்கும்.

    இவ்வாறு நீரஜ் சோப்ரா கூறினார்.

    • களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ சர்வதேச டென்னிஸ் தொடர் மொனாக்கோவில் நடந்து வருகிறது.
    • இந்தியாவின் சுமித் நாகல், 7-ம் நிலை வீரரான ஹோல்கர் ருனேவை (டென்மார்க்) எதிர்கொண்டார்.

    மான்டி கார்லோ:

    களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ சர்வதேச டென்னிஸ் தொடர் மொனாக்கோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 93-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் சுமித் நாகல், 7-ம் நிலை வீரரான ஹோல்கர் ருனேவை (டென்மார்க்) எதிர்கொண்டார். நேற்று முன்தினம் 2-வது செட்டுடன் மழையால் பாதியில் நிறுத்தப்பட்ட இந்த ஆட்டம் மறு நாளான நேற்று தொடர்ந்து நடந்தது. 2-வது செட்டை வசப்படுத்தி ஹோல்கருக்கு அதிர்ச்சி அளித்த சுமித் நாகல், கடைசி செட்டை தவற விட்டார்.

    2 மணி 11 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தின் முடிவில் ஹோல்கர் ருனே 6-3, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் சுமித் நாகலை போராடி தோற்கடித்தார். 42 ஆண்டுக்கு பிறகு மான்டி கார்லோ டென்னிசில் ஒற்றையர் பிரிவுக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையோடு நாகல் வெளியேறினார்.

    3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 'நம்பர் ஒன்' வீரரும், 2 முறை சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் லோரென்சோ முசெட்டியை (இத்தாலி) வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவர் 1 மணி 58 நிமிடம் எடுத்துகொண்டார்.

    • டெல்லி அணி 5 ஆட்டங்களில் ஆடி ஒன்றில் மட்டுமே (சென்னைக்கு எதிராக) வெற்றி பெற்றிருக்கிறது.
    • 4 ஆட்டங்களில் ஆடியுள்ள லக்னோ அணி 3 வெற்றி ஒரு தோல்வி என்று புள்ளிப்பட்டியலில் 3-வது இடம் வகிக்கிறது.

    லக்னோ:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 26-வது லீக் சுற்று ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மோதுகிறது.

    நடப்பு தொடரில் இதுவரை 4 ஆட்டங்களில் ஆடியுள்ள லக்னோ அணி 3 வெற்றி (பஞ்சாப், பெங்களூரு, குஜராத்துக்கு எதிராக), ஒரு தோல்வி (ராஜஸ்தானுக்கு எதிராக) என்று புள்ளிப்பட்டியலில் 3-வது இடம் வகிக்கிறது. வரிசையாக 3 ஆட்டங்களில் வெற்றிக்கனியை பறித்த லக்னோ அந்த வெற்றிப்பயணத்தை தொடரும் வேட்கையில் உள்ளது.

    டெல்லி அணி 5 ஆட்டங்களில் ஆடி ஒன்றில் மட்டுமே (சென்னைக்கு எதிராக) வெற்றி பெற்றிருக்கிறது. லக்னோ ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது என்பதால் சுழற்பந்து வீச்சின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆகாஷ் தீப் மற்றும் வில் ஜாக்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
    • சூர்யகுமார் யாதவ் 52 ரன்களை குவித்தார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 25-ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங்கை துவங்கிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த வில் ஜாக்ஸ் 8 ரன்களில் நடையை கட்டினார். துவக்க வீரராக களமிறங்கிய பாப் டு பிளெசிஸ் 40 பந்துகளில் 61 ரன்களை விளாச, அடுத்து வந்த ராஜத் பட்டிதர் 26 பந்துகளில் 50 ரன்களை விளாசினார்.

    போட்டி முடிவில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை குவித்தது. பெங்களூரு சார்பில் தினேஷ் கார்த்திக் 53 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். மும்பை சார்பில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். கோட்சீ, ஆகாஷ், ஸ்ரேயஸ் கோபால் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    197 ரன்களை துரத்திய மும்பை அணிக்கு துவக்க வீரர்களான இஷான் கிஷன் மற்றும் ரோகித் சர்மா நல்ல துவக்கம் கொடுத்தனர். இஷான் கிஷன் 34 பந்துகளில் 69 ரன்களையும், ரோகித் சர்மா 24 பந்துகளில் 38 ரன்களையும் குவித்தனர். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒருபக்கம் கேப்டன் ஹர்திக் பாண்டியா சிறப்பாக ஆடினார்.

    சூர்யகுமார் யாதவ் 52 ரன்களில் ஆட்டமிழக்க ஹர்திக் பாண்டியா 6 பந்துகளில் 21 ரன்களை குவித்தார். மும்பை அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் மும்பை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணி சார்பில் ஆகாஷ் தீப், விஜய்குமார் வைசாக் மற்றும் வில் ஜாக்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் மொனாக்கோவில் நடந்துவருகிறது.
    • இதில் இத்தாலிய வீரர் முசெட்டி தோல்வி அடைந்து வெளியேறினார்.

    மான்டி கார்லோ:

    களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்துவருகிறது.

    இதில் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய ஆட்டம் ஒன்றில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், இத்தாலி வீரர் லாரன்சோ

    முசெட்டியுடன் மோதினார்.

    இதில் ஜோகோவிச் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் காலிறுதியில் ஜோகோவிச், ஆஸ்திரேலிய வீரர் டி மினாருடன் மோதுகிறார்.

    • ராஜத் பட்டிதர் 26 பந்துகளில் 50 ரன்களை விளாசினார்.
    • பும்ரா ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 25-ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங்கை துவங்கிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த வில் ஜாக்ஸ் 8 ரன்களில் நடையை கட்டினார். துவக்க வீரராக களமிறங்கிய பாப் டு பிளெசிஸ் 40 பந்துகளில் 61 ரன்களை விளாச, அடுத்து வந்த ராஜத் பட்டிதர் 26 பந்துகளில் 50 ரன்களை விளாசினார்.


     

    இதன் மூலம் பெங்களூரு அணி சரிவில் இருந்து மீண்டது. போட்டி முடிவில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை குவித்தது. பெங்களூரு சார்பில் தினேஷ் கார்த்திக் 53 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

    மும்பை சார்பில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். கோட்சீ, ஆகாஷ், ஸ்ரேயஸ் கோபால் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • இந்த தொடரில் ஆறு இன்னிங்சில் 3 முறை டக்அவுட்.
    • ஒட்டுமொத்தமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் 17 முறை டக்அவுட் ஆகியுள்ளார்.

    ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் மேக்ஸ்வெல்லுக்கு இந்த ஐபிஎல் சீசன் இதுவரை சிறப்பானதாக அமையவில்லை. பார்ம் இன்றி தவித்து வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக இன்று நான்கு பந்துகளை சந்தித்த நிலையில் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட்டாகி வெளியேறினார். இந்த சீசனில் இதுவரை ஆறு போட்டிகளில் களம் இறங்கியுள்ளார். அதில் மூன்று முறை டக்அவுட்டாகியுள்ளார்.

    சிஎஸ்கே-வுக்கு எதிரான முதல் போட்டியிலும், எல்எஸ்ஜி-க்கு எதிரான 4-வது போட்டியிலும் டக்அவுட் ஆகியுள்ளார். மொத்தம் ஆறு இன்னிங்சில் 32 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். சராசரி 5.4 ஆகும். கேகேஆர் அணிக்கெதிராக மட்டுமே 28 ரன்கள் அடித்துள்ளார்.

    மேலும், ஐபிஎல் கிரிக்கெட்டில் இது ஒட்டுமொத்தமாக 17-வது டக்அவுட் ஆகும். இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகமுறை டக்அவுட்டாகிய பேட்ஸ்மேன் பட்டியலில் ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக் ஆகியோருடன் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    • ஒவ்வொரு பையனுக்கும் கிரிக்கெட்டில் பெரிதாக சாதித்து விளையாட வேண்டும் என்பது கனவாக இருக்கும்.
    • இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தெருவிலும் 25 வீரர்கள் நாட்டுக்காக விளையாடுவதற்கு விரும்புவார்கள்.

    இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக பும்ரா திகழ்ந்து வருகிறார். மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் அசத்தி வருகிறார். இவரது படிப்பு முடிந்த உடன் குடும்பத்துடன் கனடாவுக்கு சென்று, அங்கேயே குடியேற விரும்பியதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால் அவரது தயார் கனடா செல்ல விருமபாததால் இந்தியாவிலேயே தங்கியதாகவும், அதன்பின் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்து இந்திய அணியில் நட்சத்திர பந்து வீச்சாளராக மாறியதாகவும் தெரிவித்துள்ளார்.

    நீங்கள் கனடா சென்று, அங்கு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்பினீர்களா? என்று அவரது மனைவி சஞ்சனா கேட்டதற்கு பும்ரா அளித்த பதில் வருமாறு:-

    ஒவ்வொரு பையனுக்கும் கிரிக்கெட்டில் பெரிதாக சாதித்து விளையாட வேண்டும் என்பது கனவாக இருக்கும். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தெருவிலும் 25 வீரர்கள் நாட்டுக்காக விளையாடுவதற்கு விரும்புவார்கள். அதனால் நீங்கள் மாற்றுத்திட்டத்தை வைத்திருக்க வேண்டியது அவசியம். படிப்பை முடித்ததும் கனடாவுக்கு செல்லலாம் என்று முடிவெடுத்தேன். அங்கே என்னுடைய மாமா இருக்கின்றார்.

    அப்போது குடும்பமாக செல்லலாம் என்று நாங்கள் முடிவெடுத்தோம். ஆனால் கனடா போன்ற வேறு கலாச்சாரத்தை கொண்ட நாட்டுக்கு நான் செல்வதை அவர் விரும்பவில்லை என எனது தயார் தெரிவித்தார். அதிர்ஷ்டவசமாக அது எனக்கு வேலை செய்தது. மாறாக கனடா அணிக்காக விளையாட முயற்சி செய்திருப்பேனா? அல்லது ஏதாவது செயதிருப்பேனா? என்பது தெரியவில்லை. இருப்பினும் அது வேலை செய்ததால் தற்போது இந்தியா மற்றும் மும்பை அணிக்காக விளையாடுகிறேன்" என்று கூறினார்.

    • மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் மொனாக்கோவில் நடந்துவருகிறது.
    • இதில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    மான்டி கார்லோ:

    களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்துவருகிறது.

    இதில் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய ஆட்டம் ஒன்றில் கிரீஸ் வீரட் சிட்சிபாஸ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவுடன் மோதினார்.

    இதில் சிட்சிபாஸ் 7-5, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இந்த தோல்வி மூலம் ஸ்வரேவ் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • மும்பை அணி விளையாடிய முதல் மூன்று போட்டிகளில் தோல்வியை சந்தித்தது.
    • ஐந்து போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 25-ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

    முன்னதாக மும்பை அணி விளையாடிய முதல் மூன்று போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. நான்காவது போட்டியில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணி இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.

    இரு அணிகளும் அதிக தோல்விகளை சந்தித்துள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகின்றன. 

    • கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் லக்னோ வீரர் நவீன் உல் ஹக் மற்றும் பெங்களூரு வீரர் கோலி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது
    • கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் மற்றும் கோலி இடையில் மோதல் வெடித்தது

    கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதிய ஆட்டத்தில் லக்னோ வீரர் நவீன் உல்-ஹக் மற்றும் பெங்களூரு வீரர் கோலி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போட்டியில் பெங்களூரு வெற்றிபெற்ற பின் இரு அணி வீரர்களும் சந்தித்தபோது லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் மற்றும் கோலி இடையில் மோதல் வெடித்தது.

    அதன் பிறகு விராட் கோலி ஆட்டத்தில் தடுமாறும் போதும், பெங்களூரு அணி தோல்வியை தழுவும் போதும் மாம்பழங்களை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து 'இன்பமாய் இருக்குதய்யா' என சொல்வது போல பதிவிட்டு வந்தார் நவீன் உல்-ஹக். அதே நேரத்தில் அந்த சீசன் முழுவதும் அவர் களத்தில் ஃபீல்ட் செய்யும் போது 'கோலி.. கோலி..' என ரசிகர்கள் முழக்கமிட்டு வந்தனர்.

    இதனையடுத்து கடந்தாண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையிலான போட்டியில் நவீன் உல் ஹக் பேட் செய்ய வந்த போது 'கோலி.. கோலி..' என ரசிகர்கள் முழக்கமிட்டனர். பின்னர் கோலி பேட் செய்தபோது அவருக்கு நவீன் உல் ஹக் பந்து வீசி இருந்தார். அப்போது இருவரும் ஒருவருக்கு ஒருவர் கை கொடுத்துக் கொண்டனர். அதோடு இருவரும் அணைத்துக்கொண்டனர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையிலான போட்டியின் போது விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் கட்டியணைத்து கொண்ட சம்பவம் இணையத்தில் பேசுபொருளாக மாறியது.

    இந்த சம்பவங்கள் குறித்து பேசிய விராட் கோலி, "கம்பீர் பாய் மற்றும் நவீன் உல்ஹக் உடன் நான் சமரசத்தில் ஈடுபட்டது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்துவிட்டது. அவர்களுக்கு மசாலா தீர்ந்துவிட்டது என நினைக்கிறேன்" என்று கிண்டலாக தெரிவித்தார். 

    • பிரனாய் 18-21, 11-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
    • பிவி சிந்து 18-21, 21-13, 17-21 எனத் தோல்வியடைந்தார்.

    ஆசிய சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 15 பேர் ஒன்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் கலந்து கொண்டார். அனைவரும் காலிறுதிக்குக் கூட முன்னேற முடியாமல் வெளியேறி ஏமாற்றம் அடைந்தனர்.

    இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் ஹெச்.எஸ். பிரனாய் உலகத் தரவரிசையில் 19-வது இடத்தில் இருக்கும் லின் சுன்-யியை எதிர்கொண்டார். இதில் பிரனாய் 18-21, 11-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

    பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் பிவி சிந்து உலகத் தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் ஹாய் யுயி-ஐ 2-வது சுற்றில் எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து முதல் செட்டை 18-21 என இழந்தார். ஆனால் 2-வது செட்டை 21-13 என எளிதாக கைப்பற்றினார்.

    வெற்றியை தீர்மானிக்கும் 3-வது சுற்றில் கடுமையாக போராடினார். இருந்தபோதிலும் 17-21 என 3-வது செட்டை தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார். பிவி சிந்து ஹாய் யுயி-ஐ ஆறு முறை எதிர்கொண்டுள்ளார். இதில் தற்போது முதன்முறையாக தோல்வியடைந்தார்.

    ×