என் மலர்
விளையாட்டு
- பிவி சிந்து 21-13, 12-21, 21-14 என்ற செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
- இந்த வெற்றியைப் பெற சிந்துவுக்கு 59 நிமிடங்கள் தேவைப்பட்டது.
கோலாலம்பூர்:
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் 2-வது சுற்றில் இந்திய வீராங்கனை பிவி சிந்து, தரவரிசையில் 34-வது இடத்தில் இருக்கும் தென்கொரியாவைச் சேர்ந்த சிம் யூ ஜின்னை எதிர்கொண்டார்.
இதில் உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் இருக்கும் பிவி சிந்து 21-13 என முதல் செட்டை கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக
சிம் யூ ஜின் 21-12 என 2வது செட்டை வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை பிவி சிந்து 21-14 என கைப்பற்றியதுடன், காலிறுதி சுற்றுக்கும் முன்னேறி அசத்தினார்.
பிவி சிந்து கடைசியாக 2022-ம் ஆண்டு சிங்கப்பூர் ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். பிவி சிந்து உபேர் கோப்பை மற்றும் தாய்லாந்து ஓபன் தொடரில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு வீராங்கனை அஷ்மிதா சலியா 2வது சுற்றில் அமெரிக்காவின் பெய்வென் ஜாங்கை வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
- ஆர்சிபி எணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வென்றது.
- 2வது தகுதிச்சுற்று போட்டியில் ராஜஸ்தான்- ஐதராபாத் அணிகள் நாளை மோதுகின்றன.
ஐபிஎல்-ன் நேற்றைய எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி எணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வென்றது.
இதைதொடர்ந்து, 2வது தகுதிச்சுற்று போட்டியில் ராஜஸ்தான்- ஐதராபாத் அணிகள் நாளை மோதுகின்றன.
இந்நிலையில், எலிமினேட்டர் சுற்றில் ஆர்சிபி அணி தோல்வியடைந்து பிளே ஆஃப்பில் இருந்து வெளியோறியதை தொடர்ந்து, அந்த அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாகத் தெரிவித்துள்ளதை அடுத்து, சக வீரர்கள், ரசிகர்கள் அனைவரும் அவரைக் கவுரவித்து வழியனுப்பினர்.
ஆர்சிபி அணியின் கோப்பை கனவை அடையாமல் ஐபிஎல்-ல் இருந்து தினேஷ் கார்த்திக் ஓய்வை அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 45 ரன்னில் வெளியேறினார்.
- ஆர்சிபி தரப்பில் சிராஜ், பெர்குசன், கரன் சர்மா, கேமரூன் க்ரீன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
பெங்களூரு:
ஐபிஎல் தொடரின் இன்றைய எலிமினேட்டர் சுற்று 1-ல் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக படித்தார் 34 ரன்களும் மஹிபால் லோமரோர் 32 ரன்களும் எடுத்தனர். ராஜஸ்தான் அணி தரப்பில் ஆவேஷ் கான் 3 விக்கெட்டும் அஸ்வின் 2 விக்கெடும் வீழ்த்தினார்.
இதனையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - டாம் கோஹ்லர் களமிறங்கினர். தொடக்க முதலே அதிரடி காட்டினர். டாம் கோஹ்லர் 20 ரன்னில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 45 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் விளையாடிய சாம்சன் சிக்சர் அடிக்க தேவையில்லாமல் இறங்கி வந்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த ஜூரல் 8 ரன்னில் ரன் அவுட் ஆனார்.
இதனை தொடர்ந்து ரியான் பராக் - ஹெட்மெயர் ஜோடி அணியின் வெற்றிக்காக போராடினர். கடைசி கட்டத்தில் ரியான் பராக் 36 ரன்னிலும் ஹெட்மெயர் 26 ரன்னிலும் ஓரே ஓவரில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் ஆர்சிபி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால் அந்த சந்தோஷத்தை கொஞ்ச நேரம் கூட கொண்டாட முடியவில்லை. 19-வது ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசிய பவல், கடைசி பந்தில் சிக்சர் அடித்து போட்டியை முடித்து வைத்தார்.
இறுதியில் ராஜஸ்தான் அணி 19 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆர்சிபி தரப்பில் சிராஜ், பெர்குசன், கரன் சர்மா, கேமரூன் க்ரீன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
- ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.
- இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றுள்ள சீனியர் வீரர் ஹசன் அலியை இந்த தொடரில் இருந்து விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் இத்தொடருக்காக அனைத்து அணிகளும் திவிரமாக தயாரகும் வகையில் மற்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர்களில் விளையாடி வருகிறது.
அந்தவகையில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையே 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெறவுள்ளது.
இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி பாபர் அசாம் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் பக்கார் ஜமான், இப்டிகார் அகமது, இமாத் வாசிம், ஷதாப் கான், முகமது ரிஸ்வான், ஹசன் அலி, ஹாரிஸ் ராப், முகமது அமீர், நசீம் ஷா, ஷாகீன் அப்ரிடி போன்ற சீனியர் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றுள்ள சீனியர் வீரர் ஹசன் அலியை இந்த தொடரில் இருந்து விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கவுண்டி கிரிக்கெட்டில் வார்விக்ஷயர் அணிக்காக ஹசன் அலி விளையாட பாகிஸ்தான் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து பிசிபி வெளியிட்டுள்ள அறிக்கையில், கவுண்டி கிரிக்கெட்டில் ஹசன் அலி தனது கடமைகளை தொடர அனுமதிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆரம்பத்தில், ஹாரிஸ் ரவுஃபின் காயம் கரணமாக ஹசன் அலி பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்தார்" என்று தெரிவித்துள்ளது.
- ஆர்சிபி அணியில் அதிகபட்சமாக பட்டிதார் 34 ரன்கள் விளாசினார்.
- ராஜஸ்தான் அணி தரப்பில் ஆவேஷ் கான் 3 விக்கெட்டும் அஸ்வின் 2 விக்கெடும் வீழ்த்தினார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய எலிமினேட்டர் சுற்று 1-ல் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி, டுபிளிசிஸ் களமிறங்கினர். 17 ரன்னில் டுபிளிசிஸ் அவுட் ஆனார். அதை தொடர்ந்து விராட் கோலி 33 ரன்னிலும் க்ரீன் 27 ரன்னிலும் வெளியேறினார்.
இக்கட்டான சூழலில் களமிறங்கிய மேக்ஸ்வெல் கோல்டன் டக் முறையில் அவுட் ஆனார். அதிரடியான ஆட்டத்தை தொடங்கிய சில நிமிடங்களில் பட்டிதார் 34 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் முதல் பந்தில் நடுவரால் அவுட் கொடுக்கப்பட்டது. ஆனால் ரிவ்யூ மூலம் அவுட் இல்லை என தெரிய வந்தது.
இதனையடுத்து தொடர்ந்து விளையாடிய தினேஷ் கார்த்திக், தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆர்சிபி அணிக்கு ஷாக் கொடுத்து 11 ரன்னில் வெளியேறினார்.
ஒரு முனையில் நான் இருக்கிறேன் என அதிரடி காட்டிய மஹிபால் லோமரோர் 17 பந்தில் 32 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இதனால் 20 ஓவர் முடிவில் ஆர்சிபி அணி 8 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் ஆவேஷ் கான் 3 விக்கெட்டும் அஸ்வின் 2 விக்கெடும் வீழ்த்தினார்.
- ராஜஸ்தானுக்கு எதிராக மேக்ஸ்வெல் கோல்டன் டக் முறையில் அவுட் ஆனார்.
- டி20 கிரிக்கெட்டில் அதிகமுறை டக் அவுட் ஆனவர்கள் பட்டியலில் மேக்ஸ்வெல் (32 முறை) 4-வது இடத்தில் உள்ளார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய எலிமினேட்டர் சுற்று 1-ல் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி, டுபிளிசிஸ் களமிறங்கினர். 17 ரன்னில் டுபிளிசிஸ் அவுட் ஆனார். அதை தொடர்ந்து விராட் கோலி 33 ரன்னிலும் க்ரீன் 27 ரன்னிலும் வெளியேறினார்.
இக்கட்டான சூழலில் களமிறங்கிய மேக்ஸ்வெல் கோல்டன் டக் முறையில் அவுட் ஆனார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆனவர்கள் பட்டியலில் தினேஷ் கார்த்திக்கை மேக்ஸ்வெல் சமன் செய்தார். மேலும் டி20 கிரிக்கெட்டில் அதிகமுறை டக் அவுட் ஆனவர்கள் பட்டியலில் மேக்ஸ்வெல் (32 முறை) 4-வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் சுனில் நரைன் (44 முறை) உள்ளார்.
ஐபிஎல் தொடரில் டக் அவுட் ஆன வீரர்கள் விவரம்:-
18 - தினேஷ் கார்த்திக்
18 - கிளென் மேக்ஸ்வெல்
17 - ரோஹித் சர்மா
16 - பியூஷ் சாவ்லா
- பிவி சிந்து 21-17, 21-16 என நேர்செட் கேமில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- இந்த வெற்றியை பெற சிந்துவுக்கு 46 நிமிடங்கள் தேவைப்பட்டது.
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் தொடக்க சுற்றில் இந்திய வீராங்கனை பிவி சிந்து, தரவரிசையில் 22-வது இடத்தில் இருக்கும் ஸ்காட்லாந்தை சேர்ந்த கிர்ஸ்டி கில்மவுரை எதிர்கொண்டார்.
இதில் உலகக் தரவரிசையில் 15-வது இடத்தில் இருக்கும் பிவி சிந்து 21-17, 21-16 என நேர்செட் கேமில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற பிவி சிந்துவுக்கு 46 நிமிடங்களே தேவைப்பட்டது. அடுத்த சுற்றில் கொரிய வீராங்கனை சிம் யு ஜின்-ஐ எதிர்கொள்கிறார்.
பிவி சிந்து கடைசியாக 2022-ம் ஆண்டு சிங்கப்பூர் ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். பிவி சிந்து உபேர் கோப்பை மற்றும் தாய்லாந்து ஓபன் தொடரில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு வீராங்கனை அஷ்மிதா சலியா முதல் சுற்றில் சீன தைபேயின் சிஹ் யுன் லின்-ஐ 21-17, 21-16 என வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இவர் அடுத்த சுற்றில் அமெரிக்காவின் பெய்வென் ஜாங்கை எதிர்கொள்கிறார்.
உன்னாதி ஹூடா, ஆகாஸ்ஸ்ரீ காஷ்யப் முதல் சுற்றில் ஏமாற்றம் அடைந்தனர்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் கிரண் ஜார்ஜ் முதல் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார். கலப்பு இரட்டையர் பிரிவில் சுமீத் ரெட்டி- என். சிக்கி ரெட்டி ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
- எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
- டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அகமதாபாத்:
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முன்னேறியது.
இந்நிலையில், இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, பெங்களூரு அணி முதலில் களமிறங்கியது. விராட் கோலி, டூ பிளசிஸ் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.
டூ பிளசிஸ் 17 ரன்னில் அவுட்டானார். விராட் கோலி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார்.
ஐ.பி.எல். தொடரில் 8 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் விராட் கோலி என்ற சாதனை படைத்தார். இவருக்கு அடுத்த இடத்தில் ஷிகர் தவான் 6,769 ரன்கள் எடுத்துள்ளார்.
இதற்கிடையே, விராட் கோலி 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- குவாலிபையர் 2 போட்டி மே 24 ஆம் தேதி நடைபெறுகிறது.
- இறுதிப்போட்டி மே 26 ஆம் தேதி நடைபெறுகிறது.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முன்னேறியது. அந்த வகையில், இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்ர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி மே 24 ஆம் தேதி நடைபெறும் குவாலிபையர் 2 சுற்று போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்கொள்ள வேண்டும்.
குவாலிபையர் 2 சுற்றில் வெற்றி பெறும் அணி மே 26 ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்ள இருக்கிறது.
- ராஜஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தை பெங்களூரு அணி ரத்து செய்தது.
- விராட் கோலியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தகவல் வெளியாகியது.
அகமதாபாத்:
ஐ.பி.எல். தொடரில் எலிமினேட்டர் சுற்று இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதற்கான பயிற்சி ஆட்டம் அகமதாபாத் குஜராத் கல்லூரி மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு அகமதாபாத் விமான நிலையத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 4 பேரை குஜராத் போலீசார் கைதுசெய்தனர். அவர்களது இடங்களை சோதனை செய்தபின் ஆயுதங்கள், சந்தேகத்திற்கு இடமான வீடியோக்கள், குறுஞ்செய்திகளை போலீசார் மீட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக ஆர்சிபி அணியின் பயிற்சி ஆட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது. மேலும் விராட் கோலியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தகவல் வெளியாகியது.
இந்நிலையில், ராஜஸ்தான் - பெங்களூரு போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் ஏதும் இல்லை என குஜராத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், "குஜராத் கல்லூரி மைதானத்தில் மதியம் 2-5 மணிவரை பயிற்சி செய்ய பெங்களூரு அணி திட்டமிட்டிருந்தது. ஆனால் கோடைக்காலம் என்பதால் மாலை 6.30 மணிவரை வெளிச்சம் இருக்கும் என்பதால் பயிற்சியை 3-6 மணிக்கு மேற்கொள்ளலாம் என்று அணி நிர்வாகம் திட்டமிட்டது. ஆனால் வெப்ப அலை காரணமாகவே பெங்களூரு அணியின் பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது
அதே சமயம் குஜராத் கல்லூரி மைதானத்தில் மதியம் 3.30 மணியிலிருந்து 6.30 மணிவரை ராஜஸ்தான் அணி பயிற்சியில் ஈடுபட்டது" என்று குஜராத் கிரிக்கெட் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.
- இந்திய கிரிக்கெட் அணிக்கான பயிற்சியாளரை நியமிக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
- பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், அடுத்த இந்திய அணி பயிற்சியாளராக கவுதம் கம்பீரை நியமிப்பதன் சாதக பாதகங்களை குறித்து மனம் திறந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்கான பயிற்சியாளரை நியமிக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. கேகேஆர் அணியின் பயிற்சியாளரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான கெளதம் கம்பீர், ராகுல் டிராவிட்டிற்குப் பிறகு இந்தியாவின் அடுத்த பயிற்சியாளராக வருவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக பிசிசிஐ வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், அடுத்த இந்திய அணி பயிற்சியாளராக கவுதம் கம்பீரை நியமிப்பதன் சாதக பாதகங்களை குறித்து மனம் திறந்துள்ளார். ஸ்போர்ட்ஸ் கீடா நிகழ்ச்சி ஒன்றில் வாசிம் பேசுகையில், கம்பீர் எளிமையாகவும் நேர்மையாகவும் இருப்பவர் அதே நேரம், அப்பட்டமாக உள்ளதை உள்ளபடி வெளிப்படையாக பேசக்கூடியவர், எதையும் இருமுறை யோசிக்காமல் பேசுவார்.

இது இந்திய கிரிக்கெட் கலாச்சாரத்தில் இல்லாத ஒரு குணமாகும். சில நேரங்களில் ஆக்ரோஷமாகவும் இருப்பார், இந்திய பயிற்சியாளர் பதவிக்கு அவர் சிறந்தவராக இருப்பார். அவர் இந்த பதவியை ஏற்றுக்கொள்வாரா என்று நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.
விவிஎஸ் லக்ஷ்மண் அல்லது ஆஷிஷ் நெஹ்ரா இந்திய அணி பயிற்சியாளர் பொறுப்புக்கு பொருத்தமாக இருப்பார்களா என்பது குறித்தும் வாசிம் அக்ரம் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். தனது பபேட்டியில் அவர், நானும் வேறு சில பெயர்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்களுக்கு நிறைய அனுபவம் உள்ளது.

ஆசிஷ் நெஹ்ராவை சுற்றியிருக்க அனைவரும் விரும்புவர். மேலும் லக்ஷ்மன் சிறந்த மனிதர். அவர் என்சிஏ தலைவர், 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கட் அணியின் பயிற்சியாளராக பணியாற்றிய அனுபவம் அவருக்கு கைகொடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

- ஓட்டல் அறையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது பாலியல் புகார் எழுந்தது.
- தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
காத்மண்டு:
நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லமிச்சேன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். 2022-ம் ஆண்டு ஓட்டல் அறையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர்மீது பாலியல் புகார் எழுந்தது
இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் அவரை குற்றவாளியாக அறிவித்த காத்மண்டு நீதிமன்றம், அவருக்கு 8 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் சந்தீப் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சந்தீப் லமிச்சேனை விடுதலை செய்தது
எதிர்வரும் டி20 உலகக்கோப்பைக்கான நேபாள் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும், மே 25 வரை அணியில் மாற்றம் செய்யலாம் என்பதால் சந்தீப் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நேபாளத்தில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் சந்தீப் லமிச்சேனின் விசாவை நிறுத்தி வைத்துள்ளது.
அமெரிக்க தூதரகத்தின் இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாக சந்தீப் லமிச்சேன் தெரிவித்துள்ளார்.






