என் மலர்
விளையாட்டு
- கடைசி ஒருநாள் போட்டி கொழும்பில் நாளை நடக்கிறது.
- இரு அணிகளும் நாளை மோதுவது 171-வது ஒருநாள் போட்டியாகும்.
கொழும்பு:
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்து இருந்தது.
இந்தியா- இலங்கை இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடரில் முதல் ஆட்டம் 'டை'யில் முடிந்தது. 2-வது ஆட்டத்தில் இலங்கை அணி 32 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 0-1 என்ற கணக்கில் பின் தங்கியுள்ளது.
இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொழும்பில் நாளை (7-ந் தேதி) நடக்கிறது.
ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இருக்கிறது. இதில் தோற்றால் ஒருநாள் தொடரை இழந்து விடும். இதனால் வெற்றிக்காக இந்திய வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்துவார்கள்.
இந்திய அணியின் பேட்டிங்கும், பந்து வீச்சும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அதனால் அதில் இருந்து மீள்வது அவசியமாகும்.
அசலன்கா தலைமையிலான இலங்கை அணி இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது. 20 ஓவர் தொடரை இழந்த அந்த அணி ஒருநாள் தொடரை வென்று விட வேண்டும் என்ற வேட்கையில் உள்ளது.
இரு அணிகளும் நாளை மோதுவது 171-வது ஒருநாள் போட்டியாகும். இதுவரை நடந்த 168 ஆட்டத்தில் இந்தியா 99-ல், இலங்கை 58-ல் வெற்றி பெற்றுள்ளன. 11 போட்டி முடிவு இல்லை. 2 ஆட்டம் டை ஆனது.
நாளைய போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி டென் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
- இந்திய தடகள வீரர் அவினாஷ் சாப்லே இலக்கை எட்டி 5 வது இடத்தைப் பிடித்தார்.
- இறுதிசுற்றுக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் அவினாஷ் சாப்லே பெற்றுள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்திய வீரர்கள் தத்தமது திறமையை வெளிப்படுத்தி வெற்றியை நோக்கி முன்னேறி வருகின்றனர். அந்த வகையில், இந்திய தடகள வீரர் அவினாஷ் சாப்லே [Avinash Sable] 3000 மீ ஸ்டீப்பில் சேஸ் போட்டியில் 8:15.43 நிமிடங்களில் இலக்கை எட்டி 5 வது இடத்தைப் பிடித்தார்.

இதன்மூலம் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு நடக்க உள்ள இறுதிப்போட்டிக்கு அவினாஷ் தகுதி பெற்றுள்ளார்.

3000 மீ ஸ்டீப்பில் சேஸ் இறுதிசுற்றுக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் அவினாஷ் சாப்லே பெற்றுள்ளார்.
- காம்பீர் குறித்து சஞ்சய் பரத்வாஜ் யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்துள்ளார்.
- அப்போதிருந்தே அவருக்கு தோல்வி என்றால் பிடிக்கவே பிடிக்காது என்று தெரிவித்துள்ளார்
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கவுதம் காம்பீரின் சுபாவம் குறித்து அவரது இளமைக்கால கிரிக்கெட் பயிற்சியாளரான சஞ்சய் பரத்வாஜ் யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்துள்ளார்.

காம்பீரை சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பார்த்து வரும் பரத்வாஜ், 12 -13 வயது சிறுவனாக இருக்கும்போது கூட காம்பீர் சிறிய தோல்வியையும் தாங்கிக்கொள்ள முடியாதவராகவே இருந்தார் என்று தெரிவித்துள்ளார். அப்போது மட்டுமல்ல இப்போதும் காம்பீர் ஒரு அப்பாவியான சிறுவன்தான். அவரால் பிறருக்கு தீங்கு நினைக்கவே முடியாது. ஒரு 12 வயது பையன் போலவே இப்போதும் அவர் உள்ளார்.

பலர் அவர் திமிர்பிடித்தவர் என்று கருதுகின்றனர். ஆனால் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே அது தொடர்புடையது. சிறு வயதில் நெட்டுக்குள் அவரை நான் விளையாட வைப்பதுண்டு. அந்த மேட்ச்களில் தொற்றால் கூட காம்பீர் அப்படி அழுவார். அப்போதிருந்தே அவருக்கு தோல்வி என்றால் பிடிக்கவே பிடிக்காது என்று தெரிவித்துள்ளார்.

- இந்தியா-சீனா (ஆண்கள் அணிகள் பிரிவு தொடக்க சுற்று), பகல் 1 30 மணி.
- இந்தியா-ஜெர்மனி (ஆண்கள் அரைஇறுதி ஆட்டம்), இரவு 10 30 மணி.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இன்று இந்திய வீர்ரகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி:
டேபிள் டென்னிஸ்:-
இந்தியா-சீனா (ஆண்கள் அணிகள் பிரிவு தொடக்க சுற்று), பகல் 1 30 மணி.
தடகளம்:
ஈட்டி எறிதல் தகுதி சுற்றில் கிஷோர் குமார் ஜெனா (பகல் 1.50 மணி), நீரஜ் சோப்ரா (மாலை 3.20 மணி), கிரண் பாஹல் (பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டம் ரிபிசாஜ் சுற்று), பிற்பகல் 2.50 மணி.
மல்யுத்தம்:-
வினேஷ் போகத்( இந்தியா)-சுசாகி யூ (ஜப்பான்), (பெண்களுக்கான 50 கிலோ பிரீஸ்டைல் கால்இறுதிக்கு முந்தைய சுற்று), பிற்பகல் 2 30 மணி.
ஆக்கி:-
இந்தியா-ஜெர்மனி (ஆண்கள் அரைஇறுதி ஆட்டம்), இரவு 10 30 மணி.
- உயரம் தாண்டுதல் போட்டியில் யாரோஸ்லாவா மகுச்சி தங்கப் பதக்கம் பெற்றார்.
- இந்த வெற்றியை உக்ரைனுக்கு அவர் அர்பணித்துள்ளார்.
பாரீஸ்:
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
பாரீஸ் ஒலிம்பிக் மகளிருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற உக்ரைன் வீராங்கனை யாரோஸ்லாவா மகுச்சி, போட்டியில் பங்கேற்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக, களத்திலேயே தியானம் செய்வது போன்று படுத்து உறங்கியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது
தங்கம் வென்ற பின்பு களத்தில் தூங்கியது குறித்து பேசிய யாரோஸ்லாவா, மேகங்களை பார்ப்பது, 1,2,3,4... என எண்ணுவது, குட்டி தூக்கம் போடுவது போன்றவற்றால் மனது நிதானமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வெற்றியை உக்ரைன் நாட்டிற்கு அவர் அர்பணித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் உக்ரைன் பெற்ற முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.
- காலிறுதியில் அமித்துக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
- நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் அமித் ரோகிதாஸ் விளையாட மாட்டார்.
பாரீஸ்:
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஹாக்கிபோட்டியின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணி பெனால்டி ஷீட் அவுட்டில் 1-1 (4-2) என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தின் போது இந்திய வீரர் அமித் ரோகிதாஸ் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இந்த ஆட்டத்தில் அமித் ரோகிதாஸ் எப்.ஐ.எச் நடத்தை விதிகளை மீறியதாக கூறி அவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் அமித் ரோகிதாஸ் விளையாட மாட்டார்.
- கடைசி 35 நொடிகள் வரை 8-2 என்ற கணக்கில் நிஷா முன்னிலை வகித்தார்.
- அப்போது அவருக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது.
பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான மல்யுத்த போட்டியில் 68 கிலோ ஃப்ரீஸ்டைல் எடைப் பிரிவின் கால் இறுதியில் இந்தியாவின் நிஷா தஹியா தென் கொரியாவின் சோல் கம் பாக்கை எதிர்கொண்டார்.
சிறப்பாக விளையாடிய நிஷா 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். கடைசி ஒரு நிமிடம் இருந்த நிலையில் நிஷா 8-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார். அவர் அரையிறுதிக்கு தகுதி பெற அதிக வாய்ப்பு இருந்தது. கடைசி 35 நொடிகள் வரை 8-2 என்ற கணக்கில் நிஷா முன்னிலை வகித்தார்.
அப்போது அவருக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது. இதனை சுதாரித்து கொண்ட தென் கொரியா வீராங்கனை மிரட்டலாக விளையாடு அடுத்தடுத்து புள்ளிகளை குவித்தார். இறுதியில் 10-8 என்ற கணக்கில் தென் கொரியா வீராங்கனை வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
கையில் ஏற்பட்ட வலியையும் மனதில் ஏற்பட்ட வலியையும் தாங்கி கொள்ள முடியாமல் நிஷா கண்ணீர் சிந்தினார். காயத்துடன் போராடிய நிஷாக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- டேபிள் டென்னிசில் இந்திய மகளிர் அணி காலிறுதிக்கு முன்னேறியது.
- பேட்மிண்டனில் இந்திய வீரர் லக்ஷயா சென் தோல்வி அடைந்தார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இன்று நடந்த துப்பாக்கி சுடுதல் ஸ்கீட் கலப்பு அணிகள் பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவின் அனந்த்ஜீத் நருகா, மகேஸ்வரி சவுகான் ஜோடி போட்டியிட்டனர்.
இதில் இந்திய ஜோடி 146 புள்ளிகள் எடுத்து 4-வது இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றது
இந்நிலையில், வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்திய ஜோடி, சீனாவை எதிர்கொண்டது. இதில் அனந்த்ஜீத் சிங் நருகா - மகேஸ்வரி சவுகான் ஜோடி 43-44 என்ற புள்ளிகள் பெற்று நூலிழையில் பதக்கத்தை தவறவிட்டது.
- 68 கிலோ எடை பிரிவில் நிஷா தஹியா- டெட்டியானா ரிஷ்கோ ஆகியோர் மோதின.
- முதல் பாதியில் இந்திய வீராங்கனை 1-4 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தார்.
பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று பெண்களுக்கான மல்யுத்த போட்டியில் 68 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவை சேர்ந்த நிஷா தஹியா மற்றும் உக்ரைன் வீராங்கனையான டெட்டியானா ரிஷ்கோ ஆகியோர் மோதின.
இந்த போட்டியில் முதல் பாதியில் இந்திய வீராங்கனை 1-4 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தார். இதனையடுத்து சிறப்பாக விளையாடிய நிஷா இறுதியில் 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
- ஒலிம்பிக் நிறைவு விழா வரும் 11-ம் தேதி நடைபெற உள்ளது.
- இதில் மனு பாக்கர் இந்தியாவின் தேசிய கொடியை ஏந்துகிறார்.
பாரீஸ்:
ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளில் இருந்து 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா துப்பாக்கி சுடுதலில் இதுவரை 3 வெண்கலம் மட்டுமே வென்றுள்ளது.
தனிநபர் பிரிவில் மனு பாக்கர் மற்றும் ஸ்வப்னில் குசாலே தலா ஒரு வெண்கலமும், இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஒரு வெண்கலமும் வென்றுள்ளனர்.
இதற்கிடையே, ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏந்திச்செல்ல விரும்புகிறீர்களா என கேட்டபோது, இது ஒரு வாழ்நாள் கவுரவமாகும். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தால் அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வேன் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் நிறைவு விழாவில் இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற மனு பாக்கர் இந்தியாவின் தேசியக்கொடியை ஏந்திச் செல்கிறார் என தகவல்கள் வெளியாகின.
- நேற்று ஒரே நாளில் அமெரிக்காவுக்கு 5 தங்கம் கிடைத்தது.
- 3, 4 இடங்கள் முறையே பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் உள்ளது.
பாரீஸ்:
33-வது ஒலிம்பிக் போட்டி கடந்த மாதம் 26-ந்தேதி பாரீசில் கோலா கலமாக தொடங்கியது. மறுநாள் 27-ந்தேதி முதல் போட்டிகள் ஆரம்பமானது. போட்டி தொடங்கியதில் இருந்து நேற்று முன்தினம் வரை அமெரிக்க அணியால் பதக்கப்பட்டியலில் முதல் இடத்தை பிடிக்க இயலவில்லை.
இந்த நிலையில் நேற்றைய 9-வது நாள் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு அமெரிக்கா பதக்கப் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது. நேற்று ஒரே நாளில் அமெரிக்காவுக்கு 5 தங்கம் கிடைத்தது.
இதனால் முதல் இடத்தை பிடிக்க முடிந்தது. ஆனால் அந்த இடத்தை அமெரிக்காவால் தக்கவைத்து கொள்ள முடியவில்லை.
மீண்டும் சீனா முதல் இடம் பிடித்தது. சீனா இதுவரை 21 தங்கம், 17 வெள்ளி, 14 வெண்கலம் ஆக மொத்தம் 52 பதக்கத்துடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.
அமெரிக்கா 19 தங்கம், 27 வெள்ளி, 26 வெண்கலம் ஆக மொத்தம் 72 பதக்கத்துடன் 2-வது இடத்தில் உள்ளது.
3, 4 இடங்கள் முறையே பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் உள்ளது. 3 வெண்கல பதக்கத்துடன் இந்தியா 58-வது இடத்தில் உள்ளது.
- முதல் செட்டை லக்ஷயா சென் கைப்பற்றினார்.
- இரண்டாவது செட்டை மலேசிய வீரர் கைப்பற்றினார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.
இந்நிலையில், பேட்மிண்டன் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய வீரர் லக்ஷயா சென், மலேசியாவின் லீ சி ஜியா உடன் மோதினார்.
இதில் லக்ஷயா சென் 21-13 என முதல் செட்டை கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக மலேசியா வீரர் 2வது செட்டை 21-16 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை 21-11 என்ற கணக்கில் மலேசிய வீரர் வென்று வெண்கலப் பதக்கம் பெற்றார். இதன்மூலம் லக்ஷயா சென் தொடரில் இருந்து வெளியேறினார்.






