என் மலர்
விளையாட்டு
- மேட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
- இதில் நம்பர் 3 வீரரான அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.
மேட்ரிட்:
மேட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் நம்பர் 3 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ரஷியாவின் ஆன்ட்ரே ரூப்லெவுடன் மோதினார்.
இதில் ரூப்லெவ் 4-6 என முதல் செட்டை இழந்தார். இதனால் சுதாரித்துக் கொண்ட அவர் அடுத்த இரு செட்களை 6-3, 6-2 என வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் அரையிறுதியில் ரூப்லெவ், அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்சுடன் மோதுகிறார். இன்று இரவு நடைபெறும் முதல் அரையிறுதியில் மெத்வதேவ் செக் வீரர் ஜிரி லெஹ்காவை சந்திக்கிறார்.
- இரு அணியிலும் அதிரடி சூரர்கள் அணிவகுத்து நிற்பதால் ரன் மழையை எதிர்பார்க்கலாம்.
- இவ்விரு அணிகளும் இதுவரை 18 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன.
ஐதராபாத்:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஐதராபாத் சன் ரைசர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
கணிக்க முடியாத அணியாக திகழும் ஐதராபாத் அணி இதுவரை 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளி பெற்றுள்ளது. இந்த சீசனில் முதலில் பேட்டிங் செய்து 3 முறை 250 ரன்களுக்கு மேல் குவித்து வரலாறு படைத்துள்ள அந்த அணி, 2-வது பேட்டிங்கில் ஒருமுறை கூட 200 ரன்னுக்கு மேலான இலக்கை எட்டிப்பிடிக்கவில்லை. கடைசி 2 ஆட்டங்களில் இலக்கை விரட்டுகையில் பெங்களூரு, சென்னை அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது. எனவே அந்த அணி வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் உள்ளது.
ஐதராபாத் அணியில் பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட் (338 ரன்), அபிஷேக் ஷர்மா (303), ஹென்ரிச் கிளாசென் ஆகியோர் அதிரடியில் பிரமாதப்படுத்துகிறார்கள். அதேநேரத்தில் அவர்களின் ஆட்டம் பொய்த்தால் அந்த அணியின் நிலை பரிதாபத்துக்குரியதாக மாறுகிறது. ஆல்-ரவுண்டர் எய்டன் மார்க்ரம், அப்துல் சமத் பேட்டில் இருந்து இன்னும் போதிய ரன்கள் வரவில்லை. இவர்களும் பார்முக்கு திரும்பினால், ஐதராபாத்தின் பேட்டிங் மேலும் வலுவடையும். பந்து வீச்சில் நடராஜன், கேப்டன் கம்மின்ஸ், மயங்க் மார்கண்டே, ஜெய்தேவ் உனட்கட், புவனேஷ்வர்குமார் நல்ல நிலையில் உள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, ஒரு தோல்வி (குஜராத் அணிக்கு எதிராக) என்று 16 புள்ளி பெற்று முதலிடத்தில் கம்பீரமாக வீறுநடைபோடுகிறது. இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அந்த அணி அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை அதிகாரபூர்வமாக உறுதி செய்து விடும்.
ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் கேப்டன் சஞ்சு சாம்சன் (385 ரன்), ரியான் பராக் (332), ஜோஸ் பட்லர் (319), ஜெய்ஸ்வால் ஆகியோர் அபாரமாக செயல்பட்டு வருகிறார்கள். பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், டிரென்ட் பவுல்ட், அவேஷ் கான், சந்தீப் ஷர்மா ஆகியோர் கலக்குகிறார்கள். அஸ்வினின் பந்துவீச்சு எதிர்பார்ப்புக்கு ஏற்ப இல்லை.
மொத்தத்தில், வெற்றிப்பாதைக்கு திரும்பி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க ஐதராபாத் அணியும், முதல்அணியாக அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைக்க ராஜஸ்தான் அணியும் தீவிரம் காட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இரு அணியிலும் அதிரடி சூரர்கள் அணிவகுத்து நிற்பதால் ரன் மழையை எதிர்பார்க்கலாம். இவ்விரு அணிகளும் இதுவரை 18 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் இரு அணிகளும் தலா 9-ல் வெற்றியை தனதாக்கி இருக்கின்றன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
ஐதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, மார்க்ரம், நிதிஷ்குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத் அல்லது ஷபாஸ் அகமது, கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே, அன்மோல்பிரீத் சிங்.
ராஜஸ்தான்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், துருவ் ஜூரெல், ரோமன் பவெல், ஹெட்மயர், அஸ்வின், டிரென்ட் பவுல்ட், அவேஷ் கான் அல்லது சந்தீப் ஷர்மா, யுஸ்வேந்திர சாஹல்.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ. அறிவித்தது.
- டெத் ஓவரில் நடராஜன் யார்க்கர் பந்துகளை வீசி எதிரணியை நிலைகுலையச் செய்வார்.
புதுடெல்லி:
ஐசிசி சார்பில் அடுத்த மாதம் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. பி.சி.சி.ஐ. அறிவித்துள்ள 15 பேர் கொண்ட இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களுடன் சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே "நடராஜன்" என்ற பெயர் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காக மாறியது.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான அணியில் நடராஜன் இடம்பெறாதது சமூக வலைத்தளங்களில் பெறும் விவாதத்தை ஏற்படுத்தியது.
பந்துவீச்சில் இடம் பெற்றுள்ள அர்ஷதீப் சிங் அல்லது முகமது சிராஜுக்கு பதிலாக நடராஜனை தேர்வு செய்திருக்கலாம் என தங்கள் ஆதங்கத்தை ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
நடப்பாண்டு ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக பந்து வீசி வரும் நடராஜனுக்கு டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பளிக்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சீசனில் இதுவரை விளையாடிய 7 போட்டியில் அவர் 13 விக்கெட் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மேட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
- இதில் நம்பர் 2 வீரரான சின்னர் காலிறுதியில் இருந்து திடீரென விலகினார்.
மேட்ரிட்:
மேட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டிகள் நேற்று நடைபெற்றன.
இதில் நம்பர் 2 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், கனடா வீரர் பெலிக்ஸ் அகருடன் மோத இருந்தார். அப்போது இடுப்பில் ஏற்பட்ட காயத்தால் சின்னர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதையடுத்து, கனடா வீரர் பெலிக்ஸ் அகர் அரையிறுதிக்கு முன்னேறினார்.
- மேட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்துவருகிறது.
- இதில் நம்பர் 2 வீராங்கனை சபலென்கா அரையிறுதிக்கு முன்னேறினார்.
மேட்ரிட்:
மேட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் நம்பர் 2 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, ரஷிய வீராங்கனை மீரா ஆன்ட்ரிவாவை எதிர்கொண்டார்.
இதில் சபலென்கா 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல், நம்பர் 4 வீராங்கனையான கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, சக வீராங்கனையான யூலியா புதின்சேவாவுடன் மோதினார். இதில் ரிபாகினா 4-6, 7-6 (7-4), 7-5 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் அரையிறுதியில் சபலென்கா, ரிபாகினாவுடன் மோதுகிறார். மற்றொரு அரையிறுதியில் ஸ்வியாடெக், மேடிசன் கீஸ் மோதுகின்றனர்.
- பேர்ஸ்டோ சிறப்பாக ஆடி 46 ரன்களை அடித்தார்.
- ஷர்துல் தாக்கூர், கிளீசன், ஷிவம் துபே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.
சென்னை அணிக்கு துவக்க வீரர்களான கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். இவருடன் களமிறங்கிய ரஹானே 29 ரன்களை குவித்தார். அடுத்து வந்த ஷிவம் துபே ரன் ஏதும் அடிக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.
ரவீந்திர ஜடேஜா 2 ரன்களில் ஆட்டமிழக்க, இம்பேக்ட் வீரராக களமிறங்கிய ரிஸ்வி 21 ரன்களில் ஆட்டமிழந்தார். போட்டி முடிவில் சென்னை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை குவித்தது. பஞ்சாப் சார்பில் ஹர்பிரீத் பிரார் மற்றும் ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டுகளையும், ரபாடா, அர்ஷ்தீப் சிங் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
எளிய இலக்கை துரத்திய பஞ்சாப் அணியின் பிரப்சிம்ரன் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் விளையாடிய பேர்ஸ்டோ சிறப்பாக ஆடி 46 ரன்களை அடித்து அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ரோசோ 23 பந்துகளில் 43 ரன்களை அடித்து அவுட் ஆனார்.
பஞ்சாப் அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை சார்பில் ஷர்துல் தாக்கூர், கிளீசன் மற்றும் ஷிவம் துபே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- ஷிவம் துபே ரன் ஏதும் அடிக்காமல் அவுட் ஆனார்.
- எம்.எஸ். டோனி 18 ஆவது ஓவரில் களமிறங்கினார்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.
சென்னை அணிக்கு துவக்க வீரர்களான கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். இவருடன் களமிறங்கிய ரஹானே 29 ரன்களை குவித்தார். அடுத்து வந்த ஷிவம் துபே ரன் ஏதும் அடிக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.
ரவீந்திர ஜடேஜா 2 ரன்களில் ஆட்டமிழக்க, இம்பேக்ட் வீரராக களமிறங்கிய ரிஸ்வி 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மொயின் அலி 15 ரன்களில் ஆட்டமிழக்க எம்.எஸ். டோனி 18 ஆவது ஓவரில் களமிறங்கினார்.
இன்றைய போட்டியில் 11 பந்துகளை எதிர்கொண்ட எம்.எஸ். டோனி 14 ரன்களை குவித்தார். இதில் ஒரு புண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். கடைசி ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட எம்.எஸ். டோனி இரண்டு ரன்களை ஓட முயற்சித்த போது ரன் அவுட் ஆனார். இதன் மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ். டோனி முதல் முறையாக தனது விக்கெட்டை இழந்துள்ளார்.
இதன் காரணமாக சென்னை அணி போட்டி முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை குவித்தது. பஞ்சாப் சார்பில் ஹர்பிரீத் பிரார் மற்றும் ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டுகளையும், ரபாடா, அர்ஷ்தீப் சிங் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- விராட் கோலி 500 ரன்கள் அடித்துள்ளார்.
- ருதுராஜ் கெய்க்வாட் 509 ரன்கள் அடித்து முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 48 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 62 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் இந்த சீசனில் 10 போட்டிகளில் 509 ரன்கள் குவித்துள்ளார். இந்த போட்டிக்கு முன்னதாக ஆர்சிபி அணியின் விராட் கோலி 10 போட்டிகளில் 500 ரன்கள் அடித்து ஆரஞ்ச் தொப்பியை கைவசப்படுத்தியிருந்தார்.
இந்த போட்டியில் 62 ரன் அடித்ததன் மூலம் 509 ரன்களுடன் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து ஆரஞ்ச் தொப்பியை விராட் கோலியுடன் இருந்து பெற்றுள்ளார்.
சாய் சுதர்சன் 418 ரன்களுடன் 3-வது இடத்தில் உள்ளார். கே.எல். ராகுல் 406 ரன்களுடன் 4-வது இடத்தில் உள்ளார். ரிஷப் பண்ட் 398 ரன்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
- கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 62 ரன்களை குவித்தார்.
- பஞ்சாப் சார்பில் ஹர்பிரீத் பிரார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.
சென்னை அணிக்கு துவக்க வீரர் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். இவருடன் களமிறங்கிய ரஹானே 29 ரன்களை குவித்தார். அடுத்து வந்த ஷிவம் துபே ரன் ஏதும் அடிக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.
ரவீந்திர ஜடேஜா 2 ரன்களில் ஆட்டமிழக்க, இம்பேக்ட் வீரராக களமிறங்கிய ரிஸ்வி 21 ரன்களில் ஆட்டமிழந்தார். போட்டி முடிவில் சென்னை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை குவித்தது. பஞ்சாப் சார்பில் ஹர்பிரீத் பிரார் மற்றும் ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டுகளையும், ரபாடா, அர்ஷ்தீப் சிங் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
- ஹெச்.எஸ். பிரனோய் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்றார்.
- ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி 22-24 24-22 21-19 என தோல்வியடைந்தது.
தாமஸ் கோப்பை பேட்மிண்டன் சீனாவின் செங்டு நகரில் நடைபெற்று வருகிறது. இந்தோனேசியா, இந்தியா ஆகியவை ஒரே பிரிவில் இடம் பிடித்துள்ளனர். இரு அணிகளும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.
இந்த நிலையில் குரூப்பில் யார் முதல் இடம் பிடிப்பதற்கான கடைசி லீக்கில் இரு நாடுகளும் மோதின. இதில் இந்தோனேசியா 4-1 என வெற்றி பெற்றது.
2022-ல் நடைபெற்ற தாமஸ் கோப்பை போட்டியில் இந்தோனேசியாவை 3-0 என வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. இந்த நிலையில் அதற்கு பழிவாங்கும் விதமாக தற்போது இந்தோனேசியா இந்தியாவை வீழ்த்தியுள்ளது.
ஹெச்.எஸ். பிரனோய் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்றார். இதனால் இந்தியா 1-0 (13-21 21-12 21-12) என முன்னிலைப் பெற்றது.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி 22-24 24-22 21-19 என தோல்வியடைந்தது. இதனால் இந்தியா- இந்தோனேசியா ஸ்கோர் 1-1 என சமநிலை ஆனது.
லக்ஷயா சென் 18-21 21-16 17-21 எனத் தோல்வியடைந்தார். இதனால் இந்தோனேசியா 2-1 என முன்னிலைப் பெற்றது.
4-வது போட்டியில் த்ருவ் கபிலா- சாய் பிரதீக் ஜோடி 20-22, 11-21 என நேர்செட் கேமில் தோல்வியடைந்தது. கடைசி போட்டியில் கிதாம்பி ஸ்ரீகாந்த் முதல் கேம்-ஐ 21-19 எனக் கைப்பற்றினார். அதன்பின் 2-வது மற்றும் 3-வது கேம்களை 14-21, 22-24 இழந்தார். இதனால் இந்தியா 1-4 எனத் தோல்வியை தழுவியது.
- பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
- சென்னை அணி ஒரு போட்டியில் மட்டுமே டாஸ் வென்றுள்ளது.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று தனது 10-ஆவது போட்டியில் விளையாடுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் சென்னை அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இன்றைய போட்டியில் டாஸ் தோற்றதன் மூலம் சென்னை அணி பத்து போட்டிகளில் ஒரே போட்டியில் மட்டுமே டாஸ் வென்றுள்ளது. தொடர்ச்சியாக டாஸ்-இல் தோல்வியை தழுவி வருவது தொடர்பாக சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கருத்து தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், "எனது டாஸ் சாதனையை பார்த்து எங்களின் அணி வீரர்களில் பெரும்பாலானோர், நான் டாஸ் இழப்பேன் என்று தெரிந்து முதலில் பேட்டிங் ஆட தயாராகி விட்டனர்," என்று தெரிவித்தார்.
- பதிரனா லேசான காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாடவில்லை.
- அவருக்குப் பதிலாக 36 வயதான ரிச்சார்ட் க்ளீசன் இடம் பிடித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 49-வது லீக் ஆட்டம் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
சென்னை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பதிரனா லேசான காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக சென்னை அணியில் ரிச்சார்ட் க்ளீசன் இடம் பிடித்துள்ளார். இதன்மூலம் ரிச்சார்ட் க்ளீசன் ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகியுள்ளார்.
இவருக்கு 36 வயது முடிவடைந்து 151 நாள் ஆகிறது. இதன்மூலம் 2014-ல் இருந்து மிகவும் அதிகமான வயதில் ஐபிஎல் தொடரில் அறிமுகமான 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதற்கு முன்னதாக சிகந்தர ராசா 36 வயது 342 நாட்கள் ஆன நிலையில் ஐபிஎல் தொடரில் அறிமுகம் ஆனார். இம்ரான் தாஹிர் 35 வயது 44 நாட்களில் அறிமுகம் ஆனார். ஜலாஜ் சக்சேனா 34 வயது 124 நாளில் அறிமுகம் ஆனார். கேஷப் மகாராஜ் 34 வயது 63 நாட்களில் அறிமுகம் ஆனார்.






